Monday, November 04, 2013

என்று மாறும் இந்த மீடியாக்கள்!? - ஐஞ்சுவை அவியல்


என்ன புள்ள!? என்ன படிக்குறே! எதாவது கதை புஸ்தகமா!?

இல்ல மாமா!! புதுச்சேரியை மாநிலம், கூடப்பாக்கத்தை சேர்ந்த வெங்கடபதி என்ற விவசாயிக்கு பத்மஸ்ரீ விருது கிடைச்சிருக்கு. தன்னோட 19 வது வயசுல விவசாயத்தில் ஈடுபட ஆரம்பிச்சு. தன் வாழ்நாளில் கனகாம்பரம், சவுக்குல நூறு புதிய ரகத்தை உருவாக்கி இருக்கார். அதுமட்டுமில்லாம, தன்னோட நிலத்தில் இயற்கை உரத்தை மட்டுமே பயன்படுத்தி, மத்தவங்களைவிட அதிக மகசூலை பெற்று சாதனை புரிஞ்சிருக்கார். 4 தலைமுறையா விவசாயம் மட்டுமே செய்யும் குடும்பத்தை சேர்ந்தவர். இப்படி சாதனை பண்ணிய இவர் வெறும் நாலாவது வரை மட்டுமே படிச்சிருக்காராம்.

இப்படிப்பட்ட ஒரு நல்ல நிகழ்ச்சியை சில பத்திரிகை மட்டுமே வெளியிட்டிருக்கு. மத்ததுலாம் இந்த நியூசை கண்டுக்கவே இல்லியாம்!

ம்ம்ம் அவங்களுக்கு இதுக்கெல்லாம் ஏது நேரம்!? கொலை, கொள்ளை, சினிமா, நடிகைகள் பேட்டி எடுத்து போடவே நேரம் சரியா இருக்கு!! 

அப்புறம் இன்னிக்கு நம்ம தெருவுல, நம்ம வீட்டு கிட்டக்க ஒரு நாய் பஸ்சுல அடிப்பட்டு செத்து போச்சு!! நம்ம தெருக்காரங்க யாரும் அதை எடுத்து தூர கொண்டுப் போய் போட முன் வரல்;ஐ. என்னையும் சேர்த்துதான். அது போற வர்ற வண்டில பட்டு கொஞ்சம் கொஞ்சமா சிதைஞ்சு வந்துச்சு.

அப்ப, அந்த வழியா டூவீலர்ல வந்த ஒரு 25 வயசு பையன், அந்த நாயை, பக்கத்தில் இருந்த காலி மனையில் இழுத்து போய் போட்டவர்,  தெருவில பக்கத்து வீட்டுக்கு போய் ஒரு மண்வெட்டி வாங்கி வந்து, சரசரன்னு பள்ளம் வெட்டி, அந்த நாயை அதுக்குள்ள போட்டு புதைச்சுட்டு மண்வெட்டியை திருப்பி கொடுத்திருக்கார். நீங்க யாரு? ன்னு கேட்டதுக்கு, தான் ஒரு சாஃப்ட்வேர் இஞ்சினியர்ன்னும் தீபாவளி லீவ் முடிஞ்சு சென்னைக்கு போய்க்கிட்டு இருக்குறதாவும் சொன்னாராம். 

ஏன் இப்படி பண்ணுறீங்க? உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலைன்னு கேட்டதுக்கு, அடிப்பட்டு ஒரு உயிர் போயிருக்கு, அந்த உயிருக்குண்டான மரியாதையை நாம செய்ய வேண்டாமா!? அதுமில்லாம, அது ஒரு தெரு நாய். கண்டிப்பா அதுக்கு தடுப்பூசிலாம் போட்டிருக்க மாட்டாங்க, ஒருவேளை அது உடம்புல நோய்க்கிருமிகள் இருந்து அது காத்து வழியா பரவி இங்க இருக்குறவங்களுக்கு பரவிட போகுதுன்னுதான் செஞ்சேன்ன்னு சொல்லிட்டு போய்ட்டாராம். இதை கேட்டு அசிங்கமா போச்சு எனக்கு. நம்ம வீட்டை போலவே வீட்டை சுத்தியும் சுத்தமா வச்சுக்கனும்ன்னு தோணலியே! இனிமேல் பட்டாவது இதுப்போல நடக்காம பார்த்துக்கனும் மாமா!!

ம்ம்ம் அந்த புள்ள சொன்னது சரிதான்.  நாய் உடம்புல இருந்து நோய் கிருமிகள் எதாவது பரவலாம். சரி, ரெண்டுமே சீரியசா பேசிட்டோம். ஒரு ஜோக் சொல்லவா!?  

ம்ம் சொல்லுங்க! 

டாக்டர் : தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க
மாயான்டி மாமா : அது கிடைக்கலேன்னா முட்டை'கோஸ்' சாப்பிடலாமா?

சிரிப்பே வரலை. இதெல்லாம் ஒரு ஜோக்கா!? ஒரு முறை ராஜி வீட்டுக்கு போய் இருந்தேன். அன்னிக்கு அமாவாசை. சாமிக்கு படைச்சுட்டு, ஒரு இலையில சாதம் வச்சு, ராஜியோட சின்ன பொண்ணுக்கிட்ட கொடுத்து, இதை கொண்டு போய் காக்காக்கு வச்சுட்டு வான்னு சொன்னா.

அதுக்கு இனியா, ஏன் இதுப்போல சாதம் வைக்கனும்ன்னு கேட்டுச்சு. அமாவாசை விரதம் செத்து போன தாத்தாக்கள், பாட்டிக்களுக்கு படைக்குறது. அப்படி படைச்சு சாதம் கொண்டு போய் வச்சா, அவங்கலாம் காக்கா உருவுல வந்து சாப்பிடுவாங்கன்னு ஒரு ஐதீகம்டா கண்ணுன்னு சொன்னா! உடனே, இனியா, அப்ப அரிசி, பருப்பு, வத்தல்லாம் காய வைக்கும்போது காக்கா வந்தா கம்பெடுத்து அடிச்சு வெரட்டுறே! நீ உங்க தாத்தா, பாட்டியையே அடிக்குறியே! உனக்கு பாசமே இல்ல. போம்மா!ன்னு அலுத்துக்கிச்சு. ராஜி முகம் வெளக்கெண்ணை குடிச்ச மாதிரி ஆகிடுச்சு!


ஹா! ஹா! நல்லா வேணும். அவ ஊரெல்லாம் வாயாடுறா. ஆனா, அவ வீட்டுல அவளால வாயை திறக்க முடியுதா!?

சரி ஒரு விடுகதை சொல்றேன் விடை சொல்லு பார்க்கலாம்!!

ம்ம்ம்ம் சொல்லுங்க!! 

அச்சு இல்லாத சக்கரம், அழகு கூட்டும் சக்கரம், விதவித வண்ணச் சக்கரம், விலைக்குக் கிடைக்கும் சக்கரம்! அது என்ன!? சொல்லு பார்க்கலாம்.

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..., 

20 comments:

  1. அந்த இளைஞரின் செயல் நிச்சயம்
    சம்பந்தப்பட்ட ஊர்காரர்களுக்கு நிச்சயம்
    ஒரு படிப்பினையாக இருக்கும்
    இந்தப் பதிவைப் படிப்பவர்களுக்கும்.....
    பயனுள்ள அருமையான பகிர்வுக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றிப்பா!

      Delete
  2. விடுகதை விடை : சங்கு சக்கரம்

    ReplyDelete
    Replies
    1. விடை மின்விசிறி. ஆனா, உங்க பதிலும் ஒத்துப் போகுது பாலாஜி!!

      Delete
  3. விடுகதை விடை : சூரியன்...

    சரியா சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. நிலாவா...? சூரியனா...?

      சந்தேகம் வந்து விட்டது...!

      Delete
    2. நிலாவையும், சூரியனையும் விலைக்கு வாங்க முடியுமா அண்ணா!? விடை மின்விசிறி!

      Delete
  4. இப்படி ஒரு மாமனிதரை பற்றிய செய்தியை பிரசுரித்த அந்த சில
    பத்திரிக்கைகளுக்கு வந்தனங்கள்..
    மற்றவர்கள் ஏனோ இன்னும் நல்ல செய்திகளைக் கண்டாலே
    ஓடுகிறார்கள்.... வண்ணப்படங்கள் காட்டி வருமானத்தை
    பெருக்குவதில் குறிக்கோள் இருந்தால் சமூகம் எல்லாம் இரண்டாம்
    பட்சம் தான்..

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் உங்க வாதம் சரிதான் அண்ணா! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete
  5. நல்ல விசயங்களை நம் மீடியாக்கள் கவனிப்பதே இல்லை!
    பிறகு எப்படி இந்த விசயங்கள் மக்கள் கண்களில் படும்?

    தோழி.... இப்படிப்பட்ட நல்ல விசயங்களைப்
    பதிவகளாக இடுவதால் தான் இப்பொழுது மக்கள்
    இணையத்திலேயே செய்திகளை விரும்பி வாசிக்கத் துவங்கி விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

    தவிர, அந்த டூவீலர் இளைஞரைப் பாராட்டுகிறேன்.
    பதிவு அருமை தோழி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. எப்ப பாரு கெட்ட விசயங்களை பேசி பேசியே நம்மை சுற்றி கெட்டது நடக்குதோ என்னமோ!! இனி நல்ல விசயங்களையும் பகிர்ந்துக்கனும்!!

      Delete
  6. அவியல் சுவைத்தது.

    ReplyDelete
  7. நாட்டுக்கு ராஜாவானாலும் வீட்டுக்கு .... அப்படின்னு எதோ ஒரு பழமொழி கேட்ட நியாபகம்.....

    ReplyDelete
    Replies
    1. மருமக பொண்ணும், தாய்மாமனும் ஒண்ணு சேர்ந்துட்டீங்களா!? இனி டெபாசிட் காலி!

      Delete
  8. சினிமாவில் நடிச்சு கோடி கோடியா சம்பாதிக்கிறவனைத் தான் இந்த உலகம் மதிக்குது.....

    ReplyDelete
  9. அந்த இளைஞரை எப்படிப் பாராட்டுவதென்றே... நற்செயலை வெளியிட்ட தங்கள் பதிவுக்கும் நன்றி!

    ReplyDelete
  10. மின் விசிறிக்கு அச்சு உண்டு . சங்கு சக்கரத்துக்குக் கிடையாது. எனவே பின்னதே சரியான விடையாகும் என நான் நினைக்கிறேன்!

    ReplyDelete
  11. உயிர்கள் மீது அன்பு வேணும் - அவை இருந்தாலும் சரி, இறந்தாலும் சரி!..

    விபத்தில் மடிந்த நாயைப் புதைத்த நல்லவருக்கு - இறைவன் நல்லருள் புரியட்டும்!..

    மற்றபடி - அவியல் அருமை!..

    ReplyDelete
  12. விவசாயம் செய்ரவங்கல இந்த உலகம் பொழைக்க தெரியதவன்கிற கண்ணோட்டதில தான் பார்க்கிறது.... ;(

    உங்கள் பதிவில் வெளியிட்டதற்கு நன்றி...

    ReplyDelete