Tuesday, November 19, 2013

சீரக காரக்குழம்பு - கிச்சன் கார்னர்

ரெண்டு நாள் ஜுரத்துல படுத்தெழுந்தா எதாவது காரசாரமா சாப்பிடத் தோணும். அதுக்காக, சிக்கன், மட்டன்னு வெளுத்து வாங்க முடியாது. சீக்கிரம் செரிமானம் ஆகாதுன்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி நேரத்துல காரமும், புளிப்பும் சேர்ந்த மாதிரி எதாவது செஞ்சுச் சாப்பிட்டா உடம்புக்கும் நல்லது, நாக்குக்கும் ருசி திரும்பக் கிடைக்கும்.

காரமும், புளிப்பும் சேர்ந்த சீரகக் காரக்குழம்பு எப்படிச் செய்யுறதுன்னு இன்னிய கிச்சன் கார்னர்ல பார்க்கலாம். 

தேவையானப் பொருட்கள்:
வெங்காயம் - 2
தக்காளி- 2
பூண்டு- 10 பல்
சீரகம் -1டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் - 2டீஸ்பூன்
தனியா தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
புளி- எலுமிச்சை அளவு.
தேங்காய் - 2 பத்தை
கறிவேப்பிலை, கொத்தமல்லி - கொஞ்சம்

புளியை ஊற வச்சுக்கோங்க. வெங்காயம், தக்காளி நறுக்கி வெச்சுக்கோங்க.  பூண்டை உரிச்சு நசுக்கி வச்சுக்கோங்க. 

சீரகத்தை வெறும் வாணலில, சிவக்க வறுத்து எடுத்து வச்சுக்கோங்க. 


வாணலியை அடுப்பில வச்சு எண்ணெய் ஊத்தி சூடானதும் கடுகு போட்டு பொறிய விடுங்க. அடுத்து நசுக்கி வெச்சிருக்கும் பூண்டை போட்டு வதக்குங்க.

அடுத்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமா மாறும் வரை வதக்குங்க.

அடுத்து வெட்டி வச்சிருக்கும் தக்காளியை போட்டு நல்லா வதக்குங்க. 

நறுக்கின கறிவேப்பிலை, கொத்தமல்லியை சேர்த்துக்கோங்க. 

அடுத்து மிளகாய் தூள், தனியாதூள் சேர்த்து வதக்கிக்கோங்க.

அடுத்து உப்பு சேர்த்து, கரைச்சு வச்ச புளித்தண்ணியை ஊத்தி நல்லா கொதிக்க விடுங்க. 
குழம்பு நல்லா கொதிச்சு மிளகாய்தூள், புளி வாசனை போனதும், வறுத்து வச்சிருக்கும் சீரகத்தையும், தேங்காய் பத்தையையும் தண்ணி விட்டு நைசா அரைச்சு குழம்புல சேர்த்து கொதிக்க விடுங்க.
சீரக வாசனையோடு காரக்குழமு ரெடி. சூடா சாதத்துல நெய் விட்டுக்கிட்டு இந்த காரக்குழம்பையும் கூடவே அப்பளத்தையும் சேர்த்து சாப்பிட்டா நாக்குக்கு ருசியாவும், உடம்புக்கு தெம்பாவும் இருக்கும். ஏன்னா, சீரகம் தலைசுத்தல், வாந்தி, மயக்கம், பித்தம், அஜீரணம், வாயுத்தொல்லையை சரியாக்கும் மருத்துவ குணம் கொண்டது. 

எங்க ஊர்லலாம் பெரிய வெங்காயம்தான் அதிகமா யூஸ் பண்ணுவோம். சின்ன வெங்காயத்தை கிடைச்சா அதையே போடுவேன். முழுசா சின்ன வெங்காயம், பூண்டை போட்டு செஞ்சா என் பையன் பூண்டு, வெங்காயத்தைலாம் அவனே சாப்பிட்டு வெறும் குழம்பை மட்டும் எங்களுக்கு வைப்பான்.

மொபைல்ல எடுத்த போட்டோக்கள். அதனால, படம் தெளிவில்லாமதான் இருக்கும். மன்னிச்சு.

மீண்டும் அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோட உங்களை சந்திக்குறேன். வர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா!?

12 comments:

  1. romba nalla eruku seeraga kara kuzhambu. taste nalla erukum eanpathai padamey solluthu. eaka pasakaluku fever eapa than sari achu. vaiku rusiya ketka arapichaka.
    eanaiku night eaka veedil seeraka karakuzhambu than.
    marakama vanthu sapituka

    ReplyDelete
  2. இப்பவே செய்து சாப்பிடனும் போல இருக்கிறது.

    ReplyDelete
  3. ஆமாம். இப்பவே செய்து சாப்பிடணும் போல இருக்கு....

    ReplyDelete
  4. ஹிஹி... நமக்கும் சமையலுக்கும் ரொம்ப தூரம்... அதனால தமிழ்மணம் ஓட்டு 8...

    ReplyDelete
  5. எனக்கெல்லாம் உடம்பு சரியில்லேன்னா ஒரு சிக்கன் பிரியாணி சாப்பிட்டா சரியாயிடும்.. நீங்க என்ன இப்படி சொல்றீங்க.. சரி, இப்போ இருக்கிற மாதிரி மாலை போடுற சமயங்களில் வேணும்னா ட்ரை பண்ணலாம். ஒட்டு போட்டாச்சு..

    ReplyDelete
  6. உங்கள் வத்தக் குழம்பு வாசனை இங்கு வருகிறதே.

    ReplyDelete
  7. பேசாம பொட்டியக் கட்டிக்கிட்டு இங்கே வந்து ஹோட்டல் ஆரம்பிச்சுடுங்க

    ReplyDelete
  8. குறித்துக் கொண்டாயிற்று... நன்றி சகோ...

    ReplyDelete
  9. சீரகம் கசக்காதா? மிளகு குழம்புதான் சாப்பிட்டிருக்கேன்....

    ReplyDelete
  10. இதே மாதிரி தான், ஆனால் மிளகும் வெறும் வாணலியில் வறுத்து அரைத்துச் சேர்ப்பேன். மிளகாய்த் தூள் போட மாட்டேன்.
    நீங்கள் சொல்வது போலச் செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  11. இன்னிக்கு இங்கே மிளகு ரசம்.... குளிருக்கு ஏத்தமாதிரி! :)

    ReplyDelete