தீபாவளி, பொங்கல் போல எங்க ஊர்ல கார்த்திகைத் தீபத் திருவிழாவும் முக்கியமான பண்டிகை. முதல் நாளே வீடுலாம் ஒட்டடை அடிச்சு, மொழுகி செம்மண் இட்டு வைப்போம். பொங்கல் பண்டிகைக்காக, வீட்டுக்கு வெள்ளையடிக்குற மாதிரி சில வீடுகள்ல வீட்டுக்கு வெள்ளையடிப்பாங்க. அதுக்கு காரணம், புதுசா கல்யாணம் கட்டிக்கிட்ட ஜோடிங்க தலை தீபாவளின்னு சொல்லி பொண்ணோட அம்மா வீட்டுக்கு போய்டுவாங்க. அந்தக் குறை மறைய தலைக்கார்த்திகைக்கு மாமியார் வீட்டுலதான் இருக்கனும்ன்னு ஒரு வழக்கம்.
“மாமியார் தலையில கார்த்திகை மண்டை விளக்கு ஏத்து”ன்னு ஒரு சொலவடையே எங்க ஊர்ல இருக்கு, மாமியார் தலைமையில கார்த்திகைத் தீபத்துக்கு மடக்கு (அகல் விளக்கு போலவே மண்ணால் செஞ்ச கொஞ்சம் பெரிய சைஸ்ல இருக்கும். அதுக்கு பேர்தான் மடக்குன்னு சொல்லுவாங்க.)
கார்த்திகை மாச வரும் வளர்பிறை கிருத்திகை நட்சத்திரமும், பௌர்ணமி யும் சேர்ந்து வரும் அன்னிக்குதான் கார்த்திகை தீபம் கொண்டாடுவாங்க. அன்னிக்கு மதியம் கிருத்திகைக்கு படைக்குற மாதிரி சாம்பார், ஒரு பொரியல், வடை, பாயாசத்தோடு முடிச்சுக்குவாங்க.
அன்னிக்கு சாயந்தரம் சரியா 6 மணிக்கு தெருவிலிருந்து விளக்கு கொளுத்திட்டு வருவோம். கோலத்துல சில அகல்விளக்கு. வாசல்படிரெண்டு ஓரத்துல, வீட்டுக்குள்ள இருக்கும் எல்லா வாசப்படிகள்ல விளக்கு ஏத்தி வைப்போம். மாடில, அரிசிப்பானைல, உப்பு டப்பா, அடுப்படின்னு எல்லா இடத்துலயும் விளக்கு ஏத்தி வைப்போம்.
முன்னலாம் ரேடியோவுலயும், இப்பலாம் டிவிலயும் திருவண்ணாமலை தீபம் ஏத்துற நேரடி ஒளி(லி)பரப்புல தீபம் ஏத்திட்டாங்கன்னு தெரிஞ்சு எங்க வீடுகளில் தீபம் ஏத்துவோம். ராத்திரி ஏழு மணிக்கு மேல மாவளி சுத்துவோம். மாவளி பத்தி விளக்கமா இங்க இருக்கு பார்க்காதவங்க பார்த்துட்டு வாங்க.
மறுநாள் நாட்டு கார்த்திகைன்னு சொல்லிக் கொண்டாடுவாங்க. அன்னிக்கும் வீடு வாசல்லாம் மொழுகி கழுவி வைப்போம். சாயந்தரம் விளக்கு வச்சபின் தான் படைப்போம். சிலர் வீட்டுல அசைவம் செஞ்சுப் படைப்பாங்க. எங்க வீட்டுல வெஜ்தான். தீபாவளிக்கு வெடிச்சது போக மிச்சம் மீதி இருக்குற பட்டாசை வெடிப்போம்.
சிலர் வீட்டுல அசைவம் சமைப்பாங்க. எங்க வீட்டுல இனிப்பு போண்டா, வடை, கொழுக்கட்டை மட்டும் செஞ்சு படைப்போம். அன்னிக்கும் வீடு முழுக்க விளக்கேத்தி வைப்போம்.
நாட்டுக்கார்த்திகை அன்னிக்கும் மாவளி சுத்துவோம். மாவளி சுத்துறதுனால நம்மை பிடித்திருக்கும் பீடைலாம் விலகும்ன்னு ஒரு ஐதீகம். அந்த கால பட்டாசுன்னு நினைக்குறேன். அழகா தீப்பொறி பறக்குது பாருங்க.
மறுநாள் நாட்டு கார்த்திகைன்னு சொல்லிக் கொண்டாடுவாங்க. அன்னிக்கும் வீடு வாசல்லாம் மொழுகி கழுவி வைப்போம். சாயந்தரம் விளக்கு வச்சபின் தான் படைப்போம். சிலர் வீட்டுல அசைவம் செஞ்சுப் படைப்பாங்க. எங்க வீட்டுல வெஜ்தான். தீபாவளிக்கு வெடிச்சது போக மிச்சம் மீதி இருக்குற பட்டாசை வெடிப்போம்.
சிலர் வீட்டுல அசைவம் சமைப்பாங்க. எங்க வீட்டுல இனிப்பு போண்டா, வடை, கொழுக்கட்டை மட்டும் செஞ்சு படைப்போம். அன்னிக்கும் வீடு முழுக்க விளக்கேத்தி வைப்போம்.
நாட்டுக்கார்த்திகை அன்னிக்கும் மாவளி சுத்துவோம். மாவளி சுத்துறதுனால நம்மை பிடித்திருக்கும் பீடைலாம் விலகும்ன்னு ஒரு ஐதீகம். அந்த கால பட்டாசுன்னு நினைக்குறேன். அழகா தீப்பொறி பறக்குது பாருங்க.
மொபைல்ல எடுத்ததால படங்கள் தெளிவா இல்ல. என் பையன் அப்பு மாவளி சுத்துறான்.
நான் கொண்டாடிய அத்தனை பண்டிகைகளையும் அதன் பழமை மாறாம என் பிள்ளைகள் அனுபவிக்கனும்ன்னு கொஞ்சம் மெனக்கெட்டு கொண்டாடுறோம்.
அழகா இருக்குங்க உங்க பதிவும் படங்களும்.
ReplyDelete//நான் கொண்டாடிய அத்தனை பண்டிகைகளையும் அதன் பழமை மாறாம என் பிள்ளைகள் அனுபவிக்கனும்ன்னு கொஞ்சம் மெனக்கெட்டு கொண்டாடுறோம்.// ரொம்ப மகிழ்ச்சிங்க...இப்படிச் சிலராவது இருக்காங்களேன்னு...வாழ்த்துகள்!
வணக்கம்
ReplyDeleteபதிவு அருமையாக எழுதியுள்ளிர்கள் படங்களும் அருமை வாழ்த்துக்கள் தங்களைப் போல தங்கள் பிள்ளைகளும் கொண்டாட வேண்டும் என்ற சிந்தனை அருமை..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஒரு சகோ வெளிநாட்டுல இருக்கானே அவன் இல்லாம நாம இப்படி சந்தோசமா எந்த மனவருத்தம் இல்லாம கொண்டாடுவது மட்டுமல்ல அதைப் பற்றிய படங்களை அழகாக எடுத்து அதை பதிவாகவும் போட்டு அவனை அழ வைக்கிறோமே அது நியாமா சகோ.....
ReplyDeletekerala vil karthikai andru oru 2 vilakku than eathuvaka. athuvum tamilnadula thu vanthavuka mattum.unga veedu karthikai deepam nalla eruku akka. nama panpadai nama pasakaluku solli kodupathu eavalavu nalla kariyam akka. keep it up
ReplyDeleteமங்கள தீபங்கள் மனதை மயக்குகின்றது ! வாழ்த்துக்கள் ராஜியம்மா .
ReplyDeleteதீபங்கள் அழகு வாழ்த்துக்கள் சகோதரியாரே
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி சகோதரி... வாழ்த்துக்கள்...
ReplyDelete'மாமியார் தலையிலே கார்த்திகை மண்டை விளக்கை ஏத்து ' சொலவடைக்கு நல்லவேளை அர்த்தம் சொன்னீங்க ,சில மருமகள்கள் வேற மாதிரி அர்த்தம் எடுக்கலாம் என்ற எச்சரிக்கை நல்லதுதான் !
ReplyDeleteத .ம 6
உங்கள் வீட்டுக் கார்த்திகை திருவிழா பதிவு அருமை. மாவலி என்பது சொக்கப் பானை தானே!
ReplyDeleteதீபங்கள் கொள்ளை அழகு...மாவலின்னா சொக்கப்பானை தானே?? நாட்டுக் கார்த்திகை அன்னிக்கு நாங்க அசைவம் செய்து படைப்போம்..
ReplyDeleteகார்த்திகை தீபாத்தைப் பற்றி அறிந்து கொண்டேன்.
ReplyDeleteநன்றி தோழி.
விளக்கு வைப்போம்..விளக்கு வைப்போம்.. குலம் விளங்க விளக்கு வைப்போம்..
ReplyDeleteஎங்கள் வீட்டில் இது போன்ற சமயங்களில் பெரிய கோலம் போடும் போது சந்து மக்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். பலரும் கோலம் போடுவதை மறந்தே போய்விட்டனர்.
ReplyDeleteமாவளி தலைக்கு மேல சுத்தறதை எடுத்துருக்கீங்களா?முதல்ல பார்த்தவுடனே குழம்பிட்டேன்..
ReplyDeleteபடமும் பதிவும் நன்று!
ReplyDeleteமாவளி சுற்றும் படங்கள்.... ரசித்தேன்.
ReplyDeleteதொடரட்டும் பண்டிகைகளும் பகிர்வுகளும்!
"நான் கொண்டாடிய அத்தனை பண்டிகைகளையும் அதன் பழமை மாறாம என் பிள்ளைகள் அனுபவிக்கனும்ன்னு கொஞ்சம் மெனக்கெட்டு கொண்டாடுறோம்."
ReplyDeleteகொடுத்து வைத்த பிள்ளைகள் :)