Thursday, January 03, 2019

பிளாக்கரென சொல்வோம்.. தலைநிமிர்ந்து நிற்வோம்

பக்கம் பக்கமா படிக்குறதிலிருந்து இன்னிக்கு விடுதலை... நெட்டில் பார்த்து,ரசித்து கோவப்பட்டதின் பகிர்வு. 
ஃபேஷன்ன்ற பேரில் இன்னும் என்னலாம் பார்க்கனுமோ?!


\
 கடனாலும், கன்னித்தீவினாலும் கடுமையாய் பாதிக்கப்பட்டிருப்பார் போல!


கவனத்தில் கொள்வோம்..

 
பக்திக்கும் பைத்தியத்துக்கும் நூலிழைதான் வித்தியாசம். ஒரு வயசு குழந்தை, அம்மாவை பிரிஞ்சு, சரியான உணவு, உறக்கமின்றி, கடுங்குளிரில் சரியான உடை இல்லன்னா எத்தனை கஷ்டப்படும்ன்னு உணர வைக்கவிடாத பக்தி என்ன பக்தியோ?! இந்த படத்தை பார்த்தபிறகு கோவம்தான் வந்ததே தவிர புல்லரிப்பு வரல. குழந்தையின் கண்ணில் அத்தனை பயம் :-(

பழைய ஓலைப்பெட்டி இப்ப கடைகளில்...  சின்ன வயசில் திருச்செந்தூர் அச்சு வெல்லத்தை அப்பா வாங்கிவரும்போது இந்த பெட்டிலதான் வரும். அதுல தலை க்ளிப், ரிப்பன், மை, பொட்டுலாம் வச்சிருந்திருக்கேன். ஆனாலும் இது எங்க ஊர்பக்கம் கிடைக்காது.  


தமிழன் எல்லாத்துலயும் முன்னோடிதான். இதுல மட்டும் விட்டுடுவோமா?!

கத்திரிக்கோல் இல்லன்னுதானே வாங்குறது!!!






சில வருசமா நம்மாளுங்க  ஃபேஸ்புக், யூடியூப், வலைப்பூ(பிளாக்)மாதிரியான டிஜிட்டல் தளங்களில் தங்களோட சிந்தனைகளையும், படைப்புகளையும் தாய்மொழியான தமிழிலேயே வெளிப்படுத்தி வர்றாங்க. . ‘இணையத்தில் இந்திய மொழிகளின் பயன்பாடு’ன்ற தலைப்பில் கடந்த ஆண்டு கூகுள் நிறுவனமும் கே.பி.எம்.ஜி. (KPMG) நிறுவனமும் இணைந்து ஓர் ஆய்வை நடத்தியது. அதில், இணையத்தில் பகிரப்படும் இந்திய மாநில மொழியிலான உள்ளடக்கத்தில் 42% தமிழ் என்ற அடிப்படையில் தமிழ் முதலிடத்தைப் பிடிப்பதாக ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. தமிழுக்கு அடுத்ததா 39% இந்தி வந்திருக்கு.  ஆனாலும் பிப்ரவரிக்கு முன்புவரை டிஜிட்டல் தொழில் உலக ஜாம்பவானான கூகுள் நிறுவனம் தமிழ்மொழியைத் தன்னுடைய அலுவல்மொழியா அங்கீகரிக்காம இருந்துச்சு.   2014- ல இந்தியையும், 2017-ல் வங்காளமொழியையும் அங்கீகரிச்ச கூகுள்  தமிழை ஏற்காமலேயே இருந்து வந்தது. ஒருவழியாக தமிழையும் அதிகாரப்பூர்வமா அங்கீகரிச்சிடுச்சு. கூகுள் இந்தியாவின்  கூகுள் மார்க்கெட்டிங் சொல்யூஷன்ஸின் இயக்குநர் ஷாலினி கிரிஷ், “இணையத்தைப் பயன்படுத்தும் பெருவாரியான இந்தியர்களுக்கு ஆங்கிலத்தில் புலமை இல்லை. ஆகவே, இந்திய மொழிகளை கூகுளில் இணைப்பதன்மூலம் பலருக்கு இணையத்தைக் கொண்டுசேர்க்கத் திட்டமிட்டோம். இந்த அங்கீகரிப்புக்கான விதைன்னு தமிழ் வலைப்பதிவுகளை பத்தி தன் பேட்டியில் சொல்லியிருக்கார். இன்று நேற்றல்ல 2006லேயே இந்தியைவிட தமிழ் அதிகம் பயன்படுத்தப்படிருந்ததை மேல இருக்கும் படம் காட்டுது. அதனால், இனி பிளாக்கர்ன்னு சொல்வோம்.. தலைநிமிர்ந்து நில்வோம்.
பிளாஸ்டிக் கவர்ல டீ, காபி வாங்கிட்டு போய் பழகிப்போன நம்மாளுங்க வெறுங்கையை வீசிக்கிட்டு வந்தால்  பிளாஸ்டிக் தடை பண்ணிட்டதால, டீக்கடையில் தூக்குவாளி தொங்கவிட்டிருக்கார்.  150ரூபாய் முன்பணமா கட்டிட்டு தூக்குவாளில காஃபி, டீ வாங்கிட்டு போய் திரும்ப கொண்டு வந்து கொடுத்துட்டு தூக்குவாளிக்கான பைசாவை திரும்ப  வாங்கிக்கலாமாம். . இன்னொருத்தர் பால்காரர், தன்கிட்ட பால்வாங்கும் வாடிக்கையாளருக்கு ஒரு லிட்டர் அளவிலான தூக்குவாளியை பரிசா கொடுத்திருக்கார். ரெண்டு பேரின் ஊர்பேர் நினைவில்லை. வாழையிலை தாமரை இலையில் பூக்கட்டி தரும் பாட்டி, மந்தாரை இலையில் பரிமாறப்படும் இட்லின்னு.. ஆக, மாற்றத்திற்கு மக்கள்லாம் தயாராகத்தான் இருக்காங்க.  மாற்றம் வந்தால் நல்லதுதான்.
கோர்ட், கேஸ், அடிதடி, காவல், 144ன்னு பல அமளிதுமளிகளுக்கிடையே 2 பெண்கள் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் பண்ணிட்டாங்க. உள்ள இருக்கும் அரசியல், ஐதீகம்லாம் விடுத்து, இந்த மீம் கவர்ந்தது. 96 படம் பார்த்தவங்களுக்கு இந்த மீம் என்னன்னு புரிஞ்சுடும். புரிஞ்சவன் பிஸ்தா, பாதாம், முந்திரி, துவரம்பருப்பு...
இந்த வீடியோ பார்த்ததும் பிடித்தது. அந்த பொம்மை நடந்து வரும் அழகு நிஜமனிதனை போலவே இருந்துச்சு, அதுலயும் அதோட பார்வை!!?? சான்சே இல்ல. இதை பொம்மைன்னு சொன்னா அந்த பொம்மையே நம்பாது.

அழகு இளமையில்தான் இருக்குன்னு யார் சொன்னது. நரைச்ச முடி, பொக்கைவாய் சிரிப்பு, தாத்தாவின் சிரிப்புன்னு பார்க்க, ரசிக்க வைத்தது இந்த கண் விளம்பரம்..

அடுத்த பதிவு  திரியம்பகேஸ்வரர் பத்தி பக்கம்பக்கமா படிக்க தயாரா இருங்க சகோ’ஸ்
நன்றியுடன்,
ராஜி

7 comments:

  1. அனைத்தையும் ரசித்தேன். தாத்தா காணொளி வெங்கட் பகிர்ந்தபோதே ரசித்தேன். அய்யப்பன் சம்பவம் ரசிக்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நான் கூமுட்டைன்னு ஊரு உலகம் சொல்லுறது சரிதான்போல! எங்கயோ பார்த்த நினைவு. ஆனா, அது வெங்கட் அண்ணா பிளாக்ன்னு மறந்துட்டேன் பாருங்க.

      Delete
  2. "ரஜினி, அரசியல் கட்சி தொடங்கும் வரை கடன் கிடையாது" என்றல்லவா பார்த்தேன்...!

    ReplyDelete
    Replies
    1. நான் என்ன பொய்யா சொல்றேன். ஆதாரத்துக்குதான் படமிருக்கே!

      அதுமில்லாம கன்னித்தீவு கதையும், ரஜினி அரசியல் கதையும் ஒன்னுதான்.

      Delete
  3. எல்லாமே நல்லாருக்கு ராஜி. கன்னித்தீவு கடன்...பாத்து சிரிச்சுட்டேன்...
    கண்ணீர் தண்ணீர் சரிதானே!!

    அந்த ஐ ஃபௌண்டேஷன் ல வர தாத்தா பாட்டி க்யூட் அது வெங்கட்ஜி தளத்துலயும் பார்த்து ரசிச்சோம்...

    கீதா

    ReplyDelete
  4. அனைத்தும் அருமை சகோதரி ராஜி.

    பொம்மை காணொளி ஏதாவது கலிவர் படத்துக்கானதா? கலிவர் போல இருக்கிறதே அந்த பெரிய பொம்மை.

    படங்கள் உங்கள் கமென்ட்ஸ் எல்லாம் ரசித்தோம்

    துளசிதரன்

    ReplyDelete
  5. வித்தியாசம் ....

    ReplyDelete