வெள்ளி, மே 05, 2017

நாயன்மார்கள் குடும்பம் - நாயன்மார்கள் கதைகள்

சிவன் தொண்டு ஆற்றி பேரும் புகழோடு முக்தியும் அடைந்தவர்களில்  அறுபத்தி நான்கு நாயன்மார்கள் மிகமுக்கியமானவர்கள்.   அறுபத்தி மூன்று நாயன்மார்களில் இருவர் மட்டுமே பெண்கள். இருவரில் இசைஞானியார் ஒருவர். இன்னொருவர் கையிலாயத்தில் தன் கால் படக்கூடாதுன்னு தலைக்கீழாய் நடந்த காரைக்கால் அம்மையார். மற்றொருவர் மங்கையர்கரசியார். மூன்றாமவர் இசைஞானியார். நால்வர் என அழைக்கப்படுபவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயன்மாரை பெற்றதால் நாயன்மார்கள் வரிசையில் சேர்ந்தவர். இவரின் கணவரும், மகனும்கூட நாயன்மார்களே. அதனால இவர்களை நாயன்மார்கள் குடும்பம்ன்னு சொல்வதில் தவறில்லை
(சுந்தரமூர்த்தி நாயனாரின் குடும்பம்: இடமிருந்து வலமாக சடைய நாயனார் (தந்தை), இசைஞானியார் (தாய்), பரவை நாச்சியார் (மனைவி), சுந்தரர், சங்கிலி நாச்சியார் (மனைவி), நரசிங்கமுனையரைய நாயனார் (வளர்ப்புத் தந்தை).

உடலை வருத்தி தவம் செய்யாமல், கோவில் குளம்ன்னு கட்டாமல், சிவனடியாருக்கு தொண்டும் செய்யாமல்   நாயன்மார் வரிசையில் சேர்ந்த இசைஞானியார் நாயனார் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

நித்தியக்கன்னியான தமிழின் முப்பிரிவுகளில் ஒன்று இசை.  புல், பூண்டு, முதல் இறைவன் வரை இசைக்கு மயங்காதவர் யாருமில்லை. இசையால்(ஆமிர்தவர்ஷினி ராகம்) மழையை கொண்டு வந்த கதையெல்லாம் இங்குண்டு. அப்பேற்பட்ட இசையில் ஞானம் கொண்டவர்தான் சோழ நாட்டுக்குட்பட்ட   திருவாரூரில் பிறந்தார். . அவர் தந்தை சிறந்த சிவபக்தர். அவரைப்போலவே சிறுவயதிலிருந்தே சிவன்பால் பற்றுக்கொண்டு வளர்ந்து வந்தார்.
திருமணப்பருவம் வந்ததும் திருநாவலூரில் ஆதிசைவர் மரபில் வந்த சிறந்த சிவபக்தரான சடையனார் நாயனாருக்கு மனைவியானார். கற்பு நெறி வழுவாமல்  இல்லறத்தை நல்லறமாய் நடத்தியதன் பலன் சுந்தரமூர்த்தி நாயனார் மகனாய் பிறந்தார். சுந்தரமூர்த்தி நாயனாரை மகனாய் பெற்றதாலாயே நாயன்மார்கள் வரிசையில் இசைஞானியாரும், சடைய நாயனாரும் சேர்ந்தனர்.

இசைஞானியாரின் குருபூசை நாள் சித்திரை மாதம் சதயம் நட்சத்திரம் ஆகும்.
Image result for இசைஞானியார்.
 இசைஞானியாரின் கணவர் சடையனார் நாயனார்....


சைவ வளமும், செல்வமும் கொழிக்கும் திருநாவலூர் நகரில் ஆதிசைவர் மரபில் சடையனார் பிறந்தார். சிறந்த சிவபக்தர். தக்க பருவம் வந்ததும் இசைஞானியாரை மணந்தார்.   இவர்களி செய்த தவப்பயனாக சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவரது மகனாகப் பிறந்தார். இத்தம்பதிகளின் மகனான சுந்தரமூர்த்தியை, அந்நாட்டு மன்னன் நரசிங்க முனையார் தம்மோடு அழைத்துப் போக எண்ணியபோது இவர் மன்னரது அன்பிற்குக் கட்டுப்பட்டு குழந்தையை மறுமொழி பேசாது அனுப்பி வைத்த பெருமையயைப் பெற்றவர். 
        Related image
சுந்தரமூர்த்தி சுவாமிகள், தாம் பாடியருளிய திருத்தொண்டத் தொகையில் பல இடங்களில் தம் பெற்றோர்களைப் பற்றிச் சிறப்பித்துக் கூறியுள்ளார். திருதொண்டத்தொகை பாடி உலகையெல்லாம் உய்வித்த தெய்வ புதல்வனை ஈன்ற சடைய நாயனாரும், இசைஞானியாரும் இறைவன் திருவடி நிழலை அடைந்து இன்புற்றனர்.

நாளை கேபிள் கலாட்டாவில் சந்திக்கலாம்...

18 கருத்துகள்:

 1. நாயனாரைப்பற்றி அறியாத விடயம் அறிந்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
 2. தகவல் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   நீக்கு
 3. பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும், தம ஓட்டுக்கும் நன்றி

   நீக்கு
 4. இசைஞானியை தெரியும் , இசைஞானியாரை தெரிந்து கொண்டேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இசைஞானிக்கு முன்னோடி இந்த இசைஞானியார்

   நீக்கு
 5. பதில்கள்
  1. எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி

   நீக்கு
 6. குடும்பமாகவே இறைத்தொண்டில் ஈடுபட்டிருந்த இவர்களைப் பற்றி இன்று நன்றாக அறிந்துகொண்டேன். நன்றி.
  -இராய செல்லப்பா நியூஜெர்சி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

   நீக்கு
 7. பணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html
  அண்மையில்தான் கோயில் உலாவின்போது சுந்தரரோடு தொடர்புடைய திருவெண்ணெய்நல்லூர் சென்றுவந்தோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் இன்னும் திருவெண்ணெய்நல்லூர் போனதில்லை. இனி பதிவுகளின் வழியே தொடர்ந்து சாந்திப்பதில் மகிழ்ச்சி. இதோ உங்கள் தளத்துக்குதான் வந்துக்கிட்டே இருக்கேன்

   நீக்கு
 8. பல நல்ல தகவல்கள்! மிக்க நன்றி பகிர்விற்கு.

  பதிலளிநீக்கு