Monday, October 28, 2013

தீபாவளி கொண்டாடுவது ஏன்!? - ஐஞ்சுவை அவியல்


ஏனுங்க மாமா! தீபாவளி பண்டிகை வருதே! புது துணி எடுக்கனும் பலகாரம் சுடனும்! எம்புட்டு வேலை இருக்கு தெரியுமா!?

நாளைக்கு போய் துணி எடுத்து வரலாம்!! தீபாவளி பண்டிகை எப்படி வந்ததுன்னு உனக்கு தெரியுமா!?

ம்ம்ம் தெரியும் மாமா! பூமாதேவியின் அம்சமாக மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தபோது அவருக்கும், பூமாதேவிக்கும் பிறந்த மகன்தான் நரகாசுரன். ஆரம்பத்தில் அவன் ரொம்ப நல்லவனா தான் இருந்தான். தன் அன்னையிடமிருந்து பல கலைகள் கற்று சிறந்து விளங்கினான், ஆனால் வயது ஆக ஆக அவனது போக்கில் மாற்றம் ஏற்பட்டது, கெட்ட சகவாசத்துடன் எல்லோரையும் கஷ்டப்படுத்தினான்.  பெரிய மகரிஷி குரு, போன்றவர்களையும் இகழ்ந்தான், எல்லா உலகத்தையும் ஜெயிக்க எண்ணினான், ஆகையால் போருக்குத் தேவையான எல்லாக் கலைகளும் படித்தான். பின் அவன் தாய் எத்தனைச் சொல்லியும் கேளாமல் இளம் பெண்களைத் துன்புறுத்தலானான். எல்லோரும் அவனைக் கண்டு பயந்தனர்.
இதற்கு நடுவில் அவன் பிரம்மாவை நோக்கி கடுந்தவ்ம் செய்யலானான். 

பிரம்மாவும் உனக்கு என்ன வரம் வேனும்ன்னு கேட்டார். நான் சாகவே கூடாதுன்னு வரம் கேட்டான். அதற்கு பிரம்மா, உலகில் பிறந்தவன் அழியத்தான் வேணும். அதனால, வேற எதாவது கேளுன்னு பிரம்மா சொல்ல, “தன் தாயான பூமாத்தேவி தவிர வேற யார் மூலமாகவும் தனக்கு மரணம் நேரக்கூடாது”ன்னு வரம் வாங்கிகிட்டான்.

நல்லா யோசனை பண்ணிதான் வரம் வாங்கி இருக்கான். எந்த அம்மாவது தன் பிள்ளையை கொல்லுவாளா!?

அப்படித்தான் அவனும் தப்பா நினைச்சுட்டான். ஆனா, எந்த ஒரு புரட்சியும் தெரிஞ்சோ தெரியாமலயோ பெண்கள் மூலமாதான் ஆரம்பிக்குதுன்னு வரலாறுகள் சொல்லுது. அதுக்கேத்த மாதிரிதான் இங்கயும் நடந்துச்சு! வரம் வாங்கின பின் அவனின் அட்டகாசம் ஆரம்பமாகிச்சு. எல்லா லோகத்தையும் தன் வசப்படுத்த இந்திர லோகத்தை முற்றுகையிட்டு இந்திரன், தேவர்கள்லாம் சிறைப்பிடித்தான். முனிவர்களை இம்சை பண்ணான், எல்லோரும் தங்களை காப்பாற்ற கிருஷ்ணன்கிட்ட போய் முறையிட்டாங்க.

”நான் உங்களை காப்பாற்றுகிறேன்”ன்னு கிருஷ்ணன் வாக்கு கொடுத்து, நரகாசுரனுக்கு அட்வைஸ் சொன்னார். அழிவுக்காலம் நெருங்கிட்டா யார் அட்வைச் பண்ணாலும் காதுல ஏறாதே! கிருஷ்ணனையே வம்பிக்கிழுத்தான். போரு ஆரம்பித்தது! தனக்கு சாரதியாக சத்தியபாமாவை அழைத்தார் கிருஷ்ணன். போரில்  நரகாசுரன் வீசிய கதையினால் காயம்பட்டு மயங்கி வீழ்ந்தார் கிருஷ்ணர்.

எல்லாம் வல்ல கிருஷ்ணனுக்கா மயக்கம்!? எல்லாம் நடிப்புதானே புள்ள!?

ஆமா மாமா,  பூமாதேவியின் அம்சமான சத்தியபாமா ஒரு வகையில் நரகாசுரனின் அம்மா ஸ்தானம்தானே!? கிருஷ்ணனின் மயக்கம் கண்டு கோபம் கொண்ட சத்தியபாமா, சராமாரியாக அம்பு வீசி நரகாசுரனை வீழ்த்தினாள். உயிர் போகும்போது தான் இறந்த இந்த நாளை எல்லோரும் எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, தீபங்கள் ஏற்றி, பட்டாசு வெடித்து இனிப்போடு கொண்டாடனும்ன்னு கிருஷ்ணன்கிட்ட வேண்டிக்கிட்டதால நாம தீபாவளியை கொண்டாடுறோம்!!

பரவாயில்லியே! உனக்கு கூட இதெல்லாம் தெரிஞ்சிருக்கே! அப்படின்னா இதுக்கு விடை சொல்லு பார்க்கலாம்!! தூரத்தில் பார்த்தால் கறுப்பு, பக்கத்தில் போய் பார்த்தால் பழுப்பு, கையில் எடுத்து பார்த்தால் சிகப்பு,வாயில் போட்டால் இனிப்பு.. அது என்ன?!

----- தானே மாமா! 

அட! இதுக்கும் சரியான விடை சொல்லிட்டியே! உனக்கு ஒரு ஜோக் சொல்லவா!?
 ம்ம் சொல்லுங்க மாமா! 
பாலு கடைக்காரரிடம், “உங்களிடம் வாங்கிய ரேடியோ ஜப்பான் தயாரிப்பு இல்ல. நீங்க பொய் சொல்லி என்கிட்ட அதை வித்துட்டீங்கன்னு சொல்லி சண்டை பிடிசானாம்.

இல்லைங்க.. அது சோனி ரேடியோ, ஜப்பான் தயாரிப்புதான்”ன்னு சொல்லி சமாதானப்படுத்த பார்த்திருக்கார் கடைக்காரர்.
அதுக்கு பாலு,“அப்ப ஏன், ஆன் பண்ணவுடனே ஆல் இந்தியா ரேடியோன்னு சொல்லுது?!ன்னு கேட்டு சண்டை போட்டானாம்.

ஹா! ஹா! இந்த ஜோக்கை இது வரை கேட்டதில்லை மாமா!

மாமா, நேத்து நம்ம சின்ன மண்டையனை கூட்டிக்கிட்டு ஹாஸ்பிடல் போனேன். அவனுக்கு யூரின் டெஸ்ட் பண்ண சொல்லி எழுதி கொடுத்தாங்க. அங்க இருந்த பாத்ரூம்ல போய் நின்னுக்கிட்டு இவனை உச்சா போக சொல்லி கெஞ்சுறேன். ம்ஹூம், போகவே இல்ல. கொஞ்ச நேரத்துல எனக்கு கோவம் வந்து அடிக்கவே போய்ட்டேன்.

ச்ச்சீ அவனுக்கென்ன தெரியும்!! பாவம், சின்ன புள்ளைதானே!அப்புறம் என்ன பண்ணே!

அங்க வந்த ஒரு நர்சம்மா, அங்க இருந்த தண்ணி குழாயை திறந்து விட்டாங்க. தண்ணி கொட்டுறதை பார்த்ததும் இவனும் உச்சா போய்ட்டான். 

ம்ம் பார்த்தியா!? நீ அம்மாவா இருந்தாலும் இது மாதிரியான நேரத்துல என்ன பண்ணுறதுன்னு தெரியாம இருக்கே! ஆனா, அந்த நர்சம்மாவுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு. காரணம் தொழில் மேல் கொண்ட ஈடுபாடும், அக்கறையும், சமயோசித புத்தியும்தான்!!

கரெக்ட்தான் மாமா!, சரிங்க மாமா, சாப்பாடு செஞ்சு டேபிள் மேல எடுத்து வச்சுட்டேன். நீங்களே போட்டு சாப்பிட்டுக்கோங்க. நான் ராஜி வீட்டுக்கு போறேன்.

எதுக்கு இப்ப அங்க போறே!? தீபாவளிக்கு அவ எடுத்த புடவைலாம் காட்டி பெருமையடிப்பா! அதே மாதிரி வேணுமின்னு என்னை புடுங்கி எடுத்தே! மகளே கொண்டே புடுவேன்.

ம்க்கும், எப்ப பாரு அவளை தப்பாவே சொல்லுங்க. இந்த வருசம் தீபாவளி பலகாரம் செய்ய, பதிவர்கள் கணேஷ் அண்ணா, ஆவி, செந்தில், ஜீவா, சசிகலாலாம் வர்றங்க. கூடவே நக்கீரன் அண்ணா, ஆஃபீசர் சார்லாம் நாளைக்கு அவ வீட்டுக்கு வர்றாங்க. அதான் கூட மாட நானும் ஹெல்ப்பலாம்ன்னு போறேன்.

ராஜியோட சேர்ந்து நீயும் கெட்டுபோகாம இருந்தா சரிதான் தாயி!!

16 comments:

  1. இந்தப் பதிவர்களுக்கு பலகாரம் செய்யக் கூட த் தெரியுமா?
    தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஹா! ஹா! சகோதரர்கள் எலோர்ருக்கும் எல்லாமும் தெரியும் எல்லோருமே ஆல் இன் ஆல் அழகுராஜாக்கள்.

      Delete
  2. தங்கை வீட்டில் தீபாவளிப் பலகாரம் செய்ய என்னுடன் சேர்ந்து என் நட்பு வட்டமும் வர்றதுல ரொம்ப ரொம்ப சந்தோஷம்! வாங்கப்பூ... எல்லாரும் போய் ராஜி வீட்டை ஒரு வழி பண்ணலாம்! தீபாவளிக் கதை தெரியும்கறதால ஜோக்கை ரசிச்சு சிரிச்சேன்... அப்புறம் அந்தப் புதிர்... விடைக்கு யோசிச்சு தலையைப் பிய்க்க ஆரம்பிச்சதும் நிறுத்திட்டேன் & யோசிக்கறதை! (இருக்கற கொஞ்ச முடியும் கொட்டிருச்சுன்னா... என்னாவறது?)

    ReplyDelete
    Replies
    1. விக் வச்சுக்கலாம்ண்ணா!

      Delete
  3. நானும் வந்து விடுகிறேன் சகோதரி...

    இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நீங்க இல்லாமயா?! அவசியம் வாங்கண்ணா!

      Delete
  4. விடை கருப்பு ஜில்லேபி ( எங்ககிட்டயெவா )....


    நல்ல க்கதை அக்கா ....ரொம்ப நாளிக்கப்பலா ப்ளாக் வாரினான் உங்கட புண்ணியத்துல ....

    ReplyDelete
    Replies
    1. விடை தப்பு கலை. ஆனா, இதுவும் ஒத்து வருது.

      Delete
  5. தீபாவளி வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  6. சாப்பிட மட்டுமே அல்ல

    ReplyDelete
  7. //தீபாவளி கொண்டாடுவது ஏன்!//

    தங்கள் கணவனின் பல்லை உடைக்க தைரியமில்லாதா அப்பாவி பெண்கள் பலகாரம் செய்து ( முறுக்கு. மைசூர்பாகு) கணவணுக்கு கொடுத்து அவரின் பல்லை உடைக்கவே தீபாவளி கொண்டாடுகிறார்கள்

    ReplyDelete
  8. வணக்கம்
    பதிவு அருமையாக உள்ளது.. அழகு பேச்சுதமிழ் பதிவில் இசை பாடுகிறது.....வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. இனிய உரைநடை....

    தீபாவளி ஸ்வீட் செய்யும் பிரபல பதிவர்கள்.... அடுத்த பதிவா? :)))

    ReplyDelete
  10. ஜப்பான் பாட்டு வரலேன்னா அதென்ன ஜப்பான் ரேடியோ ?
    த.ம 10

    ReplyDelete
  11. நரகாசுரன் கதை! இப்போதைய தலைமுறையில் எத்தனை பேருக்கு இந்த புராணக்கதை தெரியும் என்று தெரியவில்லை. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  12. அடடா இங்க ஒரு கூட்டமே கெளம்பிருச்சா பலகாரம் செய்ய.... இவ்வளவு ஈசியா மேட்டர் முடியும்னு நான் நெனைச்சே பார்க்கலை... எல்லோரும் வாங்க... வாங்க ... என் வலைப்பக்கத்தில் சமையல் போட்டி கலந்து கொள்ளுங்க...!

    ReplyDelete