சாம்பார், கூட்டு, பொறியல்ன்னு கத்திரிக்காய் எந்த ரூபத்துல என் பசங்களுக்கு பிடிக்கும். அதுலயும் வேர்க்கடலை அரைச்சு ஊத்தி செய்யும் காரக்குழம்புன்னா நிமிசத்துல காலி ஆகிடும்.
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை - கைப்பிடி
பிஞ்சு கத்திரிக்காய் - 5(குட்டி, குட்டி காயா இருந்தா நல்லது)
வெங்காயம் - 1
தக்காளி- 1
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
சீர்கம் - சிற்து
கடுகு- சிறிது
மிளகாய்தூள் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் 2 டீஸ்பூன்
மஞ்சப்பொடி - சிறிது
வறுக்காத வேர்க்கடலையை தோலோடு மிக்சில போட்டு அரைச்சுக்கோங்க.
கத்திரிக்காய் சின்ன, சின்னதா இருந்தா காம்பை மட்டும் கட் பண்ணிட்டு நாலா கீறி முழுசாவும், கத்திரிக்காய் பெருசா இருந்தா நீள வாக்குல கீறி எண்ணெயில வதக்கி எடுத்து வச்சுக்கோங்க.
கடாயில எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் சீரகம், கடுகு போட்டு பொறிய விடுங்க.
கடுகு, சீரகம் பொறிந்ததும் வெங்காயம் போட்டு பொன்னிறமா வதக்கிங்கோங்க.
அடுத்து தக்காளி போட்டு வதக்கிக்கோங்க.
கறிவேப்பிலை, கொத்தமல்லி சேருங்க.
உப்பு சேர்த்துக்கோங்க.
அரைச்சு வச்சிருக்கும் வேர்க்கடலை விழுதை போட்டு வதக்குங்க.
வேர்க்கடலை பச்சை வாசனை போனதும் தேவையான அளவு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, மிளகாய் தூள் வாசனை போகும் வரை வதக்கி தண்ணி சேர்த்து கொதிக்க விடுங்க.
கத்திரிக்காய் சேர்த்து கொதிக்க விடுங்க.
கத்திரிக்காய் நல்லா வெந்ததும் புளிக் கரைச்சு ஊத்திக் கொதிக்க விடுங்க.
காரசாரமான கத்திரிக்காய் காரக்குழம்பு ரெடி.சூடான சாதத்துல நெய் சேர்த்து சாப்பிட செமயா இருக்கும். வேர்க்கடலை போட்டிருக்குறதால ருசி கூடுதலா இருக்கும். சட்டுன்னு அடிப்பிடிச்சுக்கும். அதனால, அப்பப்ப குழம்பை கிளறி விடுங்க. உங்களுக்கு முடியாட்டி சமைக்குறது பெண்களா இருந்தா வூட்டுக்காரரை கிளறி விடச்சொல்லுங்க. சமைக்குறது ஆண்களா இருந்தா வேற வழியே இல்ல குழம்பு கொதிச்சு இறக்கும் வரை நீங்களே கிளறிவிடுங்க.
வேற ஒரு ரெசிபியோட அடுத்த வாரம் பார்க்கலாம்!! இப்ப டாட்டா! பை பை! சீ யூ.
அடிப்பிடிச்சா வூட்டுக்காரரை கிளறி விட சொல்லுங்க.
ReplyDeleteராஜி டச்.................ஹூம். ...ம் நம்ம வீட்டு அம்மா கண்ணுல இந்த பதிவு படாம பார்த்துக்கணும்.
அவங்க பார்க்கறுதுக்குள்ள நீங்களே சமைச்சு கொடுத்துடுங்க!
Deleteபடிக்குமபோதே சாப்பிட ஆசை தோன்றுது
ReplyDeleteசீக்கிரம் செஞ்சு சாப்பிட்டு பார்த்துடுங்க!
Deleteவணக்கம்
ReplyDeleteஅருமையான சமையல்க்குறிப்பு... செய்முறை விளக்கத்துடன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன்
Deleteவணக்கம்
ReplyDeleteத.ம. 3வது வாக்கு.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தமிழ்மணம் வாக்கிற்கும் நன்றி
Deleteரொம்ப அழகாக இருக்கு அக்கா.முயற்சி பண்ணிட்டு சாப்பிட்டு பார்த்துட்டு சொல்லுறேன்.அடிபிடிச்சா தான் problem.கிளறி விட நான் மட்டும் தான் உள்ளேன்
ReplyDeleteஅடிப்பிடிக்காம செய்யுங்க சுபா!
DeleteGood postt.... +1
ReplyDelete(From [my new] android)
ஏற்கனவே 20 மணிநேரம் வலைப்பூக்களில் இருப்பீங்க. ஆண்ட்ராய்ட் போன் வேற வாங்கிட்டீங்க!! இனி 24 மணிநேரமும் இங்கதான் இருப்பீங்க.
Deleteஅடிப்பிடிச்சா வீட்டுக்காரரை கிளறிவிடச் சொல்லுங்க... ஏன்னா அப்பத்தான் குழம்பு நல்லாயில்லைன்னாலும் நானே கிளறியிருக்கலாம் இப்ப நீங்க கிளறி சுத்தமா டேஸ்டே போச்சு... ஒரு குழம்பைக் கிண்டிவிடவாவது தெரியுதான்னு திட்டி நாம எஸ்கேப் ஆகலாம்... ஆஹா... அக்கா....
ReplyDeleteபுதுமையான புளிக்கறி.... ஆஹா... இந்த வாரத்துல ஒரு நாள் செய்து பார்த்துட வேண்டியதுதான்...
செஞ்சுப்பார்த்தா மட்டும் போதாது. சாப்பிட்டும் பாருங்க
DeleteHELLO MADAM,
ReplyDeletePLEASE ADD SCROLL DOWN OPTION MENU ONLY FOR KITCHEN CORNER,
முயற்சிக்குறேன் சகோ!
Deleteநல்லதொரு குறிப்பு... கடலையை அரைச்சு விட்டதில்லை... செஞ்சு பார்க்கிறேன்..
ReplyDeleteசெஞ்சுப் பார்த்துட்டு நல்லா இருக்கான்னு சொல்லுங்க!
Deleteபடமும் சொன்னவிதமும்
ReplyDeleteசெய்துபார்க்கத் தூண்டுகிறது
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
நல்ல சமையல் குறிப்பு.... நன்றி.
ReplyDelete