திங்கள், பிப்ரவரி 10, 2014

ரத்ததானம் - ஐஞ்சுவை அவியல்

ஏனுங்க மாமா! எங்க போயிட்டு வர்றிங்க!? ஃபோன் போட்டேன். ரிங் போச்சுது! நீங்க எடுக்கவே இல்ல.


நம்ம மேலத் தெரு கண்ணுசாமிக்கு வயத்துல ஒரு ஆஃப்ரேஷன். அதுக்கு ரத்தம் தேவைப்பட்டுச்சு. என் ரத்தம் அவருக்கு சேர்ந்ததால ரெண்டு பாட்டில் ரத்தம் கொடுத்துட்டு வந்தேன். அதான் ஃபோனை எடுக்கலை.

ஐயோ! ஐயோ! யார் பேச்சைக் கேட்டு இப்படி ரத்தம் கொடுத்துட்டு வந்தீங்க!? ஒரு சொட்டு ரத்தம் உடம்புல சேர ஒரு பானை சோறு சாப்பிடனுமே!! அதான் களைப்பா தெரியிறீங்களா!? வாங்க வந்துப் படுங்க. ஜூஸ் கொடுக்கவா!? பால் கலக்கிக் கொண்டாரவா!? 

சே! வாயை மூடு. ஒப்பாரி வைக்காத.  அதெல்லாம் ஒண்ணுமில்ல. ரத்தம் கிணத்து தண்ணி மாதிரி உடலோட தேவைக்கேத்த மாதிரி சுரந்துக் கிட்டே இருக்கும். ஆரோக்கிய்மான ஆளுங்க மூணு மாசத்துக்கொரு முறை ரத்தம் கொடுக்கலாம். தண்ணி அடிச்சாலும், வியாதி இருந்தாலும்தான் ரத்தம் கொடுக்கக் கூடாது.  நாம கொடுக்குற ரத்தம் ஒரு உயிரை காப்பாத்துதுன்னு சந்தோசப்படுவியா!? அதைவிட்டு ஒப்பாரி வைக்குறே!
உனக்குலாம் புத்தி வரட்டும்ன்னுதான் நெல்லையில் தாலிக் கட்டி முடிச்சதும், மாலையும், கழுத்துமா ஒரு ஜோடி ரத்ததானம் செஞ்சிருக்கு. அவங்க ரத்ததானம் செஞ்சதைப் பார்த்து, கல்யாணத்துக்கு வந்திருந்தவங்க 50 பேர் ரத்த தானம் செஞ்சிருக்காங்க.  மாப்பிள்ளை சங்கரநாராயணன் 16வது முறையா ரத்த தானம் செய்யுறாராம். 

அப்படியா மாமா! ரத்தம் உடம்புல இருந்துப் போய்ட்டா டயர்டாகிடுவாங்க. அது மீண்டும் உடம்புல சேர எம்புட்டு சாப்பிடனும்ன்னு நினைச்சுதான் பயந்தேன். இனி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நாம ரத்த தானம் செய்யலாம். நானும் உங்களோடு வரேன். 

நல்லது புள்ள! இப்படிதான் நல்ல விசயத்துக்கு தோள் கொடுக்கனும். 

மாமா உனக்கு ஒரு விசயம் தெரியுமா!? கோடி வீட்டு கமலா பையன் நரேஷ், ப்ளஸ் டூ படிக்குறானே அவனைப் பாராட்டி அவன் படிக்குற ஸ்கூல்ல, லயன்ஸ் கிளப், கலெக்டர் ஆஃபீசுல ஷில்டுலாம் தந்திருக்காங்க.

என்ன விசயம் புள்ள. ஸ்குல்ல ஒகேனக்கல் டூர் போயிருக்காங்க. அங்க, ஒரு ஆத்துல குளிக்கும்ப்போது அவனோடு படிக்கும் 3பசங்க சுழல்ல சிக்கி இருக்காங்க. நீச்சல் தெரியாட்டியும், தன் உயிரையும் பார்க்காம அவங்களை காப்பாத்தி இருக்கான். இதுல நரேஷ் நிறைய தண்ணி குடிச்சும், மணல் அவன் நுரையீரல்ல போய் சேர்ந்து உயிருக்கு ஆபத்தா இருந்து இப்ப பொழைச்சு வந்திருக்கான். அதான் பாராட்டுலாம்.

இந்த வயசுல தன் உயிரை பெருசா நினைக்காத நல்ல மனசுக்காக நல்லா படிச்சு நல்ல வேலையில் உக்காந்து குடும்பத்தையும், மத்தவங்களையும் அவன் நல்லாப் பாத்துக்கனும். இதுலாம் புள்ளைங்க. உன் ஃப்ரெண்ட் ராஜியோட பசங்களும் இருக்காங்களே!  புள்ளைங்களா!அதுங்க? அது சரி,  அம்மாக்கு ஏத்த புள்ளைங்க. எதுக்கெடுத்தாலும் அவ ஜோக்கடிக்குற மாதிரியே அவ பசங்களும் ஜோக்கடிக்குதுங்க.

என்னாச்சு!? இப்ப எதுக்கு என் ஃப்ரெண்டைப் பத்தி பேசுறீங்க!?

ராஜியோட பையன் அப்பு ஸ்கூலுக்கும்போது,  அப்பு! டிஃபன் பாக்சுல நிறைய புளி சாதம் வச்சிருக்கேன். பசங்களோடு ஷேர் பண்ணி சாப்பிடு. பசங்களுக்குக் கொடுத்துட்டு நீ பட்டினியா வராதேன்னு சொன்னா. அதுக்கு அப்பு, சரிம்மா, இன்னிக்கு புலி சாதம், நாளைக்கு சிங்கம் சாதம், நாளன்னிக்கு கரடி சாதம் செஞ்சு தா! அதையும் மிச்சம் வைக்காம சாப்பிட்டுடுறேன்ன்னு சொல்லிட்டு எஸ்ஸாகிட்டான்.

போதும் என் ஃப்ரெண்டை கிண்டலிடிச்சது. அப்பு கிண்டலடிச்சதைப் பத்தி சொல்றீங்களே! இனியா ஒரு விடுகதை கேட்டா அதுக்கு பதில் சொல்லுங்க. பார்க்கலாம்.

என்ன விடுகதை சொல்லு பார்க்கலாம்!!

கொடுக்க முடியும். எடுக்க முடியாது!!அது என்ன!!??

சின்ன புள்ளைங்க கேள்வின்றது சரியாதானே இருக்கு. அதுக்கு விடை :கல்வி

ஹா! ஹா! அதான் இல்ல. இது வேற. யோசிச்சு சொல்லுங்க பார்க்கலாம்!!

யோசிக்குறதுக்குள்ள ஒரு ஜோக் சொல்லிட்டு நான் போய் சமைக்குறேன். நீங்க யோசிங்க.  
சரி, ஜோக் சொல்லு...,


நான் என்ன சமைச்சாலும் எதுவுமே சொல்லாம சாப்பிடுறீங்களே ,உங்களுக்கு என்மேல அவ்வளவு அன்பா ?


நீயோ ஆடிக்கொருதடவை அம்மாவாசைக்கொருதடவைனு சமைக்கிறவ‌, அதையும் நான் குறைசொல்லி ,அதில இருந்தும் தப்பிக்கலாமுன்னு பாக்குறியா டியர் ?  ஹா! ஹா! உன் ஃப்ரெண்ட் வீட்டுல நடந்ததா!? நான் யோசிக்குறேன். நீ போய் ஒரு டீ போட்டு வா. அதைக் குடிச்சுட்டு நல்லா யோசிக்குறேன்.

33 கருத்துகள்:

 1. நெல்லை மணமக்கள் பல்லாண்டு வாழ்க...!

  // ஃப்ரெண்ட் வீட்டுல நடந்ததா...?// - நம்பிட்டோம் சகோ...

  விடைக்கு கர்ணனை கூப்பிடுகிறேன்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விடை தப்புங்கண்ணா!

   நீக்கு
  2. ///ஃபோன் போட்டேன். ரிங் போச்சுது!//

   போன் போட்டால் ரிங்க் போகாது போன் தான் உடைஞ்சி போகும்

   எங்கள் தலைவர் திண்டுக்கல் தன்பாலன் சொன்ன விடையை தவறு என்று ஆணவத்தோட சொன்னது யாரு ? அவரை இந்த சபைக்கு இழுத்துவாருங்கள்

   நீக்கு
 2. இரத்த தானம் கொடுக்கப் பயந்து ஒதுங்குபவர்கள் ஒரு முறை
  இந்த ஆக்கத்தைப் பார்த்தால் போதும் தானாக முன் வந்து
  கொடுப்பார்கள் .அருமையான ஆக்கம் வாழ்த்துக்கள் சகோதரியாரே .
  ஆண்டவன் நினைத்தால் வரத்தைக் கொடுக்க முடியும்
  மனுசனால அத எடுக்க முடியாதுப்பா சரிதானே ?:))))))))))))))))) (என்னமா
  யோசிக்குறாங்க அம்பாளடியாள் :)))) )

  பதிலளிநீக்கு
 3. இரத்ததானம் எங்களுக்குப் பழக்கப்பட்ட ஒன்று.
  நேற்றுக் கூட இரத்ததான கேம்ப் ஒன்று செய்வதற்கு ஆலோசித்தோம் அதனை வருகின்ற வாரம் செய்வதாகவும் முடிசெய்துவிட்டோம்... :)

  அக் கேள்விக்கு விடை /// கல்வியாகத் தான் இருக்க முடியும்///

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனசின் வலி. அடுத்தவங்களுக்கு வலியை கொடுக்க முடியும். என்னதான் மன்னிப்பு கேட்டாலும், சமாதானம் பண்ணாலும், அந்த வலியை எடுக்க முடியாது.

   கல்விதான் சரியான விடை.ஆனா, இந்த கேள்வியைக் கேட்டதும் அவளுக்குத் தோணின பதிலை சொன்னா. அவ சொன்னதும் சரியான விடையாதான் இருந்துச்சு.

   நீக்கு
 4. அவியல் என்றதும் ஏதோ புது தீணினு ஓடிவந்தேன்...
  ஆனாலும் நல்ல பதிவுதான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செவ்வாய்க்கிழமைதோறும் கிச்சன் பதிவுல புது புது ரெசிபி பதிவாகுது. வந்துப் பாருங்க சகோ!

   நீக்கு
 5. இரத்த தானம் செய்த அந்த மணமக்களுக்கு வாழ்த்துக்கள்...
  நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ!

   நீக்கு
 6. ///ஃபோன் போட்டேன். ரிங் போச்சுது!//

  போன் போட்டால் ரிங்க் போகாது போன் தான் உடைஞ்சி போகும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஃபோன் உடைஞ்சிப் போனால் என் சகோதரர் அமெரிக்காவுல இருக்கார். புது ஃபோன் வாங்கித் தருவார். நீங்க கவலைப்பட வேணாம்.

   நீக்கு

 7. இந்த நெல்லை தம்பதிகள் செய்த ரத்ததானம் ஃப்ளிசிட்டிக்காக செய்யபட்டதுங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எதோ ஒண்ணு. ரத்தம் கொடுத்தாங்களா!? அதான் இங்க பதிவு!!

   நீக்கு
 8. நெல்லை மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா!

   நீக்கு
 9. மணமக்களுக்கு வித்யாசமான சிந்தனை தான்.
  விட்டுக்கொடுக்க முடியும் ,எடுக்க முடியாது தானே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொடுக்க முடியும். எடுக்க முடியாது!! இதான் கேள்வி.

   விடை: மனசின் வலி

   நீக்கு
 10. நெல்லை மணமக்கள் பல்லாண்டு வாழ்க!

  பதிலளிநீக்கு
 11. புதுமணத் தம்பதிகளின் செயல் போற்றுதலுக்கு உரியது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா!

   நீக்கு
 12. பாவங்க உங்க கணவர். ஆடிக்கொருதடவை,அமாவாசைக்கொருதடவைன்னு சமைக்காம, குறைந்தது வாரத்திற்கு ஒரு நாளாவது அவருக்கு வாய்க்கு ருசியா சமைச்சுக்கொடுங்க.

  பதிலளிநீக்கு
 13. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு : கீழுள்ள இணைப்பை சொடுக்கவும் :

  அன்பின் பூ - இரண்டாம் நாள்

  பதிலளிநீக்கு
 14. நெல்லை தம்பதிகள் குறித்து இணையத்தில் படித்தேன் அக்கா... விளம்பரத்திற்காக கொடுத்தாலும் அவர்களின் செயல் பாரட்டுதலுக்குரியதே...ன்ஈங்க போடுற எந்த விடுகதையுமே என்னால கண்டு பிடிக்க முடியறதில்ல பின்ன எங்க இத கண்டு பிடிக்க... நீங்களே சொல்லிருங்க அக்கா.. :P

  பதிலளிநீக்கு
 15. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுக்கொள்ளலாம். இதைப்போலவே அருமையான அடுத்த பதிவுக்கு ரெடி பண்ணுங்க.

   நீக்கு
 16. உங்கள் பதிவின் தொடர்ச்சி.
  ..............................................

  கணவர் :- என்ன சமையல் சீக்கிரம் முடிஞ்சதா இல்லையா ?....இல்லனா நான் ஓட்டலுக்குப்போறேன்.

  மனைவி :- இதோ 5 நிமிஷங்க..
  கணவர் :- ஓ ...அதுக்குள்ள முடிச்சிடுவியா ?

  மனைவி :- இல்லங்க. நான்5 நிமிஷத்துல புடவை மாத்திட்டு உங்க கூட ஓட்டலுக்கு வந்திடறேன்.
  கணவர் :- ???

  பதிலளிநீக்கு
 17. இரத்த தானம் குறித்த பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் ராஜி.

  பதிலளிநீக்கு
 18. ரத்த தானம் செய்த தம்பதிகள்... பாராட்டுக்குரியவர்கள்.....

  சிறப்பான அவியல். பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு