Tuesday, January 29, 2019

சோலோ பூரியின் கதை - கிச்சன் கார்னர்

பூரியை விரும்பாத பிள்ளைங்க உண்டா?! நமக்குதான் எண்ணெய் விலை, ஆரோக்கியம், செரிமானம்ன்னு ஆயிரம் பிரச்சனைகள் கண்முன் நிழலாடும்.  தீபாவளி, பண்டிகைன்னு வருசத்துக்கு  நாலு இல்ல ஆறு நாட்களுக்கு மட்டுமே இட்லி, தோசை சாப்பிட்ட தலைமுறை நாம. பூரி, சப்பாத்திலாம் வருசத்துக்கு ஓரிரு முறைதான். அதனால் இட்லி, தோசை, பொங்கல்ன்னு தினத்துக்கு ஒரு தினுசா செஞ்சு போட்டு போரடிச்சு போச்சுது. காலை வேளையில் இட்லி, தோசைதான் பெரும்பான்மையான வீட்டில். பூரியும், பொங்கலும் வாரக்கடைசில்ன்னு டைம் டேபிள் போட்டு வச்சு சாப்பிடும் காலக்கட்டமிது.
Image may contain: food
அரக்கோணம் டூ திருத்தணிக்கு இடைப்பட்ட வழியில் ஒரு கிராமத்தில் இருந்த காலக்கட்டம்.  அரக்கோணத்துக்கு வரும்போதெல்லாம் ரயில்நிலையத்துக்கு அருகில் சாய்ராம்ன்னு ஒரு ஹோட்டலுக்கு அப்பா கூட்டி போவார். மாடியில் இருக்கும் ஹோட்டல் அது. எப்பயுமே சோலா பூரிதான் வாங்கி கொடுப்பார். சுடச்சுட ஆவிப்பறக்க பூரி வரும். என்ன இருந்தாலும்  பட்டிக்காடாச்சே! உடனே! டொப்புன்னு தட்ட பூரிக்குள் இருக்கும் சூடான ஆவி கையில் பட்டு கொப்புளம்லாம் எழும்பி இருக்கு. இப்பயும் எங்க போனாலும் மாலை நேரம்ன்னா சோலா பூரிதான். 

சமைக்க ஆரம்பிச்சபின் அதேமாதிரி பூரி செய்ய முயன்று பலமுறை தோத்து போய் நின்னிருக்கேன். ஒரு பத்து வருசத்துக்கு முந்திதான் அந்த மாதிரி புசுபுசுன்னு எழும்பும் பூரி ரகசியத்தை தெரிஞ்சுக்கிட்டேன்.  ஆனா, சோலோ பூரி சோலா பூரி ஆன கதையை அதுக்கு பிறகுதான் தெரிஞ்சுக்கிட்டேன். அதாவது பூரின்னு கேட்டா ஒரு தட்டில் ரெண்டு பூரி, கிழங்கு கொடுப்பது வழக்கம். ரெண்டு பூரிக்கான மாவை திரட்டி ஒரே பூரியா சுட்டு கொடுக்குற பூரியை சோலோ(solo) பூரின்னு சொல்வாங்க.Soloன்னா ஒன்னுன்னு நான் சொல்லித்தான் தெரியனுமா?! அந்த சோலோ பூரிதான் சோலா பூரியாகி இப்ப சோழா பூரியாகி நிக்குது. அது என்னடா சோழா பூரின்னா ல வுக்கும், ழ வுக்கும் வித்தியாசம் தெரியாம சொல்றாங்கன்னும், சோழர்கால கண்டுபிடிப்பும்ன்னு கலர்கலரா ரீல் விடுறாங்க. அடேய்களா! உங்க தமிழ், வரலாறு அறிவில் தீய வைக்க! 

கடையில் இருக்க மாதிரி புசுபுசுன்னு எழும்பும் பூரியும் அதுக்கு தொட்டுக்க உருளைக்கிழங்கு மசாலாவின் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்..
பூரிக்கு...
மைதா
கோதுமை மாவு
ரவை
உப்பு
எண்ணெய்,
சர்க்கரை ஒரு துளி

உருளைக்கிழங்கு மசாலாவுக்கு....
உருளைக்கிழங்கு
வெங்காயம்
தக்காளி
பச்சை மிளகாய்
காய்ந்த மிளகாய்
சீரகம்,
மஞ்சப்பொடி,
கடுகு
கறிவேப்பிலை, கொத்தமல்லி
உப்பு

ஒரு அகலமான பாத்திரத்தில் முக்கா பங்கு மைதா, கால் பங்கு கோதுமை, 10% ரவை, கொஞ்சம் சர்க்கரை, உப்பு, எண்ணெய் சேர்த்து நல்லா கலந்து விட்டு தண்ணி சேர்த்து பிசைஞ்சுக்கனும். ரொம்ப கெட்டியா இல்லாம பிசைஞ்சுக்கனும். ஒரு இறுக்கமான டப்பாவில் போட்டு அரை மணி நேரம்வரை ஊற விடனும். 

உருளைக்கிழங்கை கழுவி ரெண்டா, நாலா வெட்டி மஞ்சப்பொடி, உப்பு சேர்த்து வேகவிடனும். வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கனும். ப.மிளகாயை கீறி வச்சுக்கனும்,  தக்காளியை பொடிசா வெட்டிக்கனும்..


அடுப்பில் வாணலியை வச்சு எண்ணெய் காய்ந்ததும், கடுகு சீரகம் போட்டு பொரிய விடனும்.
பொரிஞ்சதும் கடலை பருப்பை போட்டு சிவக்க விடனும்..
காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய்  போட்டுக்கனும். மறக்காம போடுங்க. நான் ப.மிளகாய் போட மறந்துட்டேன்.
வெங்காயம் சேர்த்து வதக்கிக்கனும். உப்பு சேர்த்துக்கிட்டா சீக்கிரம் வதங்கிடும்.
மஞ்சப்பொடி சேர்த்துக்கனும்..
கொஞ்சமா இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக்கனும்...
தக்காளி சேர்த்து நல்லா வதக்கனும்..
தேவையான அளவுக்கு தண்ணி சேர்த்து கொதிக்கவிடனும்..
வெந்து மசிச்சு வச்சிருக்கும் உருளையை சேர்த்துக்கனும்.

கறிவேப்பிலை கொத்தமல்லியை போட்டுக்கனும்.. கொஞ்சம் கெட்டிப்பட்டதும் அடுப்பிலிருந்து இறக்கிட்டா உருளைக்கிழங்கு மசாலா ரெடி.
வாணலில தேவையான அளவுக்கு எண்ணெய் சேர்த்து காய வச்சு மாவை மீண்டுமொருமுறை பிசைஞ்சு பிடிச்ச அளவுக்கு வட்டவடிவில் தேய்ச்சு எண்ணெயில் போட்டு ரெண்டு பக்கமும் திருப்பி விட்டு எடுத்தா பூரி ரெடி. 
மாவை ஒரே தடிமனில் தேய்ச்சா பூரி நல்லா எழும்பி வரும். இல்லன்னா எழும்பாது. தேய்க்க வராதவங்களுக்கு இப்ப பூரி அமுக்குறதுன்னு மார்க்கெட்ல வந்திருக்கு. அதிலும் நல்லா வருது. மாவை கெட்டியா பிசையாம, ஒரே தடிமனில் மாவை அழுத்தி சுட்டா பூரி எழும்பும். சோலோ பூரி செய்யனும்ன்னா அதிக்கப்படியான எண்ணெய் வேணும். அதனால் சாதா பூரிதான் எப்பயும். :-( மாவு பிசையும்போது கொஞ்சூண்டு தயிரும், ஆப்பசோடாவும் சேர்த்துக்கிட்டா ஹோட்டல்ல கிடைக்குற மாதிரி சோலோ பூரி கிடைக்கும்.


பிள்ளைகளை சாப்பிட வைக்கவும், பாக்சுல போட்டு அனுப்பவும் குட்டி குட்டியா பானிப்பூரி மாதிரி சுட்டு, இப்ப வீட்டுக்கு வரும்போது குட்டி பூரி வேணும்ன்னு வளர்ந்துட்டாலும் கேட்டு வாங்கி சாப்பிடுதுங்க.  அதேமாதிரி சுட்டு கொடுக்க சொல்லுதுங்க.  அம்மாக்களுக்கு மட்டுமே எப்பயும் ரிட்டைர்மெண்ட் கிடையாது போல! 

நன்றியுடன்,
ராஜி

20 comments:

  1. பார்த்தாலே கண்ணைக் கட்டுதே...!

    ReplyDelete
    Replies
    1. நல்லாவே இருக்கும்ண்ணே

      Delete
  2. சாப்பாடைப் பார்த்தாலே ஓடி வந்துருவோம்ல...ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பந்திக்கு முந்திக்கனும்ல்ல!

      Delete
  3. சோலே பூரி நிறைய மைதாதான் சேர்ப்பாங்க.... நீங்க சொல்லிருக்காப்ல. ஹோட்டல்ல சோடா உப்பு தயிர் சேர்த்துக்குவாங்க.

    பூரினா நான் கோதுமை மாவுலயே (கொஞ்சம் ரவை சேர்த்து) செய்யறதுதான். பூரி எப்பவுமே பலூன் பூரி போல வரும். அப்படியே மிதக்கும்...எண்ணெயும் குடிக்காது.

    நீங்க சொல்லிருக்கற பூரியும் செய்வென்...

    இதே தான் பஞ்சாபி பட்டூரே... ஒன்லி மைதா தயிர், சோ உப்பு....இத்யாதிகள் போட்டு பெரிசா பொரிப்பது.

    எனக்குத் தெரிஞ்சு நார்த்ல சோலே பட்டூரேன்னு சொல்லுறது அவங்க பட்டூராவோடு சோலே அதாவது கொண்டைக்கடலை மசாலா க்ரேவி காம்பினேஷன்....அதுதான் சோலே பூரினு இங்க ஹோட்டல்ல பூரி வித் சன்னா மசாலா அபப்டித்தான் சோலே பூரின்னு வந்திருக்குன்னு ஏன்னா சோலே பூரினு கொடுக்கும் போதுதான் அவங்க மைதை ல செய்யறாங்க. நார்மல் பூரி மசாலா அதான் பூரி வித் உருளைக்கிழங்கு மசாலா அது கோதுமை மாவு.....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. குறிப்பா பஞ்சாப் ஃபேமஸ் சோலே பட்டுரேக்கு...

      கீதா

      Delete
    2. இதுவும் ஒரு பெயர்காரணமாய் இருக்கும்போல!

      Delete
  4. சாப்பாட்டு நேரத்தில் இதென்ன சோதனை! இந்தப் படங்களை பார்த்துவிட்டு நான் போய் சாம்பார் சாதமும் மோர் சாதமும் சாப்பிடவேண்டும்! ஆனால் சோலேபட்டூராவுக்கு சென்னா மசாலாதான் கடைகளில் தருவார்கள்!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் அதான் ருசிக்கும் மத்தபடி உருளைக்கிழங்கு, வடைகறிலாம் செட் ஆகாது

      Delete
  5. எங்கள் வீட்டில் பூரி எப்போதாவது ஒருமுறைதான் "பூரி"த்து வரும்!

    ReplyDelete
    Replies
    1. இங்க எப்பவுமே ‘பூரி’ப்புதான்

      Delete
  6. முதல் படத்தை பார்த்தவுடன் , இப்ப அந்த பூரி நம் முன்னே இருந்து என்னை சாப்பிடு என்று சொல்லாதா என்று நினைக்கத்தோன்றுகிறது

    ReplyDelete
    Replies
    1. ஃப்ளைட் புடிச்சு வாங்க. வயிறு நிறைய சாப்பிடலாம்

      Delete
  7. நானும் ஒரு காலத்தில் சோலா பட்டூரா நன்றாகச் செய்வேனாக்கும்

    ReplyDelete
    Replies
    1. இப்ப செய்வதில்லையா?! காரணமென்னவோ?!

      Delete
  8. எங்க வீட்டில் இரு வாரத்திற்கு ஒரு முறை க்கா...

    படங்கள் சூப்பரா சுவையா இருக்கு ....

    ReplyDelete
    Replies
    1. இங்க வாரம் ஒருக்கா...

      Delete
  9. வடக்கில் சோளே பட்டூரே எனக் கிடைக்கும். அதன் அளவு சுவை இந்த சோலா பூரி சுவை இருக்காது.

    ReplyDelete
  10. ஆள் ஆளுக்கு ஒரு பூரி பேர் சொல்றீங்க. :-) எப்படியோ தலைப்பை சோலார் பூரி என்று ரெஜிஸ்டர் பண்ணிட்டு, லூனா மாதிரி இருக்கிறதுக்கு எதுக்கு இப்பிடிப் பேர் வைச்சாங்கன்னு யோசிச்சிட்டே பாதி படிச்சாச்சு. திரும்ப ரிவர்ஸ்ல போய் ஒழுங்கா படிச்சேன். :-) எனக்கும் பூரி பிடிக்கும். சாப்பிட்டு நிறைய வருஷம் ஆச்சு. ஒரு பார்சல் ப்ளீஸ்!

    ReplyDelete
  11. சோலாப்பூரி தக்குனூண்டுக்கு இருக்கு. அது ரொம்ப பெரிசாவுல்ல இருக்கும்....

    படத்துல சாதா பூரி மாதிரியும் இருக்கு, சோலோபூரியோட சேர்ந்து பிறந்த குழந்தை மாதிரியும் இருக்கு.

    சோலோபூரிக்கு பூரி மசால் நல்லாவே இருக்காதே.... அதுக்கு சென்னா தானே செட் ஆகும்?

    ReplyDelete