Thursday, February 06, 2014

மில்க்மெய்ட் டின் பென் ஸ்டாண்ட் - கிராஃப்ட்

முன்னலாம் கதம்பம் பூச்சரத்துல மல்லி, கனகாம்பரம்,மரிக்கொழுந்து வச்சுக் கட்டி விப்பாங்க. பார்க்க நல்லாவும் இருக்கும். வாசமாவும் இருக்கும். இப்ப மரிக்கொழுந்து கிடைக்க மாட்டேங்குது.கனகாம்பரத்துக்கும் ஏகப்பட்ட டிமாண்ட் போல!? அதனால, கனகாம்பரத்துக்கு பதில் சாட்டின் ரோஸ் இல்லாட்டிஉல்லன் நூலும், மரிக்கொழுந்துக்குப் பதில் வேற இலையை வச்சுக் கட்டி வித்துடுறங்க. பார்க்க ஓரளவுக்கு நல்லா இருந்தாலும் வாசமில்ல.

அப்படி வாங்கி வந்து தலைக்கோ இல்ல சாமிப் படத்துக்கோப் போட்டு  காஞ்சுப்போனப் பூவிலிருந்து உல்லன் நூலையும், சாட்டின் ரோஸையும் எடுத்து வச்சு பாப்பாக்கு ஹேர் பேண்ட், டேபிள் மேட்ன்னு செய்வேன்.

அதே மாதிரி பாயாசம், ஸ்வீட் செய்ய வாங்கி வந்த மில்க் மெய்ட் டின் இருந்தா குப்பையிலயோ இல்ல பழைய இரும்பு சாமான் வாங்குறவங்ககிட்டப் போட்டுடுவேன். 

என் பையனுக்கு காஃபி குடுக்கும் கப் வாங்கி வந்தேன். அதைப் பார்த்ததும், மில்க் மெய்டு டின்னையும், உல்லன் நூலையும் சேர்த்து ஒரு பென் ஸ்டாண்ட் செஞ்சா என்னன்னு யோசனை வந்துச்சு!  உல்லன் நூல் கைவசம் இல்ல. அதனால என்ன!? ஆனா, இப்ப கடைல வாங்கிக்கிட்டு, இனி சேர்த்து வச்சு இதுப்போல செய்யலாம்ன்னு, உல்லன் நூல் வாங்கி வந்து உடனே செஞ்சுட்டேன்.

தேவையானப் பொருட்கள்: 

கலர் கலரான உல்லன் நூல் 
மில்க் மெய்ட் டின்
ஃபெவிக்கால்
குந்தன் கற்கள்
மில்க் மெய்ட் டின் இல்லாட்டி கூல் டிரிங்க்ஸ் பாட்டில் இல்லாட்டி பழைய வாட்டர் பாட்டில்லயும் செய்யலாம். பாட்டிலைத் தேவையான உயரம் வெட்டி எடுத்தும் இதைச் செய்யலாம். 

முதல்ல மில்க் மெய்ட் டின்ல ஃபெவிக்கால் தடவி, அதுமேல உல்லன் நூலை நெருக்கமா சுத்திட்டு வர ஆரம்பிங்க. 

ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை வரிசைல உல்லன் நூலை சுத்து முடிஞ்சதும் வேற கலர் உல்லன் நூலை சுத்துங்க. 


சுத்தி முடிச்சதும் இப்படி ரெடி ஆகிடும்.

உங்களுக்கு பிடிச்ச மாதிரி குந்தன் கல் இல்லாட்டி க்ளிட்டர் வச்சு அலங்காரம் பண்ணிடுங்க. அழகான, கலர்ஃபுல்லான பென் ஸ்டாண்ட் ரெடி!

அடுத்த வாரம் காதலர் தினம் வருது. அதுக்கு எதாவது கிராஃப்ட் செஞ்சு வூட்டுக்காரரை அசத்தனுமில்ல! யோசிக்கனும்...,

டாட்டா, பை பை, சீ யூ....,

15 comments:

  1. அடடா... உங்களின் கற்பனைத் திறனுக்கு வாழ்த்துக்கள் சகோதரி...

    மிகவும் அழகாக உள்ளது...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணா!

      Delete
  2. அக்கா பென் ஸ்டேண்ட் அழகு... நானும் செஞ்சுடுறேன்...

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரம் செஞ்சுப் பதிவா போடுங்க ப்ரியா!

      Delete
  3. அடடா என்ன அழகா செய்திருக்கிங்க.. எது செய்தாலும் ஒரு பார்சல் அனுப்புங்க..

    ReplyDelete
  4. Pen Stand சூப்பரா இருக்குங்க. அடுத்த தடவை ப்ளாகர் மீட்ஸுக்கு வர்றப்போ எல்லாருக்கும் இப்படியொரு ஸ்டான்ட கிஃப்ட்டா குடுங்க :))

    ReplyDelete
  5. நல்லதொரு ஐடியா. அழகாகவும் செய்வதற்கு எளிமையாகவும் உள்ளது. பாராட்டுகள் ராஜி.

    ReplyDelete
  6. வீணாகும் பொருளையும் பயனுள்ளவையாக மாற்றும் உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  7. அழகா இருக்கு ராஜி. என் கிளாஸ் பசங்களுக்கும் ப்ரீ டைம்ல நான் இதுபோல சொல்லிக்கொடுக்கிறது உண்டு. அதை பதிவா கூட போட்டிருக்கேன். டைம் கிடைச்சா பாருங்க. உங்களுக்கு யூஸ் ஆகலாம். http://makizhnirai.blogspot.in/2013/12/students.html. வாலண்டைன்ஸ் டே கலை பொருளுக்காக வெய்டிங்.

    ReplyDelete
  8. மிக அழகாக இருக்கிறது ராஜி..

    ReplyDelete
  9. அழகான பென் ஸ்டாண்ட்.....

    த.ம. +1

    ReplyDelete