Sunday, May 21, 2017

ஒருவருக்கு 24 ஆசிரியர்களா!? - தத்தாரேயர் ஜெயந்தி


Bala Swaroopa of Shri Adiguru Dattatreya  (via Shree Kshetra Ganagapur):
சிவன், பிரம்மா, விஷ்ணுவின் அம்சத்தோடு ஒரு பிள்ளை வேண்டுமென அத்ரி, அனுசுயா தம்பதிகள் விரும்பி மும்மூர்த்திகளையும் வேண்டி நின்றனர். இச்சா, கிரியா, ஞான சக்தியாகிய மூன்று சக்திகளுக்கும் அப்பாற்பட்ட நிர்க்குணப்பரம்பொருளை குறிக்கும் பெயரே அத்ரி.. அனுசுயா என்பதற்கு பொறாமை, அசூயை, வெறுப்பு போன்ற தீய குணங்கள் இல்லாதவள்ன்னு பொருள்.. தத்த என்றால் வழங்கப்பட்டது என்று பொருள். சுய லாபமில்லாத தியாகத்தை உணர்த்துது. அத்ரி முனிவரின் மகன் என்பதால் ஆத்ரேயர் என்றும் சேர்ந்து தத்தாத்ரேயர் என்று பேர் வந்துச்சு.
Sadguru Dattatreya, the first guru to take a body.  Usually depicted as the Male Trinity:
இவர் மிக இளம் வயதிலேயே பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க வீட்டை விட்டு வெளியேறி, பிரம்ம ஞானத்தை அடைய பல இடங்களை சுற்றி கர்நாடகா மாநிலத்தில் உள்ள கங்காபுரத்தில் பிரம்ம ஞானத்தை அடைந்தார். இவரது பத்தினியின் பெயர் அனகா தேவி. ஆந்திராவில் அனகா தேவி விரதம் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுது.இந்த விரதம்  கணவன் மனைவி ஒற்றுமை பலப்பட அனுஷ்டிக்கப்படுது. வட இந்தியாவில் தத்தாத்ரேயர் விரதம் பரவலாக அனுஷ்டிக்கப்படுது.


Lord Dattatreya Trinity Wallpaper-guru datt-guru-giranar-girnari-parikrama:
இனி தத்தாத்ரேயர் அவதாரம் பற்றி பார்ப்போம்...

Birth of Dattatreya:

மும்மூர்த்திகளே பிள்ளையாய் வரவேண்டி பதிவிரதையான அனுசுயா தவமிருந்ததால் அவளின் வேண்டுதலுக்கு செவிசாய்க்க வேண்டிய கட்டாயத்தில் மும்மூர்த்திகளும் இருந்தனர். இதுக்குறித்து தங்கள் பத்தினிகளான பார்வதிதேவி, சரஸ்வதி, லட்சுமி ஆகியோரிடம் ஆலோசித்தனர். பெண்களுக்கே உண்டான பொறாமை குணத்தோடு, அனுசுயா சிறந்த பதிவிரதைதான் என்று நிரூபித்தப்பின் அவள் கேட்கும் வரத்தை கொடுங்கள் என்று கூறினர். அனுசுயாவின் பதிவிரதத்தை நிரூபிக்கும் பொருட்டு அனுசுயா இல்லம் நோக்கி சென்றனர். அப்போது அத்ரி முனிவர் வெளியில் சென்றிருந்தார்.
தங்கள் இல்லம் தேடி வந்தவர்கள் மும்மூர்த்திகள்ன்னு அறியாவிட்டாலும், விருந்தோம்புதல் இல்லாளின் முக்கிய கடமையாதாலால் அவர்களை வரவேற்று ஆசனத்தில் அமர்த்தி அறுசுவை சமைக்க சென்றாள். உணவு சமைத்து, உணவு பரிமாற ஆயத்தம் செய்து  மும்மூர்த்திகளையும் அழைத்து மனையில் அமர்த்தி உணவு பரிமாற சென்றாள். அப்போது, மும்மூர்த்திகளும் அம்மா! நாங்கள் உணவு உட்கொள்ள வேண்டுமெனில் ‘நிர்வாண நிலையில்தான் நீ உணவை பரிமாற வேண்டுமென ‘ கூறினர். அனுசுயா ஒருகணமும் யோசியாமல் தன் கணவனின் கமண்டலத்திலிருந்து நீர் எடுத்து மும்மூர்த்திகளின் மேல் தெளித்து அவர்களை குழந்தையாக்கி உணவூட்டினாள். 
Lord Dattatreya Mantra or Datta Mala Mantra  is a very oowerful beej mantra. You can chant it 108 times for prosperity, goodluck and Blessing of Dutt Guru.:
அனுசுயாவின் கற்பை பரிசோதிக்க சென்ற தங்கள் கணவன்மார்கள் வராததை அறிந்து கலக்கமுற்ற முப்பெரும்தேவியர்கள் அனுசுயா இல்லம் நோக்கி வந்தனர். அங்கு உலக உயிர்களை தங்கள் குழந்தையாய் பாவித்து காக்கும் மும்மூர்த்திகளும் குழந்தையாய் இருப்பதை கண்டு திகைத்து அங்கு நடந்ததை உணர்ந்து, தங்கள் கணவன்மார்களை திருப்பி தருமாறு அனுசுயாவை வேண்டி நின்றனர்.   அனுசுயாவும் மும்மூர்த்திகளையும் முன்போலவே மாற்றி தந்தாள். அனுசுயாவின் கற்பு நெறியை மெச்சி மும்மூர்த்திகளும் அனுசுயாவின் மகனாக தத்தாத்ரேயர் அவதரித்தார்.
Lord Dattatreya Trinity Wallpaper-guru datt-guru-giranar-girnari-parikrama:
மூன்று திருமுகங்கள், ஆறு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார் தத்தாத்ரேயர்.  சிவன் அம்சமாக சூலம், சங்கும், பிரம்மா அம்சமாக கமண்டலமும், துளசி மாலையும், விஷ்ணு அம்சமாக சங்கு சக்கரம் தாங்கி காட்சி தருகிறார். நான்கு வேதங்களும் நாய்களாகவும்,  தர்ம நெறிகளும் பசு உருக்கொண்டு இவர் அருகில் இருக்கின்றது.   தத்தாத்ரேயரை வாங்கினால் ஞானம்,மோட்சம்,நற்குணங்களை பெறலாம்.இவர் மந்திரம் ஞாபக  சக்தியை தரும்.குழந்தை இல்லாதவர்கள் இவரை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளுக்கு நினைவாற்றல் கூடும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். வீட்டில் இன்பம் பெருகும்.

இவரை வழிப்பட கடுமையான விரத முறைகள் ஏதுமில்லை. ஒரு மிட்டாய்க்கு தாவி வரும் பிள்ளைப்போல இவரை உள்ளன்போடு நினைத்து காயத்ரி மந்திரத்தை ஜபித்தாலே போதும். நினைத்தது நடக்கும்.
Vedic Astrology - Acharya Priti Bhargava | This blog is in praise of Bhagwan Shiv Shankar : http://www.vedic-astrology.co.in:
ஒருநாள் யது என்ற மன்னன் காட்டிற்கு வேட்டையாட சென்றான். அங்கு , தத்தாத்ரேயர் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தார். அதைக்கண்டு ஆச்சர்யமுற்ற மன்னன், ஐயா! ஒரு குடையின் கீழ் உலகை ஆண்டு பொன், பொருள், அந்தஸ்து, அதிகாரம் இருந்தும் மகிழ்ச்சியற்ற நிலையில் இருக்கின்றேன்.ஆனால், தாங்களோ ஏதுமற்ற நிலையிலும் மகிழ்ச்சியோடு இருக்கிறீர்களே எப்படி?! ஏதுமில்லாமலும் மகிழ்ச்சியாய் இருக்க உங்களை பண்படுத்திய குரு யார்?! என வினவினான். அதற்கு, தத்தாத்ரேயர் மன்னா! எனக்கு மொத்தம் இருபத்தி நான்கு குருக்கள். அவர்களிடமிருந்து கற்ற பாடமே என்னை இப்படி மகிழ்ச்சியுள்ளவனாக ஆக்கியுள்ளது என்றார். 
Lord Dattatreya (Vishnu) is worshipped in a very graceful householder's avatar in addition to the famously known ascetic forms. This very form is called as Anagha Swami, where His consort is called Anagha Devi - She who can make all of us cross this ocean of bondages and Karma. http://www.dycuk.org/newsletters/anaghastami2011.html:
ஐயா! எனக்கு விளங்கவில்லை. ஒருவருக்கு ஒரு குருதானே இருக்க முடியும்?! விதிவிலக்காக சிலருக்கு இரண்டு அல்லது மூன்று குருக்கள் இருக்கலாம். ஆனால், தாங்கள் இருபத்தி நாலு குருக்கள் என்று உரைப்பது ஆச்சர்யத்தையும், சந்தேகத்தையும் அளிக்கின்றது என பணிந்து நின்றான்.
மன்னா! பூமிதான் என் முதல் குரு. அதனிடமிருந்து பொறுமையை கற்றேன். 

தண்ணீரிடமிருந்து தூய்மையை கற்றேன்..

பலரோடு பழகினாலும் பட்டும் படாமலும் இருக்க காற்றிடம் கற்றேன்...

எதிலும் பிரகாசிக்க வேண்டுமென தீயிடம் கற்றேன்..

பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டுமென்பதை ஆகாயத்திடம் கற்றேன்....

மாறுபாடுகள் உடலுக்கே அன்றி ஆன்மாவுக்கல்ல என்பதை சந்திரனிடம் கற்றேன்...

மனம் ஒன்றாக இருந்தாலும் சிந்தனைகள் பலவற்றால் நிறைந்தது என்பதை சூரியனிடம் கற்றேன்...

வேடன் ஒருவனின் வலையில் சிக்கிய தன் குஞ்சு புறாக்களை காக்க தாய் புறாவும் வலிய சென்று வலையில் மாட்டியது. இதன்மூலம் பாசமே துன்பத்திற்கு காரணம் என உணர்ந்தேன்..

எங்கும் அலையாமல் தன்னைத்தேடி வரும் உணவை உட்கொள்ளும் மலைப்பாம்பை போல கிடைத்ததை உண்டு உயிர்வாழ கற்றுகொண்டேன். 

கணக்கில்லா நதிகள் வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் கடலிடமிருந்து துன்பத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை கற்றேன்..

பார்வையை சிதறவிடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்த  விட்டில் பூச்சியிடம் கற்றேன்..

தேனீக்கள் பூக்களிடமிருந்து தேனை எடுப்பது போல துறவி யாசகம் பெற்று ஜீவிக்க வேண்டுமெனவும், அதேநேரத்தில் தேனை சேகரிப்பது போல் உணவை சேகரித்து பின் பறிகொடுக்கவும் கூடாதென  தேனீக்களிடம் கற்றேன்...

 குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையின் மேல் மோகம் கொண்டு போன ஆண் யானையும் குழுக்குள் மாட்டிக்கொண்டதை கண்டு பெண்ணாசை கூடாதென கற்றேன்...

 மானின் வேகம் நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்ல. ஆனால், இசையை கேட்ட மாத்திரத்தில் ஓடுவதை நிறுத்தி இசையை கேட்க ஆரம்பிக்கும். அந்நேரத்தில் கொடிய விலங்குகள் வந்தால் அதன் கதி!? பிரம்மச்சர்ய விரதம் மேற்கொள்வோர்  இசை, நடனங்களில் நாட்டம் கொள்ளாமல் இருக்கவேண்டுமென மானிடம் கற்றேன்..

 நாவை அடக்க முடியாத சபலத்தால் தூண்டிலில் சிக்கி உயிரிழக்கும் மீனிடம் நாவடக்கத்தை கற்றேன்.... 

 பிங்களா என்ற தாசிப்பெண் ஓரிரவில் பலருடன் சேர்ந்து வருமானம் பார்த்தப்பின்னும் இனியும் யாராவது வரமாட்டார்களா என்று காத்திருந்து ஏமாந்து கிடைத்ததே போதுமென உறங்கிவிட்டாள்.  இதிலிருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்திப்படுமென கற்றேன்...

 குரரம் என்ற பறவை தன் இரையை பெரிய பறவைகளிடமிருந்து தப்புவிக்க கீழே போட்டு தன் உயிரை காப்பாற்ற்க்கொள்ளும். அதன்மூலம் வேண்டும் என்ற ஆவலை தவிர்த்தால் துன்பம் நேராது என்று கற்றேன்...

பாராட்டினாலோ, ஏசினாலோ எந்தவித உணர்ச்சிக்கும் சிறு குழந்தைகள் ஆட்படாது. அதுமாதிரியான உணர்ச்சிவசப்படாத மனம் முனிவனுக்கு வேண்டுமென சிறுவனிடம் கற்றேன். 

 ஒரு சிறுமியின் கைவளையல்கள் ஒன்றோடொன்று உரசி சப்தமெழுப்பின.  அவள் ஒரு வளையலை கழட்டியப்பின் சப்தம் நின்றது. இதிலிருந்து இருவர் மட்டுமே இருந்தாலும் தேவையற்ற விவாதம் எழும் எனவும், தனிமையே சிறந்தது எனவும் கற்றேன்..

போர்   ஆயுதங்கள் செய்பவன் பக்கத்திலே போர் நடந்தாலும் தான் செய்த ஆய்தங்களை எடுத்து செல்லாமல்,  ஆய்தங்கள் செய்வதிலேயே அவன் கவனம் இருக்கும். அவனிடமிருந்து எண்ணத்தை சிதற விடாத தன்மையை கற்றேன்.. 
Anaghashtami Dattatreya is one of the incarnation of Mahavishnu and Mahalakshmi will be worshipped with him in the form Anagha devi. According to Bhavishyottara Purana, Anagha devi and Dattatreya should be worshipped on Margashira Krishna paksha Ashtami.:
பாம்பு தனித்து இருந்தாலும் கவனமாய் இருக்கும். தனக்கென வீடோ, கூடோ கட்டிக்கொள்வதில்லை அதுப்போல முனிவருக்கும் வீடு கூடாதென பாம்பிடம் கற்றேன்..

 தன்னிலிருந்து நூலை வெளியேற்றி வலை பின்னி அதனுடன் விளையாடி, உண்டு, உறங்கி பின் அதையே உணவாக உட்கொள்ளும். அதுப்போல பரபிரம்மமும் உலகை உருவாக்கி, காத்து பின் அதை தன்னுள் ஐக்கியமாக்கி கொள்வார் என உணர்ந்தேன்.

ஒரு வகை வண்டு, தன் முட்டையிலிருந்து புழுவை கொண்டு வந்து தன்னருகில் வைத்து ஒருவித ஆசையை எழுப்பிக்கொண்டே இருக்கும். அந்த சத்தத்துக்கு பயந்து அந்த புழுவும் வெளி செல்ல பயந்து அங்கேயே இருந்து  வண்டாய் மாறும். அதுப்போல மனிதன் பயம், பக்தி, காமம், குரோதமென தன் மனதை எதில் செலுத்துகின்றாறோ அதன் உருவை அடைவர் என உணர்ந்தேன்.... எனக்கூறி முடித்தார்..

யது மன்னனும் தத்தாத்ரேயரின் உபதேசத்தின்படி பதவி, நாடு, மனையாள், பிள்ளைகளை துறந்து ஆன்மீகத்தில் ஈடுபட்டான்...
தத்தாத்ரேயருக்கு வட நாட்டிலும், ஆந்திராவிலும் ஏராளமான கோவில்கள் உண்டு. ஆந்திராவில் எல்லார் வீட்டுலயும் தத்தாத்ரேயரின் படங்கள் வைத்து வழிப்படுவர். தமிழகத்தில் தத்தாத்ரேயர் பற்றி அறிந்தோர் சொற்பமே. இவருக்கு சேந்தமங்கலம், சுசீந்தரம் தானுமலையான் கோவில் மற்றும் ஆற்காடு அருகில் உள்ள வாலாஜாபாத் தன்வந்திரி பீடத்திலும் இவருக்கு தனிச்சன்னிதி உண்டு.
நன்றியுடன்,
ராஜி

18 comments:

  1. நான் இதுவரைத் தாத்ரேயர் குறித்து
    எதுவும் அறிந்திருக்கவில்லை
    தங்கள் விரிவான அற்புதமான
    பதிவின் மூலம் அறிய மிக்க மகிழ்ச்சி
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் தத்தாத்ரேயர் பற்றி அறிந்தமைக்கும் நன்றிப்பா

      Delete
  2. தத்தாத்ரேயர் அவதாரம் பற்றிய விளக்கம் அருமை சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  3. 24 குரு சொன்னிங்க ஆனால் 23 தான் வருகிறது.மீதம்?????

    அருமையான பதிவு....👍👍

    ReplyDelete
    Replies
    1. தேனி லயே இரண்டு விசயம் வரும் சகோ. ஒன்னு முனிவர்கள் பொருளை யாசிக்கனும்ன்னும், ரெண்டாவது தேவைக்கு அதிகமா சேர்த்து வச்சா பறிகொடுக்க வேண்டி வரும்ன்னும் இருக்கும் பாருங்க.

      தவறுன்னு நினைச்சு சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சகோ

      Delete
    2. தவறு என்று சொல்லவில்லை.சந்தேகம் என்றுதான் கேட்டேன்

      Delete
  4. Her name is AnAsuya - not AnUsuya. Asuya means jealous. AnAsuya means without jealous

    ReplyDelete
    Replies
    1. அனுசுயான்னுதான் சகோ கேள்விப்பட்டிருக்கேன். தெரியாதவற்றை அறிய தந்தமைக்கு நன்றி சகோ

      Delete
  5. மிகவும் நன்கு உள்ளன

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  6. மிகவும் நன்கு உள்ளன

    ReplyDelete
  7. ததாத்ரேயர் கதை அறிந்திருந்தாலும் இங்கும் இன்னும் அறிந்து கொண்டோம்.

    கீதா: மஹாராஷ்ட்ராவில் உள்ள நரசிம்ஹவாடி எனும் ஊரின் அருகில் ஆற்றின் கரையில் இருக்கும் ததாத்ரேயர் கோயில் மிக மிக அழகாக இருக்கும். கோயிலின் படிக்கட்டுகள் ஆற்றைத் தொட்டுக் கொண்டு...ஆற்றில் படகிலும் போய் வரலாம்..பெரிய அகண்ட ஆறு. ஆற்றின் மறுகரையில் மலை...ரம்மியமான இடம்...

    ReplyDelete
    Replies
    1. அறிய தந்தமைக்கு நன்றிங்க கீதா

      Delete
  8. அவருக்கென்று தனி காயத்ரி மந்திரம் இருக்கிறதா???

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. தத்தாத்திரேயர் சரித்திரத்தை பாராயணமாக ஐந்து பாகங்களில் படிக்க கீழ் கண்ட லிங்கிற்கு செல்லவும்:
    https://santhipriya.com/2011/10/தத்தாத்திரேயர்-சரித்தி-4.html
    https://santhipriya.com/2011/10/தத்தாத்திரேயர்-பாகம்-2.html
    https://santhipriya.com/2011/10/தத்தாத்திரேயர்-சரித்தி-3.html
    https://santhipriya.com/2011/10/தத்தாத்திரேயர்-சரித்தி-2.html
    https://santhipriya.com/2011/10/தத்தாத்திரேயர்-சரித்திர.html

    ReplyDelete