Monday, February 03, 2014

தேசியக்கொடியில் பூ வைத்துக் கட்டுவது எதற்கு!? - ஐஞ்சுவை அவியல்


ஏய் புள்ள! எழவுவீட்டுக்கு போய் வந்தேன். கை, கால் அலம்ப கொஞ்சம் தண்ணி கொண்டு வா!

யாரு மாமா செத்துட்டது!?

நம்ம மேலத்தெரு கோவாலுதான். சின்ன வயசுதான். குடிச்சு குடிச்சே செத்தான். அவன் பொண்டாட்டியையும், ஒண்ணும் தெரியாம நிக்கும் பச்சை மண்ணுங்க மாதிரி இருக்கும் ரெண்டு பொட்டைப் புள்ளைகளைப் பார்க்கும்போது நமக்கு பதறுது! எப்படிதான் அதுகளைப் படிக்க வச்சு கரையேத்தப் போறாளோ! கோவாலு பொண்டாட்டியை நினைச்சாதான் நெஞ்சு குழி அடைக்குது!!

நாம கலங்கி என்ன புண்ணியம்!? நம்மால என்னாகும்!? ஏதோ சில நாள் சாப்பிட கொடுக்கலாம். எப்பவாவது அஞ்சோ பத்தோ கொடுத்து உதவி பண்ணலாம். அவ்வளவுதான் முடியும்!. கோவாலு சாவுக்குதான் அம்ம்மாம் பெரிய மாலைலாம் கொண்டுட்டுப் போனாங்களா!?

ஆமா புள்ள! என்னமோ அவன் பெரிய தியாகி மாதிரி எம்புட்டு மாலைங்க!?   ஒண்ணொன்னும் எப்படியும் ஆயிரம் ரூபாய்க்கு மேலதான் இருக்கும். அதுலாம் ஒரு ரெண்டு நிமிசம் கூட அவன் பொணத்து மேல இல்ல. அதுக்குப் போயி இம்புட்டு ஆடம்பரம். 

அதைவிட, எல்லோரும் சேர்ந்து,  ஒரு மாலையை அவன் பொணத்துக்குப் போட்டுட்டு மிச்ச காசுல சடங்குக்கு போனதுப் போக மிச்ச காசை வச்சு எதாவது வருமானம் வரும்படி அந்தப் பொண்ணுக்கு செஞ்சிருக்கலாம். இல்ல பசங்க படிப்புக்காக எதாவது ஏற்பாடு பண்ணி இருக்கலாம். அதைவிட்டு காசைலாம் வேஸ்ட் பண்றாங்க. இதைச் சொன்னா நம்ம மேல பாய்வானுங்க.

நிஜம்தானுங்க மாமா! தேவை இல்லாத சம்பிரதாயங்களை தள்ளிட்டு ஆக்கப்பூர்வமா சிந்திக்கலாமே!! 

கரெக்ட்தான் புள்ள! ஆனா, சில சம்பிராதாயங்கள் எதுக்கு செய்யுறாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டா நல்லது.
அப்படி என்ன சடங்கு மாமா! தேசியக்கொடி ஏத்தும்போது கொடிக்குள் பூவை வச்சு, மேலப் போனதும் கொட்டுற மாதிரி ஏற்பாடு பண்ணுறாங்களே அது எதுக்குன்னு தெரியுமா!?

அது சும்மா அழகுக்காகவும், சாமிக்குப் ப்ய்ய்ப் போடுற மாதிரிதான் கொடிக்கும் பூ போட்டு மரியாதைச் செய்யுறோம்.

மரியாதைக்காக இல்ல புள்ள. இந்த கொடி, நம் சுதந்திர இந்தியாவில் வானுயரப் பறக்குறதுக்காக எண்ணற்ற தாய்மார்களின் கூந்தலில் இருந்த மலர்கள் உதிர்ந்தன.  அவர்களின் தியாகத்திற்கு மதிப்பளித்து நம் இந்தியாவை கண்ணெனப் பாதுகாக்கனும்ன்றதை நமக்குலாம் நினைவுப் படுத்தத்தான் கொடிக்குள் பூக்கள் வைக்குறது.

அப்படியா மாமா!  கொடி பறக்க விடும்போதெல்லாம் இந்தச் செய்தி நினைவுக்கு வரும். கொஞ்சம் நெகிழ்ச்சியாவேப் பேசிட்டோம். மனசைக் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்க, என் செல்லுக்கு வந்த ஒரு ஜோக் சொல்லவா மாமா!!

சிரிக்குற மாதிரி இருந்தா சொல்லு புள்ள! 


நான் என் வொயிஃப்கிட்ட கோவிச்சுக்கிட்டு என் அம்மா வீட்டுக்குப் போயிட்டேன். என்னச் செய்யுறதுன்னு தெரியாம என் வொயிஃப் வேற வழியில்லாம அவளே தோசை ஊத்தி சாப்பிட்டா.


நிஜமாவா ?


”நிஜ”மாவில் சுடவில்லை அரிசி மாவில் தான் சுட்டிருக்கா .

ஜோக் சொல்றேன்னு கடிச்சுட்டியே புள்ள! 

ஒரு புதிர் கேக்குறேன் பதில் சொல்றியான்னு பார்க்குறேன்.

ஒரு கம்பத்தோடஉயரம் 13 அடி.
குட்டிப் பல்லி கம்பத்தின் மீது நிமிடத்திற்கு 3 அடி ஏறுது
அதேநேரம்2 அடி சறுக்குது.
அப்படின்னா, பல்லி உச்சிக்குப் போக எத்தனை நிமிடங்கள் ஆகும்!?


ம்ம்ம் சீக்கிரம் சொல்லு. எனக்கு வயக்காட்டுக்கு போக லேட்டாகுது..
இரு மாமா! உன் வாயைக் கட்ட ஒரு வழி இருக்கு. மாமா! என் ஃப்ரெண்ட் ராஜி வீட்டுக்கு முன்ன ஒரு தரம் போயிருந்தேன். அப்ப, ராஜியோட சின்னப் பொண்ணு இனியாக்கு 4 வயசு. அந்த நேரத்துல, ராஜியோட வீட்டுல இருக்குறவங்களுக்கு ஒருத்தர் மாத்தி ஒருத்தருக்கு உடம்புக்கு முடியாமப் போச்சு! அதைப் பத்திப் பேசிக்கிட்டு இருக்கும்போது சாமிக்கிட்ட என் பாரத்தைக் கொடுத்திட்டு, ஹாஸ்பிட்டலுக்கும், வீட்டுக்குமா அலைஞ்சுக்கிட்டு இருக்கேன்னு சொன்னா.

உடனே, பக்கத்துல இருந்த இனியா, சாமி என்ன ”லோட் மேனா”!? அவர்கிட்ட  பாரத்தைக் கொடுத்திட்டு நீ ஹாயா ஹாஸ்பிட்டல் போய் வர்றதுக்குன்னு கேட்டா. அதுக்கப்புறம் ராஜி ஏன் அங்கிருக்கா!? காஃபி கொண்டாரேன்னு எஸ்கேப் ஆகிட்டா.

ஹா! ஹா! உன் ராஜி வாயை அடக்க கடவுள் அனுப்பிய ஆயுதம்தான் அவ மூணு பசங்க. அவங்களைத் தவிர வேற யாருக்கும் அவ அடங்க மாட்டா!

ஸ்ஸ்ஸ் அபா! எப்படியோ கணக்கு புதிரை மாமா மறந்துட்டார். மீ எஸ்கேப்....,

32 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அக்கா

    11 நிமிடங்கள் ஆகும்.

    ReplyDelete
    Replies
    1. விடை சரிதான் சுபா!

      Delete
  3. குடி குடியை கெடுக்கும் என சொன்னால் யாரும் கேட்பது இல்லை. அரசு விக்குது நாங்க வாங்குறோம்.இதான் பதில் வருது.தானக திருந்தினால்தான் உண்டு.
    கொடி யில் பூ வைப்பது ஏன் என்பது இப்ப தான் தெரிஞ்சுகிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுபா!

      Delete
  4. ஓ..கோடியில் பூ வைப்பதற்கு இதுதான் காரணமா? பகிர்விற்கு நன்றி ராஜி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிரேஸ்

      Delete
  5. ஒ புதிய டச்சிங்காண தகவல்!
    அப்புறம் நாமளும் கணக்குல வீக்கு அந்த புதிருக்கு விடை என்ன ?

    ReplyDelete
    Replies
    1. அட நீங்களும் நம்ம கட்சியானு நினைச்சேன் அப்புறம் யோசிக்கும் போதுதான் தெரிந்தது நான் கணக்குல மட்டும் வீக்கு இல்லை எல்லா பாடத்திலேயும் வீக்குன்னு....

      Delete
    2. ஆனா, பூரிக்கட்டையால அடி வாங்கி, வாங்கி உடம்பு மட்டும் ஸ்ட்ராங்கா இருக்குல்ல சகோ!

      Delete
  6. குடி விழிப்பு..

    அவியல் சுவைத்தது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தோழி!

      Delete
  7. ரொம்பவும் நெகிழ்ச்சியாத் தான் இருக்கு... வாழ்த்துக்கள்...

    பல்லி உச்சிக்குப் போக 11 நிமிடங்கள்...

    ReplyDelete
    Replies
    1. விடை சரிதான் அண்ணா!

      Delete
  8. தேசியக் கொடியில் பூ கட்டுவதன் விளக்கம் புதிய தகவல்! பகிர்வுக்கு நன்றி!

    பல்லி டாப்புக்குப் போக 11 நிமிடங்கள்!

    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete
  9. நம்ம ஊர்ல ஏண்டா ஏன் தலையிலேயே பூ சுத்தறயா என்பாங்க. கொடிதான் பேசாதே. அந்த தைரியம்தான்.

    பிணத்துக்கு மாலை போடும் பழக்கம் யாருக்கும் உதவாது. பெரியார் தனக்கு மாலை போடுவது பற்றியே இதே கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

    சும்மா ரீல் விடாதீங்க. எல்லா ஆளுகளும் அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்த்து வச்சிருக்காங்க. அவரு கோச்சுக்கிட்டுப் போய் எங்க சாப்பிட்டாராம்.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. அம்மா வீட்டுலதான் சொன்னேன்! அம்மாக் கையாலன்னு சொன்னேனா!? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  10. ///நம் சுதந்திர இந்தியாவில் வானுயரப் பறக்குறதுக்காக எண்ணற்ற தாய்மார்களின் கூந்தலில் இருந்த மலர்கள் உதிர்ந்தன. அவர்களின் தியாகத்திற்கு மதிப்பளித்து ////

    தாய்மார்களின் கூந்தலில் இருந்த மலர்கள் உதிர்ந்தற்கு மதிப்பாம் தந்தைமார்களின் உடலில் இருந்து உயிர் உதிந்ததற்க்கு மதிப்பு இல்லையாம் என்ன நாடுப்பா இது ஹும்ம்ம் ஆண்களின் உயிருக்கு மதிப்பு இல்லாம போச்சே

    ReplyDelete
    Replies
    1. சரியாத்தான் கேட்டிருக்கீங்க. ஆண்கள் உயிரைக்கொடுத்து சுதந்திரம் வாங்கிக்கொடுத்தாலும், "தாய் நாடு" என்று தான் சொல்லுகிறோமே தவிர "தந்தை நாடு" என்று சொல்லுவதில்லை.

      Delete
    2. ஆண்கள் போராட்டத்தில் கலந்துக் கொள்வதற்கான மனோதிடத்தை தருவது பெண்கள்தானே! பெண்கள் பொறுப்பாய் குடும்பத்தை கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்தானே ஆண்கள் தைரியமாய் வீதிக்கு வர முடிஞ்சது. ஒருவேளை ஆண்கள் இறந்திட்டால் அவர் ஸ்தானத்தில் நின்று அப்பா, அம்மா, சகோதரர்கள், பிள்ளைகளைக் காப்பாற்றியது பெண்கள்தானே! செத்தவனுக்கு ஒரு கவலையுமில்ல. ஆனா, உயிரோடு இருப்பவர்கள் பாடு!? விதவைன்ற அவமதிப்புன்னு எத்தனை விசயமிருக்கு. இப்படி சட்டுன்னு சொல்லிட்டீங்களே!

      Delete
  11. ///என் செல்லுக்கு வந்த ஒரு ஜோக் சொல்லவா மாமா!!//

    எந்த ஜெயிலில் எந்த செல்லில் இருந்தீங்க.....சொல்லவே இல்லையே..ஹீ.ஹீ நாங்களும் கடிப்போம்ல

    ReplyDelete
    Replies
    1. உங்க செல்லுக்கு எதிர் செல்லுல தான் சகோ!

      Delete
  12. எழவு வீட்டுக்கு போய் வந்தால் கை கால் கழுவுறதா ?

    எங்க ஊர்ல குளிக்காம வீட்டுக்குள்ளே வர விடமாட்டாங்க, எல்லா உடு துணியும் தண்ணிக்குள் முக்காது வீட்டுக்குள் அனுமதி இல்லை, ஏன்னு எனக்கு இன்னும் புரியவில்லை, எங்கம்மாகிட்டே கேட்டும் "அது அப்படித்தான்" என்று சொல்லுதே ஒழிய சரியாக பதிலில்லை...!

    ReplyDelete
    Replies
    1. எங்க ஊர் ஆம்பிளைகளும் ஆத்துல, குளத்துல, பம்ப் செட்டுல குளிச்சுட்டுதான் வாருவாங்க. அப்படி குளிச்சுட்டு வந்தாலும் வீட்டுக்குள் வரும்போது கைகால் கழுவிட்டுதான் வருவாங்கண்ணா!

      இறந்தவர் உடம்பிலிருந்து கெட்ட பாக்டீரியாக்கள் வெளியேறும். அப்படி வெளியேறும் பாக்டீரியாக்கள் துக்கம் விசாரிக்க போகும் நம் உடலில், துணியில் தொத்திக்கும். அதனால எந்த நோயும் வரக்கூடாதுங்குறதுக்குதான் எழவு வீட்டிலிருந்து வந்த உடன் குளிப்பதற்கான காரணம்

      Delete
  13. உங்களுடைய அனுபவத்தைத் தானே ஜோக்குன்னு சொல்லியிருக்கீங்க சகோ!!!!

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் மட்டும் கரெக்டா கண்டுப்பிடிச்சுடுவீங்களே!

      Delete
  14. தேசியக்கொடியில் பூ...நெகிழ்ச்சி !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா!

      Delete
  15. அவியல் நன்றாக இருந்தது ராஜி.. கொடியில் எதற்கு பூ வைக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். நன்றி!

    ReplyDelete
  16. கொடியில் பூ வைப்பது குறித்த தகவல் புதிது...
    ரொம்ப சரி உங்களை மிஞ்சுவது உங்கள் பிள்ளைகளால் தான் முடியும்... அப்பவே எப்படி யோசிச்சிருக்கு பாருங்க?

    ReplyDelete
  17. அருமையான அவியல்.....

    கொடியில் பூ - புதிய தகவல். தமிழ்நாட்டிற்கு ஏற்ற தகவல். வட இந்தியாவில் பெண்கள் பூச்சூடுவதில்லை!

    ReplyDelete