Thursday, December 05, 2013

நூறாண்டு காலம் வாழ்க!! நோய் நொடி இல்லாம வளர்க!!

நண்பர்களின் வேண்டுதல், உறவுகளின் அலட்சியம் தாண்டி இரண்டு பெண் பிள்ளைகளுக்குப் பின் கடவுள் அருளால் பிறந்த ஆண்பிள்ளை. 6.12.1999 அன்னிக்கு அவன் பிறந்தப்போ ஹஸ்பிட்டலே அல்லோகலப்பட்டது என் அப்பாவின் சந்தோஷத்தால்!! அப்பா, அம்மா, நண்பர்கள் வேண்டுதலுக்காக திருச்செந்தூர் தொடங்கி, திருப்பதி வரை நேர்த்திக் கடன் செய்தே ஓய்ந்துப்போனோம். இன்னமும் சில வேண்டுதல் நிறைவேத்தலை!!


(தன் தம்பிக்காக தூயா ஆர்டர் செய்த கேக்)

அக்காக்களுக்கு அவன் செல்லம், நான் கூட சில சமயம் கோவம் வந்து அடிச்சுடுவேன். ஆனா, பெரியவ அவனை தாங்குவா! ஆனா, என்னதான் மனசுக்குள் பாசம் இருந்தாலும், சின்னவ தன் தம்பியோடு சண்டைப் போடுவா!

(அப்புக்காக கேக் ரெடி!!)
அக்காக்களோடு சண்டைப் போட்டாலும் அளவுக்கடந்த பாசம் வச்சிருக்கான். வெளியே எங்காவது போகும்போது, பெரிய மனுசன் போல அவங்க அக்காக்களை பாத்துப்பான். அவங்களுக்கு உடம்புக்கு முடியாட்டி சாமிக்கிட்ட வேண்டிப்பான். பெரியவளுக்கு உடம்புக்கு ரொம்ப முடியாம ஹாஸ்பிட்டலில் இருந்தப்போ 3 கோவிலுக்கு நேர்ந்துக்கிட்டு மொட்டை அடிச்சுக்கிட்டான்.
தன் தம்பிக்கு ஆசையாய் ட்ரெஸ் வாங்கி வந்தா பெரியவ, உன் இஷ்டத்துக்கு ட்ரெஸ் வாங்கி வந்தா நான் போட்டுக்கனுமா!?ன்னு சண்டை போட்டு ஸ்கூல் யூனிஃபார்ம்லயே கேக் வெட்டியாச்சு!! ஆனா, ஹோட்டலுக்கு போகும்போது மட்டும் புது ட்ரெஸ்ல! டேய் அப்பு! உன்னை புரிஞ்சுக்க தனியா எனக்கொரு மூளை வேணும் போல!!

தாத்தா, பாட்டி செல்லம். ஆனா, தாத்தாக்கிட்ட எப்பவும் சண்டை போடுவான். சின்ன சின்ன எலக்ட்ரிக் வேலை நல்லா செய்வான்.  கடைக்கு போறதுன்னு பொறுப்பா நடந்துப்பான். வீட்டுல எல்லார்க்கிட்டயும், எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருப்பான். ஆனா, வெளில போய்ட்டாலோ பொட்டி பாம்பாகிடுவான். ஒருவேளை அங்கயே விட்டுட்டு வந்துட்டா என்ன செய்யுறதுன்னு நினைக்குறானோ என்னமோ!! 

(பெரிய அக்கா தன் சம்பாத்தியத்தில் பொம்மை, கேக், ட்ரெஸ் வாங்கித்தர, சின்ன அக்கா தான் சேர்த்து வச்ச காசுல flair பேனா வாங்கி தந்தாள்)

ஒருநாள் நைட் எல்லோரும் சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது, தூயா! உனக்கு 23 வயசாகும்போது மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செஞ்சுடனும். அதுதான் பெண்களுக்கு கல்யாணத்துக்கு சரியான வயசு. அங்கிருந்து 4 வருசம் கழிச்சு இனியாக்கு கல்யாணம் பண்ணனும். ஏன்னா, உனக்கும், பாப்பாக்கும் 4 வருசம் இடைவெளி, அதனாலயும், 4 வருசத்துல உன் கல்யாணத்துக்கு செஞ்ச செலவுலாம் அப்பாவல ஈடுக்கட்டி, பாப்பா கல்யாணத்துக்கு காசு சேர்க்க  முடியும்.

அங்க இருந்து நாலு வருசம் கழிச்சு தம்பிக்கு கல்யாணம் கட்டி வச்சுட்டா, எங்க கடமைலாம் தீர்ந்துடும்ன்னு சொன்னேன். உடனே..., அப்பு, 

இரு, இரு, தூயாக்கும், இனியாக்கும் 4 வருசம் கேப் அதனால நாலு வருசம் கழிச்சு கல்யாணம் பண்றே. அது ஓக்கே. எனக்கும் இனியாக்கும் 2 வயசுதானே வித்தியாசம்!! நீ ஏன் நாலு வருசம் கழிச்சு கல்யாணம் பண்ணுவேன்னு சொல்றே! உன் பொண்ணுங்களுக்கு ஒரு நியாயம். எனக்கு ஒரு நியாயமா!?ன்னு கேட்டான். நிஜமாவே பதில் சொல்ல முடியல :-(
(தூயா தன் தம்பிக்கு கிஃப்டா தந்த பொம்மை...,)

வீட்டுல அடங்கி உக்காந்து படிக்க மாட்டான். ஆனா, மார்க் மட்டும் சுளையா o grade ல வந்து நிக்கும். ஆனா, அவன் கையெழுத்து, டாக்டர்களுக்கு கூட புரியாது.அப்படி இருக்கும். என்ன எழுதி இருக்கான்னு புரியாமயே மார்க் போட்டுடுறாங்க அவன் டீச்சர்ன்னு சின்ன பொண்ணு கிண்டலடிக்கும். கிராஃப்ட், சயின்ஸ் மினியேச்சர் செய்யுறதுல படு கெட்டி.  சாதாரண அட்டைல செஞ்ச ஃபேன், சோலார் ப்ளேட்னால ஓடும் கார்ன்னு அவன் செய்யும் பட்டியல் நீளும்..,

(ஹோட்டல்ல சின்னதா ஒரு பார்ட்டி)

,ஒரு ஐஸ்கட்டியைப் போல!!
மெல்ல மெல்ல என்னை உருக 
,வைத்துக்கொண்டிருக்கிறது,
என் மடியினில் உறங்கும் இந்த
குட்டி சூரியன்.


தொட்டால் உறக்கம் தெளிந்திடுமென
கரங்களால் தீண்டாமல்
கண்களால் வருடிக் கொண்டிருக்கிறேன்
அவன் அழகை!!

நரி பயங்காட்டியதோ!
இல்லை எறும்பு கடித்ததோ!
”அழுதுடுவேன்”ன்னு என்னைப்
பயங்காட்டிக் கொண்டிருக்கிறான்!!

வேதனை நீங்கி, புன்சிரிப்பொன்று
அவன் இதழில்.
நடிகர் திலகம் போல நொடிக்கொரு
பாவம் அவன் முகத்தில்!!

பிள்ளை வாசம் உணர
அவனை உச்சி மோர்கையில்
அவன் உயிர் சுவாசம், என் சுவாசக் கூட்டில்
இடம் மாறுகிறது!!

குட்டி தாமரை உருக்கொண்ட 
வயிற்றை தொட்டு தடவிப் பார்க்கிறேன்!
எந்த மொழி வார்த்தையாலும், என்
பூரிப்பையும், அவன் மீதான
என் பாசத்தையும் விளங்க வைக்க முடியாது!!

காதல், காமம், வேலை,
சம்பாத்தியம், குடும்பப்பொறுப்பு
என எந்தக் கவலையுமில்லாமல்
உறக்கம் அவன் விழிகளில்!!

அவன் உறங்கட்டும்!
ஆணுக்குண்டான பொறுப்புகள் 
அவனை உறங்க விடாமல் 
செய்யலாம்!

அதனால், இப்பவே உறங்கி, சக்தியை 
சேமித்துக் கொள்ளட்டும்.
தன் முதுகில் நீர் சுமக்கும்
ஒரு ஒட்டகத்தைப் போல!

டிஸ்கி: நாளைக்குதான் அவன் பிறந்த நாள். ஆனா, அவன் அக்காக்கு நாளைக்கு லீவ் கிடைக்காததால் ரெண்டு நாள் முன்னமயே நேத்தே கொண்டாடியாச்சு!!  




31 comments:

  1. APPU MANY MANY HAPPY BIRTH DAY.100 வருஷம் ேபரும் புகழுடன் வளரட்டும். akka ஆண் பிள்ைளகள் பாசத்ைத காமிச்சுக மாட்டாங்க. ஆனா நமக்கு ஒரு problem na முன்னாடி நிப்பாங்க.Appu உனக்கு நல்ல 2 அக்கா கிைடத்து இருங்காங்க. நி ெராம்ப lucky. GOD BLESS YOU.
    Where is cake ? party?

    ReplyDelete
    Replies
    1. ஒன்றல்ல! ரெண்டு கேக் மேல படத்துல இருக்கே சுபா! உங்களுக்கு வேணும்க்கிறதை எடுத்துக்கிட்டு அடுத்து வர்றவங்களுக்கு பிரிச்சு கொடுத்துடுங்க.

      Delete
  2. தங்க மகனுக்கு அன்பான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..

    மகன் செய்யும் மினியேச்சர் வேலைகள் எல்லாம் படமெடுத்து ப்ளாகில் போடுங்க ராஜி .

    Angelin.

    ReplyDelete
    Replies
    1. என் பிளாக்க்ல போடக்கூடாதாம். அவர் பிளாக் ஒண்ணு ஆரம்பிக்கபோராராம் ஏஞ்சலின்.

      Delete
  3. இனிய மனம் கனிந்த பிறந்த நாள்
    நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் , வாழ்த்துக்கும் நன்றிப்பா!

      Delete
  4. அப்புவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் , வாழ்த்துக்கும் நன்றி!

      Delete
  5. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் , வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  6. அப்புவுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    நூறாண்டு காலம் சீரும் சிறப்புமாக வாழ்க.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் , வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  7. நூறாண்டு காலம் வாழ்க!!
    நோய் நொடி இல்லாம வளர்க!!

    ReplyDelete
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  10. படங்களும் கவிதையும் அருமை

    ReplyDelete
  11. அருமையான பகிர்வு... ! அப்புக்கு எனது மனம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  12. பிறந்தநாள் என்பது
    ஒரு உயிர்
    இந்த பூமியை
    முத்தமிட்ட தினம்
    அதுவும்
    நமது இரத்தம் என்றால்
    அது
    பத்துமாத சிறையறுப்பின்
    விடுதலை தினம்
    அதற்கு கோடிப் பூக்களை
    கொட்டி
    வரவேற்பு கொடுத்தாலும்
    போதாது
    தீராது
    உங்கள் உயிருக்கு
    எனது பூங்கொத்து!

    ReplyDelete
  13. வணக்கம்
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  14. அப்பு நீ கொடுத்து வச்சவன்டா ,இப்படியொரு பாசத் தாய்க்குபிள்ளையைப் பிறக்க !வாழ்க வளமுடன் !
    த ம +1

    ReplyDelete
  15. நான் மட்டும்தான் ஆறாம் தேதி பிறந்த நிமிடத்தில் சரியாக வாழ்த்தி இருக்கிறேன் ,கேக்கை முதலில் எனக்குதான் தரணும்!

    ReplyDelete
  16. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பு.

    ReplyDelete
  17. உங்கள் மகனுக்கு இன்று பிறந்தநாள்! எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்! பிறந்த நாளை பிறந்த தேதியன்றே கொண்டாடுங்கள்! அரசு ஊழியர்கள்தான் எந்த பண்டிகையையும் முதல் நாளே கொண்டாடி விடுகிறார்கள். (அந்த நாட்கள் விடுமுறை என்பதால்)

    ReplyDelete

  18. இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  20. என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும் இங்கே உரித்தாகட்டும் .

    ReplyDelete
  21. அப்புவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  22. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  23. மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.....

    த.ம. 16

    ReplyDelete
  24. இப்படி ஒரு தாய் கிடைக்க மூன்று குழந்தைகளும், இப்படி மூன்று குழந்தைகள் பிறக்க அம்மா அப்பா இருவருமே புண்ணியம் செய்திருக்கிறீர்கள். எங்கள் வீட்டிலும் நான் என் தங்கை ஷோபி என் தம்பி தீபக் உங்க வீட்டில் போலவே தான்பா...

    குழந்தைக்கு என் ஆசிகள்.

    ReplyDelete