Thursday, January 10, 2019

உல்லன் டேபிள் மேட் - கைவண்ணம்

குரங்கிலிருந்து வந்ததாலோ என்னமோ, மனுசங்க மனசு ஒரு விசயத்திலிருந்து இன்னொரு விசயத்துக்கு தாவிக்கிட்டே இருக்கும்.  மத்தவங்களுக்கு எப்படியோ தெரியாது. ஆனா, காலமாற்றம் என்னுள் பெருசா எந்த மாற்றத்தையும் கொண்டுவந்ததில்லை; ஆனா, இந்த கிராஃப்ட் செய்யுற வேலைல மட்டும் ஒருநாளுக்கு இருக்கும் மனசு இன்னொரு நாளு இருக்குறதில்லை.  கொஞ்ச நாளு எம்ப்ராய்டரி, கொஞ்ச நாளு வயர்கூட, இன்னொரு நாளு ஜ்வல்லரி செய்யுறது, இன்னொரு நாளு தையல்ன்னு மாறிக்கிட்டே இருக்கும். அந்த வரிசையில் இந்த வாரம் உல்லன் பக்கம் திரும்பி இருக்கு என் பார்வை...

சும்மா இல்லாம வீட்டுக்காக ஒரு மேட் போட்டுக்கிட்டு இருக்கும்போது எங்க தெருவில் இருக்க அக்கா ஒருத்தங்க  பொங்கல்கூடை மேல போர்த்த ஒரு மேட் கேட்டாங்க. அவங்களுக்காக பின்னதுதான் இது. நூல்லாம் தன்கிட்ட இருந்ததை கொடுத்துட்டாங்க. இதை பார்த்து இன்னும் நாலு பேர் இதேமாதிரி மேட்டும், டிவி மேல போர்த்த ஒரு மேட்டும், வாசப்படியில் போடும் தோரணமும் கேட்டிருக்காங்க.  100 ரூபாயும் நாலு நாளும் செலவழிச்சா ஒரு மேட் வரும். அதை குறைஞ்சது 250ரூபாய்க்கு விக்கலாம். இதுவே, ஆன்லைன்லன்னா இன்னமும் அதிகமா விலை போகும். 










சும்மா இருக்கும் நேரத்துல பின்னது இதுலாம்.  இதை டேபிள், டீபாய் மேல போட்டுக்கலாம். டைனிங்க் டேபிள் ப்ளேஸ்மெண்டாவும் பயன்படுத்தலாம். சின்ன சைஸ்ல பின்னி பூச்சாடி, டீ கோஸ்டராவும் பயன்படுத்தலாம். ஆனா, இதுலாம் ஊரணி பொங்கல்போது  பொங்கக்கூடைமேல் போர்த்திக்க  பின்னி தரச்சொல்லி வாங்கிட்டு போனாங்க.  சில்வர்/வெங்கல அன்னக்கூடையில் பொங்கல் வைக்க தேவையான வரட்டியை அடுக்கி, பொங்கப்பானை, அரிசி, உப்புலாம் வச்சி அடுக்கி அதுமேல போர்த்தி கொண்டு போக இந்த மேட்டை பின்னித்தர சொன்னாங்க. 
கப்போர்ட்ல மேல இருக்கும் கூடையை எடுத்து படமெடுக்க சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு படத்தை கூகுள்ல தேடினால் என் படமே கிடைச்சுட்டுது. 2013ல ஒரு திருவிழாவின்போது எடுத்தது.
அந்த படத்தின் பதிவை பார்க்கலாம்ன்னு போனால் என் சின்ன மாமன் கௌதம்  படம் கிடைச்சுது. முதன்முதலாய்  அன்னிக்குதான் கோவில்ல வச்சுதான் அவனை கையில் வாங்கினேன்.  கிட்டத்தட்ட மூணு வருசம் எத்தனை என் பகலை அழகாக்கியவன். இன்னிக்கு வளர்ந்துக்கிட்டு மூஞ்சை திருப்பிக்கிட்டு போகுது! வாழ்க்கை பயணத்தில் வரவும் பிரிவும் சகஜம்தான் போல!

நன்றியுடன்,
ராஜி

9 comments:

  1. ஊரணி - சந்தோசமும் அது போல் பொங்கட்டும் சகோதரி...

    ஆனாலும் வயல்'வெயிலில்' அந்த புகைப்படம் ஆகா...!

    ReplyDelete
    Replies
    1. 2013ல எடுத்த படம்ண்ணே. என் சின்ன பொண்ணு எடுத்தது. தற்செயலாய் இன்னிக்கு கிடைச்சது.

      Delete
  2. பார்வை எங்கிட்டு போனாலும் மாமாவோட வருமானம் வங்கிக்கு போக, இந்த வருமானத்துல உலையை வச்சுடலாமே...

    ராவா அடிச்ச ரங்கீலா பாட்டியை பார்த்து வந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. இதுல எப்படிண்ணே உலையை வைக்கமுடியும். காய்கறிக்குதான் காணும். அதில்லாம காய், அரிசி, பருப்புன்னு வாங்கி தின்னுட்டா அப்புறம் எப்படி கம்மல், மூக்குத்தி, வளையல்ன்னு வாங்கமுடியும்?! இதெல்லாம்விட எப்படி நெட்பேக் போடமுடியும்?!

      ராவா அடிச்ச ரங்கீலா பாட்டி இன்னமும் இருக்கு. வருசா வருசமும் சாமியாடி சாராயத்தை குடிச்சுக்கிட்டு

      Delete
  3. கைவண்ணம் பதிவில் கண்டேன் மன வண்ண்ம் எழுத்தில் கண்டேன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா.

      Delete
  4. சூப்பரோ சூப்பர்!!!! ரொம்ப அழகா போட்டுருக்கீங்க...ஆமாம் ராஜி ஆன்லைன்ல வித்தா நிறைய போகும்தான்...முயற்சி செய்யலாம் நீங்க...

    ராஜி பதிவை படிக்கும் போது மயக்கம் வந்துருச்சு...அப்புறம் பிடிச்சுக்கிடு முடிச்சேன்..ஹா ஹா வேற ஒன்னுமில்ல "சும்மா இருக்கப்ப" நு போட்டீங்க பாருங்க அதுதான்...பதிவுக்கு தகவல் திரட்டனும்ல...அதுக்கே நேரம் ஆகும்...அப்படித் திரட்டி போடறீங்க...முகநூல்னு வேற சொல்லுறீங்க...சமையல், குடும்பம், வீட்டு வேலை யம்மாடியோவ் இதுக்கு நடுல சும்மா நதும் மயக்கமே வந்துருச்சு!!ஹா ஹா...மீக்கு...பதிவுகள் பார்த்து கருத்து போட்டு அப்புறம் எங்க தளத்துல ஒரு பதிவு போடவே மூச்சுவாங்குது..இப்பல்லாம் போடறதும் குறைஞ்சு போச்சு.....ஹா ஹா

    பாராட்டுகள் ராஜி! உண்மையா பாராட்டறேன்!!! நல்ல டைம் மேனேஜ்மென்ட்!!

    உங்களுக்கு மடும்மில்ல எனக்கும் இப்படித்தான் ஒவ்வொன்னுக்கா கைவேலைல மாறிட்டே இருக்கும். சமீபகாலமா ஒரு கைவேலையும் செய்யறதில்லை...

    அது சரி 5 வருஷத்துக்கு முன்னாடி உள்ள ஃபோட்டோ போட்டு ஏமாத்திட்டீங்களே!! ஹா ஹா

    ஆனா சூப்பரா இருக்கீங்க.!!!! கிராமத்து மணம் மிகவும் பிடிச்சுருக்கு!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அதிகாலை 3 மணிக்கு எந்திரிப்பேன். சமையல் முடிக்க 5 ஆகிடும். எல்லாத்துக்கும் பேக்கிங்க் செய்ய கால்மணிநேரம். 2கிமீ தூரத்திலிருக்கும் பஸ் ஸ்டாண்டுக்கு பெரியவளை கொண்டு போய் பஸ் ஏத்திட்டு, வரும்போதே காய்கறிலாம் வாங்கி வருவேன்.
      வந்ததும் பத்து நிமிசம் ரெஸ்ட். 6 மணிக்கு பால் வாங்க போவேன். பால் பத்தவச்சிட்டு வாசல் கூட்டி கோலம் போடுவேன். சாமான், அடுக்களை க்ளீனிங்குக்கு 7 டூ 7.30 மணி. வீடு கூட்டி முடிக்க 8. எல்லார் துணி துவைச்சு குளிக்க 9 மணி. சாப்பிட்டுட்டு நெட்ல உக்காந்தா 12 மணி. அதுக்குபின் தூக்கம். மீண்டும் 3 மணிக்கு நெட். பால் வாங்க, வாசல்கூட்ட, நெட்ன்னு 8 வரை போகும். மீண்டும் பெரியவளை கூட்டி வந்தபின் டிவி பார்த்துக்கிட்டே 10 மணிவரை கிராஃப்ட். அப்புறம் அடுக்களை க்ளீன் தூக்கம்ன்னு போகும்.. காலை மாலைன்னு இருவேளை அம்மாவீட்டுக்கு போய்வருவேன்.

      பயணத்தின்போதும், படுத்திருக்கும்போதும் மொபைல்ல நெட் நோண்டும்போதும் எதாவது தகவல் கிடைச்சா உடனே சேமிச்சுக்குவேன். வாட்ஸ் அப் இல்ல. அக்கம்பக்கம் அரட்டை அடிக்க மாட்டேன், அதுக்காக பேசாமலும் இருக்கமாட்டேன். இதான்க்கா என் வேலை.

      Delete
    2. நான் போட்டோவில் அழகா தெரிவதில்லைன்னு ஒரு நினைப்பு. அதனால் போட்டோ எடுக்கவே மாட்டேன். இதும் எனக்கே தெரியாம வயல்ல வச்சு சின்ன பொண்ணு திடீர்ன்னு எடுத்துடுச்சு. என் படம் என்கிட்ட கொஞ்சமேதான் இருக்கும். இருக்கும் படங்கள் பின்னாடியும் ஒரு கதை இருக்கும். கல்யாணம் காதுகுத்துன்னு போனாலும் போட்டோன்னா தெறிச்சு ஓடுவேன்.

      Delete