எங்க போயிட்டு வரே புள்ள!
பக்கத்து தெரு செல்வி ஹாஸ்பிட்டலில் இருக்காங்க. போய் பார்த்துட்டு வரேன் மாமா.
ஐயையோ! செல்வி மாசமா இருந்தாளே! ஆனா, டெலிவரிக்கு இன்னும் டேட் இருக்குமே! என்ன ஆச்சு!? காலை பார்த்தேனே! வண்டில அவளும் அவ புருசனும் எங்கயோ போய்க்கிட்டு இருந்தாங்களே!
அப்படி போகும்போதுதான் செல்வியோட புடவை முந்தானை வண்டி சக்கரத்துல மாட்டி கொஞ்சம் கொஞ்சமா இழுத்து கீழ விழுந்துட்டா. புடவை ஜாக்கட்டோட பின் பண்ணி இருந்ததால இடது கை தோள் பட்டை மூட்டு விலகிடுச்சாம். அது சரியாக இன்னும் ஆறு மாசமாகும். அது வரை ஒரு கிலோவுக்கு அதிகமான வெயிட்லாம் தூக்க கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க. டெலிவரிக்கு இன்னும் ரெண்டு மாசம்தான் இருக்கு. குழந்தை பொறந்தா எப்படி தூக்குவான்னு தெரியல. குழந்தையை யார் கவனிச்சு அதுக்கு எல்லா வேலையும் செய்ய முடியும்ன்னு தெரியல.
ரெண்டு செக்கண்ட் நேரம் ஒதுக்கி சேலை முந்தானையை இடுப்புல சொருகி உக்காந்திருந்தா இத்தனை பிரச்சனை வந்திருக்குமா!? இதேப்போல. தவிர்த்திருக்க கூடிய இன்னொரு விபத்து பத்திச் சொல்றேன்..., எல்லா பொம்பளைகளும் சமைச்ச, சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி, ஈரம் போக காய வச்சு கப்போர்ட்ல எடுத்து வைக்கிறீங்கதானே!?
ஆமாம் மாமா! எப்பேர்பட்ட சோம்பேறி பொம்பளையாய் இருந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சமைச்ச பாத்திரங்களை கழுவி எடுத்து வைப்பாங்க. ஏன் கேக்குறீங்க!?
அந்த பாத்திரங்களை எடுத்து யூஸ் பண்ணும்போது கழுவுவீங்களா!?
ஒரு சில பாத்திரங்கள் தவிர்த்து மிச்சம்லாம் அப்படியேதான் யூஸ் பண்ணுவோம்.
ம்ம்ம்ம் நம்ம பக்கத்து ஊரான புனலப்பாடில ஒரு குழந்தைக்கு வயத்து வலி அடிக்கடி வருமாம். என்னன்னு டாக்டர்க்கிட்ட கூட்டி போய் பார்த்தால் சிறுகுடலில் கருப்பா ஏதோ இருக்குறது ஸ்கேன்ல தெரிஞ்சிருக்கு. என்னன்னு மறுபடியும் வேற ஸ்கேன் எடுத்து பார்த்தால், கரப்பான் பூச்சிகள். குழந்தை வயத்துக்குள்ள எப்படி கரப்பான் பூச்சி வந்துச்சுன்னு விசாரிச்சதுல, கழுவி வச்ச பாத்திரம்தானேன்ற அலட்சியத்துல பாத்திரங்களை மீண்டும் கழுவாமயே யூஸ் பண்ணது தெரிய வந்திருக்கு. கழுவி வச்ச பாத்திரத்து மேல கரப்பான் பூச்சி முட்டை இட்டிருக்கு. அது எப்படியோ குழந்தை வயத்துக்குள்ள போய் கரப்பான் பூச்சிகள் உருவாகி இருக்கு. இப்ப ஆப்ரேஷன் பண்ணி அதெல்லாம் எடுத்த பிறகு குழந்தை நல்லா இருக்கு.
ஐயையோ! இப்படி கூட நடக்குமா!? இனி எல்லா பாத்திரத்தையும் கழுவிட்டே யூஸ் பண்றேன் மாமா.
ம்ம்ம்ம்ம்ம் நல்லது புள்ள. இன்னிக்கு சாப்பாட்டுக்கு மிளகு குழம்பு வைக்குறியா!? சளிப் பிடிச்சுட்டு இருக்கு.
ஏன்!? என்னாச்சு!? மழைல நனைஞ்சீங்கள்!?
இல்ல புள்ள, போன வாரம் டவுனுக்கு போகும்போது, தாகமா இருக்குன்னு தண்ணி பாட்டில் ஒண்ணு வாங்கினேன். அதை குடிச்சதிலிருந்து தொண்டை கமறலா இருந்துச்சு. இப்ப நல்லா சளி பிடிச்சுட்டுது.
தண்ணி பாட்டில்ல ஒரு எண் இருக்கும் அதை பார்த்து எது நல்ல கம்பனின்னு தெரிஞ்சுக்கிட்டு வாங்கி குடிச்சு இருக்கலாமில்ல!!
தண்ணி பாட்டில்ல நம்பரா!? என்ன புள்ள, புதுசா சொல்றே!?
என்னதான் Aquafina, Kinley, Bislery ன்னு ஸ்டேண்டர்டு கம்பெனியா பார்த்து தண்ணி பாட்டில் வாங்கினாலும், அந்த பாட்டிலோட அடிப்பாகத்துல 1 முதல் 7 வரை இருக்குற எதாவது ஒரு நம்பர் குறிச்சிருக்கும். குறிச்சிருக்கனும்ன்னு ரூல்ஸ் இருக்கு. இந்த நம்பர்லாம் அந்த பாட்டில்ல எந்த ரசாயண பொருள்லாம் கலந்து இருக்குன்னு நாம தெரிஞ்சுக்குறதுக்காகத்தான்.
பாட்டில்ல ஒரு படத்துல நம்பர்களும் அதுக்குண்டான ரசாயண பொருட்களோட பேரும் இருக்கும். எந்த நம்பர்க்குண்டான வெதிப்பொருட்களும் நம்ம உடம்புக்கு கெட்டதுதான் செய்யும். ஆனா, எரியுற கொள்ளில எது நல்ல கொள்ளின்னு தெரிஞ்சுக்கலாமில்ல. 1,3,6 நம்பர் இருந்தா அந்தப் பாட்டில்களை வாங்கக்கூடாதாம் மாமா.
அதுமட்டுமில்லாம, இந்த பாட்டில்களை வெயில்ல வைக்க கூடாதாம். ஆனா, கடைங்கள்ல வெளிய வெயில்லதான் வச்சிருக்காங்க. வெயில் படும்படி வச்சா, பாட்டில்ல இருக்கும் ரசாயணப் பொருள் தண்ணில கலந்துடுமாம். தண்ணி குடிச்சுட்டு பாதுகாப்பா அதை அப்புறப்படுத்தனுமே தவிர அந்த பாட்டில்களை யூஸ் பண்ணக்கூடாதாம்.
உனக்கெப்படி இதெல்லாம் தெரியும் புள்ள. இனி நம்ம சின்ன மண்டையன் இஸ்கோலுக்கு போகும்போது பாட்டில்ல கொடுக்காத. வாட்டர் பாட்டிலுக்குண்டான பாட்டிலையே வாங்கி தண்ணி கொடுத்தனுப்பு.
சரிங்க மாமா! நீங்கதான் எப்பவும் ஜோக் சொல்லுவீங்க. இன்னிக்கு உங்களுக்கு நான் ஜோக் சொல்றேன்.
ம்ம்ம்ம் சொல்லு புள்ள!!
டான்ஸ் மாஸ்டர்: நான் போன் செஞ்சப்போ ஏன் பேசலை!?
மாணவன்: நீங்க போன் செஞ்சப்போ அந்த ரிங்டோனுக்கு டான்ஸ் ஆடி பிராக்டீஸ் பண்ணிட்டு இருந்தேன் சார்.
புத்திசாலி புள்ள. ஒரு விடுகதை கேக்குறேன் சொல்லு புள்ள!
கேளுங்க மாமா!!
ம்ம் ஒரு நிமிசம் இருங்க. யோசிச்சு சொல்றேன்.

கறுப்புக் காகம் ஓடிப்போச்சு, வெள்ளைக் காகம் நிக்குது. அது என்ன?
ம்ம் ஒரு நிமிசம் இருங்க. யோசிச்சு சொல்றேன்.
நீ யோசிச்சு வை. நான் போய் உரம் வாங்கிட்டு வந்துடுறேன். அதுக்குள்ள டிடி, மதுரைத் தமிழன், வெங்கட், கணேஷ், உஷா, சுபான்னு யார்க்கிட்டயாவது விடையை தெரிஞ்சு வச்சுக்க கூடாது
எந்தப் பாட்டிலும் வாங்க வேண்டாம்...!
ReplyDelete”எந்த” பாட்டிலும் வேண்டாம்!:)
Deleteரெண்டு பெரியவங்களும் பாட்டில் பத்தி பேசலாமா!? இது நியாயமா!?
Deleteஅப்புறம் 'விடு'கதை :
ReplyDeleteமுதல் எழுத்து "உ"
கடைசி எழுத்து "து"
இது இல்லாமல் இட்லி இல்லை...
விடை சரிதான் அண்ணா!
Deleteரொம்ப முக்கியமான தகவல்களை வழங்கியுள்ளீர்கள்..!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!
Deleteஜோக் ...ரிங் டோன் கட் ஆனவுடன் எடுத்து பேசி இருக்கலாமே ?
ReplyDeleteத.ம 3
Avoidable. Accidents can be avoided by taking little more care.
ReplyDeleteகறுப்புக் காகம் ஓடிப்போச்சு, வெள்ளைக் காகம் நிக்குது. அது என்ன?
ReplyDeleteகறுப்பு தலை முடி . - வெள்ளை நரை
உளுந்தும் சொல்லலாம் ..!
நான் கூட இந்த சேலை செருகல் பற்றி முகனூலில் செய்தி போட்டேன்..எல்லாமே பயனுள்ள செய்திகள்... நன்றி...விடுகதை ரொம்ப ஈசியாப் போச்சு....
ReplyDeleteவிடையை சொல்லிவிட்டார்கள்
ReplyDeleteத,ம.6
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல்களுடன் அவியல் அருமை! வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteநல்ல தகவல்கள்!
ReplyDeleteத.ம 8
ரொம்ப பயனுள்ள தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள்..! இதைப் படிக்கும் போது நம்ம சகோ இவ்வளவு அறிவு ஜீவியா என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது
ReplyDelete//குழந்தை பொறந்தா எப்படி தூக்குவான்னு தெரியல.///
ReplyDeleteஎன்னம்ம்மோ அம்மாகாரிதான் தூக்கி வைச்சுகிற மாதிரியில்ல பில்டப் கொடுக்குறீங்க....
///நீ யோசிச்சு வை. நான் போய் உரம் வாங்கிட்டு வந்துடுறேன். அதுக்குள்ள டிடி, மதுரைத் தமிழன், வெங்கட், கணேஷ், உஷா, சுபான்னு யார்க்கிட்டயாவது விடையை தெரிஞ்சு வச்சுக்க கூடாது///
ReplyDeleteமதுரைத்தமிழன் பெயரை மற்றவர்களோட சேர்த்து அவர்கள் புத்திசாலிதனத்தை கிண்டல் பண்ணியிருக்கீங்க...
மதுரைத்தமிழனுக்கு இந்த மாதிதி கேள்விக்கு எல்லாம் பதி தெரியாது அவன் எப்பவுமே பக்கதுல உடகார்ட்ந்து இருக்கும் பையனை பார்த்து எழுதிதான் பாசானவன். அதுனால எங்க பக்கத்து ஊர்காரர் சொன்ன பதிலை காப்பி பண்ணி சொல்லியிடுறேன்.. எங்க பக்கத்து ஊர்கார்ரான டி டிக்கு பதில் தெரிஞ்சு இருக்கு ஆனா அவருக்கு ஸ்பெல்லிங்க் தெரியாமா பதிலை அரைகுறையாக சொல்லி இருக்கிறார். அதனால நான் அதை சரியாக சொல்லியிடுறேன். அந்த பதில் உளுந்து... ஹீ.ஹீ.ஹீ tha.ma 9
பதிவில் உள்ள எல்லா தகவல்களுமே உபயோகமானவை! இப்போதெல்லாம் பதிவுகளில் விடுகதை, புதிர் கணக்கு என்றாலே அந்த பக்கம் போய் மூளையைக் கசக்குவதில்லை. சகோதரிக்கு நன்றி!
ReplyDeleteஅருமையான விழிப்புணர்வு பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழி.
அவியல் அருமை. அதிலுள்ள கருத்துக்கள் எல்லோராலும் யோசிக்கப் பட வேண்டியது
ReplyDeleteநல்ல அவியல்.....
ReplyDeleteபாராட்டுகள்.
வாட்டர் - அய்யோ ...!
ReplyDeleteInformative post .
தண்ணி கூட குடிக்க முடியாது போலிரூக்கே !
ReplyDeleteஎனக்கும் அது தோணும். கொஞ்சம் பதிவைத் தலைப்பை சொருகிக் கொண்டு வண்டியில் போனால் தான் என்ன?
உங்கள் விடுகதைக்கு விடை உளுந்து சரியா?