எப்பப் பாரு சப்புன்னு வெஜ் அயிட்டமாவே போட்டுக்கிட்டிருக்கியே! காரசாரமா நான்-வெஞ் அயிட்டம் எதும் உனக்கு சமைக்கத் தெரியாதா!?ன்னு நீங்க கேக்குறதுக்குள்ள ஒரு நான் வெஜ் அயிட்டத்தை எப்படி சமைக்குறதுன்னு இன்னிக்கு பார்த்துடலாம்.
என் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும். ட்ரையாவும், கருப்பாவும் இருக்குறதால இந்த டிஷ் என் வீட்டுக்காரருக்குப் பிடிக்காது. சும்மா ஒண்ணு இல்ல ரெண்டு ஃபீஸ் எடுத்துப்பார். ஆனா, நாங்க ஃபுல் கட்டு கட்டுவோம்.
தேவையானப் பொருட்கள்:
எலும்பில்லாத கோழிக்கறி - கால் கிலோ
முந்திரி - 10
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதள்வு
சிக்கன் மசாலா - சிறிது
மிளகு - 10
பூண்டு - 4பல்
பட்டை - 1துண்டு
கிராம்பு -2
அன்னாசிப் பூ - 1
வெறும் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய்- 2 டீஸ்பூன்
எலுமிச்சைப் பழச்சாறு - 1டீஸ்பூன்
தூள் உப்பு - தேவையான அளவு
வெங்காயத்தை நீளவாக்குல வெட்டி வச்சுக்கோங்க. தக்காளியையும் பொடியா வெட்டிக்கோங்க. மிளகை பொடி பண்ணி வச்சுக்கோங்க. பூண்டை பஞ்சுப் போல நசுக்கி வச்சுக்கோங்க.
முந்திரியை ரெண்டா உடைச்சு எண்ணெய் ஊத்தி வறுத்து எடுத்து வச்சுக்கோங்க.
எலும்பில்லாத கோழிக்கறியை நல்ல தண்ணில 4 வாட்டி அலசி, தண்ணில வடிச்சுட்டு, மிளகாய்த்தூள், உப்பு, சிக்கன் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறுலாம் சேர்த்து பிசிறி அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
கடாயில எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, அன்னாசிப் பூலாம் போட்டு பொரிய விடுங்க.
அடுத்து வெங்காயம் சேர்த்துக்கோங்க.
கொஞ்சம் உப்பு சேர்த்து பொன்னிறமா வதக்குங்க.
அடுத்து புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேருங்க.
அடுத்து வெட்டி வச்ச தக்காளியைச் சேர்த்து நல்லா வதக்குங்க.
அடுத்து மசாலாலாம் சேர்த்து பிசிறி வச்ச கோழிக்கறியைச் சேர்த்துக்கோங்க.
தண்ணிலாம் சுண்டி வரும் நேரத்துலவறுத்து வச்சிருக்கும் முந்திரியை சேர்த்துக்கோங்க.
பொடிப் பண்ணி வச்சிருக்கும் மிளகு, பூண்டை சேர்த்து கிளறி அடுப்புல இருந்து இறக்கோங்க.
காரம், உப்பு சேர்ந்து பூப்போல வெந்தக் கோழிக்கறியும், கூடவே மொறுமொறுப்பான முந்திரியும்ன்னு சாப்பிடவே ஜோரா இருக்கும். ரசம் சாதம், சாம்பார் சாதத்தோடு சாப்பிட நல்லா இருக்கும்.
அடுத்த வாரம் குழந்தைகள் உடம்புக்கு வலு சேர்க்கும் சத்து மாவு எப்படி தயாரிச்சுக்குறது. கஞ்சி காய்ச்சுறதைப் பத்தி கிச்சன் கார்னர்ல பார்க்கலாம்.
படங்களுடன் சொல்லிப்போனவிதம் அருமை
ReplyDeleteபுதிதாக சமைக்கத் துவங்குபவர்கள் கூட
எளிதாகச் செய்யும் விதமாக
பதிவைத் தந்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா!
Deletetha.ma 1
ReplyDeletetha.ma 2
ReplyDeleteபார்க்கவே ரொம்ப suberb நாக்கில் நீர் வருது அக்கா.நிங்க சொல்லுற எல்லா அயிட்டமும் நான் செய்துட்டு வரேன்.எல்லாம்simple வும் சுவையாவும் இருக்கு அக்கா.
ReplyDeleteபாவம் சுபா நீங்க! கஷ்டமான டிஷ்லாம் நான் செய்ய மாட்டேன். அதெல்லாம் அம்மா தலையில கட்டிடுவேன்
Deleteகோழிக்கு பதில் கோழி முட்டை போட்டு இதைப்பண்ணலாமா சொல்லுங்க? காரணம் முட்டை மட்டும் உன்று உயிர் வாழும் சங்க உறுப்பினர் நான்
ReplyDeleteஆடு பகை, குட்டி உறவா!? ன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. அதுப்போல சிக்கன் பகை, முட்டை மட்டும் உறவா!?
Deleteஇந்த பதிவை என் குழந்தை தூங்கும் போது பார்க்க வேண்டியிருக்கிறது இல்லையென்றால் அவளுக்கு இந்த கோழி வேண்டுமென்று அடம் பிடிப்பாள்...
ReplyDeleteகால் கிலோ கோழிக்கறி, பத்து முந்திரிப்பருப்பு போட்டு செஞ்சுத் தராத அப்பாவா நீங்க!?
Deleteஎங்க வீட்டுக்கு அனுப்புங்க நான் சமைச்சுத் தரேன்
Deleteவணக்கம்
ReplyDeleteஅருமையான சமையல் குறிப்பு.. பிற்காலத்தில் கைகொடுக்கும்..குறிப்பு எடுத்து வைத்தால்..சரிதான் வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்லது. குறிச்சு வச்சுக்கோங்க.
Deleteவணக்கம்
ReplyDeleteத.ம 3 வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எஸ்கேப்!
ReplyDeleteஓக்கே! அடுத்த பதிவுக்கு வந்துடுங்க
DeleteNice Post Wish you all the best by http://wintvindia.com/
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்குன் நன்றிங்க. அப்படியே நம்ம சமையல் புரோகிராம் உங்க டிவில வரவைக்க முடியுமா?!
Deleteநானும் முட்டை மட்டும் உன்று உயிர் வாழும் சங்கத்தை சேர்ந்தவன். அதனால், மதுரைத் தமிழன் கேட்டதற்கு பதிலுரைத்தால் மிகவும் உதவியாக இருக்கும்.
ReplyDeleteமதுரை தமிழன்கிட்டயே பதில் சொல்லிட்டேனுங்க!
Deleteநல்லாயிருக்கே..நான் உங்க வீட்டுக்கு வரும்போது இதையே செஞ்சு கொடுங்க அக்கா!
Deleteகண்டிப்பாய் செஞ்சுத்தரேன் ஆவி!
Deleteஆஹா, ஞாயிற்றுக்கிழமையை ஞாபகப்படுத்திட்டீங்களே ராஜி....சூப்பர்...
ReplyDeleteகோவைல ஞாயித்துக்கிழமைகளில்தான் அசைவம் சாப்பிடனுமா எழில்!?
Deletemmmmmm......super super. Intha waaram ithuthaan enga veetula.....
ReplyDeleteகண்டிப்பாய் செஞ்சுப் பாருங்க. ஈசியானதும் சீகிரமும் செஞ்சுடலாம், என்ன சிக்கன்ல மசாலா ஊறனும் அவ்வளவுதான்
Deleteசோக்கா கீதும்மே...
ReplyDeleteஅப்பால ஒரு தபா... சுக்கா வறுவல் எப்புடிக்கா குக்கு பண்ணிக்கிறதுன்னு... ஒன் சிக்கன்...நோ...நோ.. கிச்சன் கார்னர் காண்டி டெமோ குடும்மே...
ஓக்கே!
Deleteஅடுத்த பதிவர் சந்திப்புக்கு இதை எல்லோருக்கும் உங்க கையால பரிமாறனும்
ReplyDeleteகண்டிப்பாய் அடுத்த பதிவர் சந்திப்புக்கு வரும்போது நானே சமைச்ச எதாவது ஒரு டிஷ்சைக் கொண்டு வருவேன்.
Delete