ஏனுங்க மாமா! டிவிப்பொட்டில கிரிக்கெட் போட்டிருக்காங்க போல! ஊர் பஞ்சாயத்து டிவி ரூம்ல எல்லாப் பயலுமே உக்காந்துப் பார்த்துக்கிட்டு இருக்காங்க. நீங்கப் போய் இருப்பீங்கன்னு நினைச்சேன். அங்கயும் போகலை. வீட்டுலயும் பார்க்கல. ஏன்?
ம்ஹூம், கிரிக்கெட் பார்க்கவே புடிக்கல புள்ள!
ஏன்? என்னாச்சு மாமா!?
நம்ம சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் போட்டில விளையாடுறதல இருந்து ரிட்டையர்மெண்ட் வாங்கிட்டார் இல்ல. அதான், அவரில்லாம கிரிக்கெட்டை பார்க்கவே வெறுப்பா இருக்கு. 16 வயசுல விளையாட வந்தாரு. 40 வயசு வரை விளையாடினார். இந்தியாவுக்காக பல போட்டிகள்ல விளையாடி சாதனை புரிஞ்சிருக்கார். மேட்ச் பிக்சிங், சினிமா நடிகைகள் தொடர்புன்னு எந்த விசயத்துலயும் மாட்டாம நல்லப்படியா விளையாடியவர். உனக்குதான் கிரிக்கெட் பிடிக்காதே இதெல்லாம் ஏன் கேக்குறே! சும்மாவா விளையாடுறாங்க!? பணம் வாங்கிட்டுதானே விளையாடுறாங்க? இதுவும் ஒரு தொழில்தான்னு திட்டுவே!?
ஆமா மாமா! இப்பவும் இந்த நினைப்பு இருக்கு, ஆனா, சச்சினின் கடைசி ஆட்டத்தப்போ அவர் பேசுன பேச்சு பிடிச்சுப் போச்சு!தன்னுடைய வெற்றியில பெற்றோர், நண்பர்கள், ரசிகர்கள், மனைவி, பிள்ளைகள், தன் நாட்டோட பங்களிப்பு என்னன்னு தெளிவா சொன்னதோடு, இதுவரையிலான என் பார்டர்னர்ஷிப்ல தன் மனைவியோட பார்டர்னர்ஷிப்தான் சிறந்ததுன்னு சொல்லி தன் காதலையும் அழகா தெரியப்படுத்தினார். சச்சின் பேசப்பேச அவர் மனைவி கண்ணுல தண்ணி கொட்டுது. குழந்தைகளை அவர் ஆதரவா அணைச்சுக்கிட்டதும் பிடிச்சது. அவர் பேசும்போது துக்கமா இல்ல நெகிழ்ச்சிலயான்னு தெரியல. தொண்டை கம்மிக்கிட்டேப் போச்சு. அடிக்கடி தண்ணி குடிச்சு அதை சமாளிச்சார்.
ம்ம்ம்ம் விளையாட்டுடன் குடும்பத்தையும் எவ்வளவு நேசிச்சார்ன்னு இதிலிருந்து தெரியுது. நீதான் சீரியல், நியூஸ் எதும் பார்க்க மாட்டியே! ஏன் டிவிப் பொட்டியை ஆன் பண்றே!?
திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7 மணிக்கு விஜய் டிவில மகாபாரதம் போடுறாங்க. அதை பார்க்கப் போறேன். நல்லா ஃபாஸ்டாவும் கதை நகருது. ஒவ்வொரு கேரக்டருக்கும் அவ்வளவு பொருத்தமா ஆட்களை செலக்ட் பண்ணிப் போட்டிருக்காங்க. சகுனி வந்தாலே நமக்கே ஒரு மாதிரியா இருக்கு. மத்த தொடர்கள்ல திருதராஷ்டிரனை சும்மா பதவிக்கு ஆசைப்படும் ஆளாய்தான் காட்டுவாங்க. ஆனா, இதுல பதவி வெறி அவர் முகத்துல அப்பட்டமா தெரிந்தாலும், பதவிக்குண்டான போர்ப் பயிற்சிலாம் எடுத்துக்குற மாதிரி காட்டுறாங்க.
அப்புறம், பாண்டு கேரக்டருக்கும் பொருத்தமான ஆள்தான் போட்டிருக்காங்க. எதுக்கும், சலனப்படாத சிரித்த முகத்துடன் இருக்குற ஆளைதான் போட்டிருக்காங்க. பீஷ்மர், நடப்பதை பார்த்து உள்ளுக்குள் புழுங்கி, வெளில சொல்ல முடியாம தவிக்கும் கேரக்டர்ல செம தூள். ஆனா, கிருஷ்ணர் போல ஒருத்தர் வர்றார். மயிலிறகும், புல்லாங்குழலை வச்சுதான் அவர் கிருஷ்ணர்ன்னு சொல்ல வேண்டி இருக்கு. கிருஷ்ணர்க்குண்டான குறும்பு சிரிப்பு, கள்ளப்பார்வை இவர்கிட்ட மிஸ்ஸிங். ம்ம்ம் பார்க்கலாம்.., இதே ஆள்தான் கிருஷ்ணரா தொடரப்போறாரான்னு பார்க்கலாம்.
ஆச்சர்யமா இருக்கு புள்ள! சீரியல்லாம் பார்க்காத நீயே இம்புட்டு விலாவரியா சொல்றியே! அப்ப நல்லாதான் இருக்கும்.
விளம்பரம் பண்ணும்போது சீரியல் பார்க்கனும்ன்னு ஆசை வரும். உக்காந்து பார்த்தா, ரெண்டு மூணு கல்யாணம், பொண்ணுங்கலாம் தீவிரவாதி போல வெடிக்குண்டு, விசம்லாம் எடுத்துக்கிட்டு சுத்துறதும், குழந்தைகள்லாம் வயசுக்கு மீறின பேச்சுகள்லாம் பேசுறதும் காண சகிக்கலை. சன் டிவில மாலை 5.30 மணிக்கு பிள்ளை நிலான்னு ஒரு சீரியல் போகுது, அதை ஒரே ஒரு நாள்தான் பார்த்தேன். ஐயோ கொடுமை..
பெத்த தாய்க்கும், வளர்ப்பு தாய்க்கும் இடையில இருக்கும் ஒரு பெண் குழந்தையின் கதை. ஒரு அம்மாக்கு உடம்புக்கு முடியல. இன்னொரு அம்மாக்கிட்ட கடைக்கு போய் மாத்திரை வாங்கிட்டு வரச்சொல்லுது. அப்ப, அம்மா கர்ப்பமா இருக்காங்க. இந்த நேரத்துல மாத்திரைலாம் அதிகம் சாப்பிடக்கூடாது. அதுக்கேத்த மாதிரி மாத்திரை வாங்கி வாங்கன்னு சொல்லிச்சு. அதைப்பார்த்ததும் நொந்துப் போய் வேற சேனல் மாத்திட்டு வந்திட்டேன்.
வெள்ளிக்கிழமை சேனல் மாத்திக்கிட்டு வரும்போது, மறுபடியும் இந்தச் சேனல் பார்த்தேன். ஒரு அம்மாவுக்கும், அவள் வீட்டுக்காரருக்கும் சண்டைப் போல! அதுக்கு, அந்த குட்டிப்பொண்ணு தன் அம்மாக்கிட்ட சாப்பாடு பையை கொடுத்து அப்பா ஆஃபீசுக்கு சாப்பாடு கொண்டுபோக சொல்லுது. கூடவே அப்படி நடந்துக்கோ, இப்படி நடந்துக்கோன்னு அட்வைஸ் வேற! என்னதான் புத்திசாலி குழந்தையா இருந்தாலும் இதுலாம் ஓவர் மாமா!!
நீ சொல்லுறதும் கரெக்ட்தான் புள்ள! ஓரளவுக்கு பிள்ளைகளை வச்சு எடுக்கப்படும் தொடர்கள்ல குட்டீஸ், சுட்டீஸ் பரவாயில்ல. அதுல இமான் அண்ணாச்சி, கேக்குற கேள்விகளுக்கு குழந்தைகள் சொல்லும் பதில் சிரிக்க வச்சாலும், சில சமயம் நம் பிள்ளைகளுக்கு சரியான பாதையைதான் நாம காட்டுறோமான்னு சந்தேகமா இருக்கு.
ஆமா மாமா! இமான் அண்ணாச்சி இதுப்போன்றா கேள்விகளை தவிர்த்தாலும், எதாவது ஒரு கேள்விக்கு, அப்பா அம்மாவை அடிக்குறது, அம்மா திட்டுறதுலாம் குழந்தைகள்கிட்ட இருந்து பதிலா வந்துடுது. ஒரு பாப்பாக்கிட்ட கெரசின்னா என்னன்னு இமான் அண்ணாச்சி கேக்க, மேல ஊத்திக்கிட்டு பத்த வச்சிக்குறதுன்னு பதில் சொல்லுது. அடுப்பெரிக்க, ஜெனரேட்டர்ல ஊத்த, பெயிண்ட்ல கலக்கன்னு எத்தனை நல்ல விசயம் அதுல இருக்கு. அதையெல்லாம் கத்துக்கொடுக்காம பத்த வச்சுக்குறதுக்குதான் கெரசின் யூஸ் ஆகுதுன்னு சின்ன புள்ளை மனசுல பதியுற மாதிரி நாம நடந்துக்குறோமேன்னு நினைச்சாதான் சங்கடமா இருக்கு மாமா.
கரெக்ட்தான் புள்ள! பசங்களுக்கு சரியான பாதையை நாம காட்டத் தவறிட்டோம்ன்னுதான் நினைக்குறேன். இப்படிலாம் சிந்திக்குறியே! ஒரு விடுகதை கேக்குறேன் அதுக்கு பதில் சொல்லு பார்க்கலாம்!!
ம்ம்ம் சொல்லுங்க மாமா! தெரிஞ்சா சொல்றேன்.
ஐந்து முற்றத்துக்கு ஒரு வாசல். அது என்ன!?

ஹா! ஹா! எனக்குத் தெரியுமே!
இரு. இரு. கொஞ்ச நேரம் கழிச்சு வந்து விடையை கேட்டுக்குறேன்.
இரு. இரு. கொஞ்ச நேரம் கழிச்சு வந்து விடையை கேட்டுக்குறேன்.
நல்ல பதிவு
ReplyDeleteஆனால் விடுகதைக்கு பதில்........?
நீங்கதான் பதில் சொல்லனும்.
Deleteநானும் சரியான விடையை யார் சொல்றாங்க என்று பார்க்கிறேன்...
ReplyDeleteஎன்ன அண்ணேன்...நீங்களாவது விடை சொல்லுவிங்கன்னு பார்த்தா.........ஒ...தெரியிலைனா இப்படியும் சொல்லலாமோ? ஹா..ஹா
Deleteம்... பாட்டி கிட்ட ,அம்மாகிட்ட விடுகதை கேட்ட அனுபவம் எல்லாம் எனக்கு இல்லைங்க... நானா சொல்றேன்... " வாய் ! "...கரெக்ட்டா? எப்புடின்னா...ரெண்டு கண்ணு, ரெண்டு காது ஒரு மூக்கு இந்த ஐந்து புலன்களுக்கும் வாய்தான் வாசல்..எப்படின்னா ஒருத்தர் சொல்றதை " ரெண்டு -காது" கேட்டாலும் வாய்தான் பேசும்.... ஒருத்தரை பார்த்தாலோ இல்லை..இரண்டு கண்ணும் அழுதாலோ- வாய்தான் விஷயத்தை சொல்லும்... அப்புறம் ஒரு மூக்கு " சகோ ராஜி வீட்டில் போண்டா சுடுறாங்கன்னு... வாசனை கண்டு பிடிச்சாலும் இந்த வாய்தான்... அதை கேட்டு வாங்கி சாப்பிடும்...! ஸோ - " வாய்..." சரியான விடை...! டொட்டோடய்ங்க்...... ஆன்சர் எப்புடியெல்லாம் கண்டுபுடிக்கிறோம் பாருங்க... சரியான விடை சொன்ன இந்த வாய்க்கு அஞ்சு போண்டா, இரண்டு பஜ்ஜி ஒரு பார்சல்ல்ல்................!
ReplyDeleteநானும் அதைத்தான் நினைச்சேன்........
Deleteஅதுக்குள்ளே நீங்க சரியா சொல்லிப்புட்டீங்க....
அதென்ன அஞ்சு போண்டா...இரண்டு பஜ்ஜி...அஞ்சு பஜ்ஜியே சாப்பிடுங்க..இல்லனா பட்சி கோவிச்சிக்கப் போகுது
இதைத்தான்.... பின்பாட்டுன்னு சொல்வாய்ங்களா...? ஹா... ஹா... தனபாலன் சார் நீங்க கேட்க வேண்டியதுக்கு பதிலா நான் கேட்டு... உங்க மானத்தை காப்பாத்திட்டேன்...!
Deleteஇல்லை இல்லை... எப்போதும் ஐஞ்சுவை அவியல் பகிர்வு என்றால் கடைசியாக பதில் சொல்ல வேண்டும் (விடுகதைக்கு பதில்) என்று சகோதரியின் அன்பு வேண்டுகோள்....
Deleteநான் ஐந்து விரலையும் உள்ளங்கையையும் யோசித்தேன்.....
ReplyDeleteகிருஷ்ணரிடம் நீங்கள் எதிர்ப்பார்க்கும் அனைத்து அம்சங்களும் அமைய ராதாவிடம் பிரார்த்தித்து கொள்கிறேன்
ReplyDeleteத.ம 3!
Really great player sachin. i dont like cricket, but last day sachin speech really good. i dont like serial. oly see Sony Cid, cartoon network.
ReplyDeleteAvial is superb. ans. fingers hand. correcta akka?
ReplyDelete//உனக்குதான் கிரிக்கெட் பிடிக்காதே இதெல்லாம் ஏன் கேக்குறே//
அட என் சகோவிற்கும் எனக்கும் உள்ள ஒரு ஒற்றுமை இதுமட்டும்தானா
//என் பார்டர்னர்ஷிப்ல தன் மனைவியோட பார்டர்னர்ஷிப்தான் சிறந்ததுன்னு சொல்லி தன் காதலையும் அழகா தெரியப்படுத்தினார்.//
ReplyDeleteஅட இப்படி ஒருத்தன் ப்ளிக்கா பொய் பேசுனா இந்த பெண்களும் உண்மைன்னு நினைச்சு அவங்களுக்கு ரொம்ப பிடிச்சு போகுதே
///கிருஷ்ணர் போல ஒருத்தர் வர்றார். மயிலிறகும், புல்லாங்குழலை வச்சுதான் அவர் கிருஷ்ணர்ன்னு சொல்ல வேண்டி இருக்கு. கிருஷ்ணர்க்குண்டான குறும்பு சிரிப்பு, கள்ளப்பார்வை இவர்கிட்ட மிஸ்ஸிங். ம்ம்ம் பார்க்கலாம்.., இதே ஆள்தான் கிருஷ்ணரா தொடரப்போறாரான்னு பார்க்கலாம்.//
ReplyDeleteகிருஷ்ணரா நடிக்க என்னிடம் கெஞ்சோ கெஞ்சு என்று கெஞ்சி கொண்டிருக்கிறார்கள். நாந்தான் தயக்கம் காண்பிக்கிறேன். நான் கிருஷ்ணனா நடிக்க ஆர்ம்பித்தால் எனதுகுறும்பு சிரிப்பு, கள்ளப்பார்வைக்கு எல்லா பெண்களும் மயங்கி என் பின்னால் வந்திடுவாங்க.. ஆண்பாவம் பொல்லாதது என்பதால்தான் நான் யோசித்து கொண்டிருக்கிறேன்
சச்சின் பிரிவு மனசை பிசைந்த போதும் எங்க தலைவர் கங்குலிக்கு இந்த மரியாதை கிடைக்கலையேன்னு வருத்தமா இருந்தது..
ReplyDeleteஉங்கள் விடுகதைக்குப் பதில் உள்ளங்கை என்று நினைக்கிறேன் சரியா?
ReplyDeleteஎன்ன பரிசு கொடுப்பீர்கள்?
ரொம்ப சரிங்க....அஞ்சு விரலுக்கும் நடுவில் இருக்க உள்ளங்கைதான் வாசல்.... வாங்க அழகான மருதாணி கோலம் போட்டு விடறேன்....
Deleteசுவையான அவியல்......
ReplyDelete