Thursday, May 18, 2017

வீணாய் போகும் பொழுதை உருப்படியாக்கிய உருப்படிகள் - கைவண்ணம்

பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்துக்காக மகள்களுக்கு பாவாடை தாவணி எடுக்கனும்ன்னு முடிவானது. கடையில் போய் பார்த்தால்  பிடிச்ச கலர், பிடிச்ச டிசைன், பிடிச்ச துணின்னு சேர்ந்து அமையல.  ஆகாய வண்ணத்துல சின்னவளுக்கும், மாந்தளிர் வண்ணத்துல ஹாஃப் சில்க் துணில வெறும் சங்கிலி தையலை மட்டுமே கொண்டு ஹெவி வொர்க் பாவாடை தாவணியை ரெடி செஞ்சாச்சு. நம்ம  அம்மா நமக்காக செஞ்சதுன்னு பசங்களுக்கும் பசங்களுக்கு செஞ்சோம்ன்னு எனக்கும் ரொம்ப திருப்தி. 


வெறும் சங்கிலி தையல் மட்டுமே. நூலில் ஆங்காங்கு சமிக்கி நுழைச்சுக்கிட்டா வெயில்லயும், லைட்டிங்க்லயும் மின்னும். 

சின்னவளுக்கு பிடிச்ச ஆகாய நீல வண்ணம்...

ஆங்காங்கு குந்தன் கற்கள் கொண்டும் அழகு செஞ்சாச்சு. 

சின்னவ ட்ரெஸ்சுக்கு மேட்சா சில்க் த்ரெட் கம்மல்...

ட்ரெஸ்சுக்கு மேட்சா க்வில்லிங்க் பேப்பர்ல செஞ்ச மணிமாலை...

இது பெரிய மகளுக்கு வெறும் சங்கிலி தையல்ல செஞ்ச பெரிய மாங்காய்... அதேமாதிரிய சமிக்கிய அங்கங்க நுழைச்சு குந்தன் கல்லால அலங்கரிச்சது...

க்ராஸ் பார்டர்ன்னு கொஞ்சம் வித்தியாசமாய்...

மாந்தளிர் கலர்ல ஆரஞ்ச் மாங்காய் மின்ன பெரியவள் பாவாடை தாவணி ரெடி..
இது பெரியவளுக்கு செஞ்ச சில்க் த்ரெட் கம்மல்...

இது எனக்கு....


இதும் எனக்கு.. 

நாளைக்கு நாயன்மார்கள் கதையில்  இடங்கழி நாயனார் பத்தி தெரிஞ்சுக்கலாம்.  

தமிழ்மணம் ஓட்டு  பட்டை   தெரியாதவங்களுக்காக....

நன்றியுடன்,
ராஜி. 

20 comments:

  1. அனைத்தும் அழகு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  2. முதல் படத்தில் சங்கிலித் தையல் கையாலா இல்லை மெஷீன் தையலா?

    அழகா இருக்கு. அங்கங்கே சம்கி இருப்பதால் கை வேலைன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. முழுக்க முழுக்க கைவேலைதான்மா

      Delete
  3. பெரிய டிசைனர் ஆயாச்சு!
    நன்று

    ReplyDelete
    Replies
    1. அப்படிலாம் இல்லப்பா. சும்மா ட்ரை பண்ணேன். அம்புட்டுதான்

      Delete
  4. பெரிய டிசைனர் ஆயாச்சு!
    நன்று

    ReplyDelete
  5. பெரிய டிசைனர் ஆயாச்சு!
    நன்று

    ReplyDelete
  6. சமையல், ஆடை அணிகலன், புராணம், கடவுள்னு பல்துறை அறிவு உங்களுக்கு நிறையவே இருக்கு.
    இது வெறும் புகழ்ச்சியல்ல.

    ReplyDelete
    Replies
    1. அப்படிலாம் இல்லப்பா. இயல்பிலே நான் கொஞ்சம் சோம்பேறி . அதை விட்டுட்டா இன்னும் டாப்பா வருவேன்.

      Delete
  7. அருமை... + அழகு...

    வாழ்த்துகள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  8. சென்னை பித்தன் ஸார் மூன்று முறை பாராட்டியிருக்கிறார். நானும் ஒருமுறை பாராட்டுகிறேன்.

    :))

    (மொபைலிலிருந்து இட்டால் சிலசமயம் இப்படி ஆகும்!)

    ReplyDelete
    Replies

    1. நீங்களும் மூன்று முறை பாராட்டுனா குறைஞ்சிடுமா?!

      Delete
  9. செம ராஜி!!! ரொம்ப அழகா இருக்கு! பெர்ஃபெக்ட் வொர்க்! யப்பா கலக்குறீங்கப்பா...எழுத்து, சமையல், கைவேலை....எல்லாத்தையும் விட டைம் மேனேஜ்மென்ட்!!! அது ரொம்ப முக்கியம்ல...பன்முகக் கலைஞர் !! வாழ்த்துகள் பாராட்டுகள்!

    கீதா

    ReplyDelete
  10. செம ராஜி!!! ரொம்ப அழகா இருக்கு! பெர்ஃபெக்ட் வொர்க்! யப்பா கலக்குறீங்கப்பா...எழுத்து, சமையல், கைவேலை....எல்லாத்தையும் விட டைம் மேனேஜ்மென்ட்!!! அது ரொம்ப முக்கியம்ல...பன்முகக் கலைஞர் !! வாழ்த்துகள் பாராட்டுகள்!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க கீதா

      Delete
  11. #பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்துக்காக #
    இப்போ ஏது பொங்கல் பண்டிகை :)

    ReplyDelete
    Replies
    1. இந்த வருசம் பொங்கலுக்காக டிசைன் செஞ்சது. அப்ப பிளாக்குக்கு வரல. இப்ப வந்ததால பதிவிட்டேன்.

      Delete
  12. Arumaiyaana payanuLLa padhivu

    ReplyDelete