Friday, August 02, 2013

சிங்கபெருமாள் கோயில் - புண்ணியம் தேடி ஒரு பயணம்



இன்னிக்கு  புண்ணியம் தேடி போற பயணத்துல  நாம பார்க்கப் போறது திருக்கழுகுன்றம் போயிட்டு  திரும்பி வரும் வழியில் செங்கல்பட்டு லிருந்து சென்னை செல்லும் வழியில் இருக்கும் சிங்க பெருமாள் கோவில் பஸ் நிறுத்தத்தில் இறங்கினால் பக்கத்திலே இருக்கும் கோவில் அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் திருக்கோயில்.


மூலவர் பாடலாத்ரி நரசிம்மர்
உற்சவர் பிரகலாதவரதர்
அம்மன்/தாயார்  அஹோபிலவல்லி
தல விருட்சம்    பாரிஜாதம்
தீர்த்தம் சுத்த புஷ்கரிணி

கோவிலின் முகப்பு நுழைவாயிலை தாண்டியவுடன் காணப்படும் வெளி பிரகாரம் 
 

கோவில்முகப்பில் சதுரம் கட்டு சதுரம் என்ற அமைப்பில் 2முழு தூண்களும் சுவரை ஓட்டி  2  தூண்களும் காணபடுகின்றன

கோவிலுக்குள் நுழைந்தவுடன் வெளிப்புற சுற்று மலை சுற்றாக அமையும் கோவிலின் வெளிப்புறத்தில விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் சிலை மேனிகளாக காணபடுகின்றன.பக்கவாட்டு சுவரில் ஸ்தல வரலாறு குறிக்கப்பட்ட குறிப்பும் காணபடுகின்றது 


அதை தாண்டி ஆலய மண்டபத்திற்கு வந்தால் மூலவர் உற்சவர் சன்னதிக்கு போகும் வழி காணபடுகிறது

அதன் வழியாக மூலவராகிய நரசிம்மர் சுகாசனத்தில் நான்கு கைகளில் கதையுடனும்,  வல பின்கையில் சக்கரமும்,  இட பின்கையில் சங்கும் கொண்டு,  வல முன்கை காக்கும் முத்திரையிலும்,  இடதுகை முன் தொடையிலும் அமைந்தவாறு,  வலது காலை மடித்துக் கொண்டு,  கீழே நீட்டபடுள்ள  இடது காலை தாமரை மலர்மேல் வைத்துக் கொண்டு "த்ரிநேத்ரதாரியாய்'' (மூன்று கண்களுடன்) திருமார்பில் மகாலஷ்மியோடு, சாளக்கிராம மாலை, ஸஹஸ்ரநாத மாலை மற்றும் லஷ்மிஹாரங்நாம மாலை மற்றும் லஷ்மி ஹாரங்களுடன் கிழக்கு நோக்கி கம்பீரமாக காட்சி தருகிறார்.

பாடலாத்ரி நரசிம்மரின் உற்சவரின் திருப்பெயர் ஸ்ரீ பிரகலாத வரதர் ,ஸ்ரீ தேவி ,பூதேவி உடன் காணபடுகிறார்  வரதரின் பின் கைகள் சங்கு சக்ரம் ஏந்திய நிலையில் வலக்கை காக்கும் அமைப்புடனும் இடக்கை கதையுடனும் தேவியர் ஒருகையை நெகிழ்வாகவும் மற்றொரு கையில் மலர்களை கொண்டுள்ளனர்


எல்லாம் தரிசித்துவிட்டு வெளிவாயிலுக்கு வரும் போது,  நமக்கு பிடித்தமான கோயில் பிரசாதங்கள் புக் மற்றும் பாடல்கள் எல்லாம் கொண்ட ஸ்டால் இருக்கு.  அதையெல்லாம் பார்த்துட்டு எஸ்கேப் ஆக பார்த்த என்னை ஒரு முறை முறைச்சு  பிரசாதம் வாங்க வச்ச பிறகுதான் என்னை வெளிலயே விட்டார் ஸ்டால் ஓனர். பின்னே, பதிவை தேத்த அவரை பிடிச்சு அரை மணி நேரம் பிளேடு போட்டு எதும் வாங்காம போனா, முறைக்காம என்ன பண்ணுவார்!!  

ஒரு பெரிய பாறை மேல  இந்த கோவில் இருக்கு. அந்த பாறை மேல ஏறிக்கிட்டே  இந்த கோவிலின் ஸ்தல வரலாறை சிறிது பார்ப்போமா?! 


 மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அநேகமாக நரசிம்ம  சுவாமி எல்லா முக்கிய திருத்தலங்களிலும் பல ரூபத்தில் எழுந்தளியிருக்கிறார். இறைவன் தூணிலும் இருப்பான், இரும்பிலும் இருப்பான். அவன் தான் மேலான தெய்வம். ஆகையால் பலராலும் வற்புறுத்தியும் பிரகலாதன் தன் தந்தையான இரணியனை கடவுளாக ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் இரணியனானவன் சாகாவரம் பெற்றிருந்தான். இறப்பு என்பது அவனுக்கு பகலிலும் நேரக்கூடாது. இரவிலும் நேரக் கூடாது, வீட்டின் உள்ளேயும், வெளியேயும் நேரக்கூடாது. வெளியேயும் நேரக் கூடாது.ஆகாயம், பூமி, நெருப்பு, நீர், காற்று இவற்றினாலும் இறப்பு கூடாது. ஆயுதம், மிருகம், மனிதன் எதனாலும் தனக்கு இறப்பு வரக்கூடாது என்ற மிகப் பெரிய சாகா வரத்தை பெற்றிருந்தான்


பிரகலாதன், இறைவன் தனக்கு காட்சி கொடுக்க வேண்டும் என்று பிரார்த்திக்கவில்லை. ஆனால் மகாவிஷ்ணுவானவர் சிறுபாலகனின் ஆணித்தரமான "இறைவன் எங்கும் உள்ளான்'' ன்ற சொல்லை நிலை நாட்டுவதற்காகவும், மெய்ப்பிக்கவும் மாலை வேளை துவாரப்ரதேசத்தில் (வாயிற்படியில்) நரமிருக ரூபியாய் (மனித உடல் சிங்கமும்) அவதாரம் செய்து நரங்களினாலே இரணியனை ஸம்ஹாரம் (வதம்) செய்தார்.


அதுசமயம் அவர் (மஹா உக்ரத்தில்) பெருஞ்சினத்துடன் மூன்று கண்களுடன் காணப்பட்டார். இத்திருக்கோவிலைச் சுற்றி அடர்ந்த காடு இருந்தது. அந்தக் காட்டில் ஸப்த (ஏழு) ரிஷிகளுள் ஒருவரான ஜாபாலி இறைவனை நேரில் காண வேண்டி தவமிருந்தார். அவரின் வேண்டுக்கோளுக்கிணங்கி இரணியனை ஸம்ஹாரம் செய்த திருக்கோலத்துடன் உக்கிர நரசிம்மராக அதே கோபத்துடன் இந்த திருத்தலத்தில் சிறு குகையினுள் காட்சி கொடுத்ததாக  புராணத்தில் விரிவாகவும் சிறப்பாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த கோவில் 2000 வருடங்கள் பழமை வாய்ந்த குடவரை கோவிலாகும். இதில் கிழக்குமுகமாக அமையபெற்ற ஒரு தள கோபுரம் ஒரு பாறையின் மீது அமைக்கப்பட்டுள்ளது


சுவாமி குகைக்குள் வீற்றிருப்பதால் கோவிலை வலம் வருபவர்கள் சுமார் நூறு படிக்கட்டுகள் கொண்ட சிறு குன்றினையும் சேர்த்து தான் வலம் வரவேண்டும் ஆகையால் இக்கோவிலுக்கே உரித்தான த்ரிநேத்ர தரிசனம், கிரிவலம் இக்கோவிலின் சிறப்பாகும்.


தெய்வீக அதிசயகுணம் படைத்த அழிஞ்சல் மரம் இதன் சிறப்பு நாச்சியார் திருமொழியின் விரிவுரையில் 44-வது பாசுரத்தில் விளக்கப்பட்டுள்ளது. மணமாகாதவர்களும்,  குழந்தை பேறு இல்லாதவர்களும்,  மாமேதை ஆகும் எண்ணம் உள்ளவர்களும்( இந்த மூணுல எதுமே செட்டாகலையே! அப்புறம் நீ ஏன் போனேன்னு கமெண்ட்ல கலாய்க்க கூடாது!!. ) தாங்கள் அணிந்திருக்கும் ஆடையிலிருந்து ஒரு சிறு துண்டு கிழித்தெடுத்து இம்மரத்தின் கிளையில் எம்பெருமானை நினைத்து ஒரு நுனியில் கட்டி மரத்தின் அடியில் மஞ்சள், குங்குமம் பூசி, நெய் விளக்கேற்றி அர்ச்சனை செய்தால் அருள்கிட்டும். இது மகான்கள் கண்ட உண்மை. தெய்வாம்சம் பொருந்திய மரம் கோவில் கிரி பிரதட்சிணத்தில் மேற்கு பக்கத்தில் அமைந்துள்ளது.


இங்கு காது குத்தல், மொட்டை அடித்தல், கல்யாணம், துலாபாரம், விசஷே அபிஷேக ஆராதனைகள் எனப் பக்தர்கள் பல்வேறு பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றனர்.

ஜாபாலி மகரிஷி நரசிம்மரின் தரிசனம் வேண்டி இத்தலத்தில் கடும் தவம் இருந்தார். இவரது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் பிரதோஷ வேளையில் மகரிஷிக்கு தரிசனம் தந்தார். இதன் அடிப்படையில் இத்தலத்தில் பெருமாளுக்கு பிரதோஷத்தன்று திருமஞ்சனம் நடக்கிறது.


மலையை சுற்றி வருபோது மேலே ஒரு பலிபீடம் அமைந்துள்ளது அங்கே இருந்து பார்த்தல் கோவிலின் கொடிமரம் மலைகளின் பினனணியில் அழகாக காட்சி தருகிறது   


மார்கழி, தை மாதங்களில் நரசிம்மரின் திருவடியிலும், ரத சப்தமி நாளில் நரசிம்மரின் உடலிலும் சூரிய ஒளி படுகிறது. எனபது சிறப்பம்சம்.பின் நாம் படி இறங்கி வரும்போது நேரே இலட்சுமி நரசிமர் வீற்று இருக்கிறார்




இறைவனின் இடது தொடையில்  அமர்ந்து இருக்கிற லட்சுமி தேவியின் இடது கையில் தாமரையும் வலக்கை நரசிம்மரின் இடுப்பை சுற்றிய நிலையில் காணபடுகிறது  நரசிம்மரின் பின்கைகள் சங்கு சக்கரம் ஏந்த வலமுன் கை காக்கும் குறிப்பில் உள்ளது இட முன்கை இறைவியை அணைத்தவாறே காணபடுகிறது 


அவரை வழிபாட்டு மலைசுற்றை முடித்து கீழே வரும்போது ஒரு மண்டபம் காணபடுகிறது.
 

அதில் அன்னதானம் தினமும் நடைபெறுகிறது நாங்கள் செல்லும்போது அன்னதானம்  நடைபெற்று கொண்டிருந்தது . ஒரு கட்டு கட்டியாச்சு. எங்க போனாலும் நம்ம காரியத்துல கண்ணாயிருப்போமில்ல!!


கோவிலை விட்டு வெளியே வரும்போது கோவிலின் வெளியே ஒரு நாற்கால் மண்டபம் காணபடுகிறது அதுபற்றிய தகவல்களை பெறமுடியவில்லை  



இத் திருக்கோவில் காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
கோவிலின் வெளிப்புறம் பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைகின்றன நாங்களும் நல்லபடியாக நரசிம்மரை தரிசித்து அவரின் அருளை பெற்று வந்து  உங்களுக்கும் பகிர்ந்து விட்டேன் இந்த தலத்தை சுற்றி  இன்னும் இரண்டு, மூன்று  அழகிய கோவில்கள் இருப்பதால் தொடர் பதிவா வரும். அடுத்த வாரம் வேறொரு கோவில் பற்றி பார்க்கலாம்.

36 comments:

  1. சகோ என்ன ஆச்சு உங்களுக்கு? கோயில் குளமுன்னு ஏறி இறங்கிரீங்கோ? எல்லாம் பேரன் பேத்தி எடுத்த பின் இப்படி ஸ்தல யாத்திரை போவார்கள் ஆனால் இந்த சின்ன வயதில் இப்படி "ஞானப்பழமாக" மாறிவீட்டடீர்கள்

    ReplyDelete
    Replies
    1. மொக்கை போட்டு உங்க உயிரை எடுக்குறேனே!! அதுக்கு பிராயசித்தம் தேட வேண்டாம்!! அதுக்குதான்!!

      Delete
  2. வெள்ளிக்கிழமையான புண்ணியம் தேடி புறப்பட்டு விடுகிறீர்கள் போல...

    ஆலய அறிமுகம் அருமை...

    ReplyDelete
  3. கோவில்களின் உங்கள் பயணம் தொடரட்டும் ..
    //இங்கு காது குத்தல், மொட்டை அடித்தல், கல்யாணம், துலாபாரம், விசஷே அபிஷேக ஆராதனைகள் எனப் பக்தர்கள் பல்வேறு பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றனர்.// உங்கள் பிரார்த்தனை நிறைவேறியதா

    ReplyDelete
    Replies
    1. என் பிரார்த்தனை நீண்ட கால பிராசஸ். அதனால கொஞ்சம் லேட்டாகும்ன்னு சாமி சொல்லிடுச்சு.

      Delete
  4. Very nice. Explanations with good photography. Please continue your temple(s) tour.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக தொடரும்....,

      Delete
  5. இறைவன் தூணிலும் இருப்பான், இரும்பிலும் இருப்பான். அவன் தான் மேலான தெய்வம்.

    தூணிலும் துரும்பிலும் இருக்கும் இறைவனைப் பதிவிலும் பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுகளுக்கு நன்றி அம்மா!

      Delete
  6. ஆலயதரிசனமும் பகிர்வும் சிறப்பு! படங்கள் அழகுசேர்த்தன! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தொடர்கிறேன். பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி!

      Delete
  7. நரசிம்மர் தரிசனம் அருமையாக அமைந்தது.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  8. அழகிய கோயில். தர்சனம் பெற்றுக்கொண்டோம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  9. இந்த ஊர்க்கு பக்கத்துல இருக்கிற மகிந்திரா வோர்ல்டு சிட்டில தான் ஒரு ஆறு மாசம் இருந்தேன்.போகணும் தோனுச்சு... சின்ன கோவிலா இருக்குமோ அப்படின்னு போகல...
    ஆனாலும் இப்படி கோவில் குளமா சுத்துர பார்த்தா ஏதோ தீராத வேண்டுதல் இருக்கும் போல...

    ReplyDelete
    Replies
    1. ஆமா! என் தம்பி ஜீவாக்கு நல்ல புத்தி குடு ஆண்டவா!!ன்னு வேண்டுதல்

      Delete
  10. படங்கள் ஒவ்வொன்றும் மிகவும் அருமை... தரிசனம் கிடைத்தது...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி அண்ணா!

      Delete
  11. நல்ல படங்கள். கோவில் பற்றிய தகவல்களும் நன்று.

    இந்த வழியே பலமுறை சென்றிருந்தாலும் கோவிலுக்குச் சென்றதில்லை.

    ReplyDelete
  12. யக்கோவ்.... இருபத்துமூணு போட்டோ.... உங்க சைட் திறக்கறதுக்கே அஞ்சு நிமிஷம் ஆச்சு.... போட்டோக்களையும் அதோட சைசையும் கொஞ்சம் குறைச்சுக்குங்க... முடியல...

    ReplyDelete
    Replies
    1. இனி இந்த சிரமம் நேராம பார்த்துக்குறேன் சகோ!

      Delete
  13. Replies
    1. இனி குறைச்சுக்குறேன்.

      Delete
  14. எனக்கும் ஆன்மீகத்திற்கும் சற்று தூரம் என்றாலும், உங்கள் தலத்தில் உள்ள படங்கள் லோட்ஆக சற்று நேரம் எடுக்கிறது. சைஸ் அல்லது படங்களை குறைக்கப் பாருங்கள்.

    நான் எழுதிய தொடர் பதிவு http://rubakram.blogspot.com/2013/08/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா இனி படங்களை முடிந்த வரை குறைத்து படத்தின் அளவையும் குறைச்சுடுறேன். சிரமத்துக்கு மன்னிக்க.

      Delete
  15. சில வருடங்கள் மறைமலைநகரில் குடியிருந்திருந்தாலும் இந்தக் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு அமைந்திருக்கவில்லை. இங்கு உங்கள் பதிவின் மூலம் கோயிலை தரிசித்த திருப்தி. தகவல்களுடன் அழகான புகைப்படங்களையும் பகிர்ந்தமைக்கு நன்றி ராஜி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க கீதா!!

      Delete
  16. இந்த ஊருக்கு நான் நிறைய தடவை போயிருக்கிறேன்,, கோவில் பற்றி அறியவில்லை, தெரிய படுத்தியதற்கு நன்றி,,,, அடுத்த முறை போகும் போது போயிட்டு வரேன்..

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாய் பார்க்க வேண்டிய தலங்களுள் ஒன்று, மலையை சுற்றிய இயற்கை அழ்கு மனசுக்கு இதம் தரும் கருண்!

      Delete
  17. அருமையான அழகிய படங்களுடன் அசத்தி இருக்கிறீர்கள். உங்கள் ஆலய தரிசனம் தொடரட்டும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. படங்கள் எல்லாம் அருமை.

    ஆயிரம் படிகள் என்றதால் கொஞ்சம் யோசனைதான். எதிரில் இன்னொரு மலையில் ஆஞ்சநேயர் இருக்காராமே!

    அவரையும் எழுதுதுங்கள். நான் இங்கிருந்தே ஸேவிச்சுக்கறேன்.

    ReplyDelete
  19. நிறைய படங்களுடன், நல்ல விளக்கங்கள்..... அருமை....புண்ணியம் எங்களுக்கும், உங்களுக்கும் !

    ReplyDelete
  20. துளசிமா, நூறுபடிகள் தான் பா. நீங்க நினைச்சுண்டு இருக்கிறது சோளிங்கர்.
    அங்கதான் ஆஞ்சனேயர் ஒரு மலாஐயிலும் யோக நரசிம்மர் இன்னோரு மலையிலும் இருக்கிறார்கள்.
    அதுவும் சங்குசக்கரம் ஏந்தின அனுமான்!!
    ராஜி விவரமாக எழுதி இருக்கிறீர்கள்.
    கோவில் எதிராப்பில இருக்கிற மண்டபத்தில் ஸ்வாமியின் உற்சவர் ,விழாக்காலங்களில் எழுந்தருளுவார். ஊஞ்சல் சேவையும் தந்தருள்வார்.

    ReplyDelete
  21. nalla pathivu.arumai.iraivanin aasigal thangalukku kidaikka piraarthikkinren.

    ReplyDelete
  22. அருமையான நரசிம்மர் மூன்று கண்களை உடையவர் வேறு எங்குமே இல்லாத அதிசயம். சிவனுக்குத்தான் நெற்றிக்கன கோயில் வலம் வந்தாலே நம் மணதில் உள்ள கவலைகள் தீர்ந்து விட்ட உனர்வு அடியேனும் தரிசித்தேன் படங்களும் அருமை

    ReplyDelete