வெள்ளி, மே 19, 2017

திருடியவருக்கு நாயன்மார் பதவியா?! - நாயன்மார்கள் கதைகள்


முன்னொரு காலத்தில்   கனகசபையின் திருச்சடை மகுடத்தை பசும்பொன்னால் வேய்ந்து அழகுப்படுத்திய ஆதித்ய சோழருடைய மரபில் வந்த  இடங்கழி நாயனார் சோழநாட்டின்   தெற்கெல்லையாகிய கோநாட்டில்   பிறந்தார். வேளிர் குலத்தில்  பிறந்த   இவர் இயல்பிலேயே சிறந்த சிவபக்தராக திகழ்ந்தார்.  இவர்காலத்தில் மக்கள் ஆகமத்திலுள்ள  சைவ நெறியையும், வேதத்திலுள்ள தர்மநெறியையும் போற்றி பாதுகாத்து வந்தனர். 

இடங்கழி நாயனார் சிவபெருமானுக்கு தொண்டுகள் புரிந்தும், சிவனடியார்களுக்கு தொண்டு  செய்து வந்த அடியார்களில் இவரும் ஒருவர்.  இவர்  சிவனடியவர்களுக்கு திருவமுது செய்து மகிழும் பெரும்பணியை செய்து வந்தார்.    சிவபெருமானின் அருளால்  இடங்கழி நாயனார்  புகழ் உலகறியும் நேரம் வந்தபோது கடும் பஞ்சம் நாட்டில் உண்டானது.  அடியவர்க்கு திருவமுது படைக்க நெல் கிடைக்காமல் போக  அவரின் திருப்பணி தடைப்பெறும் நிலை வந்தது.  

நெல் தட்டுப்பாட்டால் விருந்தோம்பல் அறம் தடைப்பட்டதால்  என்ன செய்வதென திகைத்து நின்றார்.  எங்கெங்கோ தேடி அலைந்தும் நெல் கிட்டாமல் மனம் வெறுத்து போனார். முடிவில் அரண்மனை களஞ்சியத்தில் நெல் இருப்பதை தெரிந்துக்கொண்டார்.  

ஒருநாள் நள்ளிரவில்  கட்டுக்காவலை மீறி அரண்மனைக்குள் நுழைந்து களஞ்சியத்தினுள் இருக்கும் நிறையிலிருந்து நெல்லை களவாடினார். திருட்டு தொழிலில் அனுபவமின்மையால்  அரண்மனை காவலரிடம் மாட்டிக்கொண்டார்.

Om Namah Shivaya:
மறுநாள் அரசவையில் அரசன் முன்கொண்டு  வந்து நிறுத்தப்பட்டார். காவலரின் புகாரை கேட்ட அரசன், இடங்கழி  நாயனாரின் முகப்பொலிவை கண்டு, இவர் இந்த இழிச்செயலை செய்திருப்பாரா என எண்ணி, ஐயனே! தங்களை பார்த்ததால் சிறந்த சிவனடியார் போல் உள்ளீர் . தாங்களா இவ்விழி செயலை செய்தீர்?! ஒருவேளை அவ்வாறு செய்ய நேர்ந்திருந்தால் காரணம் என்னவென அரசன்   வினவினான்.   

மன்னா! அடியேன் சிவனடியார்களுக்கு திருவமுது செய்து படைக்கும் திருப்பணியை இத்தனை காலம் தவறாமல் செய்து வந்தேன். ஆனால், நம் நாட்டில் நிலவும் கடும் பஞ்சத்தால் நெல் கிடைக்காமல்  எமது திருப்பணிக்கு தடை வந்துள்ளது.  அதனால் அரண்மனை களஞ்சியத்திலிருந்து நெல்லை கவர்ந்து செல்வது என்று முடிவு செய்து இங்கு வந்து நெல்லை களவாடி மாட்டிக்கொண்டேன் என உண்மையை உரைத்து, என் செயலுக்கு என்ன தண்டனை கொடுத்தலும் ஏற்றுக்கொள்கிறேன் என பணிந்து நின்றார்.

Om Namah Shivaya.:
இடங்கழி  நாயனாரின் முகப்பொலிவும், அவரின் உயர்ந்த நோக்கமும், அவரின் உண்மையை உரைத்த பங்கும், பணிவும் அரசனின் மனதை நெகிழச்   செய்தது. அடியவரை விடுவித்ததோடு  அவரை பணிந்து தொழுதார்.  அடியாருக்கு களஞ்சியம் போன்ற இவருக்கு அரண்மனை களஞ்சியம் சொந்தம் எனக்  கூறியதோடு ஏராளமான பொன்னையும் பொருளையும் கொடுத்தும் மனம் நிறையாத மன்னன், திருவமுது படைக்க தேவையான நெல்லையும் தானியங்களையும் களஞ்சியத்திலிருந்து தாராளமாய்  கொடுத்து அனுப்பினான். அதுமட்டுமின்றி தானியங்களும், பொன்னும், பொருளும் தேவைப்படும் சிவனடியார்கள் அரண்மனை களஞ்சியத்திலிருந்து பெற்று செல்லலாம் என முரசறிவித்தார். 

இடங்கழி  நாயனாரும்  தமது சேவையை தங்கு தடையின்றி செய்து கைலாய பதவி அடைந்தார்.  இவரது குருபூஜை ஐப்பசி மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரமாகும்.

தமிழ்மனம் ஓட்டுப்படடை தெரியாதவங்களுக்காக..
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1460471

Paramchaintanya Men:
நாளை கேபிள் கலாட்டாவில் சந்திக்கலாம்...
நன்றியுடன்,
ராஜி ,


17 கருத்துகள்:

 1. அருமை...

  போன், பொருளையும் ---> பொன் பொருளையும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. nhm writer மக்கர் பண்ணுதுண்ணே . பிளாக்குல வர்ற தமிழ் கன்வெர்ட்டர்ல டைப்பிங்க் . அதான் இத்தனை பிழை.

   நீக்கு
 2. அருமையான பதிவு பாராட்டுக்கள்.
  அங்கங்கே சிறு சிறு தவறுகள் இடம் பெற்றுள்ளன.(உ-ம்) ஐவரும்-இவரும், கிடடாமல்- கிட்டாமல், பார்த்ததால்- பார்த்தால், கொடுத்தலும் - கொடுத்தாலும், பங்கும் - பாங்கும்,விடுவித்ததோளோடு - விடுவித்ததோடு, போன், பொருளையும் -- பொன் பொருளையும், இவற்றைத் தவிர்த்தால் பதிவு மேலும் சிறப்புப் பெறும். (உரிமையோடு இவற்றைச் சுட்டிக்காட்டியதை மன்னிக்கவும்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. nhm writer மக்கர் பண்ணுது சகோ . பிளாக்குல வர்ற தமிழ் கன்வெர்ட்டர்ல டைப்பிங்க் . அதான் இத்தனை பிழை. சரி பண்ணிடுறேன்.

   நீக்கு
  2. எப்ப பார்த்தாலும் பாராட்டிக்கிட்டே இருக்கிறது நல்ல நட்பில்லை. தவறை சுட்டிக்காட்டுவதும்தான் நல்ல நட்புக்கு அடையாளம். தவறிருந்தா சுட்டிக்காட்டுங்க. கோவிச்சுக்க மாட்டேன்.

   நீக்கு
 3. தவறுகளைப் பாவங்கள் என்கிறோம். அக்காலத்தில் மக்கள் தங்கள் வரிப்பணங்களை பல வடிவங்களில் அரசாங்கத்து கொடுத்தார்கள். அதிலொன்று நெல் மூடைகள். இன்றும்கூட, நெல்மூடைகளை கோயில் காணிக்கைகளாக அளிப்பதைக்காணலாம். திருச்செந்தூர் சென்றால், அங்கு ஓரிடத்தில் நெல்லை குமித்திருப்பார்கள். பகதர்கள் மூடைகளாகவும் படியளவாகவும் அங்கு போய்க் கொட்டுவார்கள். உண்டியலில் கொட்ட முடியாது. இக்காணிக்கை தனிநபர்கள் அளிப்பது. அரசனிடம் இருக்கும் நெல்களஞ்சியம் மக்கள் அனைவரின் உடலுழைப்பால் பெருக்கப்பட்டது.. அரசன் உழைக்க மாட்டான். தன் மக்களின் உழைப்பு உறிஞ்சி வாழ்பவன். அதைக்களவாடும்போது, தான் அரசனின் சொத்தைக் களவாடுவதாக நினைத்தல் சரியா? கண்டிப்பாக இல்லை. அப்பாவி மக்களின் சொத்தைத்தான் களவாடுகிறோம் என்ற நினைப்பு இருந்திருந்தால், களவாடி இருக்க மாட்டார். அதை வைத்து சிவன்டியார்களுக்கு இட்டால் சிவன்டியார்கள் தெரிந்தால் வருந்துவார்கள். ஆக, எப்படி பார்த்தாலும் இது தவறான செய்கை. ஆனால் என்ன செய்ய? சேக்கிழாரின் கற்பனை விரிவில் பாவங்கள் புண்ணியங்களாகின்றன அவை சிவனடியாருக்குச் செய்யும் தொண்டாக இருந்துவிட்டால். சிவபெருமாளை வணங்கி வழிபட இப்படிப்பட்ட கதைகள் தேவையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னை எதுலாயவது கோர்த்து விட்டுடாதீங்க சகோ

   நீக்கு
 4. சேக்கிழார், சோழன் விண்ணப்பததற்கிணங்கி இக்கதைகளை எழுதினார். அவை செவிவழிக்கதைகள். ஒரு சில நாயன்மார்களைத்தவிர மற்றவர்களெல்லாரும் எங்கோ ஓர் ஊரில் பிறந்து வாழ்ந்து மடிந்த வெளித்தெரியா பொதுமக்கள். பலபல வாழ்க்கை மட்டங்களிலிருந்து தேர்தெடுக்கப்பட்டனர் சேக்கிழாரால். ஒரு வெளிப்படையான மத அரசியலது. அவர்கள் செயற்கரிய செயல்கள், உண்மையிலேயே நடந்திருக்க முடியாது என்பதைத் தெரிய பகுத்தறிவு தேவையில்லை. பொது அறிவே போதும். பிள்ளையை வெட்டி கறி சமைக்க முடியுமா? அரணமனையில் திருட ஓர் எளியவனுக்கு முடியுமா? இறந்த் ஒரே மகனை பிணமாக வீட்டில் மறைந்து கொண்டு இன்னொருவருக்கு விருந்தளிக்க முடியுமா? விபரீதமான கற்பனைகள். பாவங்கள்; பழிகள்; சாத்திரங்கள் மீறல். எல்லாமே இங்கே காணக்கிடைக்கின்றன. இதைச் செய்யக் காரணம்: சிவ பக்தியை வளர்க்க மக்கள் எதையும் நம்புவார்கள் என்ற நினைப்புதான். சிவனடியார்கள் என்போர் ஒரு வேக் டர்ம். இரந்துண்டு வாழும் சிலர். இவர்களுக்கு மக்கள் ஈயவேண்டுமென்றதை நிலைநாட்ட சேக்கிழார் போன்றவர்கள் வேறு வழியைக்கண்டு பிடித்திருக்கலாம். பயங்கரமான கதைகளைப்போட்டு மிரட்டி வைத்திருக்கிறார். நீங்களும் இக்கதையைப்போட்டு என்னை மிரட்டிவிட்டீர்கள் :-)

  மேலும், பெரியபுராணக்காலம். சீவக சிந்தாமணி காலம். பஹாபலி பணங்களை அள்ளிக்கொட்டிருக்கும்போது நாம் ஒரு திரைப்படத்தை வெளியிட முடியுமா? அப்படியே வெளியிட்டால், எப்படியாவது அப்படத்தை விட சிற்ப்பாக இருக்க வேண்டுமென்று நினைத்துச் செயல்பட மாட்டோமா? அதைப்போல, இங்கே திருக்கத்த தேவர் என்ற சமணப்புலவரின் சீவக சிந்தாமணி ஓகோ என்று மக்களிடையே விரும்ப்பட்டது. சைவர்கள் மன்னன் துணைக்கொண்டு இதை முறியடிக்கவேண்டுமென்பதால், சிறந்த் புல்வரான சேக்கிழார் தேர்ந்தெடுக்கப்பட்டு இக்கதைகள் உருவாக்கினர். முயற்சி வீண் போகவில்லை. மக்கள் சீவக சிந்தாமணியை விட்டுவிட்டு இதைப்பிடித்துக்கொண்டார்கள். இன்று நீங்களும் சிவபக்திக்கு இதுவே வழி என்கிறீர்கள். Fair is foul. Four is far.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிவனை உயர்த்தி சொல்ல இப்பதிவை எழுதல சகோ. என்னோட தோழி ஒருத்தங்க தன் மகளோட படிப்புக்காக நாயன்மார்கள் கதைகளை தேடி கிடைக்காம அலுத்துக்கிட்டாங்க. அப்பதான் நாம ஏன் இதை பதிவாக்கக்கூடாதுன்னு தோணுச்சு. இதுக்கடுத்து ஆழ்வார்கள் கதை வரும்.

   மனைவி, தாய், தந்தை பிணத்தை வீட்டுல வச்சுட்டு வேலைக்கு, தேர்வுக்கு போன நிகழ்வுகள் நம் கண்முன்னே நடக்குது. காதலுக்காக கொலை பண்ணலியா?! இல்லாதவர்களுக்கு உதவ ராபின் ஹூட் கொள்ளையடிச்சதில்லையா?! முதலாளி சொல்றதுக்காக கொலை பண்ணுற வேலையாட்கள் உண்டு. தான் கொண்ட கொள்கைக்காக எந்த எல்லை வரைக்கும் நாம் போவோம். அது எல்லா காலத்திலயும் உண்டு. நம் புராண கதைகள் அத்தனையிலும் மிகையூட்டல் உண்டு சகோ. அதை நானும் உணர்ந்தவள். பொதுவா சொல்லப்போனா எனக்கு பக்தி உண்டு. பைத்தியமில்ல

   நீக்கு
  2. உண்மையா விரும்ப ஆரம்பிச்சுட்டா எந்த காலத்திலயும், எந்த சூழ்நிலையிலும் மாறாது சகோ

   நீக்கு
  3. நன்றி நன்றி நன்றி திரு.விநாயகம் அய்யா அவர்களுக்கு ...
   நன்றியோ நன்றி ...
   ராஜி சகோ காண்டாக வேண்டாம்.
   என் பங்கு வேறு பதிவில் வரும்..

   நீக்கு
  4. என் நட்பு வட்டத்தில் நீங்க புதுசா வந்திருக்கீங்கன்னு நினைக்குறேன். பாராட்டும்போது மகிழ்ச்சியா ஏத்துக்கும்போது குறைகளை சுட்டிக்காட்டும்போது ஏத்துக்கனும்ங்குறது என் பாலிசி. இதுக்காகலாம் காண்டாக மாட்டேன் சகோ. குறைகளை எப்போதும் சுட்டிக்காட்டலாம்..

   நீக்கு
 5. NHM Writer மக்கர் பண்ணும்போது, அதை முற்றிலுமாய் நீக்கிவிட்டு மீண்டும் டவுன்லோடு செய்து நிறுவினால் பிரச்சினை இருக்காது. இது என் அனுபவம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்பிடிதான்ப்பா செய்வேன். ஏதோ ஒரு ஃபைல் டெலிட் ஆகாம பாடாய் படுத்தியது. அதான்...

   நீக்கு
 6. உங்கள் பணியை நீங்கள் செய்கிறீர்கள் ...
  நலம்
  இந்த அடியாரைப் பற்றி அறிந்துகொண்டது மகிழ்வு..
  அறிவியல் நோக்கில் அணுக வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.

  என் அளவில் இது மனு தர்மத்தின் நீட்சிக்கான ஒரு புனைவாக இருக்கலாம்.

  வேள்விகள் நடைபெறும் பொழுது பொருட்கள் பற்றாக்குறையானால் அருகே இருக்கும் (தலித்) குடியிருப்புகளில் இருந்து கவர்ந்து கொள்வது தர்மம் என்கிறது மனு நீதி.

  சேக்கிழார் ஒரு படி முன்னே போயிருக்கிறார்... மன்னனாவது மண்ணாங்கட்டியாவது அவனிடமே ஆட்டையைப் போடலாம் என்பதே அவரது செய்தி..
  தொடரலாம் சகோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எந்த ஒரு வினைக்கும் எதிர் வினை உண்டுன்ற பிதாகரஸ் சூத்திரத்தைதான் அவனவன் கர்மாவை அவனவன் சுமக்கனும்ன்னு ஆன்மீகத்துல சொல்றாங்க. விஞ்ஞானத்துலயும் நிரூபிக்க முடியாத அமானுஷயம் உண்டு. அதேப்போலதான் கடவுளாலகூட முடியாத விஷயம் பல உண்டு, கேட்டா விதின்னு சொல்வாங்க. அந்த விதியை கடவுளாலகூட மாத்த முடியாதுன்னு சொல்வாங்க. எல்லார் தலைவிதியையும் எழுதுன பிரம்மாவுக்கே சிவப்பெருமானின் முடியை காண முடியாது. அப்பிடி முயன்றா தோத்து நமக்கு கோவிலே இல்லாம போகும்ன்னு தெரிஞ்சுக்க முடில. அவர்தான் நம் முக்காலத்தை உணர்ந்தவர்ன்னு கதையளக்குறாங்க.

   உயிர் நம் உடலில் எங்கிருக்கு, எப்படி வெளியேறுது, வெளியேறி எங்க போகுதுன்னு விளக்காதவரை அறிவுக்கும், மனசுக்கும் போராட்டம் இருக்கும் சகோ.


   ஆரோக்கியமான விவாதத்துக்கு நான் தயார். எப்பயும் எந்த பதிவிலயும் உங்க கருத்துக்களை சொல்லலாம். நன்றி சகோ.

   நீக்கு