Wednesday, August 21, 2013

கார போண்டா - கிச்சன் கார்னர்

சொல்லிக்காம கொள்ளாம திடீர்ன்னு வீட்டுக்கு விருந்தாளி வந்துட்டாங்க. ஆனா, அவங்களுக்கு கொடுக்க நொறுக்ஸ் எதும் வீட்டுல இல்ல. என்ன செய்யலாம்னு கையை பிசைஞ்சுக்கிட்டு நிக்காம சட்டு புட்டுன்னு செஞ்சு அசத்துற ஒரு போண்டா இது...,

தேவையான பொருட்கள்:

நல்லா புளிச்ச இட்லி இல்ல தோசை மாவு - 1 கப்
மைதா மாவு - 4 கப்
வெங்காயம் - 2 பெருசு
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை - கொஞ்சம்
கொத்தமல்லி - கொஞ்சம்
சமையல் எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
ஆப்ப சோடா - கொஞ்சம் 


ஒரு பாத்திரத்துல புளிச்ச இட்லி இல்ல தோசை மாவை எடுத்துக்கோங்க.

அதுல மைதா மாவை கொட்டிக்கோங்க.


அதுல உப்பு சேர்த்துக்கோங்க.

அடுத்து ஆப்ப சோடா சேர்த்துக்கோங்க.



வெட்டி வெச்ச வெங்காயத்தை சேருங்க.


பொடியா வெட்டுன பச்சை மிளகாயை சேர்த்துக்கோங்க.


பொடியா நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்துங்க.

நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்துக்கோங்க.

தண்ணி சேர்த்து இட்லி மாவைவிட கொஞ்சம் கெட்டியா பிசைஞ்சு வச்சுக்கோங்க.

அடுப்புல வாணலியை வச்சு  சமையல் எண்ணெய் ஊத்தி சூடு பண்ணுங்க.

சூடான எண்ணெயில பிசைஞ்சு வெச்ச மாவை போண்டாவா போட்டு ரெண்டு பக்கமும் பொன்னிறமா சிவக்க விட்டு எடுங்க.




மேல மொறு மொறுன்னும், உள்ள சாஃப்டாவும், தக்காளி சாஸ் இல்லாட்டி கார சட்னியோடு சூடா பரிமாறுனா நல்லா இருக்கு. கார சட்னி எப்படி செய்யுறது எப்படின்னு இங்க போய் பார்த்துக்கோங்க. மழை நேரத்துல செஞ்சு சாப்பிட்டா கூடுதல் ருசி தெரியும். மாவை பிசைஞ்சு ஒரு பத்து நிமிசம் மூடி வெச்சு போண்டா செஞ்சா சாஃப்டா இருக்கும். 

அடுத்த வாரம் வேறொரு ஈசியான ரெசிபியோட வரேன்.

18 comments:

  1. சாப்பிடுற போட்டோவும்..கை அலம்புற போட்டோவும் மிஸ்ஸிங்..

    ReplyDelete
    Replies
    1. அடுத்த முறை அதையும் பதிவிட்டுட்டா போச்சு!!

      Delete
  2. அப்படியே நீங்களே செய்து பதிவர் சந்திப்புக்கு எடுத்து வாங்க .. சாப்பிட்டு பார்த்து சொல்றேன் .

    ReplyDelete
    Replies
    1. ம்ம் ஆனா, ஆறிப்போகுமே! பரவாயில்லையா?!

      Delete
  3. "என்ன செய்யலாம்னு கையை பிசைஞ்சுக்கிட்டு நிக்காம,..... இட்லி மாவைவிட கொஞ்சம் கெட்டியா பிசைஞ்சு வச்சுக்கோங்க."
    எளிய செய்முறையை தெளிவாகப் படங்களுடன் போட்டு அசத்திவிட்டீர்கள்
    செய்து பதிவர் சந்திப்புக்கு எடுத்து வருவதும் நல்ல ஐடியாதான்

    ReplyDelete
    Replies
    1. இந்த ஆட்டத்துக்கு நான் வரலைடா சாமி!

      Delete
  4. கார போண்டா சூபரோ சூப்பர்!
    எங்க வீட்ல இதுக்குன்னு மாவை மீதப்படுத்திச் செய்தால்தான் உண்டு!
    செய்திடுவோம்.

    படங்களும் பகிர்வும் அசத்தல் தோழி!
    வாழ்த்துக்களும் என் நன்றியும்!

    த ம.4

    ReplyDelete
    Replies
    1. ஒரு முறை செஞ்சு பாருங்க. அப்புறம் அடிக்கடி செய்வீங்க!!

      Delete
  5. செய்து பார்ப்போம்... நன்றி சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா!

      Delete
  6. ஹாய் இது எங்க வீட்டுச் சமையல் ஒரு கட்டுக் கட்டிட வேண்டியது தான் .
    எங்க குடும்மா தங்கச்சி சுடச் சுடப் பத்து சுவையைப் பார்த்துச் சொல்லுறதுக்கு மட்டும் தான் பத்து :) அப்போ மொத்தமா எவ்வளவு சாப்பிடுவீங்களா ?..இதெல்லாம் கேட்ட்கக் கூடாது அக்காக்கு கோவம் வந்திரும் .

    ReplyDelete
    Replies
    1. எத்தனை வேணுமோ அத்தனை சாப்பிடுங்க அக்கா! ஆனா, அங்க 5 தான் இருக்கு!!

      Delete
    2. அட மேல 5 பொரிஞ்சு கொண்டு இருக்குதே ?.யாருக்கிட்ட :)
      வடிவேலு மாதிரி அந்த 5 தான் இந்த அஞ்செண்டெல்லாம்
      சொல்லப் படாது (நான் கணக்கில வீக்கென்றத ஒத்துக்கவே
      மாட்டன் :) )

      Delete
  7. செய்முறைக்கு நன்றி..

    ReplyDelete
  8. படித்துச் சுவைத்தேன்!

    ReplyDelete
  9. நீங்க இன்னும் மருமகளா? இல்லை மாமியார் ஸ்தானத்தை அடைந்து விட்டீர்களா?

    நீங்க மருமகளா இருந்தா மாமியாருக்கும், மாமியாரா இருந்தா மருமகளுக்கும் செய்து கொடுக்க ஒரு அட்டகாச டிபன் இன்று நான் வெளியிட்டுள்ளேன்.

    படித்து பயன் பெருக..!

    link:

    http://www.nambalki.com/2013/08/blog-post_21.html

    ReplyDelete
  10. இந்தமுறை வீட்டுக்கு போனதும் செய்ய சொல்லிட வேண்டியதுதான்...

    ReplyDelete
  11. அருமையாய் மிதந்து வரும் போண்டா என்னை எடுத்துக் கொள் என்று சொல்வது போல் உள்ளது.

    ReplyDelete