Tuesday, May 02, 2017

அதியமான் ஔவையாரின் அன்புக்கு சாட்சி - கிச்சன் கார்னர்

மூத்தோர் சொல்லும் முதுநெல்லியும் ஆரம்பத்துல கசக்கும், ஆனா போகபோக இனிக்கும்ன்னு ஒரு பழமொழி இருக்கு. இனிப்புன்னா சுவை மட்டுமல்ல நல்ல பலனும் கொடுக்கும். அதியமானுக்கும், ஔவையாரின் அன்புக்கும் இந்நெல்லிதான் சாட்சி.   பெருநெல்லி, அரைநெல்லின்னு ரெண்டு வகையில் நல்ல சதைப்பற்றோடு  கிடைக்குது.  ஆரஞ்ச் பழம் போல ஆறு பிரிவா இருக்கும். கோடைக்காலங்களில் கிடைக்கும் அரைநெல்லிக்காய் வீட்டு தோட்டங்களில் விளையும். புளிப்பு சுவையுடன் நீர்சத்தோடு இருக்கும். மரக்கிளைகளில் கொத்துகொத்தாய் அரைநெல்லி காய்க்கும். பெருநெல்லி மலைப்பிரேதசங்களில் அதிகளவு கிடைக்கும்.  துவர்ப்பு, புளிப்பு, இனிப்பு சுவையுடன் இருக்கும். ஐரோப்பா, வடகிழக்கு ஆப்பிரிக்கா, மேற்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் நெல்லி மரங்கள் அதிகளவில் வளரக்கூடியவை. ஊறுகாய்,சாதம், ஜூஸ்ன்னு பலவிதங்களில் சாப்பிடலாம். இது ஏழைகளின் ஆப்பிள்ன்னும் சொல்லலாம்.

நெல்லிக்காய்ல புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, நியாசின், வைட்டமின் பி மற்றும் சி, கரிச்சத்து, சுண்ணாம்பு சத்து, தாதுப்பொருட்கள்ன்னு ஏராளமான சத்துகள் நெல்லியில் இருக்கு.

மருத்துவபலன்; 

 நெல்லிக்காய்கள் கண்களுக்கு குளிர்ச்சி தரும். செரிமான பிரச்சனையை போக்கும். சிறுநீரை பெருக்கி நீர்க்கடுப்பை போக்கும். உடல்சூடு, எலும்புருக்கி, பெரும்பாடு, வாந்தி, வெள்ளைப்படுதல், ஆண்குறி கொப்புளங்கள் போக்கும். நுரையீரல் சம்பந்தமான காசநோய் தீர்க்கும். ஸ்கர்வி நோயும் போக்கும். உடலில் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். திரிபலா சூரணம் தயாரிப்பில் நெல்லியும் ஒரு மூலப்பொருள். மொத்தத்தில் நெல்லிக்காய் ஒரு கற்பக மருந்துன்னு சொன்னா பொருத்தமா இருக்கும்.

நெல்லி வேர் வாந்தி, மலச்சிக்கலை குணமாக்கும். நெல்லிக்காய் வத்தல் இருமல், சளியை போக்கும். உடலை பலப்படுத்தும்,.

நெல்லிக்காய் தைலம் இப்போது எல்லா கடையிலும் கிடைக்குது. இத்தைலத்தை தலையில் தேய்த்து தலைமுழுகினா கண் சம்பந்தமான பிரச்சனை தீரும். பொடுகு கட்டுப்படும், முடி உதிர்தலும் தடுக்கும்.

இனி ஊறுகாய் செய்முறையை பார்க்கலாம்..
பெருநெல்லி 
மிளகாய்,
மிளகாய்தூள்,
உப்பு,
எண்ணெய்,
மஞ்சப்பொடி.
கடுகு, 
வெந்தயம்,
எண்ணெய்,
பெருங்காயம்
வெல்லம்.நெல்லிக்காய்களை ஆவியில் வேகவச்சு, ஆறவிட்டு, ஈரம்போக துடைச்சு சின்ன சின்ன துண்டுகளா போட்டுக்கோங்க. வெறும் வாணலியில் கடுகு, வெந்தயம் போட்டு வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.


ஒரு கடாயில எண்ணெயை ஊத்தி காய்ஞ்சதும் கடுகு போட்டு வெடிக்க விடுங்க.

காய்ந்த மிளகாயை போடவும்..

மிளகாய் சிவந்ததும் துண்டு போட்ட நெல்லிக்காயை போட்டு வதக்கவும்..

உப்பு சேர்க்கவும்...

மஞ்சப்பொடி சேர்க்கவும்....

மிளகாய் தூள், பெருங்காயப்பொடி சேர்த்து வதக்கவும்...


மிளகாய்தூள் வாசனை போக வதக்கியதும் வறுத்து பொடி செய்த கடுகு வெந்தயம் பொடி சேர்த்து வதக்கவும்..


கொஞ்சம் வெல்லப்பொடி சேர்த்து வதக்கி இறக்கவும்..

சுவையான நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி. ஒரு நாளைக்கு வெயில்ல வெச்சு எடுத்து கண்ணாடி அல்லது பீங்கான் அல்லது பிளாஸ்டிக் ஜார்ல போட்டு வெச்சுக்கிட்டா ஒருமாசம் வரை தாங்கும்.

நாளை யதுகுல வம்சத்தின் முடிவினை தெரிஞ்சுக்கலாம்...
நன்றியுடன்...
ராஜி.


22 comments:

 1. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

   Delete
 2. கடைசி படம் பேரீட்சம்பழம் மாதிரி இருக்கே ஸூப்பர்

  ReplyDelete
  Replies
  1. பேரீச்சை மஞ்சளாவா இருக்கும்?!

   Delete
  2. பேரீட்சை அபுதாபில் பல வண்ணங்களில் கிடைக்கும்

   மரத்தில் பழுக்கும் முன் மஞ்சள் நிறத்தில் இருக்கும் கீழே நின்று கொண்டே நேரடியாக கடித்து சாப்பிட்டவன் நான்

   Delete
  3. நான் தமிழச்சி. இந்த கதையெல்லாம் செல்லாதுண்ணே. பேரீச்சைன்னா கறுப்பு கலர்தான் (வார்டன்னா அடிப்போம் மொமண்ட்)

   Delete
 3. அப்படியே சாப்பிடலாம் போலிருக்கு !கொடுத்து வைச்சவர் உங்க மாமா :)

  ReplyDelete
  Replies
  1. சத்த்த்த்த்த்த்தமா சொல்லுங்கண்ணே. உங்க மாப்ள காதுல விழட்டும்.

   Delete
 4. நெல்லிக்காய் அப்படியே சாப்பிடலாம். ஊறுகாயும் பிடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. உப்பு மிளகாய் தூள் சேர்த்து சாப்பிட நல்லா இருக்கும்ண்ணே. ஊறுகாய், சாதம், ஜூஸ்லாம் அதுக்கு ஈடாகாது

   Delete
 5. நானும் கேள்விப்பட்டேன் இதில் நிறைய சத்திருக்கு என்பதை. ஒவ்வொரு கிழமையும் நிறைய வாங்கி வந்து நானே சாப்பிடுவேன்:) வீட்டில் புளிப்பு யாருக்கும் புய்க்காது:).. ஊறுகாய் சூப்பரா செய்திருக்கிறீங்க. இதே முறையில் யூ ரியூப்பில் பார்த்து நானும் செய்தேன் ஆனா எனக்கென்னமோ சுவை பிடிக்கவில்லை.

  ReplyDelete
  Replies
  1. இதுல வெல்லம் போட்டு செய்யுறதால செமயா இருக்கு. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு சுவை பிடிக்கும்.

   Delete
 6. தெரிந்த விஷயங்களை இன்னொருமுறை படிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. பச்சை நெல்லிக்காய் கடித்தபின் தண்ணீர் குடித்து அந்த இனிப்பை உணர்வதையே ஒரு தொழிலாகச் செய்தவன் நான், பள்ளி நாட்களில். பள்ளியில் ஒரு பெரிய நெல்லிக்காய் மரம் இருந்தது.(தேன்கனிக்கோட்டை).

  -இராய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete
  Replies
  1. நானும்தான்ப்பா. முன்னலாம் கெணத்து தண்ணி நல்லா இருந்தா, கிணறு தோண்டும்போது வரும் ஊற்றுக்கண்ணுல நெல்லிக்காய் போட்டு வெச்சதா சொல்லுவாங்க. ஆனா, அது எந்தளவுக்கு உண்மைன்னு தெரியாது

   Delete
  2. இல்லை. கிணற்றுத் தண்ணீர் கடுகடுன்னு இருந்தால் (சுவை குன்றி இருந்தால்), நெல்லி மரக் கட்டையைக் கிணற்றுக்குள் போடுவார்கள். இது நிறையபேர் கடைபிடிக்கும் வழக்கம்.

   கில்லர்ஜி குறும்பை ரசித்தேன். அப்புறம் திரும்பி ஊறுகாயைப் பார்த்தேன். நிஜமாவே பேரீச்சை மாதிரி இருக்கான்னு. தட்டில் ஒட்டிய எண்ணெயும், கடுகும் இல்லைனா, ஆமாம் பேரீச்சை மாதிரிதான் இருக்கு.

   Delete
 7. இங்க நெல்லிக்காய் எல்லாம் அதிக விலை நீங்கள் பார்ஷலில் அனுப்பிவிடுங்க அக்காச்சி))

  ReplyDelete
  Replies
  1. இந்தியாவுக்கு என்னை வந்து பார்க்காம போனவங்களுக்குலாம் கொடுக்குறதில்லை. எப்பூடி நம்ப சாமர்த்தியம்?!

   Delete
 8. சுவையான பதிவு!

  எங்கள் வீட்டில் நெல்லி மரம் இருந்த காலத்தில் விதம் விதமாக உபயோகித்திருக்கிறோம். அவையெல்லாம் இளமை நினைவுகள்! இப்போது நெல்லி அதிகம் உபயோகிப்பதில்லை!

  ReplyDelete
  Replies
  1. எல்லாமே அவசர யுகமாகிட்டுது

   Delete
 9. அருமை..........///ஒரு விஷயம் தான் உறுத்தல், நான் ஐரோப்பாவில் தான் இருக்கிறேன்,ஒரு சில ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்திருக்கிறேன்........ நெல்லி.....ஐரோப்பாவில்...பார்த்ததே இல்லைம்மா.இந்த சீதோஷ்ண நிலைக்கு நெல்லி மரம் வளராது.

  ReplyDelete
  Replies
  1. நான் ஐரோப்பாவுக்குலாம் வந்ததில்லைண்ணே. படித்ததை பகிர்ந்தேன். தவறான தகவலுக்கு சாரி

   Delete
 10. முன்பு வரை இப்படி ஊறுகாய், நெல்லிமுள்ளி, நெல்லித் தொக்கு, நெல்லிகாய்ப்பச்சடி, நெல்லிக்காய் சாதம் என்று இரு வகை நெல்லியிலும் பலவகை போட்டுச் சாப்பிட்டதுண்டு. இப்போது ஊறுகாய் தவிர்த்து மற்றதெல்லாம் செய்வதுண்டு. வெல்லம் சேர்த்தது இல்லை. இனி செய்தால் உங்கள் குறிப்பையும் செய்துவிடுகிறேன்.

  கீதா

  ReplyDelete