Tuesday, November 12, 2013

சோமாஸ் - கிச்சன் கார்னர்


தீபாவளி பண்டிகைக்கு என் நாத்தனார் வீட்டுக்கு பலகாரம் கொடுத்தனுப்ப, என்ன கொடுக்கலாம்ன்னு மண்டையை உடைச்சுக்க வேண்டியதில்ல. நாத்தனார் வீட்டுக்காரருக்கும், அவங்க பசங்களுக்கும் சோமாஸும், ஓமப்பொடியும், குளோப் ஜாமூனும் ரொம்ப பிடிக்கும். அதையே செஞ்சு கொடுத்தா போதும். 

சோமாஸ் உள்ள வைக்கும் பூரணத்துக்கு எல்லாரும் ரவை, முந்திரி, திராட்சை, தேங்காய்ப்பூ, சர்க்கரைலாம் வச்சு செய்வாங்க. ஆனா, எங்க வீட்டுல வேற மாதிரி ரொம்ப ஈசியாவும் அதே நேரத்துல சுவையாவும் செய்வோம்.

தேவையான பொருட்கள்:
மைதா - 1 கப்
உடைத்த கடலை - 1 கப்
சர்க்கரை - 1கப்
ஏலக்காய் - 3
முந்திரி, திராட்சை - தேவைப்பட்டால் சேர்த்துக்கலாம்.
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் தேவையான அளவு

மைதா மாவை சலிச்சு, ஒரு டீஸ்பூன் எண்ணெய், கொஞ்சம் உப்பு சேர்த்து  தண்ணி விட்டு சப்பாத்திக்கு பிசையுற மாதிரி பிசைஞ்சு ஒரு மணி நேரம் ஊற விடுங்க.


உடைச்ச கடலையோட சர்க்கரை சேர்த்துக்கோங்க.

ஏலக்காயையும் சேர்த்து மிக்சில நல்லா நைசா அரைச்சுக்கோங்க.

பூரணத்துக்கு பொடி ரெடி.

பிசைஞ்சு வச்ச மைதாமாவை வட்ட வடிவமா தேச்சுக்கோங்க...,

அதுக்கு நடுவுல, பொடிச்சு வச்ச கடலை மாவை வச்சு, மடிச்சு சோமாஸ் வடிவத்துல கத்தியால கட் பண்ணிக்கோங்க, அதுப்போல கட் பண்ண பழக்கமில்லாதவங்க, இதுக்குன்னு இருக்கும் அச்சை கடைல வாங்கி செய்ங்க. 

இதுப்போல கொஞ்சம் சோமாஸ்களை செஞ்சு எடுத்து வச்சுக்கோங்க.


ஒரு வாணலில எண்ணெய் ஊத்தி, அதுல ஒண்ணு இல்ல ரெண்டு போட்டு , ரெண்டுப் பக்கமும் பொன்னிறமா சிவக்க விட்டு எடுங்க.

மேல, மொறு மொறுன்னும், உப்புச்சுவையோடும், உள்ள மிருதுவா இனிப்போடும் சேர்ந்து நல்லா இருக்கும். குட்டி குட்டியா செஞ்சு வச்சுக்கிட்டா பசங்க ஸ்கூல் விட்டு வந்ததும் கொடுத்தா ஆசையா சாப்பிடுவாங்க. ரொம்ப ஈசியானது. அதனால, கொஞ்சம் கொஞ்சமா செஞ்சு டப்பாவுல வச்சு பிள்ளைகளுக்கு கொடுக்கலாம், வயிற்றை பதம் பார்க்காதது.

மீண்டும் அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோட கிச்சன் காரனர்ல சந்திக்கலாம்! 


19 comments:

  1. பூரணப் பொடியை செய்து வைத்துகொண்டு தேவைப்டும்போழுது மைதா பிசைந்து செய்யலாமா?
    செய்முறைக்கு நன்றி ராஜி!

    ReplyDelete
    Replies
    1. செய்யலாம் சகோ! பூரணப்பொடியை காத்து புகாத டப்பாவுல வச்சுக்கிட்டாப் போதும். இல்லாட்டி கெட்டியாகிடும்.

      Delete
    2. இரு முறை செய்து விட்டேன் ராஜி..நல்லா இருந்துச்சு..நன்றி!

      Delete
  2. ரொம்ப ஈசியாத்தான் இருக்கு சகோ... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ஈசிண்ணா. நானே அடிக்கடி செய்வேன்னா அது எம்புட்டு ஈசியா இருக்கும்ன்னு தெரிஞ்சுக்கோங்க!

      Delete
  3. சோமாஸ் அருமை.. அது இல்லாட்டி கூட அந்த பூரணத்தை அப்படியே சாப்பிடலாம்.. நல்லா இருக்கும்.. சின்ன பிள்ளையா இருக்கச்சே சாப்பிட்டிருக்கேன்..

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் ஆனா, அம்மாவுக்கு தெரியாம சாப்பிடும்போது கவனமா சாப்பிடனும். இல்லாட்டி புரை ஏறிடும்

      Delete
  4. இத்தனை சுலபமா...

    செய்திட வேண்டியதுதான் இப்பவே...:)

    நல்ல பகிர்வு. மிக்க நன்றி தோழி!

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரம் செய்து எனக்கும் ஒரு பார்சல் அனுப்புங்க தோழி!

      Delete
  5. செய்முறை விளக்கத்தை படங்களுடன் தந்து மேலும் சுலபமானதாக ஆக்கி விட்டீர்கள். அத்துடன் 'வயிற்றை பதம் பார்க்காதது' என்ற குறிப்பும் குறித்துக் கொள்ள வேண்டியது.தான்.

    ReplyDelete
    Replies
    1. வயிற்றை பதம் பார்க்காத உணவுதானே முக்கியம்

      Delete
  6. நாலையே செய்து விட தீர்மானித்து விட்டேன்.. நன்றி ராஜி எளிமையான ரெசிபிக்கு.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் ஒரு பார்சல் அனுப்பிடுங்க

      Delete
  7. இங்குள்ள நாத்தனாருக்கும் இது பிடிக்கும்... இந்த பதிவை இங்குள்ள நாத்தனாருக்கு காண்பித்தால் என் மண்டை வீங்கிடும். பாத்தீங்களா உங்க தங்கச்சி பண்ற ஒரவஞ்சனையை நமக்கு செய்து தாராம வேற யாருக்கோ செஞ்சு அனுப்பி இருக்காங்கன்னு சொல்லியே என்னை சாக அடிச்சுடுவா.. தங்கமே நீ பலகாரம் பண்ணு ஆனா அதை பதிவாக போட்டு அண்ணன் தலைக்கு தீபாவளி வேட்டு வைக்காதே..


    பதிவு படங்களுடனும் விளக்கத்துடனும் மிக அருமையாக உள்ளது என்ன சகோ இருக்கும் ஊரில் இருந்தா சுவைக்கலாம் ஆனா இந்த சகோவுக்கு எப்பவுமே அதிர்டம் இருந்ததில்லை ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. உங்க ஃப்ரெண்ட் யாராவது சென்னைல இருந்து அமெரிக்கா வர்ற மாதிரி இருந்தா சொல்லுங்க, பார்சல் பண்ணி விடுறேன்

      Delete
  8. சோமாஸ் செய்முறை விளக்கம் எளிமை! அருமை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  9. படிக்க ஈசியாதான் இருக்கு...

    ReplyDelete
  10. நல்லாத் தான் இருக்கு.... இங்கே இதே போல ஹோலி சமயங்களில் கிடைக்கும் - Gujia என்று பெயர்.... :)

    ReplyDelete