Tuesday, February 18, 2014

கடலைப் பருப்பு அரைச்சு விட்ட குருமா- கிச்சன் கார்னர்

காலைல காரசாரமா சட்னி வச்சா வூட்டுக்காரருக்குப் பிடிக்குறதில்ல. சாம்பார் வச்சா சப்புன்னு இருக்குன்னு பசங்களுக்குப் பிடிக்க மாட்டேங்குது! டெய்லியும் இட்லிக்கு தொட்டுக்க என்னதான் செய்யுறதுன்னு மண்டையைப் பிச்சுக்காதக் குறைதான்! குருமா செய்யலாம்ன்னு நினைச்சா பட்டாணி ஊற வைக்க மறந்திருப்போம்!

என் ஓரகத்தி இந்தக் குருமாவைச் செஞ்சாங்க. நல்லா இருந்துச்சு. நானும் அதேப்போல செய்ய ஆரம்பிச்சுட்டேன்.

தேவையானப் பொருட்கள்:
கடலைப்பருப்பு - கைப்பிடி
வெங்காயம் - 2
தக்காளி - 2
ப.மிளகாய் - 2
கறிவேப்பிலை, கொத்தமல்லி - கொஞ்சம்
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பல்
தேங்காய் - கொஞ்சம்
சோம்பு -கொஞ்சம்
பட்டை- ஒரு துண்டு
கிராம்பு- 2
எண்ணெய் -2 தே.கரண்டி
கடுகு -கொஞ்சம்
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
உப்பு -தேவைக்கேற்ப

வெங்காயம், தக்காளி, இஞ்சி, தேங்காயைக் கழுவி வெட்டி வச்சுக்கோங்க.



வாணலியை அடுப்பில் வச்சு சூடானதும் எண்ணெய் ஒரு டீஸ்பூன் ஊத்தி கடலைப்பருப்புப் போடுங்க.

பட்டை, சோம்பு, கிராம்புலாம் போட்டு லேசா வறுங்க. கடலைப்பருப்பு பொன்னிறமாகனும்ன்னு அவசியமில்ல.

வெட்டி வச்சிருக்கும் வெங்காயத்தில் பாதி போட்டு லேசா வதக்குங்க.

பச்சை மிளகாயை போட்டு வதக்குங்க.


வெட்டி வச்சிருக்கும் தக்காளில முக்கால் வாசி சேர்த்து ரெண்டு நிமிசம் வதக்குங்க. 

வெட்டி வச்ச இஞ்சி சேர்த்துக்கோங்க.

பூண்டு சேர்த்துக்கோங்க, தோல் உரிக்கனும்ன்னு அவசியமில்ல.

அடுத்து தேங்காய் சேர்த்து லேசா வதக்கி, அடுப்பிலிருந்து இறக்கி சூடு ஆறினதும், மிக்சில போட்டு கரகரப்பா அரைச்சுக்கோங்க.

வாணலில ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் கடுகுப் போட்டு பொரிய விடுங்க.
மிச்சமிருக்கும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமா வதக்கிக்கோங்க.

மிச்சமிருக்கும் தக்காளி சேருங்க.


உப்பு சேர்த்து தக்காளி வேகும் வரை வதக்கிக்கோங்க.

கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்குங்க.

தேவையான அளவு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்குங்க.



கொஞ்சம் தண்ணி ஊத்தி, மஞ்சப்பொடி சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க.


மிளகாய் தூள் வாசனை போகும் வரை கொதிக்க விட்டு அரைச்சு வச்சிருக்கும் கடலைப்பருப்பு விழுதை சேர்த்துக் கொதிக்க விடுங்க.


கொஞ்ச நேரம் கொதிக்க விட்டு இறக்கிடுங்க. இட்லி, தோசைக்கு நல்ல மேட்சா இருக்கும்..

டிப்ஸ்: கடலைப்பருப்புலாம் வறுத்ததால ரொம்ப நேரம் கொதிக்க விடனும்ன்னு அவசியமில்ல. ஒரு ரெண்டு நிமிசம் கொதிச்சாலே போது. சாம்பார் போல தண்ணியா இல்லாம, குருமா போல கெட்டியா இல்லாம இருந்தா நல்லா இருக்கும். க்டலைப்பருப்பு கொஞ்சமா சேர்த்துக்கோங்க. அதிகமா சேர்த்தா ரொம்ப கொழகொழன்னு இருக்கும். அரைக்கும்போது கரகரப்பா அரைச்சுக்கோங்க.

மீண்டும் அடுத்த வாரம் ஈசியான ரெசிபியோட சந்திக்கலாம்.

இங்க மட்டுமில்லாம இன்னொரு இடத்துலயும் தற்காலிகமா ஒரு வாரத்துக்கு நம்ம கடை ஓப்பன் பண்ணி இருக்கு. அங்க வந்து உங்க ஆதரவு தருமாறு கேட்டுக் கொல்கிறேன்.

11 comments:

  1. ஆசிரியராகவும் இருந்து கொண்டு, சொந்த தளத்தில் தினம் ஒரு பதிவு எனும் கடமையைக் கண்டு மகிழ்ந்தேன் சகோதரி.. மிகவும் சிரமம் தான்... (ஏன் உங்களவர் கோபித்துக் கொண்டார் என்று தெரிகிறது... ஹிஹி...)

    செய்முறையை சொல்ல இத்தனை படங்களோடு...! பாராட்டுக்கள் சகோதரி... செய்து பார்க்கிறோம்... அண்ணியும் நன்றி சொல்லச் சொன்னாங்க... நன்றிகள் பல...!

    ஆமாம் "ஓரகத்தி" ஏன் பெயர் வந்தது...? விளக்கம் தேவை....!

    ReplyDelete
    Replies
    1. ஓர் அகத்தைச் சேர்ந்த பெண்கள் என்று பொருளாம். அகம் -வீடு. ஒரே வீட்டுக்கு மருமகள்களாக இருக்கும் பெண்களை ஓரகத்திகள் என்று சொல்வார்கள்.

      Delete
  2. பெயர் காரணம்லாம் தெரியலண்ணா! எல்லாம் செஞ்சு வச்சுட்டுதான் கம்ப்யூட்டர் பொட்டி முன்னாடி உக்கார்றேன். இருந்தும் ஏன் கோவிச்சுக்குறார்ன்னு தெரியல. இத்தனை சகோஸ் இருந்தும் என் நிலைமை பாருங்கண்ணா!

    ReplyDelete
  3. உங்களை பாராட்ட மூன்று காரணங்கள்
    1 ஓரகத்தியை பெருமைப்படுத்தும் அதிசயத்துக்கு
    2 படத்துடன் கூடிய விளக்கம்
    3 நாளைக்கு காலைல நான் கன்பியுஸ் ஆகவேண்டியதில்லை
    நன்றி நன்றி

    ReplyDelete
    Replies
    1. எனக்கு சமைக்கக் கத்துக் கொடுத்ததே எங்கக்காதான் மைதிலி.

      Delete
  4. ஆஹா வித்தியாசமா இருக்குப்பா,நிச்சயம் செய்து பார்க்கிறேன்.நன்றி தோழி!!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு தெரியாத சமையல் குறிப்பா!? ஆனாலும் உங்க தன்னடக்கத்துக்கு ஒரு சல்யூட்

      Delete
  5. கண்டிப்பா ஒரு நாள் செஞ்சிடலாம்...

    ReplyDelete
  6. கண்டிப்பாகச் செய்து பார்ப்பேன்

    ReplyDelete
  7. இதுவரை அறியாத செய்முறை. இன்றே செய்துபார்க்கிறேன். நன்றி ராஜி.

    ReplyDelete
  8. நல்ல ரெசிப்பி....

    எல்லா ஸ்டெப்ஸுக்கும் ஒரு ஃபோட்டோ.... :)

    ReplyDelete