ஆரு?! ஆரு அது?!
நாந்தான் சரோவோட மாமனார். வீட்டுல யார் இருக்காங்க?!
ஏன்? என்னை பார்த்தா மனுஷியா தெரியலியா உனக்கு?!
வீட்டுல ஆம்பிளைங்க யாருமில்லையா?!ன்னு கேட்டேன்.
உன் டப்பா மூஞ்சிக்கு நானே பதில் சொல்றேன். இன்னாத்துக்கு இப்போ நீ இங்க வந்தே?!
உங்க பொண்ணு சரோ, பிளாக்கரா இருக்கு. தெரியுமா உனக்கு?!
யோவ் பெர்னாண்டஸ்! யாரை பார்த்து பிளாக்கா இருக்குன்னு சொல்றே! கீச்சுடுவேன் கீச்சி. எங்க வூட்டு பொண்ணு மேல ஒரு பூ வுழுந்தாலும் எங்க பொண்ணோட உடம்பு செவந்துடும். அம்புட்டு செவப்பு எங்கப் பொண்ணு. தெரிஞ்சுக்கோ!!
ம்க்கும், இதுக்கு தமிழே தகராறு. இதுங்கிட்ட போய் இங்லீசுல பேசினேன் பாரு என்னை சொல்லனும்!! கம்ப்யூட்டர் பொட்டில உக்காந்து பார்த்த சினிமா, சமைச்ச பலகாரம், புடவை, ஆஃபீஸ் மேட்டர், குழந்தை வளர்ப்புன்னு டைரி போல எழுதுது” சரி, இதுல என்ன தப்புன்னு கம்முன்னு இருந்தா, பொழுதன்னிக்கும் அடுத்தவங்க எழுதினதை படிச்சு கமெண்டும் போடுது. அதையும் பொறுத்துக்கிட்டேன். இப்போ என்னடான்னா, வர்ற செப்டம்பர் 1ந்தேதி சென்னைல மீட்டிங்க் போடுறாங்களாம். அதுக்கு போகனும், டிக்கட் போட்டுத்தாங்கன்னு என்கிட்டயே சொல்லுறா!
அப்படி எழுதுனா இன்னா தப்பு?! ஒரு படிச்ச பொண்ணு செய்யுற வேலையைதான் எங்க வூட்டு பொண்ணு செஞ்சிருக்கு. தனக்கு தெரிஞ்சதை எழுதி இருக்கு. அதை போயி தப்புன்னு சொன்னியாமே!!
கண்ணம்ம்ம்ம்ம்ம்மா!
கம்முன்னு கெட, இப்படி உரைக்குற மாதிரி சொன்னாதான் இந்த மரமண்டைக்கு உரைக்கும்!!
மரமண்டையா?!
அப்படி எழுதுறதையும், எங்க வூட்டு பொண்ணு மனசு கோணக்கூடாதேன்னு நல்லா இருக்குன்னு சொல்றவங்களுக்கு பதில் மரியாதை செய்யுற மாதிரி எங்க பொண்ணு போய் கருத்து சொல்லுது. அதை தப்புன்னு சொன்னியாமே!!
கண்ணம்ம்ம்ம்ம்ம்மா!!
கம்முன்னு கெட, இப்படி நாக்கை புடுங்கிக்குற மாதிரி கேள்வி கேட்டாதான் இந்த மீசைக்காரனுக்கு புரியும்.
மீசைக்காரனா?!
எங்க வூட்டு பொண்ணு காலைல அஞ்சு மணிக்கு போஸ்ட் போடும்..., மதியம் ரெண்டு மணிக்கு கமெண்ட் போடும், சாயங்காலம் 6 மணிக்கு போஸ்ட் தேத்தும், ராத்திரி பத்து மணிக்கு கூட போஸ்ட் போடும். ஏன் சில நாளு வூட்டு வேலை கூட செய்யாம அங்கயே இருக்கும். அதை போயி தப்புன்னு சொன்னியாமே!!
கண்ணம்ம்ம்ம்ம்ம்மா!!
கம்முன்னு கெட. இப்படி பளிச் பளிச்சுன்னு கேட்டாதான் இந்த சோளகொல்லை பொம்மைக்கு பேண்ட் சட்டை போட்ட மாதிரி இருக்குற ஆளுக்கு புரியும்.
சோளக்கொல்லை பொம்மையா?!
எங்க வூட்டு பொண்ணு செப்டம்பர் 1 ம் தேதி, வடபழனி கமலா தியேட்டர் பக்கத்துல இருக்குற மியூசிக் ஹால்ல நடக்க போற மீட்டிங்க்ல கலந்துக்கும். உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்க போ!! தாயா, புள்ளையா பழகுறவங்க பார்த்துக்கிட்டா என்னா தப்பு?!
கண்ணம்ம்ம்ம்ம்ம்ம்மா!!
கம்முன்னு கெட. வெளிநாட்டுல இருக்குற பதிவர்கள்லாம் அவங்க கலந்துக்கலைன்னாலும் துட்டு குடுத்து நடத்த சொல்லி இருக்காங்க. தமிழ்நாட்டுல உக்காந்துக்கிட்டு எங்க வூட்டு பொண்ணை போவக்கூடாதுன்னு சொல்ல உனக்கென்ன ரைட்ஸ் இருக்கு?! மீட்டிங்குக்கு போறது பதிவர்களோட ரைட்ஸ். அதை தடுக்க நீ யாரு?!
கண்ணம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா!!
யாரோதானே கலந்துக்க போறாங்கன்னு இல்லாம, தங்கள் மாமியார் வூட்டு ஆளுங்க வர்ற மாதிரி மண்டபம் பார்க்குறது, சாப்பாடு அரேஞ்ச் பண்ணுறது, முதல் நாள் வர்றவங்க தங்குறதுக்கு பாதுகாப்பான இடம், பெண்களுக்கு தனி இடம்ன்னு பார்த்து பார்த்து செய்யுறாங்களே! அங்க போனா இன்னா குறைஞ்சுட போகுது?!
கண்ணம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா!!
கம்முன்னு கெட, இப்படி நறுக்குன்னு சொன்னாதான் இந்த உலகம் தெரியாத தற்குறிக்கு புரியும்
யாரு?! யாரு தற்குறி!? மீ!? என்னையா சொன்ன?!
ஆமாயா, 9 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குது. புலவர் ஐயா தலைமையில, சென்னை பித்தன் ஐயா முன்னிலையில நிகழ்ச்சி தொடங்குது.எழுத்தாளர் திரு பாமரன் அவர்கள் சிறப்புரை. அப்புறம் இதுவரை நேரில் பார்க்காதவங்கலாம் கூட, ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்க சுய அறிமுகம், மதியம் 1 மணிக்கு நீ உன் புள்ள கல்யாணத்துக்கு போட்ட பிசாத்து சாப்பாட்டை விட செமையான வெஜ், நான் வெஜ் சாப்பாடு. 2 மணிக்கு பதிவர்கள் தங்களோட திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு. ஸ்கூல் பையன் பாடுறார், கோவை ஆவி ஒரு பாட்டு எழுதி பாடுறார், திண்டுக்கல் மீசைக்காரர் நாடகம் போடுறார். அப்புறம், டான்ஸ், நாடகம், மிமிக்ரின்னு மேடையே கிடுகிடுக்க போகுது.
அப்பாலிக்கா, பதிவர்கள் 4 பெரு புத்தகம் வெளி வருது. சீனு நன்றி சொல்ல நிகழ்ச்சி முடிவுக்கு வருது.
அப்பாலிக்கா, பதிவர்கள் 4 பெரு புத்தகம் வெளி வருது. சீனு நன்றி சொல்ல நிகழ்ச்சி முடிவுக்கு வருது.
கண்ணம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா!
கம்முன்னு கெட, இப்படி சொன்னாதான் இந்த பன்னாடைக்கு புரியும்.
என்னது பன்னாடையா?!
.இந்தா இன்விடிடேஷன். நெஞ்சுல மஞ்சா சோறு இருக்குற ஆம்பிளையா இருந்தா!! நீயும் ஒரு டைரியை ஓப்பன் பண்ணி, உனக்கு தெரிஞ்சதை எழுதி, நாலு பேர்கிட்ட பழகி நல்ல மனுஷன்னு பேரு எடுத்து.., நானும் கலந்துக்குறேன்னு பேரு குடுத்துட்டு, உன்னால முடிஞ்சா நன்கொடை குடு, இல்லாட்டியும் பரவாயில்லை கலந்துக்கலாம். யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. அப்படி நிதி எதாவது உதவி பண்ணனும்ன்னா இங்க போய் பார்த்து தெரிஞ்சுக்க. .
ஓக்கே. ஓக்கே, ஒரு வேலைக்கார பொம்பளையை வச்சு அவமான படுத்திட்டீங்கல்ல!! நானும் இப்பவே போய் பிளாக் ஆரம்பிச்சு பதிவெழுதி, அந்த மீட்டிங்குக்கு வரேன். அப்படி வரலைன்னா என் பேரு ஆல்பர்ட் பெர்னாண்டஸ் இல்ல.
சரி, நீ இப்போ கிளம்பு. நாங்க போய் எங்க பொண்ணு சரோ சேலைக்கு ஸ்டோன் வொர்க் பண்ணனும்.
//சம்சாரம் அது மின்சாரம்” படத்துல பதிவர் சந்திப்புக்காக ஒரு காட்சி//
ReplyDeleteபதிவர் சந்திப்புக்கு வந்துதான் எல்லாத்தையும் பார்க்கனும்னு இருந்தேன், இது என்னடானா இங்கேயே ஆரம்பிச்சுடுச்சே கலாட்டாவை! ரொம்பவே ரசித்துப் படித்தேன் எல்லா பாயிண்டுகளையும் விடாமல் சேர்த்திட்டீங்களே பாராட்டுக்கள்.
மிக மிக அருமை
ReplyDeleteவிஷய ஞானத்தோட சுவாரஸ்யமாக
இப்படியெல்லாம் அருமையாக எழுத
என்னைக்குத்தான் எனக்கும் வரப்போகுதோ ?
tha.ma 2
ReplyDeletenalla karpanai..
ReplyDeleteகம்முன்னு போட்டேன் த ம 3
ReplyDeleteசூப்பரா கலக்கீட்டிங்க ராஜி...
ReplyDeleteவீட்டுல நடந்த கதையா ..
ReplyDeleteஅதை பட்டிடிங்கரிங்க பார்த்து இங்கே சொல்லிடயா
கண்ணம்மா ..
கம்னு கட ...இதை கூட சொல்லலேன்னா எப்படி..
கண்ணம்மா ..
நீ இப்போ கிளம்பு. ..பிளாக்கர் மீட்டிங்ல கம்மு ...
கண்ணம்ம்ம்ம்ம்ம்ம்மா.......................................!~!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ReplyDeleteகண்ணம்ம்ம்ம்ம்ம்ம்மா!!
ReplyDeleteகாணாமல் போன கனவுகள்..!!!
போன வாரம் டிவியில சம்சாரம் அது மின்சாரம் படம் பாத்தீங்கதானே?... உடனே அதையும் இதையும் கோர்த்து.... எப்படிக்கா?... இப்படி ஒரு ஐடியா தோணுச்சு?.... உண்மையிலேயே சூப்பருக்கா... ரசிச்சுப்படிச்சேன்...
ReplyDeleteகண்ணம்மா ,பெர்னாண்டஸ் மூலமா என்னமா கலக்கி இருக்கீங்க...வாழ்த்துகள்!
ReplyDeleteஉங்கள் கலக்கலுக்கு என் ஒட்டு த .ம i௦
ReplyDeleteநேத்து டி வி ல படம் பாத்தீங்களோ?
ReplyDeleteயக்கோவ்... சூப்பர்.... இது மாதிரி ஏன் எனக்கு தோணமாட்டேங்குது?
ReplyDeleteநீங்க சொல்வது உண்மைதாம்மா. தம்பி ஆரூர்.செந்தில் & கே.ஆர்.பி. செந்தில் மற்றும் குழுவினர் சாப்பாட்டு விஷயத்துல தனி அக்கறை எடுத்து செய்து வருகிறார்.எல்லோருடைய யோசனைகளையும் கேட்டு சிறப்பா விருந்து தர முயற்சிக்கிறார்.நாம நிச்சயம் நல்ல பகல் உணவை எல்லோரும் சேர்ந்து உண்போம் என்பதில் மறுப்பில்லை.காரணம் அவருடைய ஒவ்வொரு விஷயமும் மிகச்சிறப்பா யோசிக்கிறார் செய்கிறார்.வாழ்த்துவோம்
ReplyDeleteமிக அருமை.
ReplyDeleteபதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.
புடவைக்கு ஸ்டோன் வேலை முடிந்து விட்டதா?
ReplyDeleteபதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்!!
அடடா அசத்தல் அசத்தல், நல்லவேளை தங்கச்சி அருவாளை தூக்கல ஹா ஹா ஹா ஹா ஹா....
ReplyDeleteஹாஹாஹா, . செம்ம அக்கா.
ReplyDeleteஒப்பீடும், எடுத்து இயம்பியுள்ள முறையும் அருமை! வாழ்த்து!
ReplyDeleteமீட்டிங்குக்கு போறது பதிவர்களோட ரைட்ஸ். அதை தடுக்க நீ யாரு?!//
ReplyDeleteஅதானே?
இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் மீட்டிங்க பத்தி ரொம்ப பில்டப் குடுக்கறீங்க (நீங்க மட்டுமில்லங்க இன்னைக்கு மட்டுமே பத்துக்கும் மேல இதப்பத்திய பதிவுங்கதான்) ஊர்லருக்கற எல்லாரும் வந்துட்டா என்ன பண்ணுவீங்க?
ReplyDeleteஹ..ஹா... சூப்பர்... என்னா கிரியேட்டிவிட்டி.... ! கொஞ்சம் கூட மிஸ் ஆகம நூல் பிடிச்ச மாதிரி கடைசிவரை கலக்கலா முடிச்சிருக்கீங்க.... இது மாதிரி பதிவு இப்போ ரொம்ப அரிது... வாழ்த்துக்கள்.
தாராளமா குத்தலாம் தமிழ்மண ஓட்டை...! (16)
ReplyDeleteஅடடே அமர்க்களம்!
ReplyDelete