Tuesday, February 04, 2014

தக்காளி சட்னி - கிச்சன் கார்னர்

என் பசங்களுக்கு தக்காளிச் சட்னின்னா ரொம்பப் பிடிக்கும். ஆனா, என் வீட்டுக்காரர் செக்கச்செவேல்ன்னு இருக்குறதால கொஞ்சம் இதுக்கிட்ட இருந்து தள்ளியே இருப்பார். வெளிய எங்காவது பிக்னிக் டூர் போகும்போது இதைத்தான் செஞ்சு எடுத்திக்கிடு போவோம். சாம்பார், குருமாப் போல இது சீக்கிரம் கெட்டுப் போகாது. இட்லி, சப்பாத்தி, சாதம், பொங்கல், பூரின்னு எல்லாத்துக்கும் ஜோடி இந்த சட்னிச் சேரும்.

இப்ப தக்காளி விலை குறைஞ்சிருக்குறதால இனி அடிக்கடி பசங்களுக்கு செஞ்சுகொடுக்கலாம்...,

தேவையானப் பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 2
நல்லா பழுத்த தக்காளி - 6
ப. மிளகாய் - 1
கறிவேப்பிலை கொத்தமல்லி - கொஞ்சம்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - கொஞ்சம்
மிளகாய் தூள்- தேவைக்கேற்ப
மஞ்சப்பொடி - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு

வெங்காயம், தக்காளி, ப. மிளகாயை நல்லா கழுவி பொடிப் பொடியா வெட்டிக்கோங்க.
அடுப்பில வாணலி வச்சு எண்ணெய் காய்ஞ்சதும் கடுகுப் போட்டு பொறிய விடுங்க. கடுகு பொறிஞ்சதும் வெங்காயம் போட்டு வதக்குங்க.

வெட்டிய ப.மிளகாயைச் சேர்த்து வதக்குங்க...,

உப்பு சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதங்குங்க.

அடுத்து வெட்டி வச்ச தக்காளியைச் சேர்த்து தக்காளி வேகும் வரை வதக்குங்க.

தக்காளி வெந்ததும் தேவைக்கேற்ப மிளகாய் தூள் சேர்த்துக்கோங்க.


அடுத்து மஞ்சப்பொடி கொஞ்சம் சேர்த்து எண்ணெயில் வதக்குங்க.

தேவையான அளவு தண்ணி, உப்பு சேர்த்து மிளகாய் தூள் வாசனை போகும் வரை கொதிக்க விடுங்க. தண்ணிலாம் சுண்டி, எண்ணெய் தனியா பிரிஞ்சு வரும்போது அடுப்பிலிருந்து இறக்கிடுங்க.

இட்லி, சப்பாத்தி, தோசை, பூரி, பொங்கல், உப்புமான்னு எதுக்கும் ஜோடி சேரும். சாதத்துக்குச் செய்யும்போது துளியூண்டு புளிச் சேர்த்தா போதும். வெளியப் போகும்போது செஞ்சுக் கொண்டுபோறதா இருந்தா உப்பு ஒரு கல்லும், எண்ணெய் ஒரு ஸ்பூனும் அதிகமா சேர்த்துக்கோங்க. சீக்கிரம் கெட்டுப் போகாது.

அடுத்த வாரம் பழையக் காலத்து நொறுக்குத் தீனியான உடலுக்கு வலு சேர்க்கும் கேழ்வரகு அடை செய்யுறது எப்படின்னு பார்க்கலாம். இப்ப..., 

டாட்டா, பை பை, சீ யூ....,

17 comments:

  1. வணக்கம்

    நல்ல செய்முறை விளக்கம் இதைப்பார்த்து இனி செய்திடலாம்..... வாழ்த்துக்கள்
    த.ம2வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  2. செய்திடுவோம் சகோ... செய்முறை விளக்கத்திற்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரம் செஞ்சுப் பார்த்துட்டு எனக்கும் பார்சல் பண்ணுங்கண்ணா!

      Delete
  3. நாக்கில் எச்சில் ஊருது.... எனக்கு சப்பாத்திக்கு மிகவும் பிடித்தது இது. உங்க வீட்டுக்கு வரும்போது செஞ்சி போடுங்க !

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா செஞ்சுப் பரிமாறுறேன் சகோ! சீக்கிரம் உங்களை எங்க வீட்டுக்கு வாங்க!

      Delete
  4. அக்கா நாங்க இந்த தக்காளி சட்னில பூண்டு,கறிவேப்பிலையும் சோ்த்து வதக்கி ஆற வைத்து அரைத்து சாப்பிடுவோம்.

    ReplyDelete
    Replies
    1. நாங்களும் சேர்ப்போம் சுபா! ஆனா, வெளில கொண்டுப் போகும்போது பூண்டு சேர்த்தால் சீக்கிரம் கெட்டுடும் அதான்

      Delete
  5. எங்க வீட்டில் அடிக்கடி செய்யும் சட்னி இது..
    மிகவும் ருசியானது..
    அட போங்கப்பா..
    இப்போதான் விடுமுறைவிட்டு வந்தேன்..
    சட்னியைப் பார்க்கும்போது
    எச்சில் ஊறுது பா..

    ReplyDelete
    Replies
    1. வீட்டு ஞாபகம் வந்தால் செஞ்சு சாப்பிடுவீங்கன்னு சொல்லித்தானே நான் போஸ்ட் போட்டிருக்கேன்!

      Delete
  6. ஆஹா...சப்பாத்தி படத்தை பார்த்ததும் உங்க அண்ணியின் உயிர் தோழி மராட்டிகாரி நியாபகம் வந்துருச்சே, அம்புட்டு சுவையாக இருக்கும்...!

    ReplyDelete
    Replies
    1. அண்ணி ஞாபகம் வரல. அண்ணியோட ஃப்ரெண்ட் ஞாபகம்தான் வந்துச்சா!? அண்ணனுக்கே அருவா வீசனும் போல இருக்கே!

      Delete
  7. தக்காளி சட்னின்னா எனக்கும் ரொம்ப புடிக்குங்க. நான் தனியாக சமைத்து சாப்பிட்ட காலங்களில் இந்த சட்னிதான் பல நாட்களுக்கு ஆபத்பாந்தனாக இருந்தது. படங்களுடன் படித்ததும் நானே மீண்டும் செய்ததுபோல் இருந்தது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இப்ப மீண்டும் சமைச்சுப் பாருங்க!

      Delete
  8. எங்க வீட்ல அடிக்கடி செய்வது..அனைவருக்கும் பிடித்தது...ஆப்பிள் தக்காளி, நாட்டு தக்காளி இரண்டும் கலந்து வெங்காயம்,ப.மிளகாய் தவிர்த்து புளி சேர்த்து செய்து 15 நாட்கள் கூட வைத்துக்கொள்ளலாம்...

    ReplyDelete
    Replies
    1. அது தக்காளி ஊறுகாயாச்சே எழில்!?

      Delete
  9. ஓ.கே.... நல்ல சட்னி!

    கேழ்வரகு அடைக்கு - வெயிட்டிங்!

    ReplyDelete