ஏதோ ஒரு பிறவியில்
எப்படியோ ஒரு தருணத்தில்..,
கண்டிப்பாய் தவம்
செய்து இருக்க வேண்டும் ..,
இப்பிறவியில் உன்னை
இனிய தோழியாய்
நான் பெறுவதற்கு ...,
பாசம் என்பதைத் தேடி
பலமுறை நான் ஏமாந்திருக்கிறேன்.
வேஷமான பொய் அன்பினால்
மூழ்கி நான் களைத்திருக்கையில்...,
நிறைவான அன்பினால்
நீயும் அடிமை செய்திட்டாய் எனை..,
உன் மணநாள் பரிசாய்
என்ன தரலாம் என்று
மனதினுள் குழப்பம்!!
இறுதியில் இப்படி வேண்டி நின்றேன்
இறைவனிடம்..,
என் ஆயுளில் பாதியை
பரிசாகத் தர சொல்லி!
ஒருவேளை
இல்லையென்று சொல்லி, அவன்
மறுத்தாலும் மறுப்பான்
அந்த கள்வன்.
என்னிடமிருந்து உனக்குத் தர
எவனிடம் நான் கெஞ்ச வேண்டும் ???
இதையே உன்
மண நாள் பரிசாக
பெற்றுக் கொள்ளேன் .
அதானே... எந்தக் கள்வனும் வேண்டாம்...!
ReplyDeleteரசித்தேன் சகோதரி...
சிறப்பான பரிசு .வாழ்த்துக்கள் தோழி .
ReplyDeleteசிறப்பான பரிசுதான்!
ReplyDeleteத.ம. 4
மிக சிறப்பான பரிசு. மணநாள் யாருக்கு?
ReplyDeleteமாமா எழுதினாரா இதை?
ReplyDeleteவித்தியாசமான சிந்தனை
ReplyDeleteஅற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
tha.ma 6
ReplyDeleteபரிசை கவரில் தந்தால் மறந்துவிடும் என்றா ,இந்த உள்ளங்'கவர்' பரிசு ?
ReplyDeleteத.ம 7
கல்யாண பரிசுகளெல்லாம் காதல் பரிசாக மாறி வெகுநாட்களாகவிட்டன இப்போ என்ன பரிசு
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅருமையான கவிதை... வாழ்த்துக்கள்
எனது புதிய வலைப்பூ உங்களை அன்புடன் வரவேற்கிறது இதோமுகவரி-http://tamilkkavitaikalcom.blogspot.com
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறப்பான பரிசு சகோதரியாரே
ReplyDeleteவாழ்த்துக்கள்
த.ம.8
செலவிள்ளதா பரிசா இருக்கே!
ReplyDeleteஎவ்வளவு பெரிய பரிசு...
ReplyDeleteகொடுப்பதற்கே ஒரு மனம் வேண்டும்..
அதிலும் ஆயுளில் பாதியை ஈந்தளிப்பது
பிசிராந்தையாரையும் மிஞ்சி விட்டீர்கள் போங்கள்
அருமையான உணர்வுக் கவிதை சகோதரி..