Thursday, February 20, 2014

ஐஸ் குச்சி போட்டோ ஃப்ரேம் - கிராஃப்ட்

வீட்டுல சும்மா இருக்க போரடிக்குது. சரின்னு டெய்லரிங் கிளாஸ் போய் வரவான்னு கேட்டேன். அப்பாடா! ரெண்டு மணிநேரம் உன் இம்சைல இருந்து தப்பிச்சிப்போம்ன்னு போய் வா தா(நா)யின்னு வூட்டுக்காரர் சொல்லவே பத்து நாளா டெய்லரிங் கிளாஸ் போய் வரேன்.அதுமில்லாம போன வாரம்லாம் கோவிலுக்குப் போறதுன்னு செம பிசி. 

ஆனாலும், நம் கடமையை மீறலாமா!? கிராஃப்ட் பதிவு போட கைவசம் படங்கள் ஏதுமில்ல. அதனால, டேய் அப்பு, எனக்கு ஒரு கிராஃப்ட் செஞ்சுத் தாடி செல்லம்ன்னு கேட்டேன். போம்மா, எனக்கு பரிட்சைக்குப் படிக்கனும்ன்னு சொன்னான். டேய் பரிட்சையாடா முக்கியம்!? அம்மாக்கு பதிவுதான் செல்லம் முக்கியம்ன்னு சொல்லி அவனை தாஜா பண்ணி செய்முறையைச் சொல்லி ஃபோட்டோ ஃப்ரேம் செய்யச் சொன்னேன். செஞ்சும் கொடுத்துட்டான்.

ஆனாலும், என் வளர்ப்பு சரியில்லப் போல!! என் பேரைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிடுவான் போல!! செய்முறையை சரியாவே படமெடுக்கல!!

தேவையானப் பொருட்கள்:

ஐஸ்குச்சி
வெள்ளைப்பசை
எதாவது படம்(என் போட்டோவை ஒட்டுடான்னு சொன்னேன். போம்மா எல்லோரையும் பயமுறுத்தாதேன்னு சொல்லிட்டான்.)

எல்லாத்தையும் எடுத்து வச்சுக்கோங்க.

ஐஸ்குச்சியின் ஓரங்களில் பசையைத் தடவி முதல் குச்சியின் பக்கத்தில் முக்கால் பாகத்தில் வருமாறு ஒட்ட ஆரம்பிங்க.


மேல இருக்கும் படத்தில் இருக்கும் மாதிரி ஒட்டிக்கோங்க. மொத்தம் 9 குச்சிகள். நடு குச்சிக்கு இந்த பக்கம் நாலு குச்சி, அந்தப்பக்கம் நாலு குச்சி ஒட்டனும்.

குச்சிகளின் மேல் படத்தை ஒட்டனும். படத்தின் மேல் சதுர வடிவில் ஐஸ் குச்சிகளை ஒட்டனும். அது படம் கீழ விழாம இருக்க. கற்கள், செயற்கைப் பூக்கள் கொண்டு போட்டோ ஃப்ரேமை அலங்கரிக்கலாம்.

ஏண்டா கற்கள், பூ எல்லாம் ஒட்டலைன்னு கேட்டதுக்கு அடிக்க வரான். என்னன்னு கேளுங்க சகோஸ்!

15 comments:

  1. கடை எப்போ ஆரம்பிக்கலாம்...?

    ReplyDelete
    Replies
    1. விரைவில்....., கடையோட அமைப்புலாம் செலவில்லாம நீங்கதான் செஞ்சுத் தரனும்.

      Delete
  2. நல்லா இருக்கு.. ஆனா அப்பு பாவம்.. செஞ்சு தந்ததே பெரிசு. இதுல ஸ்டோன் வேற ஒட்டலையான்னு கேட்கறீங்க...:))

    ரோஷ்ணிக்கு இந்த பதிவை மாலை வந்ததும் காண்பிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா பாப்பாவை செய்ய சொல்லுங்க.

      Delete
  3. கடை எல்லாம் கட்டினா செலவு பதிவு நோக்கமே குறைந்த செலவில் அதிக லாபம் அதுனால அடுத்த திருவண்ணாமலை கிரிவலத்தில போட்டோ பரேம் 10 ரூபாய்க்கு 2 ன்னு சேல் பண்ணிடலாம்

    ReplyDelete
    Replies
    1. டீலர் ஷிப் நீங்க எடுத்துக்குறீங்களா!?

      Delete
  4. செய்து குடுத்ததும் போதாமல் வளப்புச் சரியில்லை என்று நினைத்த
    அம்மாவுக்கு இனி எந்த உதவியும் செய்யக் கூடாது என்று
    அம்பாளடியாள் அம்மா சொல்லீற்றாங்க .வாழ்த்துக்கள் செல்லம்
    பிஞ்சுக் கையால் செய்த போட்டோ ப்ரேம் மிக மிக அழகாய் அமைந்துள்ளது .

    ReplyDelete
    Replies
    1. நல்ல பெரியம்மா! அப்படிதான் அவன்கிட்ட எதும் சொல்லீடாதீங்கக்கா! அப்புறம் அவன் ஒரு வேலையும் செய்ய மாட்டான்.

      Delete
  5. இவ்வளவு அழகா செஞ்சு குடுத்துருக்கான்..அவனப் போய் குறை சொல்லுறீங்களே....
    அவனுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

    ReplyDelete
  6. அழகா இருக்கு! சூப்பரா செஞ்சிருக்கான் குட்டிப்பையன்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  7. மிகவும் அழகு... பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள் - சொல்லிடுங்க சகோதரி...

    ReplyDelete
  8. கடைக்கு வெளிநாட்டு முகவர் பேர் என்னிடம் தாருங்கள் ஐஸ் போல உருகுவேன்!ஹீ

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  10. அப்புக்கு வாழ்த்துக்கள்... அழகா செஞ்சிருக்காரே...

    எங்க பாப்பா கூட் ஐதில் பூச்சாடியெல்லாம் செய்து வைத்திருக்கிறார்... ஸ்கைப்பில் பேசும்போது காட்டினார்.

    ReplyDelete
  11. அழகா இருக்கு....

    வாழ்த்துகள்.

    ReplyDelete