Saturday, February 22, 2014

குறை ஒன்றும் இல்லை - கேபிள் கலாட்டா

புதிய தலை முறையில் மதிய நேரத்துல மகளிரும், சமுதாயத்தில் மக்களாட்சியும்ன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. அதுல,நேத்தைய நிகழ்ச்சில திருநங்கைகள் கலந்துகிட்டாங்க. திருநங்கைகள் சந்திக்கும் பிரச்சனைகள், அவங்க ஆசைகள், எதிர்காலத்துல சமுதாயத்துல என்னென்ன மாற்றங்கஙள் வரனும்ன்ற அவங்க எதிர்பார்ப்புகள் பற்றி பேசுனாங்க.

நிகழ்ச்சில கலந்துக்கிட்ட வித்யான்றவங்க, சமுதாயத்துல எல்லோரும் எங்களை கேலிச் செஞ்சு ஒதுக்குறாங்க. இரக்க சுபாவத்துக்கு இலக்கணமான பெண்கள்கூட எங்களை ஒதுக்குறது எங்களுக்கு வேதனை தருதுன்னு சொன்னாங்க. அவங்க சொன்ன கருத்து சரிதான்ன்னு எனக்கு பட்டுடுச்சு. இன்னொரு திருநங்கை நான் தேர்தலில் நின்னு பதவிக்கு வந்தால் அனாதை ஆசிரமங்களில் இருக்கும் குழந்தைகளை திருநங்கைகளுக்கு தத்துக் கொடுத்துடுவேன். ரெண்டு பேருக்கும் புது வாழ்வு கிடைக்கும். அதுமட்டுமில்லாது, குடும்பத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்ட திருநங்கைகள் விருப்பப்பட்டா முதியோர் இல்லத்துல இருக்கும் ஆதரவற்ற பெரியவங்களையும் திருநங்கைகளோட அப்பா, அம்மாவா அனுப்புவேன். மூணு பேரும் சேர்ந்து அழகான ஒரு குடும்பம் உருவாகும்ன்னு சொன்னாங்க. அந்த பாயிண்டும் பிடிச்சது.

வர்றவங்களை வரவேற்று, டிக்கட் சரிப்பார்த்து, டீ கொடுக்குற வேலைதானே உன் பொண்ணு பார்க்குறதுன்னு சொந்தக்காரங்க சொல்றதைக் கேட்டு என் வீட்டுக்காரர் என்னைத் திட்டுவார் இதுப்போல ஒரு படிப்பைப் பொண்ணுக்குக் காட்டிட்டியேன்னு!! ஆனா, இந்த வேலைக்கு சேர என்ன்னென்ன பயிற்சி மேற்கொள்ளனும்!? வேலையில் வரும் சவால்கள்ன்னு நேஷனல் ஜியாகரஃபி சேனலில் போன வாரம் முழுக்க விமான நிலையத்தைப் பத்தி தினமும் ஒரு மணி நேரம் ஒலிப்பரப்பான் நிகழ்ச்சிப் பார்த்து தெரிஞ்சுக்கிட்டு இப்பலாம் என்னைத் திட்டுறதில்ல.
புடவை வாங்கித் தரலை, நகை வாங்கித் தரலைன்னு உப்பு பெறாத சின்ன விசயத்துக்குக் கூட நான்லாம் ஏன் பொறந்தேன்னு அழுது ஆர்பாட்டம் பண்ணுற ஆட்களைலாம்க்கூட பார்த்திருக்கேன். டிஸ்கவரி சேனலில் பிறப்பால குள்ளமாய் பிறந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து அவர்கள் வாழ்க்கையில் சந்திச்ச கஷ்டங்களை சொல்லும் போது நாம எல்லாம் எவ்வளவு புண்ணியம் செஞ்சிருக்கோம்ன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.
எல்லா டிவி சேனல்களிலும் பாட்டு மற்றும் ஆடல் திறமையை நிரூபிக்கும் போட்டிகள் நடக்குது. அதுல சின்ன குழந்தைங்க ஆபாச பாடல்களைப் பாடுறது கேட்டும், சினிமா பாடல்களுக்கு ஆபாச அசைவுகளை வெளிப்படுத்தி ஆடுவதைப் பார்த்து நம்ம எல்லோரும் மனசு நொந்திருக்கும். அதைக்கூட பரிசுக்காகவும், பிரபலத்துக்காகவும் செய்றங்கன்னு ஏத்துக்கலாம்.

ஆனா, நிகழ்ச்சியைப் பார்க்க வரும் பார்வையாளர்களும் சில சமயம் உணர்ச்சி வேகத்துல டான்ஸ் ஆடுவதைப் பார்த்திருக்கேன். குரல் திறமைக்கு போட்டி வைக்கும் ஒரு நிகழ்ச்சியில் தன் மகன் பாடிய நல்ல பாட்டுக்கு!? எப்படியும் நாற்பது உல்ல நாற்பத்தஞ்சி வயசுல ஒரு குடும்பத்தலைவி குத்தாட்டம் போட்டாங்க. பார்க்கவே கொடுமையா இருந்துச்சு! இதைப் பார்க்கும் அவங்க சுற்றத்தார் நமுட்டு சிரிப்புடன் அவங்களைப் பார்க்க மாட்டாங்களா!?

கேபிள் கலாட்டா தொடரும்....,

11 comments:

  1. கேபிள் கலாட்டா சிந்திக்கவும் ,சிரிக்கவும் வைக்கின்றது.

    ReplyDelete
  2. இப்படி நல்ல நல்ல நிகழ்ச்சிகளா பார்க்க ஒரு பொறுமை வேணும்.
    அப்புறம் இப்படி டான்ஸ் பண்ற பெண்களை பார்க்கையில் எனக்கும் இப்படி தோன்றுவதுண்டு. பதிவு அருமையான நடை அக்கா. கலக்குங்க !

    ReplyDelete
  3. ஒரு வேளை இந்த அம்மாமார் போட்டியின் இடை நடுவில் தங்கள்
    பிள்ளைகள் பாடும் போது குத்தாட்டம் போட்டே சினிமாவில
    சாண்ஸ வாங்கப் போறாங்களோ என்னமோ :)))) உலகம் மாறிப்
    போச்சு ராஜிம்மா :(

    ReplyDelete
  4. இந்த நிகழ்ச்சியே உங்கள் பதிவின் மூலம் தான் தெரியும்...

    ReplyDelete
    Replies
    1. yoove D D ;' kadal sandya-vukku- appan polaa ;IRRUDATTU- KAMALKASAN ---ran-gek-ku; FEEL ka-ttu-reaaa;

      Delete
  5. என்னாது டீ குடுக்குற வேலையா ? தங்கச்சி அவங்க பொறாமையில பொசுங்குறாங்க...

    அந்த வேலையில் இருக்கும் சவால்கள் இந்த கடல் தாண்டாதவர்களுக்கு தெரியாது என்பதே உண்மை !

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தான் கேவலமா நினைக்குறாங்கண்ணா!

      Delete
  6. கேபிள் கலாட்டா
    சிரிக்க
    சிந்திக்க
    அருமை சகோதரியாரே

    ReplyDelete
  7. 'yoove' D D 'kadhal sandya- kk - appan. pola, 'IRRUTHTEEAO KAMAL ----rangek-ku FEEL kkatterea

    ReplyDelete
  8. சிந்திக்க வைத்த கேபிள் கலாட்டா.....

    உங்களுக்கு எப்படிங்க இவ்வளவு நேரம் கிடைக்குது!

    ReplyDelete