வியாழன், நவம்பர் 28, 2013

சிலையாகிப் போனவன்


முன்பெல்லாம் எனை 
அணைத்த அலை!!
இன்று,
அடித்தது போலிருந்தது!?

காரணம் கேட்டபோது...,
“எங்கே உன் தோழன்? என்று
காட்டமாய் விசாரித்தது….
அவனை காணவில்லை என்றேன்.

உன்னை தனியாக விட்டு விட்டா??
வினவியது அலை…..
“இல்லை அவன் நினைவுகள்
என்னிடம் விட்டுட்டு, என்றேன்”

அனுதாபமாக என்னை பார்த்த அலை,
“முன்பெல்லாம் என் பாறை நண்பன்
மேல் உட்கார்ந்து பாடுவீர்களே….
இப்போ தனியாய் என்ன செய்வாய்????”
கேட்டது அலை….

அவனை பிரிந்த பின்பு – நானும்
பாறை தான் என்றேன் !!!
பதறிய அலை
சிதறி என்மேல் விழுந்து...,

“ஏனுனக்கு நானில்லையா?? – சரி, சரி
அடிக்கடி வந்து போவென்றது அன்பாக….!”
அலையின் அன்பில்
சிலிர்த்துப்போய் – மீண்டும்
அவன் நினைவுகளுடன் கரையேறும் போது…..,

என்ன நினைத்ததோ அலை
திரும்பவும் வந்து,
“அடித்தது ரொம்பவும் வலிக்குதோ???”
கேட்டது ஏக்கத்துடன்…!

இல்லை என சிரித்த எனை
சில்லென நீராட்டி தன் சந்தோஷம்
சொல்லிப்போனது அலை….!

ஆனாலும்……
அலைக்கென்ன தெரியும்
என் விஷயத்தில் “அவன்”
சிலையாகிப்போன கதை…….!!!!!

16 கருத்துகள்:

 1. சிலையாகிப் போனவன் தலைப்பில் ஐந்து பதிவுகள் Reader-ல் வந்தவுடன் சிலையாகி விட்டேன்... ஹிஹி... Blog Archive-ல் 3 பதிவுகள் உள்ளது பாருங்கள் சகோ...

  பதிலளிநீக்கு
 2. இட்ட கருத்துரையை காணோம்... மாற்றி விட்டீர்களா...? ஏனிந்த குழப்பம் (திருத்தம்...?)...!

  (அலையின்) அன்பில் சிலிர்த்துப்போய் விட்டேன்... வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 3. அற்புதம்
  சொல்லிச் சென்றவிதமும்
  மிகக் குறிப்பாக முடித்த விதமும்
  உணர்வுபூர்வமான கவிதைக்கு
  மனம்பூர்வமான வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. தமிழில் இப்படி உளவியல் கவிதைகள்....இன்னும் சொல்லப்போனால் சிம்பாலிக் கவிதைகள் அதிகம் இல்லை என்ற குறையை தீர்க்க வந்த கவிதாயினிக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்

  சொல்லிச் சென்ற விதம் அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 7. அழகான வரிகள். எளிமையான நடை... பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 8. ''..
  அலைக்கென்ன தெரியும்


  என் விஷயத்தில் “அவன்”


  சிலையாகிப்போன கதை..'' good lines...Best wishes.
  Vetha.Elanagthilakam.

  பதிலளிநீக்கு
 9. சிலையும் ஒரு நாள் உயிர் பெறும் தங்கள் கவிதையினைப் போல் .
  வாழ்த்துக்கள் தோழி .

  பதிலளிநீக்கு
 10. சிலையாகிப்போனவனைப் படித்து மலைத்தேன். :)

  பதிலளிநீக்கு
 11. சிலை மட்டுமா ஆனான் ?விலையாகிப் போயிருக்க கூடும் !
  த.ம +1

  பதிலளிநீக்கு
 12. அப்பப்போ இந்த மாதிரி கவிதைகளையும் எழுதி மனசை கலந்கடிச்சிடறீங்க.... த.ம.13

  பதிலளிநீக்கு
 13. சிலையாகிப் போனவன்..... கவிதை படித்து நாங்களும் சிலையானோம்! நல்ல கவிதை!

  த.ம. 14

  பதிலளிநீக்கு
 14. அவனைப் பிரிந்த பின்பு நானும் பாறைதான் //அருமையான வரிகள்

  பதிலளிநீக்கு