Thursday, August 08, 2013

கத்திரிக்கா!! கத்திரிக்கா!! குண்டு கத்திரிக்கா!! -ஆண்கள் ஸ்பெஷல்


ஒரு சட்டையோ இல்ல ஃபேண்டோ வாங்கும்போது திருப்பி திருப்பி பார்த்து வாங்கி வரும் நம்ம ஆளுங்களை ”ஒரு கால் கிலோ கத்திரிக்காயும், அரைக்கிலோ வெங்காயமும் வாங்கி வாங்க”ன்னு அனுப்பினா..., 

கடைக்காரர் வாயையே பார்த்துக்கிட்டு கத்திரிக்காயில பாதி சொத்தையாவும்  வெங்காயத்துல பாதி  அழுகலாவும் வாங்கி வருவாங்க.  இவங்களுக்குன்னே இதெல்லம் எடுத்து வச்சிருப்பாங்களோ தலையில் கட்ட!!

ஒரு கத்திரிக்காய் வாங்க துப்பில்லே நீயெல்லாம் ஒரு ஆஃபீசுல மேனேஜரா எப்படிதான் குப்பை கொட்டுறியோ?!ன்னு  நம்ம சகோ’ஸ்  பேச்சும், ஏச்சும் வாங்கக்கூடாதுன்னுதான் இந்த பதிவு....,

 வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமயும்,உள்ளிருக்கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்கனும்...,

வெள்ளை வெங்காயத்தை  நசுக்கி பார்த்தா  சாறு வரும்படி இருக்கனும்.(அதுக்காக, ரொம்ப அழுத்தமா நசுக்கி ஜூஸ் எடுத்துட்டு கடைக்காரர்கிட்ட அடி வாங்குனா கம்பெனி பொறுப்பேற்காது)
 முருங்கைக்காயை கட்டை மற்றும் ஆட்காட்டி  விரல்களால லேசா முறுக்கினா, ஈசியா  வளைஞ்சா அது நல்ல முருங்கைகாய். ஒடிஞ்சா அது முத்தல்.

சர்க்கரைவள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடிப்பட்டு கருப்பா இருந்தா கசக்கும்

மக்காச்சோளம் அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம்.

 தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).


கோவக்காய் முழுக்க பச்சையா வாங்கனும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேணாம். பழுத்தது ருசி இல்லாம இருக்கும்


சின்ன வெங்க்யாம் வாங்கும்போது பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருக்குறதும், முத்து முத்தாக தெளிவா இருப்பதை வாங்கவும்


 தோல் சுருங்காம இருக்கனும்.  கரும்பச்சையில இருந்தாலும்  வாங்கவேணாம். 


காலிபிளவர் பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாம அடர்த்தியா காம்பு தடினமனா இல்லாம வாங்கனும். எடை போடும்போது இலை தண்டை வெட்டிட்டு எடை போட சொல்லுங்க. 

 மாங்காய வாங்கும்போது  தட்டி பார்க்கும்போது டொக்க்ன்னு சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சின்னதா  இருக்கும்


பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ): அடிப் பகுதி குண்டா இல்லாம காய் முழுதும் ஒரே சைசில் இருக்குற மாதிரி  பார்த்து வாங்குறது நல்லது


புடலங்காய்  கொஞ்சம் கெட்டியா அழுத்தமா இருக்குற மாதிரி பார்த்து வாங்குங்க.  அப்போதுன் விதைப்பகுதி குறைவா, சதைபகுதி அதிகமா இருக்கும்


உருளை கிழங்கு முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறினாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர மாதிரி இருக்கனும்.

 கருணை கிழங்கு முழுசா வாங்கும் போது பெரியதா பார்த்து வாங்குறது நல்லது. வெட்டிய கிழங்கை வாங்குனா, உள்ள இளம்சிவப்பு நிறத்துல இருக்குமாறு  வாங்கவும்


சேப்பங்கிழங்கு முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக்கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது.கொஞ்சம்  உருண்டையா பார் த்து வாங்கவும்


 பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும். கீழ் பகுதில வால் முளைக்காமயும் பார்த்து வாங்குங்க.


இஞ்சி லேசா கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வந்தா வாங்குங்க.இதுல  நார் குறைவா இருக்கும். 


 கத்திரிக்காய் தோல் சாஃப்டா இருக்கனும். மேல் காம்பு தடிமனா இல்லாம, மேல்தோல் கத்திரிக்காயோடு ஒட்டி இருக்கனும்.
 

 சுரைக்காயை நகத்தால அழுத்தினா நகம் உள்ளே இறங்னும். அப்போ தான் அது இளசு.

 பூண்டு பல் பல்லா வெளியே தெரியனும். இல்லாட்டி உள்ளே பூச்சி, பூஞ்சை இருக்க வாய்ப்பு அதிகம். 


அவரைக்காய் தொட்டு பார்த்து விதைகள் பெரிதா இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசா வாங்கினா நார் அதிகம் இருக்காது


 பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையான நீண்ட காய் நல்லது.


 வாழைப்பூவோட மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளிர் நிறத்தில் இருக்கிறதா?! என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் பூன்னு அர்த்தம். 


  மொச்சைக்காய் வாங்கும்ப்போது கொட்டை பெரிதா தெரியும் காய் பார்த்து வாங்கவும்


சௌசௌ வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தா முற்றிய காய்


முள்ளங்கி  லேசாக கீறினா தோல் மென்மையா இருந்தா அது இளசு- நல்ல காய்.

 பச்சை மிளகாய்  நீளமானது  காரம் குறைவா இருக்கும்.  குண்டா இருக்குறதுதான் காரம் தூக்கலாகவும் வாசனையும் பிரமாதமாக இருக்கும்.

இப்படி பார்த்து பார்த்து காய் வாங்கிட்டு போய் வூட்டம்மாக்கிட்ட நல்ல பேரு எடுங்க சகோ’ஸ்

39 comments:

  1. நல்ல தகவல்கள்... வீட்டுல சமைக்கற எல்லா ஆண் மக்களும் அறிய வேண்டிய தகவல்கள்...

    பாராட்டுகள்....

    ReplyDelete
    Replies
    1. அதனாலதான் தலைப்புலயே ஆண்கள் ஸ்பெஷல்ன்னு போட்டிருக்கேன், வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  2. ஊருக்கு போனால் காய்கறி எல்லாம் மார்கெட்டில் போயி வாங்கி வருவது நான்தான், விதவிதமா நான் வாங்கிட்டு வாரதப் பார்த்து உங்க அண்ணிக்கு முகத்துல வருகிற பிரகாசம் இருக்கே கோடி கொடுத்தாலும் கிடைக்காது அந்த அழகு...!

    காய்கறி தகவலுக்கு நன்றி...!

    ReplyDelete
    Replies
    1. நல்லதுங்கண்ணா!!

      Delete
  3. ஒரு கத்தரிக்கா படமாவது போட்டிருக்கலாம்

    ReplyDelete
  4. நல்ல தகவல்கள்... வாரா வாரம் எங்கிட்ட செம டோஸ் வாங்கற என் வீட்டுக்காரர் கிட்ட இதை சொல்லலாம்தான்.. அப்புறம் திட்டறதுக்கு மேட்டர் கிடைக்காதேன்னு யோசிக்கிறேன்..அரைகிலோ காய்கறிக்கு அரை மணி நேரம் டோஸ் விட்டாத்தான் நமக்கு பொழுதே போவும்.... ஹா.. ஹா..!

    ReplyDelete
    Replies
    1. என்னை மாதிரி ஒரு அப்பாவி உங்ககிட்ட மாட்டிகிட்டாரா...அட ராமா

      Delete
    2. யாரு நீங்களா அப்பாவி!? நிஜம்தான்!!

      Delete
  5. நாம விவரம்னா கடைக்காரர் நம்மை விட விவரங்கோ...காலிபிளவரில் கீழே இருக்கும் இலையை வெட்டச் சொன்னால் வெச்சுட்டுபோங்கன்னு சொல்லிருவாரு...

    ReplyDelete
  6. செத்தாண்டா காய்கறி கடைக்காரன்!

    ReplyDelete
  7. காய்கறி வாங்க தேவையான தகவல்கள் எல்லாம் தந்திருக்கிறீர்கள்- பயனுள்ள தகவல்களுக்கு நன்றி. ''முழுக்க பச்சையா வாங்கனும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேணாம். பழுத்தது ருசி இல்லாம இருக்கும்'' இது எதைப்பத்திய தகவல்?

    ReplyDelete
    Replies
    1. கோவக்காய்ங்க. சரியா கவனிக்காம விட்டுட்டேன்

      Delete
  8. உபயோகமான தகவல்கள்.

    இப்படியெல்லாம் கீறி, தட்டி, நசுக்கி பார்த்து வாங்கினா கடைக்காரர் சண்டைக்கு இல்ல வருவார்....:))

    ReplyDelete
    Replies
    1. லேசா கீறி, தட்டி பார்த்து வாங்குனா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. வூட்டுக்காரரை கீறுற, தட்டுற மாதிரி பண்ணா கடைக்குள்ளா கூட சேர்க்க மாட்டாங்க!!

      Delete
  9. ரொம்ப ரொம்ப நன்றி! வீட்டுக்கு காய் வாங்கறது நான் தான்! ரொம்பவே உபயோகப்படும் உங்க டிப்ஸ்! பிரிண்ட் அவுட் எடுத்து வச்சிக்கிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

      Delete
  10. நல்ல அறிவுரைகள்தான், ஆனால் எப்படி வாங்கினாலும் வீட்டம்மாகிட்டே பாட்டு வாங்காம இருக்க முடியாது.

    எப்படியும் பொரியலோ, கூட்டோ செய்து சொதப்பிட்டு நீங்க வாங்கின காய் சரியில்லை என்று சொல்லுவாங்க.

    ReplyDelete
    Replies
    1. ஹா! ஹா! எப்படியும் திடு வாங்க போறோமேன்னு சொத்தைகாயை வாங்கிட்டு போயி காசை வேஸ்ட் பண்ணுறீங்களா?!

      Delete
  11. இன்றைய பெண்களுக்கும் தேவையான தகவல்கள்.எங்க வீட்ல நான் இல்லாம கடைக்கு யாரும் போறதே இல்லை.பசங்களும் அப்படியே அப்பாவை போலவே இருக்குதுங்க.

    ReplyDelete
    Replies
    1. இது தப்புங்க. பையனோ பெண்ணோ இதெல்லாம் சொல்லிக்குடுங்க. என்னை விட 9 வது படிக்கும் என் பையன் நல்லா காய்கறி வாங்குவான்!!

      Delete
  12. நான் தப்பிச்சேன் இதெல்லாம் வாங்க நான் போக மாட்டேன்

    ReplyDelete
  13. பச்சைக் காய்கறிகளை வாங்வதில் நான் அவ்வளவு மோசமில்லை, இருந்த போதும் தங்கள் டிப்ஸ் நிச்சயம் உதவும். ஆனால் வெண்டைக்காயை வாங்கிறேன் பேர்வழி என முற்றாக உடைத்து உடைத்துப் போட்டு விட்டு வருவோரைப் பார்த்தால் கோபம் கோபமாய் வரும்.

    ReplyDelete
  14. திருமதிகளிடமிருந்து திருவாளர்களை காப்பாற்றி, காய்கறி காரரிடம் அடி வாங்குவதற்கு வழி சொல்கிறீர்கள்.

    ReplyDelete
  15. அட, இதில இவ்ளோ விஷயமிருக்கா, அப்ப இத்தனை நாளாய் நான் பொறுக்கி எடுத்ததெல்லாம்...?

    ReplyDelete
    Replies
    1. அது என்னன்னு உங்க ஹவுஸ் பாஸ்கிட்டதான் கேக்கனும்!!

      Delete
  16. எட்டு வருசத்துக்கு மேல தனியாவே இருந்து சமைச்சி சாப்ட்டதாலே எனக்கும் இந்த மாதிரி சூட்சுமம்லாம் கொஞ்சம் தெரியும். இருந்தாலும் ரெடி ரெக்கன்னர் மாதிரி இத ப்ரின்ட் எடுத்து வச்சி யூஸ் பண்ணிக்கலாம் போல. தாங்ஸ்:))

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றிப்பா!

      Delete
  17. எல்லாம் சரி இதையெல்லாம் எப்படி சமைக்கிறதுன்னு சொல்லிட்டிங்கன்னா உங்களுக்கு புண்ணியமா போகும் :-))))

    ReplyDelete
    Replies
    1. அதுக்குதான் புதன் கிழமைல பதிவு போடுறேனே!

      Delete
  18. என் கணவரை காய் வாங்கி வரச்சொன்னால் காய்கறிகடைக்கார் மிகவும் சந்தோஷப்படுவார். அவர் கொடுப்பதை அப்படியே வாங்கி வரும் பண்பாளர் கிடைத்து விட்டார் என்று. என்ன இப்படி வாங்கி வந்து இருக்கிறீர்கள் என்று நான் கேட்டால் நல்லதை சமை மற்றதை கண்ணை மூடிக் கொண்டு தூக்கிப்போடு என்பது தான்.

    ReplyDelete
    Replies
    1. இங்கயும் அதே நிலைமைதான்!!

      Delete
    2. அதுக்கு பேசாம நீங்களே வாங்க போலாமே... ஏன் எப்பப் பாத்தாலும் அந்த அப்பவி ஜீவன்கள பழி வாங்குறீங்க... ம்ம்ம்??..

      -SaS

      Delete
  19. சிறுவயதிலிருந்தே காய்கறி வாங்குவது எனது வேலையாக இருந்தது.... தில்லி வந்த பிறகும் பல வருடம் சொந்த சமையல் தான்...... அதனால் காய்கறி வாங்குவதில் பிரச்சனை இல்லை!

    ReplyDelete
  20. அக்கா இப்படி ஆண்கள் விழிப்புணர்வில் திடீரென்று காரணம் என்னவோ...

    பட்டியலில் தேங்காயை காணமே!

    ReplyDelete
  21. உங்களுடைய முந்தைய சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் என்ற பதிவை படிக்க முடியவில்லையே ஏன்? லிங்க்கில் ஏதோ கோளாறு!

    ReplyDelete
  22. இதுக்கு பேசாம மம்மியே போய் வாங்கிட்டு வரலாம்... நான் ஓரளவுக்கு ஒழுங்கா வாங்குவேன்... பாவம் எங்க டாடி..! பத்து நிமிஷம் திட்டு வாங்கிட்டே பேப்பர் படிப்பாங்க..!

    -SaS

    ReplyDelete