Wednesday, November 13, 2013

கடற்கரைக் கோவில், மாமல்லபுரம் - மௌனச்சாட்சிகள்

கடந்த மூணு வாரமா மௌனச்சாட்சிகளில் மாமல்லப்புரத்தின் பார்வையாளர்கள் அதிகம் போகாத இடங்களான, புலிகுகை, அர்ஜுனன் தபசு, வலையன் கோட்டை, பிடாரி ரதம் ஆகிய இடங்களைப் பார்த்தோம்.  அந்த வரிசையில் இன்னிக்கும் மாமல்லபுரத்தின் சில இடங்களை பார்க்கலாம் வாங்க.

நாம மாமல்லபுரம் கடற்கரை கோவிலுக்கு போகும் முன்,  அங்க இருக்கும் பெருமாள் கோவிலின் தெப்ப குளத்தைத் தாண்டிதான் போகனும்.  தாமரை மலர்கள் நிறைந்த தாடகம். இந்த காலக்கட்டத்துல தாமரை மலர்களை காண்பதே அரிதாகிடுச்சு. அதுலயும் குளம் முழுக்க தாமரை மலர்கள். ஹப்பா! இலைகளும், பூக்களும் நிறைந்த குளத்தின்  நடுவே ஒரு மண்டபம் பார்க்க ரொம்ப அழகா இருக்கு.  நாம உட்கார்ந்து ரசிக்கவும் அழகாக இருக்கைகள் போன்று கட்டி இருக்காங்க. வாங்க! கொஞ்ச நேரம் உக்காந்து குளத்தின் அழகை ரசிக்கலாம்.  கிட்டக்க போய் பார்க்காதீங்க. குளக்கரையில லவ் பண்றோம்ன்ற பேர்ல வருங்கால சந்ததிகள் அடிக்கும் கூத்துகள் காண சகிக்கலை. இனி, இங்க இருந்தா சரிப்பட்டு வராது. அதனால,  கடற்கரை கோவிலுக்கு போயிடலாம்.

மாமல்லபுரம் கடற்கரை கோவில், 1,300 ஆண்டுகளுக்கு முன்பு  7 கோவில்கள் இருந்ததா  வரலாற்று ஆதாரங்கள் சொல்லுது.  இருந்தாலும் ஒரே ஒரு கோவில் மட்டுமே இப்ப இருக்குதாம். அதுதான் நாம இப்ப பார்க்கிற கடற்கரை கோவில். தமிழக கோவில்களின் கட்டட கலைக்கு, இக்கோவில் எடுத்துக்காட்டா விளங்குது. 1,300 ஆண்டுகளாக, கடற்கரையில் இருப்பதால், உப்புக்காற்று கோவில் கற்களில் படிந்து, கற்களை அரித்து வருது. இதனால், கோவில் கட்டுமானம் சிலைகள் எல்லாம் கொஞ்சம் தெளிவில்லாத நிலையில் அழியும் நிலையில் இருக்கு.

வருசந்தோறும்  தொல்லியல் துறையின் சர்ர்பா கற்களில்  படிந்துள்ள உப்பை நீக்கும் வேலைகள் நடந்துகிட்டு இருக்கிறதுனால இந்தளவுக்காவது நாம இப்ப இந்தக் கோவில பார்த்து ரசிக்க முடியுது.   இந்தக்கோவில்  இரண்டாம் நரசிம்ம வர்மானால் ( ராஜசிம்மன், கி.பி., 700- 728) கட்டப்பட்டதுன்னு ஆராச்சியாளர்களின் கருத்து. இக்கோவிலின் கட்டமைப்பு, தென்னிந்தியாவின் பிற்கால கோவில்களின் கட்டமைப்புக்கு அடித்தளமா அமைந்ததாம்.

இங்க தூரத்துல தெரிவது கிழக்கு நோக்கிய சத்திரிய சிம்ம பல்லவேஸ்வர கிருஹம் ன்னு அழைக்கப்படும் கடற்கரை கோவில். பழங்கால கட்டடகலையின் பெருமையை விளக்குபவையாக இக்கோவில் இருக்கு. இந்த கோவில்களின்  சிற்பங்கள்லாம்  ஒரே கல்லில் செதுக்கபட்டவை என்பதுதான் இதன் சிறப்பு.

சிலைகள் எல்லாம் கலைநயத்தோடு அழகா காட்சியளிக்குது. மதில் சுவர்கள்லாம் சிற்பங்களும், நந்திகளின் தொகுப்பும் பார்க்க மிகவும் அழகு . கற்கள் எல்லாம் அடுக்கடுக்காக செங்கல்கள் போல் அடுக்கி உறுதியான ஒரு மதில் கட்டமைப்பை கோவிலை சுற்றிலும் எழுப்பி உள்ளனர் பல்லவ மன்னர்கள்.

இந்த மேற்கு நோக்கிய ராஜ சத்திரிய சிம்ம பல்லவேஸ்வர கிருஹம கோவில் இரண்டு அடுக்குகளை கொண்ட விமானமும்,  அதன் சுவர்கள் எல்லாம் சித்திரங்களுமாக அழகுப்படுத்தப்பட்டு இருக்கு.

கர்ப்பகிரகத்தில் சிலை இருந்ததற்கான ஒரு சிறிய குழி போன்ற அமைப்பும், அதன் பின்னர் சிவா சக்தி உருவகளும், தேவர்கள் கூடி வாழ்த்துவது போன்ற அமைப்பில் காணப்படுது. சுவரில் இருக்கும் அந்த சிலைகள் காகித கூழ் மற்றும் சில ரசாயன கலவைகள் மூலம் தனியா பாதுகாக்கப்படுது.

இந்த இரண்டு கோவில்களுக்கு நடுவில், நரபதி சிம்ம பல்லவ விஷ்ணு கிருஹம் ன்ற கிடந்த கோலத்தில் இருக்கும் திருமால் சிலையும் காணப்படுது. இதிலிருந்து பல்லவர்கள் சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் சரிசமமாக கோவில்களை எழுப்பி உள்ளனர்ன்னு தெரியுது.  பல்லவ மன்னர்கள் கட்டமைப்பில் திவதிகையில் இருக்கும் திருவீரட்டானேஸ்வரர் கோவிலும் அதிலிருந்து சில கி மீ தொலைவில் அவர்கள் அமைத்திருக்கும் திருவந்திபுரம் திருமால் கோவிலும் இதற்கு சான்று.

அடுத்து பின்புறம் இருக்கும் கிழக்கு நோக்கிய  சத்திரிய சிம்ம பல்லவேஸ்வர கிருஹம கோவில். நான்கு அடுக்குகளுடன் கூடிய உயரமான விமானம் மற்றும் நுழைவு வாயிலில் சிறிய கோபுரத்துடன் இருக்கும் இந்த கோவிலின் கருவறையில்,  எட்டு பட்டைகளுடன் கொண்ட தாரலிங்கமும், சோமாஸ்கந்தர் சிற்பமும் அதன் பின்னியில்  சிவன் பார்வதி,விநாயகர்,முருகன்,ஆகியோர் வீற்றிருக்கின்றனர். 

இங்க பல்லவர்களின் சின்னமான சிங்கம் ஒன்று காணப்படுது. பார்பதற்கு கம்பீரமாக இருக்கு.  அதனருகில் காளையின் சிலை ஒன்று தலை உடைபட்ட நிலையில் இருக்கு.  மேலும் இந்த கோவில் பாதிக்கபடாமல் இருக்க இக்கோவிலை சுற்றி சுவர் எழுப்பபட்டிருக்கு.

கோவில் சுவர்கள்லாம் சிற்பங்கள்.   அதன் அழகையும், அதிலுள்ள கலைநுணுக்கங்களையும் நாம் எத்தனை முறை சுற்றி பார்த்தாலும் அலுக்காட்து. இதன் மூலம்  பல்லவர்கள் சிற்பகலையின் சிறப்புகளை உணரலாம்.

கோவிலின் வெளிப்புற சுற்றில் நந்திகள். மதில்மேல் இருப்பது போல வரிசையா, அழகாக செதுக்கப்பட்டிருக்கு. 
கீழ இருந்து மேலே கோபுரத்தை அண்ணாநது பார்க்கும் போது சிற்பங்கள் எல்லாம் ஒவ்வொரு நிலையிலும் செம்மையாக செதுக்கப்பட்டு கோபுர நிலைகளில் அழகுப்படுத்தி இருக்கின்றனர்.

கடற்கரை கோவிலின் இடதுபாகத்தில் குளம் போன்ற அமைப்பில் வட்ட வடிவில் படிக்கட்டுகள் போன்ற அமைப்புடன் ஒரு அமைப்பு காணப்படுது. அதில் ஒரு மாறு சிற்பமும் கலைநயம் மிக்க ஒரு தூண்போன்ற அமைப்பும் அதன் மாடகுழியில் தெய்வங்களும் காணப்படுது.

அந்த குளம்போன்ற அமைப்பில் சிறிய ஒரு குழி காணபடுது.

அந்த குழியில் ஒரு பெண் சிற்பமும் காணப்படுது. அதில் தண்ணீர் இருக்கு. பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன்பின் உள்நோக்கிக் குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே இந்த வகைக் கோயில்கள். ஒவ்வொரு கருவறைக்கும் வெளியே இரு துவாரபாலகர்கள் எனப்படும் வாயில்காப்போர் சிற்பங்களைக் காணலாம். பெண் தெய்வமாக (துர்க்கை) இருக்கும்போது வாயில்காப்போரும் பெண்களாக இருகின்றனர்.

இக்கோவில் வளாகத்தில், அழகிய புல்வெளி, பர்ர்வையாளர்கள் நடந்து செல்ல கற்களாலான பாதை, வளாக எல்லைக்கு பாதுகாப்பு வேலி போன்றவை அமைக்கப்பட்டிருக்கு. 
கோவில் எல்லாம் சுற்றி கடைகரைக்கு வரும் பாதையில் கடல் அரிப்பு இல்லாமல் இருக்க ராட்சத பாறைகள் கடற்கரை கோவிலை சுற்றி போடப்பட்டிருக்கு. அதன் பின்னணியில் கோபுரத்தின் உச்சிப்பகுதி இந்த இடங்களில் பாறைகள் அடுக்கடுக்காக இடப்பட்டிருக்கு. அது கடல் அரிப்பிற்காக போடப்பட்டிருக்கு. ஆனா, சிலர் அதன் ஆபத்தை அறியாம அங்க போறாங்க. நாம அங்க போக வேணாம். திரும்பிடலாம் வாங்க.
கோவிலின் வலப்பக்கம் கடற்கரையில் ஒரு பாறையில் பெரிய உருவ சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது கடல் அரிப்பில் அதன் உருவம் தெளிவில்லாமல் காணப்படுது.
அதில் ஒரு மாடக்குழி போன்ற அமைப்பில் ஒரு சிலையும் அதன் இருபுறமும் துவாரபாலகர்களும் இருபுறமும் இருக்காங்க.

ஐரோப்பிய பயணக் குறிப்புகளில் மாமல்லபுரம் 7 குகைக் கோவில்களை கொண்டதுன்னு சொல்லி இருக்காங்க. அதேப்போல, இத்தாலிய பயணக் குறிப்புகளிலும் இந்த தகவல் தெரிய வருது. இப்ப உள்ளவை தவிர மற்ற கோவில்கள் கடலுக்குள் மூழ்கி இருக்க வாய்ப்பு இருக்கு.

மாமல்லபுரம் சிற்பக் கோவிலிலிருந்து கடலுக்குள் 500 மீட்டர் தொலைவில் 2,500 சதுர மீட்டரில் கடலுக்குள் அகழ்வாராய்ச்சி நடந்தது. கடலுக்கு அடியில் 6 முதல் 8 மீட்டர் ஆழத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் வித்தியாசமான படிவங்கள், பழங்கால பொருட்கள், பாறைகள், கிரானைட்டால் மனிதர்களால் செதுக்கப்பட்ட படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருக்கு.


இங்க எடுக்கப்பட்ட கல்வெட்டு மாதிரிகளிலிருந்து தமிழகத்தை ஏற்கனவே இதுவரை மூன்று முறை ஆழிப் பேரலை தாக்கியிருப்பதற்கான அடையாளங்கள் இங்கு கிடைதிருப்பதாக தொல்பொருள் துறையினர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த இடம் மாமல்லபுரம் துறைமுகமா இருந்ததா? இல்ல கோட்டை போன்ற அமைப்பா?ன்னு  ஆராய்ச்சியாளர்கள் தான் சொல்லனும். அப்படி இருக்கும் பட்சத்தில் வருங்காலத்தில் மாமல்லபுரம் கடலுக்குள் அரிய வரலாற்று பொக்கிஷங்கள் அதிகமாக கிடைக்க வாய்ப்பு இருக்கு.

கடலுக்குள் இருக்கும் வரலாற்று சுவடுகளை சீக்கிரம் கண்டுப்பிடிக்கனும்ன்ற வேண்டுதலோடும், மாமல்லப்புரத்தின் அழகை கண்டுக் களித்த திருப்தியோடும் இங்க இருந்து விடைப்பெறலாம். மீண்டும் மௌனச்சாட்சிகள் பகுதிக்காக வேற ஒரு இடத்திலிருந்து சந்திப்போம். 

நன்றி! வணக்கம்!!

23 comments:

  1. பலதகவல்கள் மாமல்லபுரத்தை பற்றி தெளிவாக சொல்லி இருகிறீங்க ..அடுத்த முறை செல்லும்போது உபயோகமாக இருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அடுத்த முறை மாமல்லபுரம் போகும்போது அவசியம் இதையெல்லாம் நினைவில் வச்சுக்கோங்க.

      Delete
  2. மாமல்லபுரத்தில எல்லா இடத்தையும் சுற்றி காண்பிச்சது போதாதுன்னு கடலுக்குள் இருக்கும் நகரத்தை பற்றியும் தகவல் திரட்டி இருகிறீங்க ..ஒருவேளை எங்களுக்கேலாம் நல்ல தகவல்களை சொல்வதற்காக கடலுக்குள் இரங்கி ஆராச்சி பன்ன்போகிறீர்கள் அது அடுத்தவாரம் வரும்னு நினைச்சேன் அதுக்குள்ளே end card போட்டுடீங்களே ..

    ReplyDelete
    Replies
    1. எனக்கு நீச்சல் தெரியாது. தெரிஞ்சிருந்தா கடலுக்குள் இறங்கியிருப்பேன்.

      Delete
  3. மாமல்ல புரத்தில் ஆயிரம் டன் தங்கம் இருக்குன்னு எந்த சாமியாராவது சொன்னா ,அகழ்வு ஆராய்ச்சி செய்வாங்கன்னு நம்புவோம் !
    த.ம 3

    ReplyDelete
    Replies
    1. ம்ம் நான் வேணுமின்னா கனவு கண்டதா சொல்லவா!?

      Delete
  4. படங்களும் தகவல்களும் ரொம்பவே சுவாரசியம் !

    ReplyDelete
    Replies
    1. பதிவை படுத்தி ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி!

      Delete
  5. பதிவுடன் படங்களும் அழகோ அழகு.
    பாராட்டுக்கள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. படங்களின் அழகை ரசித்து பாராட்டியமைக்கு நன்றி அருணா!

      Delete
  6. மாமல்ல புரம் பற்றிய பல அரிய தகவல்களுடன் அழகாய் படங்களும் தந்து சுவாரஸ்யமாக சுற்றுலா அழைத்து சென்றமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. சகோ! சுற்றுலா அழைத்து சென்றதற்கான ஃபீஸ் எங்கே!?

      Delete
  7. நெம்ப நாள் ஆச்சுக்கா. மாமல்லாபுரம் போகோணும் ஒரு வாட்டி..

    ReplyDelete
    Replies
    1. உனக்கென்னப்பா!! உன் வாத்தியார், சீனு, ஸ்பை, அரசன்ன்னு படைசூழ கிளம்பிடுவே!

      Delete
  8. அருமையான தகவல்கள். படங்களும் அழகு..... வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  9. அருமையான பதிவு சகோதரியாரே.
    மாமல்லபுரம் கடலில் மூழ்கி இருக்கும் பழங்காலப் பொக்கிஷங்கள், ஆய்வின் மூலம் வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமுமாகும்

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான் ஐயா! கடலுக்குள் புதைந்திருக்கும் நம் மூதாதையர்களின் வரலாற்றை தேடிப் பிடிக்க வேண்டும் என்பதே அனைவரின் அவா!!

      Delete
  10. உபயோக தகவல் நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  11. படங்கள் அருமை! விளக்கமும் நன்றே!

    ReplyDelete
  12. படங்களுடன் விளக்கம் அருமை சகோ...! வாழ்த்துக்கள்...

    From Friend's L.Top...!

    ReplyDelete