Thursday, December 19, 2013

திரும்பிப் பார்க்கிறேன் - தொடர்பதிவு



வாரத்துல 7 நாளுல திங்கள் கிழமை ஐஞ்சுவை அவியல்,  செவ்வாய் கிழமை கிச்சன் கார்னர், புதன் கிழமை மௌனச்சாட்சிகள், வெள்ளிக்கிழமை புண்ணியம் தேடி ஒரு பயணம்ன்னு பதிவை போட்டு தேத்திடுறேன். மிச்சமிருக்குற வியாழன், சனிக்கிழமைல பதிவு தேத்துற கொடுமை இருக்கே! அப்பப்பா!

இந்த வியாழக்கிழமை என்னடா பதிவு போட்டு தேத்தலாம்ன்னு கையைப் பிசைஞ்சுக்கிட்டு நிக்கும்போது நம்ம வாத்தி ராஜப்பாட்டை ராஜா ஒரு தொடர்பதிவு திரும்பி பார்க்குறேன் தொடங்கி வச்சிருக்கார். நேரமிருந்தா எழுந்துங்கன்னு கூப்பிட்டிருந்தார். ஆஹா! தம்பியுடையான் படைக்கு அஞ்சான்னு சொல்லுவாங்களே! அதுப்போல ஆபத்பாந்தவனா வந்து பதிவு தேத்த உதவிப் பண்ண ராஜாவுக்கு நன்றி. இனி பதிவுக்குள் போகலாம்! 

2013ல நடந்த நல்லது, கெட்டதுலாம் பதிவாக்கச் சொல்லி ராஜா சொலி இருந்தார்.

நிறைய நல்ல விசயங்களும், ஓரிரு கெட்ட விசயங்களும் நடந்துச்சு. எப்பவுமே எனக்கு சந்தோசத்தோட சேர்ந்து இலவச இணைப்பா துக்கமும் வரும். எந்த நிகழ்ச்சிக்கும் அழுவுறதா சிரிப்பதான்னு தெரியாமயே நிப்பேன்.

படிக்கும்போதே நடந்த கேம்பஸ் இண்டெர்வியூல செலக்ட் ஆகி ஏர் இண்டிகோ விமானம் பெரிய பொண்ணை தங்களோட ட்ரெயினிங்க்குக்கு கூப்பிட்டுக்கிட்டுது
ஆனா, அவளை பிரிந்து ரொம்ப தூரம் அனுப்பினதுதான் துக்கம். 

ரொம்ப ஆசையாய் பார்த்து பார்த்து புது வீடு கட்டி ஏப்ரல் மாசம் குடிப் போனோம். ரொம்ப நாள் ஆசையான கண்ணாடி டைனிங் டேபிளை சீராய் செய்தார் அப்பா.
ஆனா, இத்தனை நாள் அப்பா, அம்மாவோடு கூட்டுக் குடும்பமாய் இருந்து, இப்போ அவர்களை விட்டு தனியாய் வந்தது மிகப்பெரும் சோகம். என்னதான் பக்கத்து தெரு, செல்போன்னு இருந்தாலும், முன் போல எப்பவும் பார்த்துக்க முடியாம, பேச முடியாம இருக்குறது மிகப் பெரிய சோகம்.

கணேஷ் அண்ணா, ரமணி ஐயா, அடையாறு அஜீத், வெங்கட் அண்ணா, புலவர் ஐயா, சசி, மோகன்குமார், தனபாலன் அண்ணா, மதுமதி,  மயிலன், ஜீவா, சங்கவிலாம் முன்னமே பழகி இருந்தாலும் மீண்டும் பார்த்து பேசியதில் மகிழ்ச்சி. தனியாய் பிறந்த எனக்கு, தோள் கொடுக்க ஆவி, ராஜா,ரூபக்,தீவிரவாதி, ஸ்பை, விக்கி அண்ணா, ஆஃபீசர் அண்ணா, நக்ஸ் அண்ணான்னு புதுப் புது சகோதரர்களைப் பார்த்தது சந்தோசம். இவர்களை பார்க்க பதிவர் சந்திப்புல கலந்துக் கொள்ள விமான டிக்கட் எடுத்துக் கொடுத்து முதன் முதலில் தூயா என்னை ஃப்ளைட் ஏற்றியது மிகப்பெரிய சந்தோசம்.
பதிவர் சந்திப்புக்கான இடம் வந்ததும் சகோதரர்களை பார்க்கும் ஆவலில் சரியாய் செக் பண்ணிக்காம டாக்சியை விட்டிறங்கி மூன்றாவது கண்ணான கேமராவை டாக்சியோடு போக விட்டது சோகம்.

ரொம்ப நாளாய் அம்மாவை படுத்தி வந்த கால் மூட்டு வலி காணமல் போனது ரொம்ப சந்தோசம்.
ஆனா, அதுக்காக ஆப்பரேஷன் வரை போய் 1 மாசம் வரை ஹாஸ்பிட்டலில் அம்மா கஷ்டப்பட்டது சோகம்.
 ரூபக், ஆஃபிசர் அண்ணா, மனோ அண்ணா, விக்கியண்ணா, ரிஷபன் சார்ன்னு ஃபோன் மூலம் பேசி அந்த சோகத்தில் தோள் கொடுத்தது சந்தோசம்.

புது வீட்டில் தீபாவளி கொண்டாடியது.  ஆவி, ஸ்பை, ஸ்பை வொயிஃப், பிரகாஷ்ன்னு வாழ்த்துச் சொன்னது சந்தோசம்.
தீபாவளி எண்ணெய் வைக்க காலையில் வரவேண்டிய மகள் மதியம் வந்தது சோகம்.

ஏழு மணிக்குக் கூட 100 தரம் எழுப்பினாதான் படுக்கையை விட்டு எந்திருக்கும் இனியா, அலாரம் அடிக்கும் முன்னமயே எழுந்து குளிச்சு புத்தகத்தை எடுத்து வச்சு படிச்சு பொறுப்பாய் இருப்பது சந்தோசம்.
மான்குட்டியாய் துள்ளி செல்லும் குழந்தை பத்தாவது வந்தவுடன் டியூசன், படிப்புன்னு மாறிட்டது சோகம். 


காலச்சக்கரம் ஒவ்வொரு மணித்துளிக்கும் பல ஆச்சர்யங்களையும், சோகங்களையும், மகிழ்ச்சிகளையும் தனக்குள் வச்சுக்கிட்டு நமக்காக சுழலுது. அதற்கான நேரம் வந்ததும் ஒவ்வொருவருக்கும் அவரவருக்குண்டானதை தந்துடும்.  இந்த வருசம் முடிய இன்னும் 10 நாள் இருக்கு. இந்த பத்து நாளில் சோகமா? இல்ல சந்தோசமா? இல்ல ஆச்சர்யமா? எனக்கானதில் எதை தருதுன்னு பார்க்கலாம்!!

தொடர்பதிவுன்னா நாம சிக்குனது இல்லாம இன்னும் அஞ்சு பேத்தை சிக்க விடனுமாம். அதனால என்னால முடிஞ்ச அஞ்சு ஆடுகளை பலி கொடுத்திருக்கேன். மிடிஞ்சா எழுதுங்கப்பா!



32 comments:

  1. டியூசன், படிப்புன்னு மாறிட்டது சந்தோசம் தான்...

    இனி என்றும் சந்தோசம் இருக்க வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. ஒருப்பக்கம் சந்தோசம்ன்னாலும் காலை 5 மனி முதல் நைட் 10 மணி வரை ஞாயிறுகளில் கூட ஓடும் ஓட்டத்தை பார்க்கும்போது கொஞ்சம் கவலையாதான் இருக்குண்ணா!

      Delete
  2. இந்த வருடத்தின் பாக்கி நாட்கள் மட்டுமல்ல, இனி என்றுமே எல்லா நாட்களுக்கும் சோகத்தின் நிழல் படியாது, மகிழ்வுடனிருக்க் இனிய வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றிங்க!

      Delete
  3. ரைட்டு...

    ஆரம்பிச்சிட்டிங்களா தொடர்பதிவை....

    நடத்துங்க...

    காலச்சக்கரம் வரும் ஆண்டுகளை சோகத்தை தவிர்த்து அனைத்தையும் தரவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், என் நலனுக்கான வேண்டுதலுக்கும் நன்றி சௌந்தர்.

      Delete
  4. உங்க சோகத்தில் பெரிய சோகம் என் பதிவை படித்து அதற்கு கருத்து இட்டதுதானே?

    ReplyDelete
    Replies
    1. அது சொல்லொணா துயரமாச்சே!

      Delete
  5. உண்மையிலே ரொம்ப பாவம் இனியாதான். morning to night வரை படிப்பு படிப்புதான்.னி வரும்12 நாளும் நல்லதே நடக்கும் அக்கா

    ReplyDelete
  6. வரும் ஆண்டுகளில் என்றும் சந்தோஷம் நிலை கொண்டிருக்கட்டும்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றிங்க ஆதி!!

      Delete
  7. வணக்கம்
    தொடருங்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன்!

      Delete
  8. வணக்கம்
    த.ம3வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. த ம வாக்கிற்கு நன்றி ரூபன்

      Delete
  9. எனக்காக (!!!!) தொடர்பதிவை தொடர்ந்தமைக்கு நன்றி ...

    ReplyDelete
    Replies
    1. ஒரு பதிவை தேத்த எனக்கொரு வாய்ப்பு கொடுத்ததற்கு உனக்குதான் நன்றி சொல்லனும் ராஜா!

      Delete
  10. கணினி அனுபவத்தில் சிலருடைய (என்னுடையதையும் சேர்த்து) வயது தெரிந்தது. இந்தத் தொடர்பதிவு மூலம் கொஞ்சம் personal விஷயங்கள் வெளியே தெரிகிறது....

    என்னையும் ஆவியையும் ஏற்கனவே ராஜா கோர்த்து விட்டிருக்காரே அக்கா....

    ReplyDelete
    Replies
    1. அடடா! அவசரத்துல அதை கவனிக்கலையே! வேற யாரை தேடுறது!? தேடி பார்த்துட்டு போடுறேன்.

      Delete
    2. ஏங்க! தேடி பார்த்ததுல நான் தான் கிடைச்சேனா?

      சரி! முயற்சி செய்கிறேன்... கூடிய விரைவில் பதிவிடுகிறேன்...:)))

      Delete
  11. நடந்தவை எல்லாம் நன்மைக்கே! நன்றாகவே எழுதி இருக்கிறீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!

      Delete
  12. அடுத்த தொடர் பதிவு...... ம்ம்ம். நடக்கட்டும்!

    இனி எல்லாம் சுகமே என்று சொல்லும் படி நல்ல விஷயங்களாகவே நடக்க எனது வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி அண்ணா!

      Delete
  13. நடந்தவற்றை நினைக்கும் போது ஒரு ஆனந்தம் தான்

    ReplyDelete
  14. சோகங்கள் கலைந்து சந்தோசம் மட்டும் நிலைத்திட என்
    அன்புத் தங்கைக்கு வாழ்த்துச் சொல்லி விடைபெறுகின்றேன் .
    (இங்கின வந்து போனது யாருக்கும் தெரிய வேண்டாம்
    தெரிஞ்சாப் போச்சு அடுத்த ஆடுகள் தர வரிசையில் நிக்க
    முடியாதும்மா :))))))) )

    ReplyDelete
    Replies
    1. சரி, இங்க கதவுக்கு பின்னால ஒளிஞ்சுக்கோங்க. நான் யார்க்கிட்டயும் சொல்லலை

      Delete
  15. இனி மகிழ்வும் உயர்வும் மட்டுமே
    உங்கள் வருங்காலமாய் இருக்க
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. கண்டிப்பாக சந்தோஷம் தான் கிடைக்கும்னு நம்பிக்கையாக இருங்க சகோதரி. உங்கள் மகளின் பெயர் இனியாவா? என்னுடைய இரண்டாவது மகளின் பெயரும் இனியா தான்.

    நம் வாழ்கையில் நடந்தவற்றை அசைபோடுவதில் ஒரு தனி சுகம் தான்.

    கண்டிப்பாக இந்த வருடம் முடிவதற்குள் பதிகிறேன்.

    ReplyDelete
  17. ஆஹா புது வழியா தொடர்பதிவு சூப்பர் அக்காள்.

    ReplyDelete