பாரம்பரிய சாப்பாட்டுக்கு திரும்புறோம்ன்னு நம்மாளுங்க பண்ணும் அட்ராசிட்டி இருக்கே! யப்பா! பொறந்ததிலிருந்தே ஹார்லிக்ஸ், பருப்பு, நெய், கிழங்கு, சிக்கன், மட்டன், மீன், முந்திரிப்பருப்பு, உளுத்தம்பருப்புன்னு சாப்பிட்டு சேர்த்து வச்ச உடல் எடையை 5கி வரகரிசி, 1/2லி தேன், 12 எலுமிச்சை, 10லி சுடுதண்ணி, 50கிராம் சீரகம், சில நாள் வாக்கிங்க்ன்னு செஞ்சு குறைச்சுடலாம்ன்னு நினைக்குறதுலாம் அறியாமையின் உச்சம். வாழ்க்கைமுறையில் மாற்றம் வந்து, உடல் உழைப்பு இல்லாம போய் உடல் எடை கூடிப்போச்சு. பழமைக்கு மாறுறோம்ன்னு சொல்லி வரகரிசி, சாமை, திணை, குதிரைவாலின்னு பழையபடி மாறினாலும் இனிவரும் தலைமுறை உடல் எடை, உடல் உபாதைகள்ன்னு அவதிப்படத்தான் செய்யும். இனி, 80கள்வரை பிறந்தவங்களுக்கு இருந்த உடல், மன ஆரோக்கியம் நம் பிள்ளைகளுக்கு எட்டாக்கனியே!
ஆனாலும், நம்ம பசங்களுக்கு நம்ம பாரம்பரியத்தை பழக்கப்படுத்த தவறக்கூடாது. அதுக்காக இதுலாம் செஞ்சுக்கொடுக்கலாம். மத்தபடி ஆரோக்கியம்ன்னு காரணம் சொன்னா, எனக்கு நம்பிக்கை இல்லை. ஏன்னா, அந்த பாரம்பரிய தானியங்களும், நஞ்சான தண்ணி, மலடான நிலத்தில்தான் விளைஞ்சு வருது. பின் எப்படி அதுமட்டும் சத்தானதா இருக்கும்?! ஏதோ என் அம்மா தன் மனத்திருப்திக்காக இதுலாம் வாங்கி கொடுக்கும். நானும் சமைச்சு பிள்ளைகளுக்கு கொடுப்பேன். இன்னிக்கு பாரம்பரிய நெல்வகைகளில் ஒன்றான வரகரிசியில் செய்யும் சாம்பார் சாதத்தின் செய்முறையை பார்ப்போம்..
தேவையான பொருட்கள்.
வரகரிசி
துவரம்பருப்பு
கேரட், கத்தரிக்காய், ப.பட்டாணி, உருளை, பீன்ஸ், முள்ளங்கி, முருங்கன்னு கைக்கு கிடைச்ச காய்கறிகள்
வெங்காயம்
தக்காளி
எண்ணெய்
கடுகு
சீரகம்
காய்ந்த மிளகாய்
பெருங்காயம்,
புளித்தண்ணி,
மஞ்சப்பொடி,
உப்பு,
துவரம்பருப்பை மஞ்சப்பொடி சேர்த்து நல்லா குழைய வேக வச்சுக்கனும்... காய்கறிலாம் கழுவி சின்ன சின்னதா வெட்டிக்கனும்.
அடுப்பில் குக்கரை வச்சு, எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடுகு, சீரகம் போட்டு பொரியவிடனும். பொரிஞ்சதும் காய்ந்த மிளகாயை போட்டுக்கனும்.
வெங்காயத்தை போட்டு வதக்கிக்கனும், வெங்காயம் வதங்கினதும் தக்காளி போட்டு வதக்கிக்கனும்.
வெட்டி வச்ச காய்கறிகளை சேர்த்து நல்லா வதக்கிக்கனும்..
மிளகாய்தூள் சேர்த்து நல்லா வதக்கனும்.
வேக வச்சிருக்கும் து.பருப்பு, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக்கனும்..
ஒரு பங்கு வரகரிக்கு 11/2 பங்கு தண்ணி, புளிக்கரைச்சல், சேர்த்து கொதிக்கவிடனும்..
சுத்தம் செய்து கழுவிய வரகரிசியை சேர்த்து கொதிச்சதும் குக்கரை மூடி மூணு விசில் வரை விடனும்.
விசில் வந்து முடிச்சதும் அடுப்பை இறக்கி சூடு தணிஞ்சதும் குக்கரை திறக்கனும்.
வேக வச்சிருக்கும் து.பருப்பு, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக்கனும்..
ஒரு பங்கு வரகரிக்கு 11/2 பங்கு தண்ணி, புளிக்கரைச்சல், சேர்த்து கொதிக்கவிடனும்..
சுத்தம் செய்து கழுவிய வரகரிசியை சேர்த்து கொதிச்சதும் குக்கரை மூடி மூணு விசில் வரை விடனும்.
விசில் வந்து முடிச்சதும் அடுப்பை இறக்கி சூடு தணிஞ்சதும் குக்கரை திறக்கனும்.
தாளிக்கும் கரண்டில நெய் ஊத்தி, கடுகு சீரகம், கறிவேப்பிலை, கொ.மல்லி சேர்த்து காரம் தேவைப்பட்டா காய்ஞ்ச மிளகாய் போட்டு தாளிச்சு கொட்டி கிளறிக்கனும்.
வரகரிசி சாம்பார் சாதம் ரெடி. சூடா சாப்பிட்டா சூப்பரா இருக்கும். ஆறிட்டால் கொஞ்சம் கஷ்டம்தான். சூடா இருக்கும்போது வரகரிசி குழைவா இருக்குற மாதிரிதான் தெரியும். சூடு ஆறிட்டால் கொஞ்சம் கடினமாகிடும். அப்பளம், ஊறுகாய்ன்னு தொட்டுக்கலாம்..
அடுத்த பதிவு பொங்கல் அன்னிக்கு வைக்கப்படும் நவதானியமும், நிறைய வகை காய்கள் சேர்த்த குழம்பை பதிவா பார்க்கலாம்.
நன்றியுடன்,
ராஜி
நம் வீட்டில் வாரத்தில் இருமுறை...
ReplyDeleteஇங்கனயும் அதே கதைதான்
Deleteசூப்பரா இருக்கு ராஜி....படங்கள் செய் முறை எல்லாம் விளக்கியதும்...நீங்க சொல்லிருக்கறத அப்படியே ஏற்கிறேன்...ஏன்னு கேட்டீங்கனா...பல வருஷங்களாக இந்த சிறுதானியங்கள் பலதும் பயன்படுத்தி வரேன்...கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கும் மேலாக...அப்ப எல்லாம் இந்த அளவு நிலங்கள் கெட்டுப் போயிருக்கல..ஸோ இப்ப ஆர்கானிக் அது இதுனு வருது அப்ப எல்லாம் இது தனியய கடைகள்ல கிடைக்கறது ரொம்ப ரேர். பலசரக்குக் கடைகள் கோழித்தீவனம் மாட்டுத் தீவங்க்கடைகள்லதான் கிடைக்கும் அதுவும் அவ்வளவா சுத்தமா எல்லாம் கிடைக்காது. நாமதான் சுத்தம் செய்யனும்...
ReplyDeleteஇது நம்ம வானொலில விவசாயம் பத்தி எல்லாம் பேசுவாங்கல்ல அப்ப வானொலி எல்லாம் கேட்ட சமயத்துல அவங்க ஒரு நிகழ்ச்சில சொன்னாங்க நாம எல்லாம் சிறு தானியத்தையும் யூஸ் செய்யக் கத்துக்கணும். மலைல விளையற தானியங்கள் எல்லாம் அவ்வளவு நல்லதுன்னு...எதிர்காலத்துல அரிசி விலை கூடும் மட்டுமில்லாம அரிசியின் தரமும் குறைந்து உடலுக்குக் கேடு விளைவிக்கும் அரிசி விளைச்சலும் குறைந்து போகும் எனவே சிறுதானியங்களைப் பழக்கனுன்னு சொன்னாங்க. இப்ப உள்ள நிலையை நீங்களே சொல்லிட்டீங்க. இதனால இப்ப எல்லா சிறு தானியமும் கொள்ளை விலை விக்கிறாங்க...
வரகுன்னு இல்லை தினை சாமை எல்லாத்துலயும் இது செய்யலம். கலந்தும் செய்யலாம். இட்லி தோசை, பொங்கல், நாம அரிசி சாதத்துல என்னெல்லாம் செய்வோமோ அத்தனையும் செய்யலாம்...பிஸிபேளா பாத் வரை செய்யலாம்.
வரகு தயிர்சாதம் பிடிக்கும்னா செஞ்சு பாருங்க சூப்பரா இருக்கும்..
கீதா
சுவையான உணவு. தமிழகம் வரும்போது இப்படி சாப்பிட வேண்டும்/முடியும்.
Deleteதயிர்சாதம்தானே?! செஞ்சிட்டா போச்சு!
Deleteஇவ்வோளோ நாளா இது தோணலை யே ..
ReplyDeleteபொங்கல் ,தயிர் சாதம் எல்லாம் செய்வேன் இந்த சாம்பார் சாதத்தில் இந்த அரிசி போடலாம் ன்னு தெரில க்கா...
அடுத்த முறை செஞ்சு பார்க்குறேன் ...
உங்க கருத்து சரி தான் க்கா ..உடல் உழைப்பு வேணும் ன்னு சொல்லி குடுக்கணும் பசங்களுக்கு ..எல்லாமே சொகுசா இருந்தா உடல் எடை கூட தான் செய்யும் ...
நொய் மாதிரி உருவத்தில் இருந்தாலும் இது அரிசிதான்ப்பா. முறுக்கு, கொழுக்கட்டை, வெரைட்டி சாதம்ன்னு அரிசியில் செய்யும் அனைத்தும் இதிலும் செய்யலாம்.
Delete