நான் ரொம்ப சோம்பேறி. ஒரு வேலை எடுத்துக்கிட்டா அதை செஞ்சு முடிக்கனும்ன்ற அக்கறைலாம் இல்லாதவ. பத்து நாள் தீவிரமா எம்ப்ராய்டரி பண்ணுவேன். அடுத்த பத்து நாள் கிராஃப்ட். அதுக்கடுத்த பத்து நாள் வொயர் கூடை, ஒரு சில நாள்ல எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு தூக்கம்.
உடம்பு வளைஞ்சு எப்பவாவது நான் செஞ்சு உருப்படியா வந்த கிராஃப்ட் அயிட்டம் பத்தி அப்பப்போ போஸ்ட் போடலாம்ன்னு இருக்கேன். ஃப்ரெண்ட் வீட்டுக்கு போன போது அவ வீட்டு சாமி படத்துல அழகான மாலை இருந்துச்சு. லைட் வெளிச்சம் பட்டு தங்கம் போல செம ஜொலி ஜொலிப்பு. விலை என்னன்னு கேட்டேன் 150ரூபாய்ன்னு சொன்னா.
அந்த மாலைல என்னலாம் இருக்குன்னு பார்த்து மனசுல பதிஞ்சுக்கிட்டேன். ரொம்ப நாளாவே அதுப்போலவே செய்யனும்ன்னு ஆசை. நேத்துதான் அதுக்கான சான்ஸ் கிடைச்சது. உடனே தேவையான பொருள்லாம் வாங்கி வந்து செஞ்சுட்டேன்.
தேவையான பொருட்கள்:
கோல்ட் கலர் சமிக்கி
பச்சை கலர் கண்ணாடி மணி,
மணி கோர்க்கும் நரம்பு,
கோல்ட் கலர் பிளாஸ்டிக் கோவில் மணி
கோல்டன் ரிப்பன்
வெள்ளை கண்ணாடிப் பூ
கோல்ட் கலர் பிளாஸ்டிக் குண்டு மணி
சமிக்கி எல்லா கலர்லயும் ஃபேன்ஸி கடைகள்ல கிடைக்குது. 100 கிராம் பத்து ரூபாய். உங்களுக்கு பிடிச்ச கலர்ல வாங்கி வந்து அதோட இதழ்களை உள்பக்கமா மடிச்சா கீழ் படத்துல இருக்குற ஷேப்புல வந்துடும். இது மாதிரி செஞ்சு வச்சுக்கோங்க.
உங்களுக்கு மாலை தேவைப்படும் அளவுக்கு பிளாஸ்டிக் நரம்பை கட் பண்ணி, அதுல பிளாஸ்டிக் கோவில் மணியை கோர்த்துக்கோங்க. இந்த கோவில் மணியும் எல்லா கலர்லயும் கிடைக்குது.
அடுத்து மணி கோர்த்த நரம்போட ரெண்டு நுனியையும் ஒண்ணா சேர்த்து ஒரு நரம்பாக்கி அதுல பிளாஸ்டிக் பூவோட இதழ்கள்லாம் மணியை பார்த்த மாதிரி கோர்த்துக்கோங்க. இந்த பிளாஸ்டிக் பூவும் எல்லா கலர்லயும் கிடைக்குது. இந்த பூ கிடைக்காட்டி சமிக்கி கூட யூஸ் பண்ணிக்கலாம்.
அதுக்கடுத்து கோல்ட் குண்டு மணியை கோர்த்துக்கோங்க.
அடுத்து வெள்ளை பிளாஸ்டிக் பூவை கோர்த்துக்கோங்க.
அதுக்கடுத்து 3 பச்சைக் கலர் மணியை கோர்த்துக்கோங்க. இதோட மாலையோட குஞ்சலம் ரெடி.
அடுத்து, ஒண்ணா இருக்கும் ரெண்டு பிளாஸ்டிக் நரம்பையும் தனித்தனியா பிரிச்சு, ஒரு நரம்புல மடிச்சு வச்சிருக்கும் சமிக்கியோட இதழ்கள் மாலையோட மேல்பக்கம் பார்க்கும் மாதிரி கோர்த்துக்கோங்க.
அதுக்கடுத்து, பச்சை கண்ணாடி மணி 3 கோர்த்துக்கோங்க.
அடுத்து சமிக்கியோட இதழ்கள் மாலையோட கீழ்பக்கம் வர்ற மாதிரி கோர்த்துக்கோங்க. அதுக்கப்புறம் இன்னொரு சமிக்கியை திருப்பி எதிரும் புதிருமா வரும் மாதிரி, மேல் படத்துல இருக்குற மாதிரி கோர்த்துக்கோங்க.
இப்படியே 3 மணி, ரெண்டு சமிக்கின்னு மாத்தி ரெண்டு நரம்புலயும் கோர்த்துக்கிட்டு வாங்க.
ரெண்டு பக்கமும் ஒரே அளவுல கோர்த்தப் பின், கோல்ட் ரிப்பனை நரம்புல முடிச்சு போட்டுக்கோங்க.
எங்க வீட்டு சாமி படத்துக்கு ஒரு மாலை.
எங்க வீட்டு பிள்ளையாருக்கு ஒரு மாலை. என் கையால நானே செஞ்சு போட்டதுல ஒரு சந்தோசம்!!
சமிக்கி பாக்கட் நாற்பது ரூபா, கண்ணாடி பூ, மணி, நரம்புலாம் சேர்த்து மொத்தம் 100 ரூபாய்ல பொருள்லாம் வாங்கி 2 அடி நீளத்துல ரெண்டு மாலை செஞ்சேன். ரெண்டு மாலை செய்ய அரை மணிநேரம்தான் பிடிச்சது. வெளில வாங்குனா ஒரு மாலை 100 ரூபாய் சொல்லுவாங்க. நாமளே செஞ்சா நமக்கு பிடிச்ச கலர்ல, பிடிச்ச டிசைன்ல செஞ்சுக்கலாம்தானே!?
மாலை நல்லா இருக்கா!? பிடிச்சு இருக்கா!?
akka enaku oru maalai parsal anupunga.,,
ReplyDeletenaan ungala vida rompa somberi akka
கண்டிப்பாய் அனுப்புறேன் காய்த்ரி
Deleteakka enaku oru maalai parsal anupunga.,,
ReplyDeletenaan ungala vida rompa somberi akka
tamilmanam 2
ReplyDeleteத ம வாக்கிற்கு நன்றி
Deleteநல்லாவே இருக்கு. . Good Carry on.
ReplyDeleteபாராட்டுக்கு நன்றிங்க!
Deleteஎனக்கும் ரோஷ்ணிக்கும் ரொம்பவே பிடிச்சிருக்கு... இதை கவனமா நோட் பண்ணி வெச்சுகிட்டா... நாளைக்கு பேன்சி ஸ்டோர் போய் வாங்கணுமாம்...:)) அவளுக்கு இதில் ரொம்பவும் விருப்பம்... தினமுமே அறுந்து போன கழுத்து மணிகளை வேறு வேறு காம்பினேஷனில் கோர்த்து பார்ப்பாள்....:))
ReplyDeleteவாங்கிக் கொடுங்க. இப்ப அரையாண்டு விடுமுறைல இருக்கும் ரோஷ்ணிக்கு நல்ல பொழுதுபோக்கும் கூட!!
Deleteஆல் இன் ஆல் அழகு ராணி., ராஜி வாழ்க
ReplyDeleteஆவி, ஜீவா, மதுரைதமிழன் காதுல விழற மாதிரி சொல்லுங்க எழில்
Deleteநாமே செய்து சாமி படங்களுக்கு அணிவித்தால் அதில் ஓர் திருப்தி.... சூப்பர் அக்கா...
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி ஸ்பை
Deleteஅழகு.... அருமை....
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!
Delete
ReplyDelete///எங்க வீட்டு பிள்ளையாருக்கு ஒரு மாலை. என் கையால நானே செஞ்சு போட்டதுல ஒரு சந்தோசம்!!///
உள்ளூரில் இருக்கும் அண்ணனுக்கும் மட்டும் மாலை வெளிநாட்டில் இருக்கும் இந்த அண்ணனுக்கு மாலை இல்லையா?
இந்தியா வரும்போது ஆயிரம் ரூபாய் நோட்டால செஞ்ச மாலையயே போடலாம்ன்னு இருக்கேன். உங்க வசதி எப்படி!?
Deleteஇதுவரைக்கும் போட்டோவை நீங்களே எடுத்து பதிவா போட்டீங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். போட்டோ பிடிக்கிறதுக்கு ஒரு ஆளை தனியா வேலைக்கு வச்சிருக்கீங்கன்னு இப்பத்தான் தெரியுது.
ReplyDeleteசெய்முறை விளக்கத்தோட உங்களோட இந்த பதிவு நிறைய பேருக்கு உபயோகமாக இருக்கும். நன்றி சகோதரி.
வேலைக்கு தனியா ஆள் வேற வைக்கனுமா!? எங்க வீட்டு பிள்ளைங்கதான் எனக்கு கேமரா மேன்
Deleteநல்லா இருக்கு மாலை! பாராட்டுகள்.....
ReplyDeleteத.ம. +1