ரொம்ப பசிக்குது புள்ள!! கை கால் கழுவிட்டு வரேன். தட்டெடுத்து வை. இன்னிக்கு என்ன சமையல்?!
கத்திரிக்காய் சாம்பாரும், உருளைக்கிழங்கு பொறியலும் மாமா.
என்னாது கத்திரிக்காய் சாம்பார?! அதான் எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியாதா?! அது சாப்பிட்டா உடம்புலாம் அரிக்கும்டி!!
அதெல்லாம்
யாரோ கட்டி விட்ட கதை மாமா! எதையுமே கடவுள் வீணா படைச்சுடலை.
கத்திரிக்காய் சாப்பிட்டு வந்தா ரத்தத்துல இருக்குற கொழுப்பை குறைக்குதாம்.
100கிராம் கத்திரிக்காயில் 24 சதவீதம் கலோரியும் 9 சத்வீதம் நார்சத்தும்
இருக்குதாம் மாமா!!
அப்படியா! நான் கத்திரிக்காயில் எந்த சத்துமில்லேன்னுதான் இத்தனை நாள் நினைச்சுட்டு இருந்தேன்!!
அதுமட்டுமில்ல மாமா!! வயலட் ல இருக்கும் கத்திரிக்காயின் தோளில் ”ஆந்தோசயானின்”ன்ற திரவம் இருக்காம். அது நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுதாம். "பி' காம்ப்ளக்ஸ் வகையான வைட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட், பைரிடமாக்சின், தயமின் மற்றும் நியாசின் ன்ற உயிர்சத்துக்களும் கத்திரிக்காயில் இருக்காம் மாமா!! மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்களும் இருக்காம். கத்திரிக்காயில் இருக்கும் சத்துகள் வளார்சிதை மாற்றத்துக்கும், உடற்செயலின் மாற்றாத்துக்கும் உதவுதாம். இவ்வளவு நல்லது செய்யுற காயை வேணாம்ன்னு சொல்றீங்களே!!
கத்திரிக்காயை சாப்பிடா சொறி வரும்னு சொல்லி வளர்த்துட்டதாலே அதை கண்டாலே பிடிக்கலை. இவ்வளவு சத்து இருக்கும்போது இனி சாப்பிட பழகிக்குறேன்.
ம்ம்ம் அதுமட்டுமில்லாம விக்குற விலைவாசில இதுதான் கம்மியா விக்குது!! ஆமா, உங்களை வயக்காட்டுல இருந்து வரும்போது அருகம்புல் பறிச்சுக்கிட்டு வாங்க. சாயந்தரம் பிள்ளையார் கோவிலுக்கு போகப்போறேன்னு சொன்னேன்னில்ல!!
கொண்டு வந்திருக்கேன். வண்டில இருக்கு.ஆமா, பிள்ளையாருக்கு அருகம்புல் சார்த்துறது ஏன்ன் தெரியுமா உனக்கு?!
அதெல்லாம் தெரியாது. ஆனா, அர்ச்சனை பண்ணா நல்லது நடக்கும்ன்னு மட்டும் தெரியும். அதாவது, ”சுலபன்”ன்ற ராஜா “ஜம்பா”ன்ற நாட்டை ஆட்சி பண்ணான். அவனும், அவன் மனைவி சுபமுத்திரையும் டெய்லியும் தங்கள் ஊரில் நடக்கும் கதாகாலட்சேபத்தைக் கேட்பது அவக்க பழக்கம். அப்படி ஒரு நாள் கதாகாலட்சேபம் நடக்கும் கோவிலுக்கு ஒரு சாமியார் வந்திருந்தார். அவரின் ஏழ்மை காரணமா அவர் ட்ரெஸ்லாம் கொஞ்சம் தாறுமாறா இருந்துச்சு. எப்பவும் கருணை உள்ளத்தோடு இரக்கசுபாவியான ராஜா எதோ ஒரு மூட்ல அந்த சாமியாரை பார்த்து சிரிச்சுட்டார்.
ஐயையோ! அப்புறம் என்ன ஆச்சு!?
ராஜாவோட சிரிப்பில் அவமானமடைந்த சாமியார் ஒரு மூலையில் போய் நின்னுக்கிட்டார். அப்படி அவ நின்ன விதம் விதி வசத்தால ராஜாவுக்கு மற்படியும் சிரிப்பு வந்திட்டுது. ராஜாவோட சிரிப்பை பார்த்து கோவம் தலைக்கேறிய சாமியார், ஏழ்மையில் வாடும் என்னப் பார்த்து சிரித்த நீ “எருதுவாக மாறு”ன்னு சாபம் விட்டுட்டார். ராஜாவும் எருமையாய் மாறிட்டார். அதை பார்த்த ராணி கோபம் கொண்டு, என் கணவரை எருதுவாக மாற சாபமிட்ட நீ “பொதி சுமக்கும் கழுதையாய் மாறு”ன்னு சாபம் இட்டாங்க. என்னை கழுதையாய் மாற சொன்ன நீ “புல் சுமக்கும் பெண்ணாய் மாறு”ன்னு சாபமிட்டு கழுதையாய் மாறிட்டார் சாமியார்.
ஐயோ! அப்புறம்?!
ஒரு நாள் புல் அறுத்து மூட்டையா கட்டிக்கிட்டு வீட்டுக்கு போகும்போது பலமான காத்து வீசிச்சு. அதிலிருந்து தப்பிக்க பக்கத்திலிருந்த பிஅள்ளையார் கோவிலுக்குள் புகுந்தாள். பலமா மழை பிடிச்சுக்கிச்சு. மழைக்காக எருதுவா மாறின ராஜாவும், கழுதையா மாறின சாமியாரும் கோவிலுக்குள்ள வந்தாங்க. புல்கட்டை பார்த்ததும் கழுதையும், எருதும் சாப்பிட புல்கட்டை அந்த பொண்ணுக்கிட்ட இருந்து வாயால புடுங்குனாங்க. மூவருக்குள்ளும் பெரிய போராட்டம். அப்போ, மூட்டையிலிருந்த புல் பிள்ளையார் சிலை மீது விழுந்துச்சு. அது விநாயகர் சதுர்த்தி நாள். அதனால, கோவிலில் கூட்டம் இருந்துச்சு.
பூஜை நேரத்துல கோவிலுக்குள்ள வந்த கழுதையையும், எருதையும் விரட்டுனாங்க. அதுங்க ஓடும்போது புல்கட்டை இழுத்துட்டு போனதால, அந்த பொண்ணும் ஓடவேண்டியதாய்டுச்சு. இப்படியே கோவிலை மூணு முறை சுத்தி வந்தாங்க. அருகம்புல் அர்ச்ச்னையும், அந்த மூணு சுற்றையும் ஏற்று ஆனந்தமடைந்த பிள்ளையார் அவங்க மூணு பேருக்கும் சுய உருவத்தை கொடுத்து மோட்சத்தையும் கொடுத்ததா தினமலர் பக்தி மலர்ல படிச்சேனுங்க மாமா,
ம்ம் கரெக்ட்தான் புள்ள, அருகம்புல்லினால் மனதார அர்ச்சனை செய்தா போதும், எல்லாத் தீவினையும் நீங்கிடும் . சரி, ஒரு ஜோக் சொல்லவா?!

சொல்லுங்க மாமா!
அறிவாளி 1 : மச்சி லேப்டாப் வாங்கிட்டு அடுத்து துணிக்கடைக்கு போகனும், ஞாபகப்படுத்து....
அறிவாளி 2: ஏன்டா நேத்துதானே ட்ரெஸ் எடுத்த. மறுபடியுமா?
அறிவாளி 1 : எனக்கில்லடா! லேப்டாப்ல விண்டோஸ்லாம் இருக்குமாமே,
அதுக்கு கையோட நல்லதா ஒரு ஸ்க்ரீன் வாங்கி தெச்சி வெச்சிடலாம்னுதான்:-)
அறிவாளி 2: ஏன்டா நேத்துதானே ட்ரெஸ் எடுத்த. மறுபடியுமா?
அறிவாளி 1 : எனக்கில்லடா! லேப்டாப்ல விண்டோஸ்லாம் இருக்குமாமே,
அதுக்கு கையோட நல்லதா ஒரு ஸ்க்ரீன் வாங்கி தெச்சி வெச்சிடலாம்னுதான்:-)
ம்ம்ம் ஜோக் நல்லா இருக்கு மாமா! ரம்ஜான் நெருங்குதே! நம்ம பக்கத்து வீட்டு இஸ்மாயிலுக்கு ஒரு புது துணி எடுத்து குடுக்குறது நம்ம வழக்கமாச்சே!!
மறக்கலை புள்ள, இன்னும் நாள் இருக்கேன்னு அமைதியா இருக்கேன். டிவில் ரம்ஜான் பத்தி பேசும்போது எட்டு வகையான சொர்க்கம் இருக்குன்னு ஒருத்தர் சொன்னார்.
என்னது எட்டு வகையான சொர்க்கமா?!
ம்ம்ம்ம் நமக்கு தெரிஞ்சவங்க
வீட்டு விசேஷம் வருது. நாம என்ன பண்ணுவோம்..., அவங்களோட தராதரத்துக்கு
ஏத்தமாதிரியும், நம்மோட வசதிக்கு ஏத்தமாதிரி சிம்பிளாவோ இல்ல ஆடம்பரமாவோகிஃப்ட் பண்ணுவோம் . சாதாரணப்பட்ட நம்மளே இவ்வளவு யோசிக்கும்போது, நம்ம தகுதிக்கேற்ப எல்லாம்வல்ல இறைவன் கொடுக்கும் வெகுமதி எவ்வளவு
உயர்ந்ததாய் இருக்கும் ??!! இறைவன் தனது
நல்லடியார்களுக்கு தரும் வெகுமதிதான், “சொர்க்கம்” இறைவன் தன்
திருமறையில் இந்த மாதிரி சொல்லி இருக்காராம். அவர்கள் செய்த நற்காரியங்களுக்கு கூலியாக,
மறைத்து வைக்கப்பட்டிருக்கும், கண்கள் குளிரக்கூடிய சன்மானத்தை எவரும்
அறிந்து கொள்ள முடியாது’(திருக்குர் ஆன் 32:17)ன்னு.
மனிதனாகப்
பிறந்தவனுக்கு ஆசைகள் பலது இருக்கும், அந்த எல்லா ஆசைகளையும், மண்ணாசை,
பெண்ணாசை, பொன்னாசை ன்ற வட்டத்துக்குள் அடைத்துவிடலாம். இந்த ஆசைகளை
அனுபவிக்க இந்த பூமி சரியான இடமல்ல . மறுமையில் இந்த ஆசைகளை ஒருவன் பூரணமாக
அனுபவிக்க முடியும் என்கிறார்.
அந்த எட்டு விதமான சொர்க்கத்தை ஒருவன் அடைய வேண்டுமென்றால் அவனிடம் ஐந்து விதமான தன்மைகள் இருக்க வேண்டுமாம். அவை...,
1. உலக வாழ்க்கையின் போது அனைத்து வகையான தீமையான காரியங்களில் இருந்தும் தன்னை தடுத்து கொள்ள வேண்டும்.
2.
தனது வருமானம் குறைவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு அதற்குள் தன்
வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் தீய வழிகளில் பொருளீட்டக் கூடாது.
3.
இறைவனை வணங்கி வழிபாடு செய்வதில் பேராசை கொள்ள வேண்டுமே தவிர பிற
பொருட்கள் மீதல்ல. ஒருவேளை அப்படி ஆசைப்பட நேர்ந்தால் இறைவனிடம் பாவ
மன்னிப்பு பெறவும், இறைவனின் அன்பை பெறவும் முயற்சிக்கவும் வேண்டும்..,
4. நல்லவர்களுடன் தோழமையை அதிகரிக்க வேண்டும். அவர்களுடன் சேர்ந்து நல்லவற்றையே செய்ய வேண்டும்.
5.
மரணம் என்பது வலி வேதனை இன்றி அமைதியானதாக இருக்க வேண்டும். யாருக்கும்
பாரமாக தொந்தரவாக நமது மரணம் அமைய கூடாது. அத்தகைய மரணத்தை தருமாறு இறைவனை
கேட்க வேண்டும். அதோடு நமது பாவங்களை எல்லாம் மன்னித்து சொர்க்கத்தை
தருமாறு இறைவனை மன்றாடிக் கேட்டுக்கொள்ளவேண்டும். இவற்றை பின்பற்றினால்
கீழ்க்காணும் எட்டுவிதமான சொர்க்கம் நமக்கு கிட்டும் என திருக்குர் ஆன்
சொல்கிறது.
அந்த எட்டு விதமான சொர்க்கம்:
தாருல் ஜலால்: வெண்முத்து, பவளம் ஆகியவற்றால் கட்டப்பட்ட மாளிகை...,
தாருஸ் ஸலாம்: சிகப்பு மரகத கற்களால் கட்டப்பட்ட மாளிகை....,
ஜன்னத்துல் மஃவா: பச்சை நிற மரகத கற்களால் கட்டப்பட்ட மாளிகை...,
ஜன்னத்துல் குல்த்: மஞ்சள் நிற மரகத கற்களால் கட்டப்பட்ட மாளிகை...,
ஜன்னத்துல் நயீம்: பளபளக்கும் வெள்ளியால கட்டப்பட்ட மாளிகை...,
தாருல் கரார்: சிவந்த நிறமுடைய தங்கத்தால் கட்டப்பட்ட மாளிகை...,
ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்: எல்லா விதமான விலை உயர்ந்த கற்களால் கட்டப்பட்ட மாளிகை, இதனுள் கஸ்தூரி வாசம் நிரம்பி வழியும்
ஜன்னத்துல் அத்ன்: தங்கம் வெள்ளி ஆகியவற்றால் கட்டப்பட்ட மாளிகைம்ம்ம்ம் புரியுது மாமா!! சரி ஒரு கேள்வி கேக்கவா?!
கேளு பதில் சொல்றேன்.
வேகமாக ஓடும் மானல்ல, இரு கொம்புகள் உண்டு மாடுமல்ல. இரண்டு கால்கள் உண்டு ஆனால் மனிதனல்ல. அது என்ன?!
ம்ம்ம்ம்ம்ம்ம்
சீக்கிரம் சொல்லு மாமா!!
இரு புள்ள யோசிக்குறேன்.
நீங்க யோசிச்சு வைங்க. நான் அதுக்குள்ள கோவிலுக்கு போய்ட்டு வந்துடுறேன்!!
ReplyDeleteவேகமாக ஓடும் மானல்ல, இரு கொம்புகள் உண்டு மாடுமல்ல. இரண்டு கால்கள் உண்டு ஆனால் மனிதனல்ல. அது என்ன?!////
அட... நல்லாயிருக்கே..
நல்லாதான் இருக்கு. பதிலை சொல்லுங்க சகோ!
Delete'கத்திரிக்காய் சாப்பிட்டு வந்தா ரத்தத்துல இருக்குற கொழுப்பை குறைக்குதாம்' நல்ல பயனுள்ள தகவல்.
ReplyDelete'' நல்லவர்களுடன் தோழமையை அதிகரிக்க வேண்டும். அவர்களுடன் சேர்ந்து நல்லவற்றையே செய்ய வேண்டும்'' போன்ற நல்ல கருத்துக்களை சொல்லியிருப்பதற்கு பாராட்டுக்களும் நன்றியும்.
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி!
Deleteகத்திரிக்காய் பற்றிய தகவல் எனக்கு புதுசு ... ஐஞ்சுவை அவியல் அருமை...
ReplyDeleteசுவர்க்கம் நரகம் எனபது எல்லாம் கட்டுகதை வாழும் வாழ்க்கையில் பேராசை கொள்ளாமல் எல்லோருடன் அன்புடன் இருபவன் சொர்க்கத்தில் வாசம் அதைவிட்டு விட்டு தோட்டத்தை எல்லாம் குறை காண்பவன் ..தான் செய்வது தான் சரி என்று அறியாமையில் மனித நேயம் மறந்து மடைமையில் வாழ்பவனும் நரகவாசிதான் ..
ReplyDeleteகத்திரிக்காயை மலையாளிகள் வழிந்துணைக் காய் என்பார்கள். அதாவது வாழ்க்கை முழுவதும் வழித் துணையாய் வருமாம்! அத்தனை சத்துக்கள் நிறைந்ததாம். அங்கு ஏறக்குறைய எல்லா ஓட்டல்கள்லயும் சாம்பார்னா கத்திரிக்காய்தான்!
ReplyDeleteதகவல் அவியல் சூப்பர்
ReplyDeleteபுதுமையான தகவல்...
ReplyDeleteகத்திரிக்காய் தகவலும் அருகம்புல் பற்றிய கதையும் எட்டுவகை சொர்கம் பற்றிய விளக்கமும் சிறப்பு! விடுகதை போட்டு என் மூணு முடியை பிச்சிக்க வெச்சிட்டீங்களே சகோதரி! நன்றி!
ReplyDelete//வேகமாக ஓடும் மானல்ல, இரு கொம்புகள் உண்டு மாடுமல்ல. இரண்டு கால்கள் உண்டு ஆனால் மனிதனல்ல. அது என்ன?!//
ReplyDeleteமோட்டார் பைக் அல்லது சைக்கிள்
சரிதான். அக்காவை போலவே தம்பியும் புத்திசாலி!!
Deleteஇந்த வாரம் கொஞ்சம் சுலபமோ ....நானும் guess பண்ணேன்
Deleteஐஞ்சுவை அவியல் அருமை தகவலை அள்ளித் தந்து திணற அடிக்கிறிரீர்கள்
ReplyDeleteஅருமையான அவியல்......
ReplyDeleteஐஞ்சுவை அவியல் சூப்பர்ர்...கத்திரிக்காய் சாப்பிட்டால் இரவில் நன்றாக தூக்கம் வரும்...
ReplyDeleteஅருமையான ருசியான அவியல்.
ReplyDeleteஅருகம்புல் கதை, எட்டுவிதமான சொர்க்கம் எல்லாம் நன்றாக இருக்கிறது.
சகோ உங்கள் அவியல் மூன்று பதிவுகளுக்கான செய்திகளின் கலவை....
ReplyDeleteரொம்ப அதிகமோ!! திகட்டிடுச்சோ!!
Deleteகத்தரிக்காய் பற்றிய உயர்வான தகவல்...அங்க ஊர்ல அது கூட விலை அதிகம் போன வாரம் உழவர் சந்தையில காணவே காணோம்...
ReplyDelete