நரசிம்ம அவதாரம் தசாவதாரங்களில் நாலாவதாகும். மத்த அவதாரமெல்லாம் பிறப்பெடுத்து குறிப்பிட்ட சமயம் வரும்வரை காத்திருந்து தீமையை அழிக்கும். ஆனால், நரசிம்ம அவதாரம் மட்டும் பக்தன் அழைத்த நொடி பிரசன்னமானதாகும்.
சதாசர்வக்காலமும் ஹரி நாமத்தை உச்சரித்து ஹரி வழிப்பாட்டிலேயே கவனத்தை செலுத்தினான் பிரகலநாதன். இரண்யகசிபு சாம,பேத, தாண்ட என அத்தனை வழிகளிலும் முயன்று தன் மகனின் மனதை மாற்ற இயலாமல் தோற்று நின்றான். ஒருநாள் மகனை அழைத்து அவன் மனதை மாற்ற முயன்று தோற்றபோது கடுங்கோபம் கொண்டு , மூடனே! என்னை எதிர்த்து பேசும் தைரியம் உனக்கு யார் தந்தது!? இம்மூவுலகில் என்னைவிட உயர்ந்தவன் யார்!? என கர்ஜித்தான். எல்லா உயிருக்கும் படியளிக்கும் பரந்தாமனே சிறந்தவன் என பிரகலநாதன் எதிர்த்து வாதிட்டான்.
இரண்யகசிபுவை வதம் செய்தும் நரசிம்மர் உக்கிரம் குறையாமல் இருப்பதைக்கண்ட தேவாதிதேவர்கள் பலவாறு முயன்றனர். கடைசி உத்தியாய் பிரகலநாதனை அனுப்பினர். பிரகலநாதனை கண்டதும் உக்கிரம் குறைய தொடங்கியது. அடுத்து மகாலட்சுமியை அனுப்பினர். முழுக்க உக்கிரம் தணிந்த நரசிம்மர் மகாலட்சுமிதேவியை தன் மடியில் இருத்திக்கொண்டு அனைவருக்கும் அருள்பாலித்தார்.
இரண்யகசிபுவின் வதமும், நரசிம்ம அவதாரமும் நிகழ்ந்த இடம் ஆந்திர மாநிலம் அகோபிலம் நகரமாகும். இன்றளவும் இரண்யகசிபு வாழ்ந்த இல்லமும், பிரகலநாதன் குருகுலமும், நரசிம்மர் வெளிவந்த தூணும் அகோபிலத்தில் இருக்கு. நரசிம்ம அவதாரத்தை தான் காணவில்லையென கருட பகவான் வருந்த அவருக்கு அகோபிலத்தில் ஒன்பது அவதாரமெடுத்து காட்சி தந்தார். கருடன் வழிப்பட்டு வரும் இந்த ஒன்பது மூர்த்தங்களும் சுயம்புவாய் உருவானது. அகோபில மலை ஆதிசேஷன் வடிவில் இருக்கு. இம்மலையின் ஒரு பக்கத்தில் திருமலையும், இன்னொரு பக்கம் ஸ்ரீசைலமும் இருக்கு.
அகோபிலத்திலிருந்து 2கிமீ தூரத்தில் மலையடிவாரத்தில் இருக்கிறார் பார்க்கவநரசிம்மர். இவர் ராமரால் வழிப்பட்டவர். பார்க்கவன் என்பது ராமரின் பெயர்களில் ஒன்று.
மலைமீதே தென்கிழக்கு திசையில் 4 கிமீ யோக நிலையில் அமர்ந்திருக்கிறார் யோகானந்த நரசிம்மர். பிரகலநாதனுக்கு யோகத்தை கற்பித்தவர் இவர்.
குடைவடிவிலான கோவிலில் பத்மபீடத்தில் அமர்ந்து அரிய வகை கல்லாலான மூர்த்தத்திலிருந்து அருள்பாலிக்கிறார் சத்ரவத நரசிம்மர். கீழ் அகோபிலத்திலிருந்து 4கிமீ தூரத்தில் உள்ளது இக்கோவில்.
இரட்டை நரசிம்மர் தலம் என்ற பெயருடன் பாபநாசினி நதிக்கரையின் கிழக்கில் லட்சுமி நரசிம்மரும், வராக நரசிம்மரும் இருக்கிறார்கள். இங்கிருந்து வேதகிரி, கருடாத்ரி மலைகளுக்கிடையில் உள்ள பள்ளத்தாக்கில் வராக குண்டத்திலிருந்து பாபநாசினி நதி பாய்வதை காணலாம்.
மேல் அகோபிலத்திலிருந்து 1 கிமீ தூரத்தில் கராஞ்ச மரத்தடியில், கையில் வில்லேந்தி அருள்பாலிக்கிறார் கராஞ்ச(சராங்க) நரசிம்மர்.
பாவன ஆற்றங்கரையில் கோவில் கொண்டதால் பாவன நரசிம்மர்ன்னு பெயர் பெற்றார். அகோபிலத்திலிருந்து ஆறு கிமீ தொலைவில் இக்கோவில் இருக்கு.
இரண்யனை வதைத்த ஜ்வாலா நரசிம்மர் மேரு மலையில் வீற்றிருக்கிறார். இரண்யனை வதைத்த இடமும் இதுவே. குறுகிய மனித வாழ்க்கை சொல்லாமல் சொல்லும் வழியில் சென்று இவரை தரிசிக்க வேண்டும். எட்டு கைகளுடனும், நான்கு கைகளுடனும் இரண்டு நரசிம்மர் திருவடிவங்கள் இங்குள்ளது.
நரசிம்மர் வழிப்பாடு..
நரசிம்மர் ஜெயந்தி அன்று நீராடி , லட்சுமி நரசிம்மர் படத்தின் முன் செவ்வரளி, துளசி கொண்டு அலங்கரித்து அர்ச்சனை செய்து தயிர்ச்சாதம், பானகம், பால் வைத்து நைவேத்தியம் செய்து இயன்றளவு தானம் செய்ய வேண்டும்.
நரசிம்மரின் உக்கிரம் தணிக்கும் தயிர்சாதம் செய்முறை...
தேவையான பொருட்கள்;
உப்பு போட்டு குழைய வேக வைத்த சாதம்
ப.மிளகாய்,
கா. மிளகாய்,
இஞ்சி,
கடலைப்பருப்பு,
உளுத்தம்பருப்பு,
கடுகு,
கறிவேப்பிலை,
எண்ணெய்,
உப்பு,
தயிர்,
பெருங்காயம்.
வாணலியில் எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விட்டு..
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு சிவந்ததும்...
இஞ்சி போடுங்க...
ப.மிளகாய், காய்ந்த மிளகாய் போடுங்க....
கட்டியில்லாம அடித்த தயிரில் தாளிச்சதை கொட்டி பெருங்காயம் சேர்த்து..
தேவையான உப்பு சேர்த்து நல்லா கலக்கி..
சாதத்தில் கொட்டி தளர, தளர கிளறவும்... தயிர் புளிப்பா இருந்தா கொஞ்சம் பால் சேர்த்துக்கலாம்.. சாதம் சூடா இருக்கும்போதே தயிர்சாதம் கிளறினா நல்லா இருக்கும்
சுவையான தயிர்சாதம் ரெடி. வெள்ளரிக்காய், மாங்காய், மாதுளை, கருப்பு வெள்ளை திராட்சை, வெங்காயம்ன்னு அவங்கவங்களுக்கு பிடிச்ச மாதிரி சேர்த்துக்கலாம்..
எதிரி பயம் போக்கும் நரசிம்மர் ஜெயந்தி இன்று நாடெங்கும் கொண்டாடப்படுது.
நன்றியுடன்...,
ராஜி.
நரசிம்மர் அருள்பாலிக்கும் வெகுசில கோவில்களில் பூவரன்குப்பமும் ஒன்றே. அக்கோவில் பற்றி அறிய இங்கு அழுத்தவும்.....
காணக்கிடைக்காத நரசிம்ம தரிசனம்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா
Deleteஅறியாக புராணக்கதை அறிந்தேன்
ReplyDeleteஇது கிண்டலில்லையே
Deleteநரசிம்மருக்கு பிடிக்குதோ இல்லையோ ,இந்த சம்மருக்கு தயிர்சாதம் சாப்பிட எனக்கு பிடிக்கும் :)
ReplyDeleteநல்லதுண்ணே
Deleteபதிவும் படமும் அருமை. ஒரு முறை http://kavithaigal0510.blogspot.com-பக்கம் வாருங்களேன்
ReplyDeleteஇந்த வாரம் முழுக்க பிசி சகோ. திங்கள்கிழமைல இருந்து அவசியம் வரேன்
Deleteபூவரசன்குப்பம் நரசிம்மரைப் பற்றி குமுதம் ஜோதிடம் ஏஎம்ஆர் அவர்கள் எழுதியவுடன் சென்று தரிசித்தோம். நல்லது நடந்தது. கடுமையான நோய்க்கு ICU மாதிரி, கைவிட்டுவிட்ட நோயாளிகளுக்கு நரசிம்மனின் சந்நிதி என்று அவர் எழுதுவார். பானகம் நைவேத்யம் செய்வோம். நீங்கள் சொன்னதால் இனித் தயிர்சாதமும் செய்தால் போயிற்று. நன்றி!
ReplyDelete-இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)
நான் சொல்லைலப்பா. நரசிம்மர் கதை இதான் சொல்லுது. பானகம், நீர்மோர், தயிர்சாதம், குளிர்ந்த பால் இவையெல்லாம் நரசிம்மருக்கு படைக்கலாம்.
Deleteபூவரசன் குப்பம் ,கோவில் பத்தி ,குமுதம் ஜோதிடம் என்னும் வியாபார ,விளம்பர நிறுவனம்,சொன்னாதான் உங்களுக்கு எல்லாம் பெருசாத்தெரியுது போல ,இதே காணாமல் போன கனவுகளில் நான்கு வருடங்களுக்கு முன்பே தெளிவாக இந்த திருக்கோவில் பத்தி எழுதப்பட்டுவிட்டது .முதலில் ஜோதிடம் என்பது உண்மையாக இருக்கலாம் ,அனால் அதை கூறுபவர்களின் ,100 க்கு 99 % பொய்யர்களே வியாபாரம் என்பது மட்டுமே அவர்களது ஒரே நோக்கு ,கடவுளை மட்டும் வணங்குங்கள்,உங்கள் சுமைகள் எல்லாம் தானே குறைந்து போகும் .இதோ அந்த லிங்க்
ReplyDeletehttp://rajiyinkanavugal.blogspot.com/2014/02/blog-post_21.html
நல்ல பகிர்வு.
ReplyDeleteதெரிந்த கதை என்றாலும் உங்கள் பதிவு அருமை..
ReplyDeleteகீதா: அகோபிலம் சென்றிருக்கிறேன்..அதே போன்று ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் பரிக்கல், பூவரசஞ்குப்பம், அபிஷேகப்பாக்கம் அதுவும் சென்றிருக்கிறேன்...பாண்டிச்சேரியில் இருந்த போது..
நல்ல பகிர்வு ராஜி
நவநரசிம்மர் படமும் தனித்தனியே post செய்யவும்.
ReplyDelete