விஜய் டிவில நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்ன்னு ஒரு புது நிகழ்ச்சி. சிரிப்பு நடிகர் பாலாஜியும், ஈரோடு மகேஷும் தொகுத்து வழங்குறாங்க. நிகழ்ச்சியோட ஆரம்பத்துல 4 பேரை வச்சு, வாய்ல கொழுக்கட்டைன்னு சொல்லி வாய்ல சின்ன தக்காளியை வச்சுக்கிட்டு பேசச் சொன்னாங்க.
அது எரிச்சலைத் தரவே நான் சேனலை மாத்திட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு சேனல் மாத்திட்டு வரும்போது பார்த்தா, 2 பேர் அவுட்டாகி வெளில போய்ட்டாங்க. மிச்சம் ரெண்டுப் பேர்கிட்ட தமிழ் புத்த்தகம், வரலாறு, கோவில், கலாச்சாரம் பத்திக் கேள்விக் கேட்டுக்கிட்டு இருந்தாங்க. கொன்றை வேந்தனை யார் எழுதினதுன்னு கேட்டதுக்கு கொன்றைவேந்தனைப் படிச்சிருந்தும் திருவள்ளுவர்ன்னு தப்பா பதில் சொல்லி பசங்கக்கிட்ட பல்ப் வாங்கினேன்.
அடுத்தவங்களைப் பத்தி என்கிட்ட யாராவது சொன்னால், அவங்களைப் பத்தி என்கிட்ட சொல்லுறது மாதிரிதான் என்னைப் பத்தியும் அவங்கக்கிட்ட சொல்லுவீங்கன்னு புரணி பேசுறதை அவாய்ட் பண்ணிடுவேன். அதனாலயே, சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நான் பார்க்குறதே இல்ல. தற்செயலா உறவினர் வீட்டுல இந்நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது.
ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருக்கும் பெண் அப்பாவின் குடியினால மனசொடிஞ்சு பக்கத்து வீட்டுப் பையனோடு ஓடிப் போச்சு. இதை பஞ்சாயத்து பண்ண ஒரு கூட்டம் உக்காந்துப் பேசிக்கிட்டு இருந்துச்சு. பஞ்சாயத்து பண்ணி அவன் உன்னை லவ் பண்ணலை. சும்மா டைம் பாசுக்குன்னு கண்டுப்பிடிச்சு!? அந்தப் பொண்ணை அப்பா, அம்மாவோடு அனுப்பி வச்சுட்டாங்க.
என்னதான் அந்தப் பொண்ணு மேல தப்பிருந்தாலும் இப்படியா ஊரைக் கூட்டி தன் பொண்ணு ஓடிப்போனதை சொல்லனும்!? இனி அந்தப் பொண்ணு எப்படி ஊர், உறவினர்கள் முன் நிற்கும்? யார் கல்யாணம் கட்டிப்பாங்க!?
இதுமட்டுமில்லாம, எப்பப் பாரு, காதல், காமம், துரோகம், கள்ள உறவு இதைப் பத்தியே பார்த்துக்கிட்டு இருக்குறதால உறவுகள் மேல எதிர்கால சந்ததிகளுக்கு எப்படி நம்பிக்கை வரும்!? கஷ்டப்பட்டு படிக்க வச்ச அண்ணனுக்கு மரியாதை செலுத்தும் தங்கை, மச்சினர் கல்யாணத்துக்கு நகைகள் கொடுத்து உதவிய அண்ணியைத் தாங்கும் மச்சினர் மனைவின்னு உறவுகளுக்குள் இருக்கும் நல்ல விசயங்களை காட்டலாமே!!
சன் டிவில திரை விமர்ச்னம் சொல்லும் ரத்னாவோட கணீர் குரலும், உச்சரிப்பும் செம அழகு. அதுக்கேத்த மாதிரி கிளிப்பிங்க்ஸ் போட்டு அசத்துறதுக்கு சன் டிவியை அடிச்சுக்க முடியாது. படத்தை எடுத்து சன் டிவிக்கிட்ட கொடுத்து எடிட் வேலையை அவஙளே பார்த்து ரிலீஸ் பண்ணச் சொல்லிட்டா, அந்தப் படம் கண்டிப்பா சூப்பர் டூப்பர் ஹிட்தான்.
எதாவது தடங்கல் வந்து இடஞ்சல் வந்து நிகழ்ச்சிப் பார்க்க முடியாமப் போய்டும். ஆனா, இந்த வாரம் மிஸ் பண்ணாம குட்டீஸ் சுட்டீஸ் பார்த்துட்டேன். குழந்தைகளோடு மழலைப் பேச்சு நம்ம கவலைகளாஇ மறந்து ரொம்பவே ரசிக்க வைக்குது.
இந்த வாரம் கலந்துக்கிட்ட குழந்தைகள் எல்லாமே நல்லாப் பேசினாங்க. ஒரு குழந்தை தன் தாத்தாவை மாஸ்டர்ன்னு சொல்ல, அதுக்கு இமான் அண்ணாச்சி.., பரோட்டா மாஸ்டரா?! டீ மாஸ்டரான்னு கலாய்க்க இப்படிலாம் பேசினா தாத்தாக்கு கோவம் வந்து அடிச்சுட்வாங்கன்னு அழகாச் சொல்லிச்சு. இன்னொரு குழந்தை தன் அப்பா குடிச்சுட்டு வந்ததை அரங்கில் சொல்ல, அக்குழந்தையின் அப்பாவும், அம்மாவும் சங்கடத்தில் நெளிய,குடிக்குறது சரியா!? தப்பா!?ன்னு மழலை மொழியில் உலகம் பார்க்க தன் குழந்தக்கேட்க, இனி அக்குழந்தையின் அப்பா குடிக்க மாட்டார்ன்னு நினைக்குறேன்.
ஒரு பாட்டி, தன் பேத்தியை பக்கத்தில் உக்கார வச்சு கோலம் போடக் கத்துக் கொடுக்குறாங்க. எப்படிப் போடனும்ன்னு செஞ்சுக் காமிச்சுட்டு பேத்தியை கோலம் இழுக்கச் சொல்றங்க. பாட்டி நீ கண்ணை மூடிக்கன்னு சொல்லுது. அதுக்கு ஏன்மா!?ன்னு கேக்க வெட்கமா இருக்கு பாட்டின்னு பேத்தி சொல்லுது.
பேத்தி வளர்ந்து பெரியாளனதும் பாட்டி ஒரு நெக்லசை கொடுக்க, கண்ணை மூடிக்க பாட்டின்னு சொல்லி போட்டுக் காட்டுது. பேத்திக்கும் பாட்டிக்குமிடையிலான உறவை அழகா சொல்லிச் செல்லுது இந்த விளம்பரம்.
முதல் பாதில பாட்டியா லட்சுமி ராமகிருஷ்ணன் நடிச்சிருக்கார். பிற்பாதில பாட்டி ஸ்ரீதேவி பேத்தியா நடிச்சிருக்கும். நீயே பாட்டி! உனக்கொரு பாட்டியான்னு கத்தத் தோணும் அந்த விளம்பரத்தைப் பார்த்து....,
கேபிள் கலாட்டா தொடரும்.....,
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி ஒரு செட்டப் நிகழ்ச்சிகள். அமெரிக்காவில் வரும் டிவி நிகழ்ச்சியை பார்த்து அது போல தமிழில் எடுக்கும் நிகழ்ச்சிதான் இது அந்த நிகழ்ச்சியை இங்குள்ள லோக்ளாஸ் மக்கள்தான் பார்ப்பார்கள்.
ReplyDeleteநானும் பார்ப்பதில்லை சகோ! ஆனா, உறவினர் வீட்டுக்குப் போகும்போது அவங்களை பார்க்காம இருக்க சொல்ல முடியாதுல்ல!
Deletetha.ma 2
ReplyDeleteசொல்வதெல்லாம் கொடூரம் இருப்பதால்... No...
ReplyDeleteகுட்டீஸ் சுட்டீஸ் மிகவும் பிடிக்கும்... இனிமையான குரலை கேட்கவே என்னவொரு ஆனந்தம்... தவறாமல் ரசிப்பதுண்டு...
என்னமா அசத்துறாங்க குழந்தைகள்...!
விடுமுறை நாள்ங்குறதால எனக்கு அந்த நேரத்துலதான் எதாவது தடங்கல் வரும்.
Deleteகேபிள் கலாட்டா நல்லாயிருக்குங்க....
ReplyDeleteதக்காளியை வாயில போட்டுகிட்டு பதில் சொல்றது... தலையில் எதையாவது வைத்து அடிச்சு பதில் சொல்றதுன்னு பார்க்க லூசுத்தனமா தான் இருக்கு... தமிழ் தாத்தா யார்னு கேட்டா.... சாலமன் பாப்பையான்னு பதில் வந்தது.... இவங்களுக்கெல்லாம் ஏகப்பட்ட பரிசுகள் வேற....:((
சொல்வதெல்லாம் உண்மை - எப்பப் பாரு கள்ள உறவு, இரண்டு மனைவிகள் தகராறு இப்படியே தான்.. ஒன்று, இரண்டு நாள் சந்தர்ப்ப வசத்தால் பார்க்க நேரிட்டது....:((
திரை விமர்சனம் - முன்னாடி பார்த்துட்டு இருந்தேன்...
குட்டீஸ் சுட்டீஸ் - சில குழந்தைகள் பயங்கரமான வாய்....அப்பா அம்மாவையே மிரட்டுதுங்க....
விளம்பரம் நல்லா இருக்கு... ஸ்ரீதேவிக்கு பதிலா வேற யாராவது போட்டிருக்கலாம்...:)
என் ரசனையோடு உங்க ரசனையும் ஒத்துப் போகுதுங்க ஆதி!
Deleteகுட்டீஸ் சுட்டீஸ் அருமையா இருந்தாலும் குழந்தைகளை சில விஷயங்கள் பேச விட்டு வேடிக்கை பார்ப்பது ஒரு மாதிரியாக உள்ளது...
ReplyDeleteநிஜம்தானுங்க எழில்! அப்பா குடிச்சுட்டு வந்தார், அம்மா அப்பாவை அடிச்சாங்க. அம்மா அத்தையை பத்தி பக்கத்து வீட்டுல பேசினாங்கன்னு பசங்க சொல்லும்போது பெத்தவங்க நெளியுறது நமக்கு சங்கடமா இருக்கு. குடும்ப பிரச்சனைகளைத் தவிர்த்து மத்த கேள்விகளைக் கேக்கலாமே!!
Deleteகுட்டிஸ் சுட்டிஸ் ஒருமுறை டிரையல் பார்த்து ஒரு சிலவற்றை சுவாரசியத்துக்காக பேசச் சொல்வது போல் இருக்கிறது !
ReplyDeleteஅப்படின்னா சொல்றீங்க!? சிலது எடிட்ன்னு மட்டும் தெரியுது!
Deleteசொல்வதெல்லாம் உண்மை மிக மோசமான நிகழ்ச்சி! குட்டி சுட்டீஸ் பரவாயில்லை! ஆனால் சில குழந்தைகள் பேசும் போது செட்டப் செய்வார்களோ என்று தோன்றும். நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் நிகழ்ச்சியில் வாயில கொழுக்கட்டை தவிர மற்றவை இண்ட்ரஸ்டிங்கா இருக்கும். என் பொண்ணு ஜனனி போகோ பார்க்காத கேப்பில் அப்பப்போ இதை பார்ப்பேன்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஅப்ப ரிமோட் உங்க பாப்பா கையிலயா!? ரைட்டு
Deleteஎங்க வீட்டிலும் இதே கதை தான்.
Deleteநாங்கள் "video streaming" என்ற முறையில இன்டெர்நெட் டிவி வைத்திருக்கிறோம்(விஜய்,ஜெயா,ராஜ், சன் டிவி வராது ) போன்ற சேனல்களைப் பார்க்க முடியும். ஆனா விடுமுறை நாட்களில், எப்பபப் பார்த்தாலும் "ABC channel" என்ற குழந்தைகள் channel தான் டிவியை ஆன் பண்ணினாலேயே வரும்.
Deleteஎங்க வீட்டிலும் "video streaming" என்ற முறையில இன்டெர்நெட் டிவி வைத்திருக்கிறோம் அதில் நம்ம தமிழ் டிவி அனைத்தும் வருகின்றது அதில் அமெரிக்காவில் மட்டும் வரும் சேனல்களில் புதுப்படங்களும் ஒரு சில வாரங்களில் வந்துவிடும் வீட்டில் பார்ப்பது விஜய் அவர்கள் பார்க்காத சமயங்களில் புதியதலைமுறை செய்திகளை நான் கேட்பதுண்டு பார்ப்பதில்லை எந்து பொழுது போக்கு எல்லாமே லேப்டாப்தான் அதுதான் என் முதல் மனைவி
வணக்கம்
ReplyDeleteஇந்திய தொலைக்காட்சிகளில் நடக்கும் நேர் மறை இரண்டையும் அழகாக சொல்லியுள்ளிர்கள் நானும் பார்த்தேன்.... அதிலும் இமான் அண்ணாச்சி நடத்தும் குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சி மிக அற்புதம்.... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------
என்னுடைய வலைப்பக்கம் கவிதையாக .-கடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் அத்தனை பார்ப்பதில்லை...என்றாலும்...தொலைக்காட்சி நிகழ்சிகள் பெர்ம்பான்மையானவை செட் அப்புதாங்க! ஒரு சில நிகழ்சிகள் தவிர மற்றது எதுவ்ம் நேரடி கிடையாது! நிறைய ரிஹர்ஸ் செய்துதான்....அதுவும் சுட்டீஸ், சொல்வதெல்லாம் உண்மை எல்லாம் கொஞ்சம் செட்டப் தான்......சில அனுபவங்கள் உண்டு!
ReplyDeleteஆனால் உங்கள் விமர்சன நடை நன்றாக உள்ளது!!
த.ம.
Vimarsanam arumaiyaga ulladhu. T M
ReplyDeleteடீவி சேனல்கள் ஒரு பார்வை! எல்லாவற்றிற்கும் உங்களுக்கு நேரம் இருப்பது ஆச்சரியமான விஷயம்தான்!
ReplyDeleteஇந்த அழகு சுந்தரி நடத்தும் "சொல்வதெல்லாம் உண்மையில்" ஏன் மேல் ஜாதிப பெண்கள், குடும்பங்கள் அசிங்கங்கள் வெளி வருவதில்லை?
ReplyDeleteஇல்லை மேல் ஜாதிக் குடும்பங்களில் பிரச்சனையே இல்லையா-?? .ஏன் மேல் ஜாதி குடும்பங்கள் இங்கு வருவதில்லை? அப்படி மேல் ஜாதி குடும்பங்கள் இங்கு கூலிக்கு மாரடிக்க வந்தாலும்,இந்த அழகு சுந்தரி தேர்வு மாட்ட்ரகள்.-"என்பதே உண்மை."
சொல்வதெல்லாம் உண்மையா?
ReplyDelete"சொல்வதெல்லாம் அசிங்கம்" சரியான பெயர்!
எனக்கு டிவி பார்ப்பதே பிடிப்பதில்லை இப்படியான நிகழ்சிகளை பார்த்து, அதில் குட்டீஸ் சுட்டீஸ் ஓகே அண்ணாச்சியின் கிண்டலும் சூப்பராக இருக்கும்.
ReplyDeleteசில நேரங்களில் யூ ட்யூபில் "குட்டீஸ் சுட்டிஸ்" பார்பதுண்டு. எங்கள் வீட்டு குட்டிஸ்களும் அந்த நிகழ்ச்சியை விரும்பிப் பார்பார்கள்.
ReplyDeleteஉங்கள் தளம் - இந்தப் பதிவு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
இணைப்பு : http://blogintamil.blogspot.in/2014/02/blog-post.html
ஓகே....
ReplyDeleteநமக்கும் இந்த டி.வி.க்கும் ரொம்ப தூரம்.