Monday, December 16, 2013

தமிழ்நாடு டில்லி ஆகுமா!? - ஐஞ்சுவை அவியல்

மாமா! டிவில நியூஸ் பார்த்தீங்களா!? டில்லில ஆம் ஆத்மின்ற கட்சி காங்கிரஸ், பாரதீய ஜனதான்ற மிகப்பெரிய கட்சிகளைத் தோற்கடிச்சு பெரிய வெற்றி பெற்றிருக்கு. இங்க மாதிரி பணம், பிரியாணி, குவார்ட்டர், சத்தியத்துக்குலாம் கட்டுப்படாம தொலைநோக்கிப்பார்வை,ஊழலுக்கெதிர்ப்பு,  போராடுன கட்சிக்காக மீடியாக்களின் ப்ரெய்ன் வாஷ்சுக்கு மயங்காம ஓட்டு போட்டிருக்காங்க. 

ஆமா புள்ள, இந்த வாரத்திய ஹாட் டாபிக் இதான். சுதந்தரப் போராட்டத்துல கலந்துக்கிட்டதுக்காக காங்கிரஸ், ஹிந்தி போராட்டத்துல கலந்துக்கிட்டதுக்காக திமுக, சினிமா கவர்ச்சில உருவான அதிமுக, மதத்தை முன்னிறுத்தி பிஜேபின்னு வலம் வரும் கட்சிகளிடமிருந்து தேமுதிகா மாற்றுக்கட்சியா உருவெடுத்து, ஊழலுக்கெதிரா ஆட்சி அமைக்கும்ன்னு நம்புனா,  அவர் ஒண்ணும் தமிழ்நாட்டை காப்பாத்த கட்சி ஆரம்பிக்கலை, தன்னோட கல்யாண மண்டபத்தை காப்பாத்திக்குறதுக்காகத்தான் கட்சி ஆரம்பிச்சுருக்கார்ன்னு சாயம் வெளுத்து போய் நிக்குறார். 

ம்ம்ம்ம் தமிழ்நாட்டை காப்பாத்த யார்தான் முன் வரப்போறாங்களோ!? இனி வரும் பிள்ளைகளாவது நல்ல தலைவரா உருவெடுக்குமா!?

ம்ம்ம் பார்க்கலாம்! எங்க உன் ஃப்ரெண்ட் ராஜியை ரெண்டு நாளா ஆளையே காணோம்!!

அவப் பொண்ணு தூயாவை பார்க்க பெங்களூருக்கு போய் வந்தா. அதான் இங்க வரலை. மாமா, பெங்களூருல எல்லோரும் ஹெல்மெட் போட்டுட்டுதான் வண்டி ஓட்டுறாங்களாம். அதுப்போல, பெங்களூரு சிட்டி பஸ்ல சிசி கேமராலாம் இருக்காம் மாமா. ராஜி சொன்னா.

ம்ம்ம் பக்கத்து மாநிலம் கேரளாவுல டூவீலர் ஓட்டுறவங்க,ஹெல்மெட் போடாமயோ, கார் ஓட்டுறவங்க சீட் பெல்ட் போடாமயோ வந்தா அங்க இருக்குற பெட்ரோல் பங்க்ல பெட்ரோல் போடமாட்டாங்களாம். அதுப்போல, சினிமா, சீரியல்ல ஹெல்மெட், சீட் பெல்ட் போடாம வண்டி, செல்போன் பேசிக்கிட்டு வண்டி ஓட்டுற சீன் வந்தா சென்சார்ல கட் பண்ணிடுவாங்களாம். சீரியலையும் தடைப் பண்ணிடுவோம்ன்னு சொல்லி இருக்காங்களாம்.

நம்ம தமிழ்நாட்டு ஜனங்களுக்கும் இதுப்போல விழிப்புணர்வு வந்தா நல்லாதான் இருக்கும். மாமா, எட்ஜிர் வீட்டு கீர்த்தனா குட்டியை ஹாஸ்பிட்டல் கொண்டுப் போயிருக்காங்க மாமா!

ஏன்? என்னாச்சு!? நேத்து ராத்திரி கூட நம்ம அப்புகூட விளையாடிட்டு இருந்தாளே! டைம் ஆச்சு நாந்தானே பாப்பாவை கொண்டு போய் அவ வீட்டுல விட்டுட்டு வந்தேன்.

ம்ம் கீர்த்தனா குட்டிக்கு மிட்நைட்ல ரெண்டு மூணு தடவை பால் குடிக்கும் பழக்கம் இருக்கு. அந்த நேரத்துல எழுந்து பால் காய்ச்ச டைமிருக்காதுன்னு, அவ அம்மா பாலை சூடு பண்ணி பிளாஸ்க்ல எடுத்து வச்சுக்குற பழக்கம் இருக்கு. நேத்து நைட் அவளுக்கு பால் காய்ச்சி பிளாஸ்க்ல எடுத்து வச்சிருக்காங்க. அதை நைட் குழந்தைக்கும் கொடுத்திருக்காங்க. விடிகாலைல குழந்த அழுது துடிச்சு இருக்கு. கூடவே வாந்தியும் கூட.

ஹாஸ்பிட்டல் எடுத்து போய் இருக்காங்க. குழ்ந்தையோட உடம்புல பாய்சன் கலந்திருக்குன்னு சொல்லி இருக்காங்க. என்ன ஏதுன்னு யோசிச்சு பார்த்ததுல பிளாஸ்க்ல இருந்த பாலைக் குழந்தைக்கு கொடுத்தது நினைவு வந்திருக்கு,. வீட்டுக்கு வந்து பார்த்தா பிளாஸ்க்குல பல்லி செத்துப் போய் இருக்கு. பிளாஸ்க்ல பால் ஊத்தும் முன் கழுவக் காணோம். உள்ள பல்லி இருக்குறதைக் கவனிக்காம பால் ஊத்தி வச்சிருந்து, குழந்தைக்கும் கொடுத்திருக்காங்க.  அதான் இத்தனை பிரச்சனைக்கும் காரணம்.

ம்ம் எல்லா சின்ன சின்ன விசயங்களிலும் கவனிச்சு பண்ணினா இதுப்போல விபத்துகளில் இருந்து தப்பிக்கலாம். சீரியசான விசயங்களாவேபேசிட்டோம். கொஞ்சம் சிரிக்கலாம் மாமா. ராஜி, அவளோட பையன் அப்பு, நான், எங்க இன்னொரு ஃப்ரெண்டுன்னு எல்லோரும் ஒரு கல்யாணத்துக்கு வேலூர் போயிருந்தோம். வேலூர்ல ராஜா தியேட்டர் ஒண்ணு இருக்கு. அங்க டவுன் பஸ் முதற்கொண்டு அந்த வழியாப் போகும் எல்லா பஸ்சும் நிக்கும். அதனால, அந்த ஸ்டாப்பிங்க் பேரு ராஜா ஸ்டாப்பிங்க். அங்கதான் நாங்க இறங்கனும்.

நாங்க போகும் போது ராஜி பையன் அப்புக்கு 4 வயசு. ராஜா ஸ்டாப்பிங் வந்ததும், பஸ் கண்டக்டர் ராஜாலாம் இறங்கு, ராஜாலாம் இறங்குன்னு கத்தினார்.நாங்களும் இறங்கலாம் ரெடியானா, ராஜாலாம் தான் இறங்கச் சொன்னாங்க. நான் அப்பு அதனால,  நான் இறங்க மாட்டேன்ன்னு ஒரே அடம். ஒரு வழியா அவனை சமாதானம் பண்ணி கீழ இறங்கறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆகிடுச்சு.

ஹா! ஹா! கண்டக்டர் கத்துனதை எவ்வளவு உன்னிப்பா கவனிச்சு அடம் பண்ணி இருக்கான் பாரு. ராஜி அவ அப்பா, அம்மாவை என்னவெல்லாம் படுத்தினாளோ! அதுக்குதான் அவப் பசங்க அவளை இப்படி படுத்துறாங்க! இதான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்ன்னு சொல்லுறது.

உங்களை சிரிக்க வச்சுடேன். இனி சிந்திக்க வைக்க ஒரு விடுகதைப் போடுறேன். எங்க சொல்லுங்க பார்க்கலாம்!!

ம்ம்ம் கேளு புள்ள!!

கறுப்பும், வெள்ளை மாடுகள் ஆத்துல குளிக்கப்போச்சு..கறுப்பு மாடு ஆத்தோடு போய்ட்டுது. வெள்ளை மாடு மட்டும் தான் நிக்குது! அது என்ன!?
இதான் கேள்வி. பதில் யோசிச்சு வைங்க. நான் போய் உங்களுக்கு டீ போட்டு எடுத்தாரேன்.

32 comments:

  1. //கறுப்பும், வெள்ளை மாடுகள் ஆத்துல குளிக்கப்போச்சு..கறுப்பு மாடு ஆத்தோடு போய்ட்டுது. வெள்ளை மாடு மட்டும் தான் நிக்குது! அது என்ன!?
    //

    உளுத்தம் பருப்பு

    ReplyDelete
    Replies
    1. விடை சரிதான் ராஜா!

      Delete
  2. குழந்தைகள் விஷயத்துல எப்பவும் கவனமாக இருக்கணும்.விடை உளுந்து

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான் சுபா! விடையும் சரி

      Delete
  3. அக்கா, அப்பு எப்பவும் உங்களுக்கு ஆப்பு வைக்கிரான்.இல்லையா அக்கா?

    ReplyDelete
    Replies
    1. ஆனா, அதுவும் ரசிக்க வைக்குதுல்ல சுபா!

      Delete
  4. நல்ல பகிர்வு சகோ....!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  5. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் :) அப்பு நீ வாழ்க ! :))))
    (பார்ரா ஒரு தங்கச்சி வருத்தப்படும் போது அக்கா படுற சந்தோசத்த மயிண்ட்
    வாயிஸ் கேக்குது கேக்குது கவலையை விடுங்க ராயீம்மா ..:))))) சின்னப் புள்ளைங்க
    அப்புடித்தான் இருப்பாங்க அப்புவோட சேர்ந்த நானும் சின்னப் புள்ளையாகீட்டேன் :))) )

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே அவன் என்னை படுத்துவான். இப்ப நீங்களுமா!? நல்லா செட்டு சேர்ந்தீங்கக்கா!

      Delete
  6. எந்த ஒரு விஷயத்திலும் கவனமா இருக்கணும். அதிலும் குழந்தைகள் விஷயத்தில் இன்னும் ரொம்ப கவனமா இருக்கணும். நீங்க சொன்ன மாதிரியே, இன்னொரு விஷயத்தையும் நான் இங்க சொல்ல விரும்புறேன். குழந்தைகளுக்கு ஷூ போடுறதுக்கு முன்னாடி, ஷூவைத் தட்டி விட்டுட்டு போடணும்.

    அப்பு, இன்னும் கொஞ்சம் உங்கம்மாவை சுத்தவிடு. நான் எப்பவுமே உன் கட்சி தான்.

    ReplyDelete
    Replies
    1. அச்சச்சோ! நீங்களுமா!? எனக்கெதிரா இன்னும் எத்தனை பேர்தான் கூட்டணி வைக்கப் போறீங்க!?

      Delete
  7. தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டியின் விளக்கம்.. நீங்களும் கலந்து கொள்ள விரும்புகிறேன்... நன்றி...

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html

    ReplyDelete
    Replies
    1. முயற்சிக்குறேன் அண்ணா!

      Delete
  8. மின் வெட்டு... பிறகு வருகிறேன் சகோ...

    ReplyDelete
    Replies
    1. இங்கிட்டும் அதே! மெதுவாய் வாங்கண்ணா!

      Delete
  9. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் - அருமை...

    ReplyDelete
    Replies
    1. என் திண்டாட்டம் உங்களுக்கு கொண்டாட்டமாண்ணா!?

      Delete
  10. அப்பு சரியான ஸ்டாப்பில் இறங்கனும்னா டெல்லியில் உள்ள 'அப்பு கேர் 'பார்க்குக்கு கூட்டிட்டு போங்க !
    த .ம .6

    ReplyDelete
    Replies
    1. சரிங்க. போக்குவரத்து செலவு உங்களுது!!

      Delete

  11. /////ம்ம்ம்ம் தமிழ்நாட்டை காப்பாத்த யார்தான் முன் வரப்போறாங்களோ!?////

    நான் எப்ப வருவேன் எப்படி வருவேன் என்று தெரியாது ஆனால் தமிழ்நாட்டை காப்பாற்ற ஒரு நாள் கண்டிப்பாக வருவேன் கவலைப்படாதீங்க்
    tha.ma 7

    ReplyDelete
    Replies
    1. ம்க்கும் இப்படி சொன்னவங்கலாம் ஆள் அட்ரெஸ்சே இல்லாம போய்ட்டாங்க.

      Delete
  12. //. மாமா, பெங்களூருல எல்லோரும் ஹெல்மெட் போட்டுட்டுதான் வண்டி ஓட்டுறாங்களாம்.//
    ஆனா ராஜிக்கு ஹெல்மேட் தேவையில்ல என்று பெங்களுரில் சொல்லிட்டாங்களாம் காரணம் அவங்க தலை ரொம்ப ஸ்ட்ராங்காம்

    ReplyDelete
    Replies
    1. வலிமைக்கு காரணம் உள்ளிருக்கும் களிமண் தான் போதுமா!?

      Delete
  13. //அதுப்போல, பெங்களூரு சிட்டி பஸ்ல சிசி கேமராலாம் இருக்காம் மாமா. ராஜி சொன்னா//

    அந்த கேமராவில் எடுக்கும் படங்களை எல்லாம் தனக்கு தரவேண்டும் என்று ராஜி அடம் பிடிக்கிறாங்களாமே அவங்க வலைதளத்தில் போடதான்

    ReplyDelete
    Replies
    1. பின்ன தினம் ஒரு பதிவு தேத்த நான் என்ன பண்ணுறதாம்!?

      Delete
  14. பல்லிக்கும் பாப்பாவுக்கும் ஒரு பிளாஸ்க்கில் பால் வைக்க கூடாதுன்னு இப்ப அந்த அம்ம புரிஞ்ச்சு இருப்பாங்க,,,.
    /

    ReplyDelete
    Replies
    1. அட, சரியா புரிஞ்சுக்கிட்டீங்களே சகோ!

      Delete
  15. குழந்தைகள் விசயத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் அலுப்பு பட கூடாது

    நன்றி அக்கா...

    ReplyDelete
    Replies
    1. அலுப்புப் பட்டால் நம் குழந்தை நமக்கில்லை!

      Delete
  16. கண்டிப்பாய் தொடர்கிறேன் ராஜா

    ReplyDelete