விழுந்து விழுந்து கோவிலுக்கு சாமி கும்பிட போறியே! சாமி சிலை ஏன் கல்லால செஞ்சு வச்சிருக்கான்னு தெரியுமா?!
அதான் விலை குறைச்சல். எல்லா இடத்துலயும் கல் கிடைக்கும். அதனால, சாமி சிலையை கல்லால செஞ்சிருப்பாங்க.
அப்படி இல்ல, சில கோவிலுக்குள் நுழையும்போதே மனசு ரிலாக்சாகுறதை கவனிச்சிருப்பே. அது சின்னதோ பெரிய கோவிலோ கவனிக்காம அந்த கோவில் நமக்கு பிடிச்சு போகும். அதுக்கு காரணம் கருவறையில் இருக்கும் சிலையின் சக்திதான். வீடு கட்டுறதுக்கு வாஸ்து இருக்குற மாதிரி கோவில் கட்டுறதுக்குன்னு ஆகம விதி இருக்கு. அதுப்படி கோவில் கட்டி சிற்ப சாஸ்திரப்படி சிலையை கருங்கல்லில் வடித்து வேதங்களில் சொல்லி இருக்குற மாதிரி பூஜைலாம் செய்து வந்தால் நாம் கோவிலுக்குள் நுழையும்போதே நம் உடலுக்குள் ஒரு சக்தி ஊடுறுவதை கவனிக்கலாம்.
தங்கம், வெண்கலம், வெள்ளி, செம்பு மாதிரியான உலோகங்களை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகம். நல்லதோ கெட்டதோ அது எந்த சக்தியா இருந்தாலும் தன் வசம் இழுத்துக்கொள்ளும் ஆற்றல் கல்லுக்கு உண்டு. கல்லில் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம்ன்ற பஞ்ச பூதங்களின் தன்மை உள்ளது. இத்தன்மை எந்த உலோகத்திலும் கிடையாது.
கருங்கல்லில் நீர் இருக்குறதால எத்தனை வெப்பத்திலும் இருந்தும் சட்டென இதோட இயல்பான குளிர் நிலைக்கு மாறிடும். கல்லுக்குள் நீரூற்று இருப்பதை பார்த்திருப்போம். இது நிலத்தில் கிடைக்கிறது. நிலத்தோட தன்மை கல்லில் இருப்பதால் செடிகள் வளருது. கல்லில் நெருப்பின் சக்தி இருப்பதை கற்கள் உரசும்போது பறக்கும் தீப்பொறியிருந்து அறியலாம். கடினத்தன்மை கொண்ட கல்லில் காற்றும் இருக்குங்குறதுக்கு தேரை உயிரோடு இருப்பதால் உணரலாம். ஆகாயத்தைப்போல ஒலியை தன்னுள் ஈர்த்து பின் வெளியிடும் சக்தி உண்டு. அதனாலதான் கோவில்களில் எதிரொலி கேட்கிறது. இறை வடிவங்களான பஞ்சபூதங்களின் வடிவில் இருக்கும் கருங்கல்லில் சிலை செய்து சாமி கும்பிறோம். அபிஷேகம், ஆராதனைகளை முறைப்படி செய்து சிலையில் இருக்கும் பஞ்சபூதங்களின் தன்மையை அதிகரித்து அதை வணங்கும்போது நல்ல அதிர்வுகளை உண்டாக்கி நம் உடலில் பாய்ந்து நல்ல பலன்களை கொடுக்குது.
தெரிஞ்சுக்கிட்டேன் மாமா. வர வர மாமியார் கழுதை போல தேஞ்சான்ற மாதிரி .....
ஏய் இரு இரு. மாமியார் எப்படி கழுதையாவா?!
ம்ம்ம்ம்ம் கோவத்துல எட்டி உதைக்கும்போது... பழமொழி சொன்னா ஆராயக்கூடாது அனுபவிக்கனும்.
முழுசா தெரியாம எதையும் உளறாத. மாமியார்ங்குறவ ஏற்கனவே மூர்க்கம். அவளை கழுதைன்னு சொன்னா இன்னும் கோவப்படுவா. அதனால, இதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுக்க.. வர வர மாமியார் கழுதைப்போலானாள்ங்குற பழமொழில கழுதைங்குறதுக்கு பதிலா கயிதைன்னு வரனு, கயிதைன்னா ஊமத்தைங்காய் ஆகும். ஊமத்தம்பூ பூக்கும்போது ரொம்ப மென்மையாய், அழகாவும் இருக்கும். ஆனா, போகப்போக முள்ளோடு கடினமாவும், விசமாவும் ஆகிடும். அதுமாதிரிதான் மாமியாரும். முதல்ல ரொம்ப அன்பாகவும், போகபோக நாக்காலயே குத்தி குத்தி சில நேரம் உயிருக்கேகூட ஆபத்தா போய்டும். அதனாலதான் அப்பிடி சொல்றாங்க.
இத்தனை தெரியுது. இந்த வெயில்ல வேர்க்குரு வருதே. அது தடுக்க எதாவது சொல்லுங்களேன். தினமும் ரெண்டு வேளை குளிக்கனும். காட்டன் ட்ரெஸ்தான் போடனும் அதும் நல்லா காத்தோட்டமா இருந்தா நல்லது. தேவையில்லாம வெயில்ல சுத்துறதை குறைச்சுக்கனும். வேர்க்குரு வந்துட்டா பனை நுங்கு சதைய தடவலாம். வேப்பங்கொழுந்தும் குப்பைமேனியையும் அரைத்து தடவலாம். சந்தனம் தேய்த்து குளிக்கலாம். நிறைய வேர்க்குரு இருந்தா சாதம் வடிச்ச கஞ்சியை தடவி ஊற வெச்சு குளிக்கலாம். வெள்ளரிக்காயை வெட்டி வேர்க்குருவில் தேய்ச்சுக்கிட்டாலும் நல்ல பலன் கிடைக்கும். சாமந்தி பூவோட சாறையும் தேய்க்கலாம். சோத்துக்கத்தாழையையும் தேய்ச்சு வந்தாலும் வேர்க்குரு மறையும்.
டிப்சுக்கு நன்னி.. இந்த ஃபோட்டோவை பாருங்க. நாமதான் செண்டிமெண்ட்டா இருக்குற மாதிரி ஐந்தறிவு ஜீவன்களுக்கும் உண்டுன்னு நமக்கு தெரிஞ்ச கதைதான். ஆனா, செத்துப்போன தன் குட்டியை வெச்சு கதறியழுத தாய் குரங்கோட படம் பார்க்கும்போது தெரியும் அன்பும் அதனால வரும் பிரிவும் எத்தனை வலியை எல்லா உயிருக்கும் தருதுன்னு.. இந்த படத்தை எடுத்தது அவினாஷ்ங்குற மேற்குவங்களத்தை சேர்ந்தவர்.
படம் பார்க்கவே கொடுமையா இருக்கு. இப்ப நான் ஒரு கேள்வி கேக்குறேன். ராஜாவும், சுரேசும் ஓட்டப்பந்தயத்தில் ஓடுறாங்க. ரெண்டாவதா ஓடிட்டிருக்கும் ராஜாவை சுரேஷ் முந்திக்கிட்டு ஓடுறான். அப்படின்னா சுரேஷ் இப்ப எத்தனையாவது இடத்துல ஓடிட்டிருக்கான்?!
மாமா பதில் சொல்லுறதுக்குள் நீங்க பதில் சொல்லுங்க சகோஸ்...
தமிழ் மணம் ஓட்டுப்பட்டை தெரியாதவங்களுக்கு....
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1459990
தமிழ் மணம் ஓட்டுப்பட்டை தெரியாதவங்களுக்கு....
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1459990
நன்றியுடன் ,’
ராஜி.
தகவல்கள் அருமை
ReplyDeleteகுரங்கு புகைப்படம மனதை கனக்க வைத்தது.
ஆமாம்ண்ணே.
Delete#அதை வணங்கும்போது நல்ல அதிர்வுகளை உண்டாக்கி நம் உடலில் பாய்ந்து#
ReplyDeleteஇதுக்கெல்லாம் மனம்தான் காரணம் ,கொசு கடிக்காமலே ,கடிக்கிற ஃபீலிங்கை மனம் உண்டாக்கும் :)
உணர்தல்தான்ண்ணே கடவுள். சிலருக்கு சிவன், சிலருக்கு க்ருஷ்ணன், சிலருக்கு அம்மன்.. இப்படி.
Deleteகலக்கலான கலக்கல்
ReplyDeleteநன்றிப்பா
Deleteநிறைய விசயங்கள் அறிஞ்சுகொண்டேன்.
ReplyDelete////மாமா பதில் சொல்லுறதுக்குள் நீங்க பதில் சொல்லுங்க சகோஸ்...///
இல்ல மாமா பாவம் அவருக்கு நான் விட்டுக்கொடுக்கிறேன்.. அவரே சொல்லட்டும்:)
///தமிழ் மணம் ஓட்டுப்பட்டை தெரியாதவங்களுக்கு....
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1459990///
ஹா ஹா ஹா வெரி குட்... இதனைப் பார்த்தபின்புதான் சத்தியமா நினைவு வந்து அஞ்சாம் நம்பேர்ர் குத்தினேன்:).. யூ நோ.. மீ ரொம்ப நல்ல பொண்ணு:)..
குத்தலைன்னா மூஞ்சில குத்தியிருப்பேன் ஆதிரா.
Deleteநீங்க ஒண்ணும் மாமாவுக்கு விட்டு கொடுக்க வேணாம். பதில் சொல்லு புள்ள
மாமா மிக சரியான பதிலை தந்து இருக்கிறார். அவருக்கு பாராட்டுக்கள் ஆனால் அவர் பதிலை படிச்சதும் இந்த மச்சானுக்கு ஒரு சந்தேகம் இது நாள் வரை கடவுளுக்குதான் சக்தியும் ஆற்றலும் இருக்க்கிரது என்ரு நம்பினேன் ஆனால் அவர் பதிலை படித்ததும் கல்லுக்குதான் அந்த சக்தியிம் ஆற்றலும் இருக்கிறது என்ரு தெரிந்து கொண்டேன் அதனால கடவுளை விட கல்லை நம்பவதுதான் சரியாக இருக்கும் போல இதை பற்றி மாமாவிடம் கேட்டு பதில் சொல்லுங்கோ சகோ
ReplyDeleteஇதுபத்தி ஐநா சபைல பேசலாம்ன்னு இருக்கேன்.
Deleteகடவுள் கற்சிலை குறித்த விளக்கம் அருமை
ReplyDeleteஇழப்பு எனில் எல்லா ஜீவ ராசிகளுக்கும்
ஒன்றுதானே
படம் மனத்தைக கலக்கிவிட்டது
அருமையான பயனுள்ள பகிர்வு
வாழ்த்துக்களுடன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா
Deleteகுரங்குப் படம் நெகிழ்த்துகிறது.
ReplyDeleteசுரேஷ் இரண்டாவது!
வழக்கம்போல தம போட்டாச்சு.
விடை தப்பு. ராஜா ஓடும் இடத்தை வச்சுதான் சுரேஷின் இடம் முடிவாகும்
Deleteவிளக்கம் நன்று...
ReplyDeleteஇந்த பக்கம் வந்தே ரொம்ப நாளாச்சு. என்னாச்சுன்ணே?!
Delete