Tuesday, February 11, 2014

கேழ்வரகு அடை - கிச்சன் கார்னர்

சிப்ஸ், கேக், பானிப்பூரி, பிஸ்ஸா, பர்கர்,சாக்லேட்ஸ் நான் சின்ன புள்ளையா இருந்தபோதுலாம் இவ்வளவு நொறுக்குத்தீனி இருந்துச்சான்னு தெரியலை. சம்பளத் தினத்தன்னிக்கு இனிப்பும், காரமும் வாங்கி வருவார். எப்பவாவது வீட்டுக்கு வரும் விருந்தாளிங்க இனிப்புலயும் காரத்துலயும் கால் கிலோவும் வாங்கி வருவாங்க. யாருக்காவது கல்யாணம் ஆனா, காராசேவு, மோட்டாசேவு, லட்டு, பாதுசா, ஜாங்கிரி,மிக்சர், அதிரசத்துல நம்ம அதிர்ஷ்டத்துக்கு ஏத்த மாதிரி கிடைக்கும்.

அப்பா கொடுக்கும் கைச்செலவு காசுல பொம்மை பிஸ்கட், தேன் மிட்டாய், கலர் அப்பளம், கொய்யாப்பழம், ஐஸ் இதெல்லாம் வாங்கலாம். எதாவது பண்டிகைன்னா முறுக்கு, தட்டைன்னு அம்மா செஞ்சு  கொடுப்பாங்க.  அது தவிர ஸ்கூல்ல இருந்து வந்ததும் தட்டுல சாதம் போட்டு தருவாங்க. மழை நேரத்துல எதாவது செஞ்சுத் தருவாங்க. அதுல உப்புமா, கோதுமை வடை, கேழ்வரகு அடை, கேழ்வரகு புட்டுன்னு எதாவது இருக்கும்.

நாம சின்ன வயசுல சாப்பிட்ட கேழ்வரகு அடை எப்படி செய்யுறதுன்னு இன்னிக்கு கிச்சன் கார்னர்ல பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள்:
கேழ்வரகு மாவு : ஒரு டம்ப்ளர்
முருங்கைக் கீரை - ஒரு இணுக்கு
காய்ஞ்ச மிளகாய் -2
பூண்டு - பத்து பல்
பெரிய வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு

ஒரு பாத்திரத்துல கேழ்வரகு மாவை நல்லா சளிச்சுக்கிட்டு, அதுல சுத்தம் செஞ்ச முருங்கைக்கீரையை போடுங்க.

கழுவி பொடியா நறுக்கின வெங்காயத்தைப் போடுங்க. 

பூண்டையும், மிளகாயையும் மிக்ஸில போட்டு அரைச்சு சேருங்க.

தேவையான அளவு உப்பு சேருங்க.

கொஞ்சம், கொஞ்சமா தண்ணி சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு மாவு பிசைஞ்சுக்கோங்க.

ஒரு பிளாஸ்டிக் பேப்பர்ல லேசா எண்ணெய் தடவி, பிசைஞ்சு வச்சிருக்கும் மாவுல கொஞ்சம் எடுத்து வட்டமா தட்டிக்கோங்க. மாவு தண்ணியா இருக்குற மாதிரி இருந்தா துணில தட்டிக்கலாம். நான் துணிலதான் தட்டிக்கிட்டேன்.


அடுப்புல, தோசைக்கல் சூடானதும், வட்டமா தட்டின மாவைப் போட்டு லேசா எண்ணெய் ஊத்தி ரெண்டுப் பக்கமும் சிவக்க விட்டு எடுங்க.

கேழ்வரகு அடை ரெடி! சூடான அடைக்கு வெல்லம் சேர்த்துக்கிட்டா நல்லா இருக்கும். சிலர், கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு வெங்காயம், கீரையை லேசா வதக்கியும் சேர்ப்பாங்க. ப்.மிளகாய் கூட சேர்த்துக்கலாம்.

மாலை நேரத்துல அதிகம் எண்ணெய் சேர்க்காத பாரம்பரிய உணவு சாப்பிட்ட மாதிரியும் ஆச்சு. வெல்லத்தில் இருக்கும் இரும்பு சத்து ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும்,  முருங்கைக் கீரையில் இருக்கும்  வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம், தாது உப்புகளும் உடம்பில் சேர்ந்த மாதிரியும் ஆச்சு!

கேழ்வரகு அடையை ஸ்கூல்ல இருந்து வந்ததும் என் பசங்க விரும்பி சாப்பிடுவாங்க. மாசம் ஒரு தரமோ இல்ல ரெண்டு தரமோ செஞ்சுக் கொடுப்போம். 

மீண்டும் அடுத்த கிச்சன் கார்னர்ல ஈசியான ரெசிபியோடு சந்திக்கலாம்.

21 comments:

  1. simple & healthy tasty snacks(tiffen) item.

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான் சுபா! சின்னப் பிள்ளைல சாப்பிட்டு இருப்போம்.

      Delete
  2. சத்தான அடை..பார்க்கும்பொழுதே சாப்பிடனும் போல இருக்கே..செஞ்சு குடுத்துடுறேன்..நன்றி ராஜி!

    ReplyDelete
    Replies
    1. நீங்க மட்டும் சாப்பிட்டா போதாது கிரேஸ். எனக்கும் பார்சல் பண்ணுங்க

      Delete
    2. எனக்கு பார்சல் பண்றதுல மகிழ்ச்சிதான் ..ஆனா நீங்க நல்லா செய்றிங்க..இதுல என்கிட்டே பார்சல் கேட்டு ஏன் விஷப்பரீட்சை? :)

      Delete
  3. உங்கள் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தால், உங்கள் வீட்டில் ஒரு டாக்டர் இருக்கிறார். முருங்கைக்கீரை பொதுவான நோய்கள் மிக சிறந்த மருந்து இது அனைத்து வயதினரும் மிகவும் பரிந்துரைக்கப்பட்ட கீரை வகையாகும்.

    ReplyDelete
    Replies
    1. அடிக்கடி உணவுல சேர்த்துக்கலாம். அதிக செலவில்லாதது. எந்த காயும் இல்லாட்டி வீட்டுல இருக்கும் மரத்துல இருந்து பறிச்சு சாம்பார், பொறியல் செஞ்சு சாப்பிடலாம்

      Delete
  4. நல்ல ரெசிபி! இதே கேழ்வரகு மாவுல பூண்டு வெங்காயத்துக்கு பதில் வெல்லம் சேர்த்து பிசைஞ்சு அடை வார்த்து தருவாங்க எங்க அம்மா! டேஸ்ட்டான சத்தான அடை இது! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அம்மா நினைவு வந்திட்டுதா சகோ!?

      Delete
  5. உங்களுக்கு தினமும் அதிர்ஷ்டம் உண்டு... (இருக்கணும்) என்று எனக்கு தெரியாதா...?

    சத்துள்ள சமையல் குறிப்பு சகோதரி... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா!

      Delete
  6. கேழ்வரகு மாவு : ஒரு டம்ப்ளர் ////

    போட்டோவைப் பார்த்தா டம்ப்ளர் மாவு மாதிரி தெரியல்லியே...

    ReplyDelete
    Replies
    1. ஒரு டம்ப்ளர் மாவு+வெங்காயம்+கீரைலாம் சேர்த்தால் இவ்வளவு வரும். வருதா இல்லையான்னு செஞ்சுப் பார்த்துட்டு சொல்லுங்க.

      Delete
  7. ஆரோக்கியமான உணவு .பகிர்வுக்கு மிக்க நன்றிடா .

    ReplyDelete
  8. அடைடே, நல்லாயிருக்கே!

    ReplyDelete
  9. சத்தான சமையல்னா யார் செஞ்சு கொடுத்தாலும் சாப்பிடலாம்... ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. அதுலயும் அக்கா சமைச்சதுன்னா இன்னும் ருசி அதிகம்தானே ஸ்பை!?

      Delete
  10. அடுத்த பதிவர் சந்திப்புக்கு வரும் போது கொண்டு வரவும்!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாய் கொண்டு வரேன். ஆனா, அதுக்கு முன்னாடி எங்க வீட்டுக்கு வாங்க. இன்னும் நிறைய ருசியான பலகாரம்லாம் செஞ்சுத் தரேன்.

      Delete
  11. கேழ்வரகு அடை - டிசைன் பிரமாதம்! :)

    அம்மாவும் பெரியம்மாவும் செய்து நான் சாப்பிட்டு இருக்கிறேன். பல வருடங்களாயிற்று....

    ReplyDelete