Tuesday, June 11, 2013

இதுதான் காதலென்பதா?!

   
என் தனிமையின்
போதெல்லாம்-நம்
இதழ் வருடிய வார்த்தைகளையே
அசைப்போடுகிறதே இதுதான் காதலா?

மற்றவர்கள் கேலியில் நீ
அகப்பட்டுக் கொண்டால்-என்
அகம் வதைப்படுகிறதே அதுதான் காதலா?

இமைகளின் இயக்கம்
நிறுத்தி-நீ
உலவும் இடங்களில்
உனையே தேடல்
கொள்கிறதே விழிகள்
இதுதான் காதலா?

அருகினில் நீ இல்லாதபோதும்
உன்னுடன் உறவாடி மகிழ்கின்றேனே
இதுதான் காதலா?

எனக்காக நீ தந்தவைத் தவிர்த்து
சுவாசக் காற்று உட்பட-நீ
வருடிய அனைத்தையும் சேகரிக்கின்றேனே
இதுதான் காதலா?

யார் கேட்டும் இல்லை என்ற  ஒன்றை
நீ கேட்க நினைக்கும்போதே
 கொடுக்கத் தோன்றுகிறதே
அதுதான் காதலா?

பிரிவுகள் நேரும்போது
ஏதோவோர் உணர்வு- நம்
விழிகளில் நீர் நிரப்பிச்  செல்கிறதே
அதுதான் காதலா?

ஊரே நம்முறவை
காதலென்றபோது
நீ மட்டும் மறுக்கிறாயே
நாங்கள் நண்பர்களென்று.....,

எது காதல் தெரியவில்லை
இந்நிகழ்வுகள் அனைத்தும்
நட்பிலும் சாத்தியமென்பதால்...,

12 comments:

  1. வரிகள் அருமை ஆனால் சரணம் கொஞ்சம் காதலின் வலிமையை குறைத்து மதிப்பீடு செய்வது போல இருக்கிறது ..மற்றபடி கவிதை அருமை

    ReplyDelete
  2. அப்படியே பிரமித்து நிற்கிறேன்..

    ReplyDelete
  3. யார் கேட்டும் இல்லை என்ற ஒன்றை
    நீ கேட்க நினைக்கும்போதே
    கொடுக்கத் தோன்றுகிறதே :)

    ReplyDelete
  4. ஆஹா..பழைய நினைவுகளோ?

    ReplyDelete
  5. அருமை அருமை
    இதுதான் காதல் சரியான விளக்கம் என
    எண்ணிக் கொண்டு வருகையில் சட்டென
    இறுதியில் நட்பினையும் இணைத்துச் சொன்னதை
    மிகவும் ரசித்தேன்
    இரண்டும் ஒன்றுதான் ஆயினும்
    ஒன்று இருக்குமிடத்தில் ஒன்று இருக்காது
    எனபதும் நிச்சயம்தானே
    ஆழமான சிந்தனையுடன் கூடிய அற்புதமான கவிதை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. இதெல்லாம் காதலா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன். அப்ப இது என்ன என்று கேட்கிறீர்களா? இது எல்லாம் காதல் வரும் சமயத்தில் நம் மனதில் தோன்றும் உளரல்கள். இந்த உளரல்கள் மிக அருமையாகவும் இனிமையாகவும் இருக்கும் காதலிப்பவர்களுக்கும் காதலில் விழாமல் இருப்பவர்களுக்கும் ஆனால் காதலில் விழுந்து கல்யாணமாகி போனவர்களுக்கு உளரல்களாக தெரியும் .

    ஆமாம் சகோ நீங்கள் காதலில் விழுந்து வீட்டீர்களா? ஆமாம் எங்க வீட்டுகாரமேல்தான் அந்த காதல் என்று எல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டாம். அப்படி சொன்னா கல்யாணம் ஆன முதல் அவரை காதலிக்க வில்லையா என்று கேள்வி வரும்


    இந்த சகோ நம்பளை வம்பில் மாட்டிவிடுவானோ என்று நினைக்காதீர்கள் சும்மா வம்புக்குதான் இப்படி ஒரு கருத்து. உங்களை இப்படி காதல் கவிதையை எழுத தூண்டியது பதிவாளர் சீணுதானே அவர் போட்டி வைத்தாலும் வைத்தார். அந்த போட்டியில் வெல்வதற்காவே பெண்கள் இப்படி காதலில் (கற்பனையில்) விழுந்து இருக்கிறாரகள் என்பதுதான் சரி.

    ReplyDelete
    Replies
    1. இதுல வம்பென்ன இருக்கு? என் அப்பா விலிருந்து ஆர்ம்பிச்சு.., பக்கத்து வீட்டு அண்ணா, எதிர்வீட்டு மாமா.., பிடி சார்ன்னு போய் வீட்டுக்காரர் வரை வந்து நிக்கும் நான் காதலித்த நபர்கள்

      Delete
  7. அருமை..... இது தான் காதலென்று கூறிவிட முடியாதது காதல் தானே!.....

    ReplyDelete