Saturday, November 09, 2013

கனவு தேவதை


குளிருக்கு இதமாய்
போர்வைக்குள் சுருண்டிருந்த அதிகாலை...,
மொட்டுகள் மலர்ந்து மனம் வீச
காத்திருக்கும் வேளையில்,
காத்திருந்தேன். என் கண்ணம்மாவுக்காக!!

முத்தம் தருவாள்!
வாழ்வை வசந்தமாக்குவாள்!
என கற்பனையில் மிதந்தேன்.
அதோ, வந்தே விட்டாள் என்னவள்!
தேவதையும் தோற்கும் விதமான அழகோடு!!

அன்ன நடை பின்ன, 
குயிலிசை தோற்கடிக்கும் 
குரலோடு,என்னைக் 
கொஞ்சியவள் நெற்றியோ
 மூன்றாம் பிறை!!

கிளிக்கு போட்டியிடும் சிவந்த
அதரங்கள், ஆப்பிள் கன்னம்,
கூர் நாசி, கேள்விக்குறியென 
வளைந்த காது!!  அவள் முகமன்றி,
 மற்றவையெல்லாம், அவுட் ஆஃப் ஃபோகஸ்!!

காதோரம் என்னவோ கேட்டவள்,
என் பதில்லாமல் போகவே,
மெல்ல குட்டியவள் கைகள்
அத்தனை மிருது!!

மிருதுவான கைகளுக்கு இவ்வளவு
வலிமையா!? மண்டை ”வின்”னென்றது!!
கண் விழித்து பார்த்தேன். அருகினில்
நிற்பவளின் முகத்தை!!

ஆ! என் மனைவி!!
பூரிக்கட்டை ஆயுதமேந்தி,
காளி அவதாரம் கொண்டு....,

19 comments:

  1. ஆகா! அப்புறம் ஓட்டம்தான்!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் கைல மாட்டினீங்க சட்னிதான்!

      Delete
  2. இப்படி ஒரு கனவை கண்டதாக மதுரை தமிழன் உங்களிடம் சொல்லி அதை கவிதையாக்கிட்டிங்களோ ...ஹா... ஹா...!

    ReplyDelete
    Replies
    1. நிஜமாவேதான் உஷா! மதுரை தமிழன் என் நாத்தனார்க்கிட்ட பூரிக்கட்டையால அடிவாங்குறதை பத்தி ஒரு பதிவு போடனும்ன்னு நினச்சேன். அதை பிச்சு போட்டு கவிதையாக்கிட்டேன்.

      Delete
  3. நல்லவேளை உங்கள் நாத்தனார் வலைத்தளத்திற்கு வருவதில்லை வந்து படித்து இருந்தாள் உங்கள் கவனிற்குள்ளும் அவள் பூரிக் கட்டையோடு வந்து இருப்பாள்

    ReplyDelete
    Replies
    1. ஹா! ஹா! அழகிய பெண்ணை பத்தி கனவு கண்டதுக்கு என்னை ஏன் அடிக்குறாங்க!?

      Delete
  4. அய்யய்யோ எங்க மச்சான் பாவம் விட்ட்ருங்க எதுன்னாலும் பேசி தீர்த்துக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. இனி தீத்துட்டுதான் பேச்சே!

      Delete
  5. பொறுத்து பொறுத்து பார்த்து அவரு கவிதையாவே அலற ஆரம்பிச்சுட்டாரா?

    ReplyDelete
    Replies
    1. அவர் அலறுவதைதான் கவிதையாக்கிட்டேன் ஆவி

      Delete
  6. ஆகா புதியதோர் ஆயுதம்

    ReplyDelete
    Replies
    1. மனைவிமார்கள் எப்பவும் பயன்படுத்தும் ஆயுதம்தான், சந்தேகம் இருந்தா மதுரை தமிழனை கேட்டு பாருங்க!

      Delete
  7. அய்யோ பாவம்... நிம்மதியா கனவு கூட காண முடியல...

    ReplyDelete
  8. ஹாஹா அருமையான கவிதை முடிவு சூப்பர் அக்கா....

    ReplyDelete
  9. சகோதரிக்கு வணக்கம்.
    சமையல்கட்டு ஆயுதம் ஏந்திய பெண்மணிகள் அதிகரித்து விட்டார்கள் என்றே நினைக்கிறேன். நல்லதொரு கவிதை. ரசித்து படித்தேன். பகிர்வுக்கு நன்றி. தொடர எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. உங்கள் கணவரின் கனவு உங்கள் கைவண்ணத்தில் கவிதையானதோ?

    ReplyDelete
  11. அய்யோ பாவம்! :)

    ரசித்தேன்....

    ReplyDelete