Tuesday, December 03, 2013

கதம்பச் சட்னி - கிச்சன் கார்னர்

ஒரு பொண்ணுக்கு மாமியார், நாத்தனார், சீரியல் பிரச்சனையை விட பெரிய பிரச்சனை, காலை டிஃபனுக்கு சைட் டிஷ் தேடுறதுதான். தேங்காய் சட்னியும், வேர்கடலை சட்னியும் கொலஸ்ட்ரால், சாம்பார் வச்சா எப்பப் பாரு சாம்பாரா!? குருமா வச்சா அது பூரிக்குதான் சரியா இருக்கும்ன்னு எதை செஞ்சாலும் நொள்ளை நொட்டை சொல்லுவாங்க. 

வீட்டுக்காரருக்கு முள்ளங்கி பிடிக்காது, சின்னவளுக்கு கத்திரிக்கா பிடிக்காது. அப்புக்கு கேரட் பிடிக்காது. இந்த காய்கறில இருக்கும் சத்துலாம் எப்படி கிடைக்கும்!? அதனால எல்லா காய்கறியும் போட்டு ஒரு சைட் டிஷ் ரெடி பண்ணிட்டா, எல்லோரையும் எல்லா காய்களையும் சாப்பிட வச்ச மாதிரி ஆச்சுன்னு அம்மா செய்வாங்க.

4 பேர் சாப்பிடும் அளவுக்கு தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
ப.மிளகாய் - 1
பூண்டு - 4 பல்
கத்திரிக்காய் - 1
கேரட் - 1
முள்ளங்கி -1
உருளைக்கிழங்கு - 1
மிளகாய் தூள் - தேவையான அளவு,
மஞ்சள் தூள் - சிறிது
கடுகு -சிறிது
கடலை பருப்பும், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 1 இணுக்கு.

கத்திரிக்காய் தவிர மத்த காய்கறிலாம் தண்ணில நல்லாக் கழுவிட்டு பொடியா நறுக்கி வச்சுக்கோங்க.  கத்திரிக்காயை பொடியா நறுக்கி தண்ணில போட்டு வைங்க. அப்படி இல்லாட்டி, கத்திரிக்காய் கறுத்து போகும்.

வாணலியை அடுப்புல வச்சு ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊத்தி காய வைங்க.

அடுத்து பச்சை மிளகாயை போட்டுக்கோங்க.


அடுத்து பூண்டு போட்டுக்கோங்க. 

அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்குங்க. பொன்னிறமா வதங்கனும்ன்னு அவசியமில்ல. வெங்காய வாசனை போனால் போதும்.

வெங்காய வாசனை போனதும் தக்காளி சேர்த்து லேசா வதக்கிங்கோங்க.

அடுத்து பொடியா வெட்டி வச்ச காய்கறிகளை சேர்த்து நல்லா வதக்கிங்கோங்க.

தேவையான அளவு உப்பு சேருங்க... பொறியல், காரக்குழம்புக்கு வெங்காயம், காய்கறிகள் வதக்கும்போது உப்பு சேர்த்துக்கிட்டா காய்கறிகள் சீக்கிரம் வேகும். பாத்திரத்துல ஒட்டவும் ஒட்டாது.


மிளகாய்ப் பொடி சேர்த்து வதக்குங்க. மிளகாய்தூள் வாசனை போனதும் தேவையான அளவு தண்ணி ஊத்தி கொதிக்க விடுங்க.

அப்படி கொதிக்கும்போதே மஞ்சப்பொடி சேர்த்துக்கோங்க. மஞ்சப்பொடி சிறந்த கிருமி நாசினி. நம்ம கவனத்தையும் மீறி சாப்பாட்டுல சேரும் கிருமிகளை கொல்ல மஞ்சப்பொடி சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க. காய்லாம் நல்லா வெந்ததும் கல்சட்டில போட்டு காய்கறிலாம் உருத்தெரியாம  கடைஞ்சிக்கோங்க. 

அடுப்புல வாணலி வச்சு சூடானதும், ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ஞ்சதும் கடுகு சேர்த்து பொரிய விடுங்க. 

கடுகு பொரிஞ்சதும் கடலைப்பருப்பும், உளுத்தம்பருப்பும் சேர்த்து, அது சிவந்ததும் கறிவேப்பிலை போடுங்க.
கறிவேப்பிலை பொரிஞ்சதும் கடைந்த குழம்பை ஊத்தி சூடு பண்ணி இறக்கிக்கோங்க. கொதிக்கனும்ன்னு அவசியமில்ல. சூடேறினால் போதும்.

சூடான சுவையான கதம்ப சட்னி தயார். இது இட்லி, தோசைக்கு தொட்டுக்கலாம். சமயத்துல சாதத்துக்கும் நல்லா இருக்கும். 

தக்காளி விலை அதிகமா இருக்கும் நேரங்களில் தக்காளி குறைச்சுக்கிட்டு கொஞ்சம் புளி சேர்த்து கடைஞ்சாலும் டேஸ்ட் மாறாது. கடையும்போதே டேஸ்ட் பார்த்தால் ஒருவேளை காரம் கம்மியா இருந்தா காய்ந்த மிளகாய் சேர்த்தால் காரமும் சரியாகும். ருசியும் கூடும். பிள்ளைகளும் காய்கறிகளை எடுத்து வச்சுடாம சாப்பிட்டுடும்.

அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோட கிச்சன் கார்னர்ல சந்திக்குறேன். அதுவரை, டாட்டா, பை பை, ஸீ யூ.

23 comments:

  1. எல்லோரையும் எல்லா காய்களையும் சாப்பிட வைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு...! கதம்பச் சட்னி செய்முறைக்கு நன்றி சகோதரி... அம்மாவிற்கும்...

    ReplyDelete
    Replies
    1. எப்படியாவது சாப்பிட்டால் போதும்ன்னு தான் எல்லா அம்மாக்களும் நினைப்பாங்க. பசங்களை சாப்பிட வைக்க மெனக்கெடுற அம்மாக்கள் எத்தனையோ பேர் இருக்காங்க!!

      Delete
  2. சகோ நீங்க சட்னி செய்யும் சட்டி ரொம்ப பளபளன்னு இருக்கே இது பதிவு போடுறதுக்கு மட்டும் உபயோகிக்கும் சட்டியா அல்லது வூட்டுக்காரர்ரின் கைவண்ணமா? எப்படியெல்லாம் சந்தேகம் வருது பாருங்

    ReplyDelete
    Replies
    1. உங்க மாப்ளை பாத்திரம் கழுவி வைக்கும் அளவுக்கு எங்க வீட்டு பாத்திரம்லாம் கொடுத்து வைக்கலை சகோ! அது எவர்சில்வர் சட்டி. அதான் பளபளன்னு இருக்கு.

      Delete
  3. சமைக்கறத விட ஃபோட்டோ எடுக்கவே நேரம் அதிகம் தேவையா இருந்திருக்கும் போலருக்கே! ஆனா இத்தன ஃபோட்டோ இருந்தாத்தான் நாமளே சமைக்கறா மாதிரி ஒரு ஃபீல் வருது :/)

    ReplyDelete
    Replies
    1. சமைக்கும்போது சிம்ல வச்சுட்டு படம் எடுப்பேன். சில சமயம் என் பிள்ளைகள் ஃபோட்டோ எடுப்பாங்க.

      Delete
  4. சுவையான கதம்ப சட்னி... கோவையில் இருக்கறப்ப அக்கம் பக்கத்து வீடுகள்ல செய்வாங்க... அருமையா இருக்கும்...செய்முறை மறந்து போயிருந்தது... நினைவூட்டியதற்கு நன்றிங்க...:))

    ReplyDelete
    Replies
    1. காரம், புளிப்பு, சத்துன்னு அருமையான் சட்னி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!!

      Delete
  5. எல்லாத்தையும் குக்கரில் மொத்தமாகப் போட்டு தேவையான தண்ணீர்விட்டு ஒரு விசில் வந்ததும் எடுத்து காய் வடிகட்டியில் போட்டு கரண்டியால் மசித்தால் சிம்பிளான சுவையான சட்னி ....!

    ReplyDelete
    Replies
    1. அப்படியும் செய்யலாம்!!

      Delete
  6. சத்தான கதம்ப சட்னி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி

      Delete
  7. இப்பவே சாப்பிடனும் போல இருக்கிறது.
    புளி போட்டு நானும் செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் கொஞ்சம் பார்சல் பண்ணுங்க.

      Delete
  8. நல்ல இருக்கு அக்கா.ெசய்து பார்த்துட்டு ெசால்லுேறன்

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் செஞ்சுப் பார்த்து ரிசல்ட் சொல்லுங்க.

      Delete
  9. ok வீட்டில் சொல்லி செய்ய சொல்றேன் . சாப்பிட்டுவிட்டு இருந்தால் அடுத்த பதிவுக்கு கமென்ட் போடுறேன்

    ReplyDelete
    Replies
    1. என் சமையல்ல பக்க விளாஇவுகள் உண்டு. ஆனா, உயிர் போகும் அளாவுக்கு எஃபெக்ட் இருக்காது.

      Delete
  10. டிவி ஷோ மாதிரி அழகா படங்களுடன் பதிவு! சூப்பர்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டி கருத்திட்டமைக்கும் நன்றி.

      Delete
  11. கிச்சன் கார்னர் சட்னி செய்முறை படங்களுடன் விளக்கம் அருமை ராஜி.

    ReplyDelete
  12. சட்னி.... சுவைத்தேன்.

    ReplyDelete
  13. ரொம்ப அவசியத் தேவையான டிஷ்! பாராட்டுக்கள்!

    ReplyDelete