Saturday, May 20, 2017

நெளிய வைக்கும் விளம்பரம் தேவையா?! - கேபிள் கலாட்டா

கலைஞர் டிவில மதியம் 11.30க்கு சிநேகிதியேன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது.  இதுல மேக்கப், உடல் நலம், மனநலம், பேஷன் உலகம் முதற்கொண்டு கிராப்ட், எம்ப்ராயடரி, பெயிண்டிங்க், மார்க்கெட்டிங்க்ன்னு எல்லாத்தை பத்தியும்  பகிர்ந்துக்குறாங்க.

வசந்த் டிவில கி.முத்துக்குமார் இயக்கத்தில்  மண் பேசும் சரித்திரம்ன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. ஆங்கில சேனல்களை போல உயரமான மலைகள்ல இருக்கும் குகைகள், ஆபத்தான அடர்ந்த காடுகளில் வாழ்ந்த மனிதர்களின் தடங்கள், கோட்டை கொத்தளங்கள், அரண்மனைகளின் பிண்ணனிகளை பத்தி ரொம்ப சிரமப்பட்டு நேர்த்தியோடு இந்த நிகழ்ச்சில ஒளிப்பரப்பு செய்யுறாங்க. இது செவிவழி கதைகளோடு, சரித்திர ஆய்வாளர்களின் விளக்கங்களோடு பகிர்வதும், அதற்கேற்ற வர்ண்னையாளரின் குரல் வளமும் இந்த நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்க்குது.


அழகான ஆண் மாடல்...  வீட்டின் எல்லா இடத்திலயும் எல்லா பொருள்மேலயும் ஏறி குதிக்குறாரு.. அப்புறம்  செல்லோ டேப்பை கிழிச்சு அந்த பொருளை ஒட்டுறாரு, காலிங்க் பெல் அடிக்குது  கதவை திறந்தா ஒரு பொண்ணு.... இப்படி போகும் அந்த விளம்பரத்தை செல்லோ டேப் விளம்பரம்ன்னு நினைச்சிருந்தேன். ஓரிரு முறை  பார்த்தபின் தான் புரிஞ்சுது. அது ஒரு ஆணுறை விளம்பரம்ன்னு... ஆணுறை விளம்பரம் தப்பில்ல. அது புள்ளி ராஜாவுக்கு எயிட்ஸ் வருமான்ற மாதிரி நாசூக்கா இருந்தா சரி. மோசமான அங்க அசைவுகளோடு தேவையா?! பிள்ளைகளோடு அமர்ந்திருக்கையில் நெளிய வேண்டியதா இருக்கே!எல்லா நியூஸ் சேனல்லயும் நேர்ப்பட பேசு,  கேள்வி நேரம், ஆய்த எழுத்துன்னு விதம் விதமான தலைப்புல நாலு பேரும், ஒரு நெறியாளரும் சேர்ந்து ஒரு டாபிக்கை எடுத்துக்கிட்டு பேசுவாங்க. அதுல சமூக ஆர்வலர், பொருளாதார நிபுணர், மருத்துவர், சட்ட மன்ற உறுப்பினர்ன்னு அந்தந்த டாபிக்குக்கு தகுந்த மாதிரி கூப்பிட்டு வச்சு பேசுவாங்க.  சில சமயம் விவாதம் சூடு பிடிக்க ஆரம்பிக்கும்போது எல்லாரும் சேர்ந்து காட்டு கத்தலா கத்துவாங்க. யார் என்ன பேசுறாங்கன்னே புரியாது. எல்லார்க்கிட்டயும் மைக் கொடுக்குறதுக்கு பதிலா தேவைப்படும்போது தேவைப்படுறவங்க மைக் மட்டும் ஆன் பண்ணா நம்ம காதுல ரத்தம் வராம தடுக்கலாமில்ல...


நேஷனல் ஜியாகரபி சேனலில் தினமும் மாலை 7.30க்கு  DEADLY SUMMERன்னு ஒரு நிகழ்ச்சி உணவு சங்கிலியையும், வாழ்வியல் போராட்டத்தையும் சொல்லுது.  ஒரு அழிவில்தான் இன்னொன்னு உருவாகும் என்பது இயல்புன்னு சொல்லாமல் உணர்த்துது இந்த நிகழ்ச்சி. 

நேஷனல் ஜியாகரபி வைல்ட் சேனல்ல சயின்ஸ் ஸ்டுப்பிட்ன்ற நிகழ்ச்சில நம் அன்றாட வாழ்வில் நடக்கும் சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் இருக்கும் அறிவியல் விதிகளை விளக்கி அந்த விதிகளை முறையா பின்பற்றலைன்னா நாம வாங்குற மொக்கைகளை வீடியோவா போடுறாங்க. அந்த வீடியோவுக்கு கொடுக்கும் கமெண்ட்ரியும் நம்மை சிரிக்க வைக்குது. பாருங்க கண்டிப்பா கவலை மறந்து சிரிப்பீங்க. இந்த நிகழ்ச்சி தினமும் இரவு  8 மணிக்கு ஒளிப்பரப்புறாங்க. 

நாளைக்கு  சிவன், பிரம்மா, விஷ்ணுவின் அம்சமான தத்தாத்ரேய சுவாமிகள் பத்தி தெரிஞ்சுக்கலாம்...

நன்றியுடன்,
ராஜி.


21 comments:

 1. நெளிய வைக்கும் விளம்பரம்
  நம்ம பிள்ளைகளைக் கெடுக்கும்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்ப்பா... பிள்ளைகளோடு பார்க்கும்போது நெளிய வைக்குது.. எங்க வீட்டில் எல்லாமே வயசுக்கு வந்த பிள்ளைகள். . என் நிலையை யோசிச்சு பாருங்கப்பா

   Delete
 2. விளம்பரம்,செம.............///நேஷனல் ஜியாகரபி சேனல்.........இதான் உங்களுக்கு கரிக்டா இருக்கும்......

  ReplyDelete
  Replies
  1. அனிமல் பிளானட் சேனல் இல்லியாண்ணே

   Delete
 3. சுருக்கமான ஆயினும்
  அழுத்தமான
  விமர்சனப் பதிவு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

   Delete
 4. ராஜிக்கு மட்டும் ஒரு நாளைக்கு 36 மணி நேரம் இருக்கும் போல!

  ReplyDelete
  Replies
  1. அப்படிலாம் இல்லப்பா. பசங்களாம் பெருசாகிட்டாங்க. அதனால வேலை கம்மி. எல்லாரும் வெளிய கிளம்பிடுறதால டிவிதான் துணை.. பொழுதன்னிக்கும் எதாவது போய்க்கிட்டே இருக்கும். அதோடு என் வேலையும் போய்க்கிட்டிருக்கும்.

   Delete
 5. நிபுணர் குழுக்கள் அமைச்சி எல்லாச் சேனல்களையும் கண்காணிக்கணும். வரம்பு மீறும்போது கடுமையான நடவடிக்கை எடுக்கணும். எப்பச் செய்யப்போறாங்களோ தெரியல.

  தொலைக்காட்சி, அன்றாட வாழ்க்கையின் முக்கியத் தேவைகளில் ஒன்றாகிவிட்ட நிலையில், நிகழ்ச்சிகளின் தரத்தை மதிப்பிடுவது வரவேற்கத்தக்கது.தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா சினிமாக்களுக்கு இருப்பது போல டிவிக்கும் சென்சார் வேணும்ப்பா

   Delete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. ஆங்கில சேனல்களை பார்த்து தமிழ் சேனல்களும் இந்த டாக் ஷோ நடத்துகின்றன. எனக்கு அவற்றைப் பார்க்கவே கொஞ்சம் கூடப் பொறுமை இருப்பதில்லை. செய்திகள் மட்டும் பார்ப்பேன்.

  ReplyDelete
  Replies
  1. ஒரே காட்டுக்கத்தல்.. நம்ம காது சவ்வுதான் கிழியுது

   Delete
 8. எனக்கும் முதலில் புரியவில்லை.இப்போதும் அரைகுறையாகத்தான் புரிகிறது.குடும்ப த்தினர் முன்பு ஒன்றுமே புரிந்து கொள்ளாத மாதிரி நடித்து விடுகிறேன்

  ReplyDelete
  Replies
  1. இங்கிட்டும் அதே கதைதான்ப்பா. வருகைக்கும் கருத்துக்கும் நன்ற்ங்க கயல்

   Delete
 9. நேஷனல் ஜியாகரபி தினமும் பார்ப்பதுண்டு...

  ReplyDelete
  Replies
  1. அதான்ண்ணே பெஸ்ட். என்பது சதவீத நிகழ்ச்சிகள் ரசிக்க வைக்குது.

   Delete
 10. எங்கள் வீட்டில் பிள்ளைகள் பார்ப்பதுதான் நானும் அதுவும் ரொம்பவே அபூர்வம்...எனது நேரம் இரவு ஆங்கிலப்படங்கள் நல்ல படங்கள் இருந்தால் இல்லைனா அதுவும் இல்லை...

  கீதா : ராஜியின் சேனல் கலக்கல்ஸ்!!!! நான் ஜியக்ரோஃபி சேனல் பார்த்தாலும் கணினியில்தான்...மத்ததெல்லாம் நோ ஐடியா...உங்கள் மூலம் அறிந்துகொள்வது அல்லாது யார் வீட்டிற்கேனும் போனால் அவர்கள் நம்முடன் பேசுவதை விட டிவியுடன் தான் அதிகம் பேசுகிறார்கள்!! அப்படி பார்க்கும் போது அறிவது ஆனால் வெளியில் வந்ததும் மறந்துவிடும்....

  ReplyDelete
  Replies
  1. எங்க வீட்டுக்கு யாராவது வந்தாலோ அல்லது போன் அடிச்சாலோ முதல்ல செய்யுறது டிவிய ஆஃப் செய்யுறதுதான், நம்ம கவனத்தை சிதற விடுதுப்பா

   Delete
 11. முதலில், பிள்ளைகளோடு நீங்களும் சேர்ந்து உட்கார்ந்து கொண்டு டீவி நிகழ்ச்சிகளை பார்ப்பதை நிறுத்துங்கள்

  ReplyDelete
  Replies
  1. டிவி பார்க்குறதுக்காக உட்காருவதில்லைண்ணே. எப்பயாவது சில நேரம் அப்படி அமையும். இனி குறைச்சுக்குறேன்.

   Delete