Saturday, May 06, 2017

இப்படியொரு சட்டை விளம்பரம்! - கேபிள் கலாட்டா

நமக்கு தெரியாத நமக்கு அருகிலிருக்கும் கோவில்களின் வரலாறு, அங்கு நடத்தப்படும் விழாக்களையும் அழகா, எளிய நடையில், தெளிவான உச்சரிப்பில் சின்ன சின்ன ஆன்மீக குறிப்புகளையும், கோவில் அமைவிடத்தையும் சொல்வதோடு..., சுவாமிக்கு செய்யப்படும் அபிஷேகத்தினையும் ஜீ டிவில ஒளிப்பரப்புறாங்க  தினமும் காலை எட்டு முப்பது முதல் ஒன்பது வரை அற்புதங்கள் தரும் ஆலயம்ன்ற நிகழ்ச்சியில் ஒளிப்பரப்புறாங்க.


அது ஒரு சட்டை விளம்பரம்...  முதல் நாள் வேலைல சேர்வது, பிறந்த நாளுக்கு அப்பா அம்மா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குறது, நண்பர்களோடு அரட்டை அடிக்குறது, இல்லாதவர்களுக்கு உதவுற போது வரும் சந்தோசம் இந்த சட்டையை அணியும்போதும் வரும்ங்குற மாதிரி வருது அந்த விளம்பரம்.  மத்த விளம்பரம் மாதிரி இந்த சட்டைய போட்டு வந்தா பொண்ணுங்களாம் மயங்குவாங்கன்னு அபத்தமா பொண்ணுங்களை காமிக்காம வர்றதுக்கே பாராட்டலாம்.


தந்தி டிவில மாலை 7 மணிக்கு 20/20(மொத்தம் நாப்பது)ன்ற நிகழ்ச்சி வருது.  காலை முதல் மாலை வரை நடந்த நிகழ்ச்சிகளை ரத்தின சுருக்கமா ஜெட் வேகத்துல சொல்றாங்க. நம்ம இந்தியா, நம்ம ஊரு செய்திகள், சினிமா கொண்டாட்டங்கள், விளையாட்டு செய்திகள்ன்னு வெகு சுவாரசியமா இருக்கும். சும்மா அரைச்ச மாவையே அரைச்சு கொடுக்கும் செய்திகள்ல இருந்து ஒரு நாளைய நிகழ்ச்சிகளை சொல்லி சேனலை மாத்த விடாம கட்டிப்போட்டுடுறாங்க.

சமூக வலைத்தளங்களில் உலா வரும் சுவாரசியமான, சிரிக்க வைத்த வீடியோக்களை தந்தி டிவியின் இதெப்படி நிகழ்ச்சில சொல்றாங்க. சிலதை நாம பார்த்திருப்போம். நாம மிஸ் பண்ணதை டேட்டா செலவில்லாம  இந்த நிகழ்ச்சில பார்க்கலாம். இது திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2.30மணிக்கு ஒளிப்பரப்புறாங்க..  இதுல காமெடி வீடியோக்கள் மட்டுமில்லாம சிந்திக்க வைக்கவும், சமுதாய விழிப்புணர்வு வீடியோக்களும் வரும்..


சனிக்கிழமைதோறும் காலை 10 மணிக்கு பெண்ணோவியம்ன்ற பேர்ல நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகும். இதுல கைவண்ணம், சமையல், மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள், வாழ்க்கையில் ஜெயித்த பெண்களின் தன்னம்பிக்கை கொடுக்கும் பகிர்வுன்னு ஒளிப்பரப்பாகுது.. எந்த டிவின்னு சொல்ல மறந்துட்டேனே! வசந்த் டிவிலங்க...

அடுத்த வாரம்...
மருத்துவர்கள் நாடி பிடிச்சு பார்க்குறது ஏன்னு ஐஞ்சுவை அவியல்லயும்,
நரசிம்மரின் உக்கிரம் தணிக்க தயிர்சாதம் செய்முறையை கிச்சன் கார்னர்லயும்,
சித்திரகுப்தன் கதையை தெரிந்த கதை தெரியாத உண்மைலயும்,
கமல் கடாய் தையல் பத்தி கைவண்ணத்திலயும்...
கோடைகாலத்தில் கூழ் ஊத்துவது ஏன்னு புண்ணியம் தேடி பதிவிலயும் பார்க்கலாம்....

நன்றியுடன்,
ராஜி.


29 comments:

 1. பணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html
  கேபிள் கலாட்டா ரசித்தேன். இனி தொடர்வேன்.

  ReplyDelete
  Replies
  1. தொடர்வதற்கு நன்றிப்பா. நான் உங்க பணி நிறைவு பதிவை பார்த்துட்டு வந்துட்டேனே

   Delete
 2. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 3. கேபிள் கலாட்டா கலக்கல் ராஜி ..அந்த பூ எம்ப்ராய்டரி படங்களை சுட்டுக்கறேன் :)

  ReplyDelete
  Replies
  1. எனக்கொரு சேலை எம்ப்ராய்டரி போட்டு தர்றதா இருந்தா சுட்டுக்கலாம்

   Delete
 4. சீரியல்களை கட்டி அழுவதைவிட நீங்க சொன்ன நிகழ்ச்சிகள் பார்ப்பதே மேல் :)

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம்ம் இப்ப தமிழ் சீரியல் பார்த்து கெட்டுப்போனது பத்தாதுன்னு ஹிந்தி டப்பிங்க் சீரியல் வேற

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 5. விளம்பரம் பற்றித் தெரியல்ல ஆனா அந்த embroidery பூ வண்ணம் கொள்ளை அழகு.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. ராஜி எனக்கு பதில் அதிரா உங்க சாரிக்கு டிசைன் போடுவார்.. ரெண்டு சாரி குடுங்க ஹா ஹா

   Delete
 6. ம்ம்ம்... சில விளம்பரங்கள் பார்க்கும்போது கோப்ம் தான் வருகிறது...

  ReplyDelete
  Replies
  1. எனக்கும்தான்

   Delete
 7. தகவல் களஞ்சியம்/கட்டணம் செலுத்தா விளம்பரம்........... நன்று..அடுத்த வாரப் பதிவுகளுக்காக வெயிட்டிங்க்.............

  ReplyDelete
  Replies
  1. உங்க ஆர்வத்துக்கு நன்றிண்ணே. பதிவுகள் தவறாம வரும்

   Delete
 8. இந்த அளவுக்கெல்லாம் டீவி பார்ப்பதில்லை! ஹீஹீஹீஹீஹீ...

  ReplyDelete
  Replies
  1. நானும் டிவி பார்க்குறதில்ல சகோ

   Delete
 9. டிவி-கென்றே தங்களிடம் தனி சேனல் -அதாவது- பதிவு- இருக்கிறதா? அருமை. ஆனால், அந்த அளவுக்கு டிவி பார்க்க நமக்கு பொறுமை இருப்பதில்லையே..என்ன செய்வது? என் சார்பாக நீங்களே பார்த்துவிடுங்கள்.

  -இராய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete
  Replies
  1. எனக்கு சினிமா போற பழக்கமில்ல. புத்தக விமர்சனம் செய்யுறளவுக்கு அறிவுமில்ல. அதான். சேனல் பக்கம் ஒதுங்கிட்டேன்

   Delete
 10. கலக்கல்ஸ் ராஜி. இந்த விளம்பரங்கள் பத்தி ரொம்பத் தெரியலைனாலும், எங்கேயாவது பார்க்கும் போது சில விளம்பரங்கள் எரிச்சலை ஏற்படுத்துகின்றன. எம்ப்ராய்டரி கமல் ஸ்டிச் செய்திருக்கிறேன். உங்கள் வண்ணத்தையும் பார்க்க ஆவல்..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. எனக்கு ரொம்ப பிடிச்ச தையல்... ரொம்ப அழகா இருக்கும். ஈசியும்கூட

   Delete
 11. ஃபேஸ்புக், வலைப்பக்கம் என்று, எல்லா இடத்திலும் கலக்கும் உங்களுக்கு, இத்தனை டீவி நிகழ்ச்சிகளையும் பார்க்க நேரம் இருக்கிறது என்பது ஆச்சரியமான விஷயம்தான். சகோதரிக்கு பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. காலைல எழுந்ததும் டிவிய ஆன் செஞ்சிடுவேன். சன் டிவி நிகழ்ச்சிகளை வெச்சு டைம் தெரிஞ்சு சமையலை 7.30க்குள் முடிச்சுடுவேன். அதுக்கற்புறம் எல்லாம் கிளம்பிடுவாங்க. டிவி தான் துணை. பகல் முழுக்க டிவி போகும்.

   Delete
 12. சகல கலா வல்லின்னு பட்டம் கொடுக்கலாம்!

  ReplyDelete
  Replies
  1. சகலகலா வில்லின்னு சொல்றாங்க வீட்டுல

   Delete
 13. வணக்கம்!
  சிறப்பான பகிர்வு வாழ்த்துக்கள்தோழி நான் வந்து கருத்துரைக்கவில்லையே
  என்று எண்ண வேண்டாம் கண்டிப்பா நேரம் கிட்டும்போது கருத்துரைப்பேன்
  பகிர்வுக்கு மிக்க நன்றி! :)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. நேரம் கிடைக்கும்போது வாங்கக்கா

   Delete
 14. எந்த டிவி யும் பாக்கியில்லை போல!நடக்கட்டும்!

  ReplyDelete