Thursday, February 13, 2014

அன்பர்கள் தின வாழ்த்து அட்டை - கிராஃப்ட்

முன்னலாம் எங்க வீட்டுல யாருக்குப் பிறந்த நாள், கல்யாண நாள் வந்தாலும் சரி,  பொங்கல், தீபாவளின்னு பண்டிகை வந்தாலும் சரி, பசங்க கடைல இருந்து வாழ்த்து அட்டையும், பரிசும் வாங்கி வந்து தருவாங்க. கைச்செலவுக்கு கொடுக்கும் காசுல சேத்து வச்சிருந்து இதுப்போன்றப் பரிசுப் பொருட்களை வாங்கித் தருவதை வழக்கமாவே வச்சிருக்காங்க.

நான் செய்யும் கிராஃப்ட் அயிட்டத்தைப் பார்த்து, என்னோடு உக்காந்து அவங்களே செஞ்சுப் பரிசாய் கொடுக்குறதை இப்ப ஆரம்பிச்சு இருக்காங்க. பைசா மிச்சம் பிடிக்குறது ஒரு பக்கமிருந்தாலும், தன் கையால செஞ்சுக் அப்பா, அம்மாவுக்கோ இல்ல கூடப்பிறந்தவங்களுக்கோ இல்ல ஃப்ரெண்ட்ஸ்களுக்கோ கொடுக்கும் போது அவங்களுக்கும் ஒரு திருப்தி என் பொண்ணு செஞ்சது, என் ஃப்ரெண்ட்ஸ் செஞ்சதுன்னு பெருமையடிக்குறதுல நமக்கும் ஒரு திருப்தி.

பசங்க யூஸ் பண்ணி மீந்துப் போன சாட் பேப்பர் கொண்டு அழகான வாழ்த்து அட்டைகள் செய்யுறதுக்கு சொல்லித் தந்திருக்கேன். நாளைக்கு அன்பர்கள் தினம் வருதே!! அதுக்காக, மாங்கு, மாங்குன்னு உக்காந்து வாழ்த்து அட்டைகள் செய்யுதுங்க சின்னது ரெண்டும்...,

தேவையான பொருட்கள்:
பிடித்தமான கலர்ல சாட் பேப்பர்கள்
ஃபெவிக்கால்
கத்திரிக்கோல்
குந்தன் கற்கள்
உல்லன் நூல்
தேவையானப் பொருட்களலாம் எடுத்து வச்சுக்கோங்க.

சின்ன பொண்ணு இனியா பத்தாவது படிக்குறா.டியூஷன், ஸ்கூல்ல ஸ்பெஷல் கிளாஸ்ன்னு இருக்குறதால, ரொம்ப மெனக்கெடாம செவ்வகமான சாட் பேப்பர்ல ஹார்ட் ஷேப்ல க்ளூ தடவி கல கலரான உல்லன் நூலை ஒட்டிக்கிட்டா.


நடுவுல ஒரு பேப்பர் பூ செஞ்சு ஒட்டிட்டா. பக்கத்துல க்ளூ தடவிஉல்லனை ஒட்டி சிம்ப்ளா ஒரு பூ போல செஞ்சு ஒரு வாழ்த்து அடையை ரெடிப் பண்ணிட்டா.
தன் அக்காவுக்கு கொடுக்க சின்னவ இனியா வாழ்த்து அட்டையை ரெடி பண்ணிட்டா.


அப்பு, செவ்வகம் வடிவில் சாட் பேப்பரை மடிச்சு, மடிப்புல இருந்து உள் பக்கம் பார்த்த மாதிரி பத்து கோடு போட்டுக்கிட்டான்.

கோடு போட்டது வரை கத்திரிக்கோலால் கட் பண்ணிட்டான்.

உள்பக்கத்தில் வெட்டியதில் ஒண்னு விட்டு ஒண்ணு வெளியெலடுத்து மேல் படத்தில் இருக்குற மாதிரி மடிச்சு விட்டுட்டான்.


மடிச்சதுல, ஓரத்துல ஆப்பிளும்,  இதய வடிவத்துல சாட் பேப்பரை ஒட்டிட்டான்.


வெட்டிய சாட் பேப்பர் மேல வேற கலர் பேப்பர் ஒட்டி, குந்தன் கல்லால ஒரு டிசைன் வரைஞ்சு அப்பா, அம்மாக்கு கொடுக்க வாழ்த்து அட்டையை தயார் பண்ணிட்டான்.  

இதை கொடுக்கும் பிள்ளைகளுக்கும், வாங்கும் எங்களுக்கும் எவ்வளவு மகிழ்ச்சியை தரும்ன்னு உங்களுக்கு சொல்லவும் வேணுமா!?

அடுத்த வாரம் வேற ஒரு கிராஃப்ட் அயிட்டத்தோடு சந்திக்கலாம்.

நன்றி! வணக்கம்!

8 comments:

  1. குழந்தைகள் எது செய்தாலும் அழகு தான் சகோதரி... இது போல் பெற்றோர்களுக்கு செய்து கொடுத்தால் அந்த சந்தோசமே தனி... குழந்தைகளுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஃபெவிகால் காய்வதற்குள் படம் எடுத்தது சரியா...? - இனியா கேட்கிறாங்க...!

    ReplyDelete
  3. வணக்கம்
    தங்களின் வழிகாட்டலில் பிள்ளைகள் செய்த வாழ்த்து மடல் மிக அழகு.....
    செய்த பிள்ளைகளுக்கு எனது வாழ்த்துக்கள்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. அழகாப் பண்ணிட்டாங்களே!! அவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள் ராஜி!

    ReplyDelete
  5. குட்டிப்பசங்கள் கலக்கிவிட்டார்கள்! வாழ்த்துக்கள் சகோதரி! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. ஒ! கலக்கிட்டாங்க சகோ குட்டீஸ்!
    புலிக்கு பிறந்தது பூனையாகுமா ?!
    உங்களுக்கும் என் அன்பர்தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. அய்..."அன்பர்கள் தினம்" இது புதுசா இருக்கே !

    ReplyDelete
  8. அன்பர்கள் தின வாழ்த்து அட்டைகள்.... அனைத்தும் நன்றாக இருக்கின்றது.... வாழ்த்துகள்.

    ReplyDelete