உடனே உன் ஃப்ரெண்ட் அவனை திட்டி அடிச்சிருப்பாளே! டிவி, ஃபேஸ்புக்ன்னு சுத்த தெரியுமே தவிர நல்ல விசயங்களை புரிஞ்சுக்குற கெப்பாசிட்டி அவளுக்கு கிடையாதே!
ம்க்கும். அவங்க வீட்டுல கரிச்சு கொட்டுறது போதாதுன்னு நீங்களும் அவளை கரிச்சு கொட்டுங்க. அவ ஒன்னும் புள்ளைய திட்டல. ஆனா, எந்த காலேஜ்ல சேர்க்கலாம், என்ன கோர்ஸ் சேர்க்கலாம்ன்னு குழம்பி போய் நிக்குறா. அவங்க வீட்டுல சொல்லுற படிப்பை சேர்க்கலாமா?! இல்ல எல்லாரையும்போல இஞ்சினியரிங், பிஸினெஸ் மேனேஜ்மெண்ட்ன்னு சேர்க்கலாமான்னு அல்லாடி போய் நிக்குறா.
அவனுக்கு என்ன விருப்பமோ அந்த கோர்ஸ்ல சேர்க்க சொல்லுறதுதானே?!
அவன் தனக்குன்னு எந்த விருப்பமுமில்லை. எது நல்லதோ அதுல சேருங்க. படிக்குறேன்னு சொல்லிட்டான். அதனால, எந்த பக்கம் போறதுன்னு அவளுக்கு புரிபடலையாம். சொல்லி கஷ்டப்பட்டா.
இப்பலாம் மார்க் கம்மியான பசங்கதான் பின்னாளில் நல்லா சாதிக்குறாங்க. அதனால, மனசை தளர விட வேண்டாமுன்னு சொல்லு. எல்லாரையும் போல இஞ்சினியரிங்க், பிஸினெஸ், ஹோட்டல் மேனேஜ்மெண்ட்ன்னு போய் விழாம ப்யூச்சர்ல எந்த துறைல வேலை வாய்ப்புன்னு பார்த்து முடிவெடுக்க சொல்லு. இப்ப மருத்துவத்துறைக்கு நல்ல எதிர்காலமிருக்கு. பாராமெடிக்கல் சம்பந்தமான படிப்புல சேர்க்க சொல்லு. அதுக்கடுத்து காமர்ஸ் மாதிரியான ஆர்ட்ஸ் படிப்புக்கும் மதிப்புண்டு. மூணு வருசம் படிச்சு டிகிரி வாங்கி மேற்படிப்பு படிச்சுக்கிட்டே க்ரூப் 1,2,3,4 மாதிரியான பரிட்சை எழுதி அரசு வேலைக்கு போகலாம். இல்ல பி.பார்ம், ரேடியாலஜி, லேப்டெக்னீசியன் மாதிரியான படிப்புகளை படிச்சு லோன் வாங்கி சுயதொழில் செய்யலாம்.
சரி இதுலாம் அவக்கிட்ட சொல்லுறேன் மாமா.
இரு. படிப்புலாம் தேர்ந்தெடுக்குற நேரத்துல சேர்க்குற காலேஜ் பத்தியும் நல்லா விசாரிக்க சொல்லு. ஏன்னா, லோன் கிடைக்குறது முதற்கொண்டு வேலை கிடைக்குறது வரை பல விசயங்கள் எந்த காலேஜ்ல படிக்கிறோம்ன்றதுதான் தீர்மானிக்கும். அதனால, மாமன் சொன்னான், மச்சான் சொன்னான்னும், டிவி, பேப்பர் விளம்பரத்துல வருதுன்னும் கண்ட காலேஜ்ல சேர்த்து லோல்படவேணாம். எந்த படிப்பா இருந்தாலும் அந்தந்த துறை சார்ந்த அனைத்து தரச்சான்று அங்கீகாரம் வாங்கி இருக்காங்களான்னு பார்க்கனும். காலேஜ்ல சிறப்பான வசதி இருந்தா அதுக்கான அங்கீகாரத்தையும் வாங்கி இருக்காங்களான்னும் பார்க்க சொல்லு. காலேஜ்ல லேப், ப்ரொபஷர்ஸ், கழிவறை, சுத்தமான குடிநீர், சுற்றுச்சூழல்ன்னு அடிப்படை வசதிகளை நேரில் பார்த்து சேர்க்கச்சொல்லு. இந்த விசயங்கள் நமக்கு மட்டும் புடிச்சா போதாது. பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கான்னும் பார்க்கனும். காலேஜ் சம்பந்தப்பட்ட முக்கியமான தகவல்கள் வெப்சைட்டுலயும், காலேஜ் ஆண்டுமலரில் வந்திருக்கான்னு பார்க்க சொல்லு. அப்படி இருந்தாலும் அதை ஒருமுறை கிராஸ் செக் பண்ணிக்க சொல்லு. பேருந்து வசதி எப்படி இருக்குன்னு பார்க்கனும். ஹாஸ்டல்ல தங்கினாலும் போக்குவரத்து, மருத்துவ வசதி இருக்கான்னு பார்க்கனும்.
ஒவ்வொரு காலேஜ்க்கும் அந்தந்த துறை சார்ந்த அமைப்பு அங்கீகரிக்கப்பட்டு அதுக்குன்னு ஒரு நம்பர் கொடுக்கப்பட்டிருக்கும். அதை என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு விசாரிக்கலாம். வெப்சைட்டுல இல்லன்னா ஆண்டு மலர்ல எல்லா புரொபசர்ஸ், அவங்க படம், அவங்க படிச்ச காலேஜ், அனுபவம், வாங்கின பட்டங்கள் இருக்கான்னும் பார்க்கனும். காலேஜ் மேனேஜ்மெண்ட்ல இருக்கும் மெம்பர்ஸ் யார் அவங்க பேக்ரவுண்ட் என்னன்னும் விசாரிக்கனும். குறைஞ்சது மூணு வருசம் அந்த காலேஜ்ல படிச்சவங்க, எத்தனை பேருக்கு வேலை கிடைச்சதுங்குற விவரம் பொதுவுல சொல்லி இருக்காங்களான்னு பார்க்கலாம், இல்லன்னா விசாரிச்சும் தெரிஞ்சுக்கலாம். மார்க், பணம், சாதி..ன்னு எந்த அடிப்படையில் பசங்களை சேர்த்துக்குறாங்கன்னும் கவனுக்கனும்.
காலேஜ்ல போதுமான கிளாஸ் ரூம் இருக்கா?! ரூம் காத்தோட்டமா, வெளிச்சமா இருக்கான்னும் கவனிக்கனும். ஹாஸ்டல்ல தங்குறதா இருந்தா ரூம் எப்படி இருக்கு, கழிவறை எப்படி இருக்கு, வெளிச்சம், காத்து வசதி இருக்கான்னும் பார்க்கனும். ஹாஸ்டல் சமையலறை, டைனிங் ஹாலையும் நல்லா பார்க்க சொல்லு. அதைவிட்டு அங்க போயும் போனை நோண்டிக்கிட்டு இருக்க வேணாம்ன்னு உன் ஃப்ரெண்டுக்கிட்ட சொல்லு. அதேமாதிரி ஒரே காலேஜ்ல போய் சேர்த்துட்டு வராம ரெண்டு மூணு காலேஜை நல்லா பார்த்துட்டு சேர்க்க சொல்லு. இந்த விசயத்துல சோம்பேறித்தனம் கூடாது. இப்படி நல்லா அலசி ஆராய்ஞ்சு காலேஜ்ல சேர்த்துட்டு வேற காலேஜ் பார்த்து ஆசைப்படக்கூடாது. நாம படிக்கப்போற காலேஜ்தான் பெஸ்ட் காலேஜ்ன்னு பசங்க மனசுல பதிய வச்சு படிக்க அனுப்ப சொல்லு.
அப்பாடி! இந்த கஷ்டமெல்லாம் நானும், ராஜியும் எங்களை பெத்தவங்களுக்கு வைக்கக்கூடாதுன்னுதான் ப்ளஸ்டூவுல பெயிலாயிட்டோம்.
ம்க்கும். மேய்க்குறது எரும. இதுல பெரும வேற.....
எருமைன்னு சொன்னது உங்களைத்தானே மாமா?!
என்கிட்ட வந்திடு. ஒன்னும் தெரியலைன்னாலும் வாய் மட்டும் காது வரை கிழியுது. தினமும் ரெண்டு வேளை சாமி படத்துக்கு பூ போட்டு விளக்கேத்தி சாமி கும்பிடுறியே! முருகா முருகான்னு அம்மன் கோவில்ல நின்னுக்கூட லூசு மாதிரி கும்பிடுறியே! முருகன் பக்கத்திலிருக்கும் ரெண்டு பேர்ல யார் வள்ளி எது, தெய்வானை எதுன்னு கரெக்டா சொல்வியா?!
ம்ம்ம் சொல்வேனே! முருகனுக்கு வலப்புறம் இருக்குறது வள்ளி, இடப்புறம் இருக்குறது தெய்வானை. முருகன் தெய்வானையை கட்டிக்கிட்டு எல்லா தம்பதிகளையும் போல தெய்வானைக்கு இடப்பாகத்தை கொடுத்தார். பின்னாடி வள்ளியை கட்டிக்கிட்டதால அவளை வலப்புறம் வச்சுக்கிட்டார். வள்ளி பூமியில் பிறந்த பொண்ணுங்குறதால தாமரை பூ வச்சிருப்பாங்க. கூடவே வேடுவ குலத்து பெண்ணுங்குறதால மரவுறி தரித்திருந்ததால பச்சை நிற புடவை கட்டி இருப்பாங்க. தெய்வானை இந்திரலோகத்து பெண்ங்குறதால கையில் நீலோத்பலர் மலர் வச்சிருப்பாங்க. சிவப்பு புடவை கட்டி இருப்பாங்க.
அடடே! உனக்கு நல்லன் விசயம்லாம்கூட தெரிஞ்சிருக்கே! எப்படி புள்ள?! போன வருசம் மே முதல் வாரம் வள்ளிமலை கோவிலுக்கு டூர் போகும்போது அங்க கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன்.
எப்படியோ நல்லது தெரிஞ்சுக்கிட்டா சரி.. லீவுல ஊர் சுத்த நம்ம பசங்க என்னலாம் ஐடியா பண்ணுறாங்கன்னு பாரு.. அத்தோடு
காலேஜ்ல போதுமான கிளாஸ் ரூம் இருக்கா?! ரூம் காத்தோட்டமா, வெளிச்சமா இருக்கான்னும் கவனிக்கனும். ஹாஸ்டல்ல தங்குறதா இருந்தா ரூம் எப்படி இருக்கு, கழிவறை எப்படி இருக்கு, வெளிச்சம், காத்து வசதி இருக்கான்னும் பார்க்கனும். ஹாஸ்டல் சமையலறை, டைனிங் ஹாலையும் நல்லா பார்க்க சொல்லு. அதைவிட்டு அங்க போயும் போனை நோண்டிக்கிட்டு இருக்க வேணாம்ன்னு உன் ஃப்ரெண்டுக்கிட்ட சொல்லு. அதேமாதிரி ஒரே காலேஜ்ல போய் சேர்த்துட்டு வராம ரெண்டு மூணு காலேஜை நல்லா பார்த்துட்டு சேர்க்க சொல்லு. இந்த விசயத்துல சோம்பேறித்தனம் கூடாது. இப்படி நல்லா அலசி ஆராய்ஞ்சு காலேஜ்ல சேர்த்துட்டு வேற காலேஜ் பார்த்து ஆசைப்படக்கூடாது. நாம படிக்கப்போற காலேஜ்தான் பெஸ்ட் காலேஜ்ன்னு பசங்க மனசுல பதிய வச்சு படிக்க அனுப்ப சொல்லு.
ம்க்கும். மேய்க்குறது எரும. இதுல பெரும வேற.....
எருமைன்னு சொன்னது உங்களைத்தானே மாமா?!
ம்ம்ம் சொல்வேனே! முருகனுக்கு வலப்புறம் இருக்குறது வள்ளி, இடப்புறம் இருக்குறது தெய்வானை. முருகன் தெய்வானையை கட்டிக்கிட்டு எல்லா தம்பதிகளையும் போல தெய்வானைக்கு இடப்பாகத்தை கொடுத்தார். பின்னாடி வள்ளியை கட்டிக்கிட்டதால அவளை வலப்புறம் வச்சுக்கிட்டார். வள்ளி பூமியில் பிறந்த பொண்ணுங்குறதால தாமரை பூ வச்சிருப்பாங்க. கூடவே வேடுவ குலத்து பெண்ணுங்குறதால மரவுறி தரித்திருந்ததால பச்சை நிற புடவை கட்டி இருப்பாங்க. தெய்வானை இந்திரலோகத்து பெண்ங்குறதால கையில் நீலோத்பலர் மலர் வச்சிருப்பாங்க. சிவப்பு புடவை கட்டி இருப்பாங்க.
அடடே! உனக்கு நல்லன் விசயம்லாம்கூட தெரிஞ்சிருக்கே! எப்படி புள்ள?! போன வருசம் மே முதல் வாரம் வள்ளிமலை கோவிலுக்கு டூர் போகும்போது அங்க கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன்.
எப்படியோ நல்லது தெரிஞ்சுக்கிட்டா சரி.. லீவுல ஊர் சுத்த நம்ம பசங்க என்னலாம் ஐடியா பண்ணுறாங்கன்னு பாரு.. அத்தோடு
வாட்ஸ் அப்ல வந்த இந்த படம் யோசிக்கவும், மனசை பாதிக்கவும் வச்ச படம் இதையும் பாரு. கூடவே,
என்னைப் பார்க்க முடியும், ஆனால் எனக்கு எடை கிடையாது. என்னை ஒரு பாத்திரத்தில் போட்டால் அதன் அளவை குறைத்திடுவேன். நான் யார்?!
இதுக்கு பதிலும் யோசிச்சு வை... கொஞ்சம் வேலை இருக்கு வெளில போய் வரேன்...
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை தெரியாதவங்களுக்கு...
கதம்பம் மணத்தது
ReplyDeleteத.ம.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Deleteபெற்றோரின் மனக்குழப்பத்தைத் தீர்க்கவும் அல்லாடலைத் தவிர்க்கவும் உங்களின் பரிந்துரைகள் நிச்சயம் உதவும்.
ReplyDeleteபாராட்டுக்குரிய பொதுப்பணி.
“...நான் யார்?” கேள்விக்கு விடை தெரியவில்லை. புத்திசாலிகள் சொல்வார்கள்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா..
Deleteஎல்லாருக்கும் எல்லாத்துக்கும் பதில் தெரியாதுப்பா.
மிகவும் பயனுள்ள தகவல், மேலும் சில தகவல்கள் கீழுள்ள இணைப்பில் உள்ளது.
ReplyDeletehttp://uthradgvc.synthasite.com/what-nxt.php
நான் யார்?- துவாரம் (உபயம் google ஆண்டவர்)
சோமேஸ்வரன் புத்திசாலிதானே ராஜி? கூகுலார் துணையோடாவது கண்டுபிடித்தாரே!
Deleteஅதுசரி, இந்தமாதிரி புத்திசாலித்தனமான கேள்விகளையெல்லாம் எப்படி உங்களால் கேட்க முடிகிறது?!
பசங்களோட விடுகதை புத்தகம் இருக்குப்பா.
Deleteஉங்கள் தளத்தை வந்து பார்க்குறேன் சோமேஸ்வரன் சார். நீங்க சொன்ன விடை சரி
Deleteபதிவுகள் அருமையோ அருமை
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteவணக்கம்
ReplyDeleteசொல்ல வேண்டிய கருத்தை மிக அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் gடித்து மகிழ்ந்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் பதிவை படித்து மகிழ்ந்தமைக்கும் நன்றி சகோ
Deleteசுவாரஸ்யம். + உபயோகமான பதிவு.
ReplyDeleteதம +1
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteநல்ல விவரமான பதிவு.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா
Deleteஅருமையான கதம்பம்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றிப்பா
Deleteஅருமை
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteஅருமை...
ReplyDeleteஉங்கள் பதிவில் ஒரு ஓட்டை உள்ளது... ஹிஹி... விடை "துவாரம்..."
அருமை
ReplyDelete