தனியார் தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் வரும்முன் பெரும்பான்மையான பெண்களின் மாலை நேர வேலைகளில் முக்கியமானது பூ கட்டுதல். தங்களை அழகுப்படுத்திக்கவும். கோவில், மற்றும் வீட்டில் உள்ள தெய்வங்களுக்குமென பூ கட்டுவாங்க.
இப்பத்திய பெண்கள் பேஷன்ன்ற பேர்லயும், பேன் வைக்கும்ன்னு பூக்கள் வைக்குறதை தவிர்க்குறாங்க. அப்பிடியே வச்சுக்கிட்டாலும் ரோஜா, டேரிப்பூ மாதிரியான ஒற்றைப்பூவை வச்சுக்குறாங்க. நாள் கிழமை, விரதம், சுபநிகழ்ச்சின்னு பூச்சரம் வைக்க வேண்டிய நாட்களில் கடைகளில் தொடுத்த பூவை வாங்கிக்குறாங்க. இது பணத்தை விரயம் செய்வதோடு பூக்கட்டுறதால வரும் நல்ல பலன்களை இழக்குறாங்க.
பூக்கட்டுறதால நல்ல பலன்களான்னு யோசிக்குறீங்களா?! ஆமாங்க பூக்கட்டுறதுலயும் நல்ல பலன் நமக்கு கிடைக்குது. மனம் அமைதியாகும், கவனிப்பு திறன் கூடும், பூக்களை பார்க்கும்போதும், கட்டும்போதும் மனம் குதூகலமடையும். பூக்களின் வாசனை வீடெங்கும் பரவி அமைதியையும் நல்ல நறுமணத்தையும் கொடுக்கும். தரையில் அமர்ந்து பூக்கட்டுவதும் ஒருவித யோகாசனமாகும். வாசனை பூக்களை நுகர்வதால் கேன்சர் வருவதை தடுக்கலாமாம். சிலவகையான பூக்கள் சரும நோய்களுக்கு மருந்தாகும். பூக்கட்டும்போது நூல்களில் விழும் சிக்கல்களை அவிழ்க்கும்போது பொறுமை, பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தன்மைன்னு கத்துக்குறாங்க.
இப்படி நல்ல பலன்களை கொடுக்கும் பைசா செலவில்லாத பூக்கட்டுற முறை இப்பத்திய பெண்கள் பலருக்கு தெரியாது. ஏன் என் பெண்களே பூக்கட்ட தெரிஞ்சாலும் போம்மா.. பத்துரூபா கொடுத்து வாங்கினோமா வச்சமான்னு இல்லாம இடுப்பு தொடை நோக கட்டிக்கிட்டுன்னு கிண்டல் அடிப்பாங்க..
இனி பூக்கட்டும் முறை 1...
முன்னலாம் வாழைநார்லதான் பூக்கட்டுவாங்க. இப்ப வாழநார் கிடைக்குறதில்ல. கடைகளில் பல வண்ணங்களில் நூல்கண்டு கிடைக்குது. கிடைக்காதவங்க சொல்லுங்க. என் அப்பா பொழுதுபோக்கா நூல்கண்டு போடுறார். பார்சல் பண்ணிவிடுறேன்
இடதுக்கையில் நூலின் நுனியை பிடிச்சுக்கிட்டு, நூலின் குறுக்கில் மேல் ஒன்னு கீழ் ஒன்னுன்னு ரெண்டு பூவை வெச்சு இடதுக்கை விரல்ல பிடிச்சுக்கிட்டு ... பூவின் கீழ்பக்கமா நூலை ஒரு சுத்து சுத்தி...
வலதுக்கை விரல்களில் நூலை சுத்தி, அந்த வட்டத்துக்குள் பூவை நுழைச்சு நீளமான நூலை இழுக்கனும். அதுக்கடுத்து பூ வச்சு இதே முறையில் பூ கட்டிக்கிட்டே வரணும்..
பூச்சரம் ரெடி. மல்லி, முல்லை, காக்டா மல்லின்னு எல்லா பூவையும் இந்த முறையில் கட்டலாம், மல்லி, முல்லையோடு கனகாம்பரம் வச்சு கட்டினா சூப்பரா இருக்கும். மரிக்கொழுந்தும் இருந்தா அழகு இன்னும் அள்ளும். இப்பலாம் பட் ரோஸ்ன்னு சின்ன சின்ன ரோஜாக்கள் கிடைக்குது. அதையும் வச்சு கட்டலாம். இல்லன்னா சாட்டின் ரோஸ்ன்ற செயற்கை பூ கடையில் கிடைக்குது அதையும் வச்சு கட்டலாம்.
பூக்கட்டும் முறை 2...
நீளமான காம்புள்ள பூக்களை எடுத்துக்கோங்க.
நூலின் நுனியை இடதுக்கை விரல்ல பிடிச்சுக்கிட்டு நூலின்மேல் மேல் ஒன்னு, கீழ் ஒன்னுன்னு ரெண்டு பூவை வச்சு பூவை கீழ் பக்கமா நூலை சுத்தி...
வலதுக்கை ஆள்காட்டி விரல், நடுவிரலில் நூலைச் சுத்தி நூலுக்கிடையில் பூவை நுழைத்து நூலை மெல்ல இழுக்கவும்.
அடுத்து மேல் பக்கமா மொட்டு இருக்குற மாதிரி ஒற்றைப்பூவை வைத்து கீழ்பக்கமா நூல் சுத்தி, மேல் பக்கமா விரல்ல நூலை சுத்தி அதுக்குள் பூவை நுழைச்சுக்கோங்க.
அடுத்து கீழ்பக்கமா மொட்டு இருக்குற மாதிரி வச்சு ஒத்தைப்பூவை வச்சு எப்பயும்போல கட்டிக்கோங்க.
மேல, கீழன்னு மாத்தி மாத்தி ஒத்தை, ஒத்தை பூவா வச்சு கட்டிக்கிட்டே வாங்க.
அழகான பூச்சரம் ரெடி. இந்தச்சரம் கடைகளில் இருக்குற மாதிரி இல்லாம வித்தியாசமாய் இருக்கும். டார்க் கலர் பருமனான நூல்ல கட்டுனா பார்க்க ரொம்ப அழகா இருக்கும்.
இந்த முறையில் கட்டுற பூவை காம்பு நீளமானதா எடுத்துக்கனும் அப்பதான் அழகா இருக்கும். சம்பங்கி, ஜாதிமல்லி, நித்திமல்லி பூக்கள் இதுக்கு சரியா இருக்கும்.
புதுசா பூக்கட்டுறவங்களுக்கு டிப்ஸ்..
முதல்ல பூவை வச்சு கட்ட பழகுனா சரிவராது,. அதனால குச்சியை சின்ன சின்னதா வெட்டி வச்சு கட்டி பழகலாம். அப்புறம் காம்பு நீளமான பூக்களை வெச்சு கட்ட பழகினப்பின் மல்லியை வச்சு கட்டலாம்....
நாளை இசைஞானியாரை பத்தி தெரிஞ்சுக்கலாம்..
.நன்றியுடன்,
ராஜி.
எங்க வீட்டம்மாவுக்கு இது தினமும் வாடிக்கையான வேலை
ReplyDeleteமகளுக்கு?!
Deleteபூவின் பெருமையை அழகாக விளக்கியமைக்கு நன்றி.
ReplyDeleteவாணி ஜெயராமின் இந்தப்பாடலில் எனக்கு என்றுமே மயக்கம்தான்...
நான் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் இதுண்ணே
Deleteபூத்தொடுப்பதில் எனக்கு அனுபவம் இல்லை. பூ வாங்கிக் கொடுப்பதில் உண்டு!
ReplyDelete-இராய செல்லப்பா நியூஜெர்சி
யாருக்கு என்பதில் இருக்கு ரகசியம்
Deleteஅருமையான பகிர்வு.......///பூக் கட்டுற முறைய ஒரு வீடியோ கிளிப் போட்டிருக்கலாம்.........
ReplyDeleteநல்ல ஐடியா. அடுத்த முறை முயற்சிக்கிறேன்
Deleteபூவின் மகத்துவத்தையும் பூ கட்டும் முறைகளையும் அறிந்து கொண்டேன்.
ReplyDeleteசும்மாவா, பெண்களை 'பூ.வை' என்று சொன்னார்கள்? :)
தொடர்கிறேன்.
நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteஎனக்கு ஞாபகத்துக்கு வந்த பாட்டு ....பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமோ :)
ReplyDeleteஇல்லண்ணே
Deleteஅழகாக வகுப்பெடுத்திருக்கிறீங்க, நான் முன்பு மாலை நல்ல அழகா கட்டுவேன், திருவெம்பாவை 10 நாளும் கொடுப்பேன் பூஜைக்கு, ஆனா இப்படி சரம் கட்டத் தெரியாது.
ReplyDeleteஇன்னும் விதம்விதமா பூ தொடுக்குறாங்க ஆதிரா.. ஒரு பக்கம் மட்டும் கட்டுறது, மாலைப்போல...ன்னு எத்தனை விதம். பூக்களை போலவே அதை தொடுக்கும் முறையும் அதிகம்தான்
Deleteநல்ல பதிவு. இப்போதெல்லாம் பல பெண்களுக்கு பூக்கட்டத் தெரிவதில்லை.
ReplyDeleteம்ம்ம்ம் என் பொண்ணுங்களுக்கு தெரிஞ்சாலும் கட்டுறதுக்கு சோம்பேறித்தனம்
Deleteபூக் கட்டுவதற்கு எல்லாம் பதிவா? புதுசு.. இது புதுசு!
ReplyDeleteபூக்கட்டுறது பழசு... ஆனா, பழசுகூட இணையத்துல வந்தாதான் மதிப்பு
DeleteArumai nala muiyerche. vaalthukal.
ReplyDeleteArumai nala muiyerche. vaalthukal.
ReplyDeleteசின்ன வயசுல நிறைய கட்டியதுண்டு. தாழம்பு சடை என்றெல்லாம். அது போல மாலை கட்டவும் த்ரியும். காலில் வைத்து ஆரம் கட்டுவது...என்று பலதும் சிறிய வயசில் செய்ததுண்டு. இப்போது சுத்தம்! நல்ல பதிவு! பூக்கட்டும் பெண்கள் குறைந்தாயிற்று கிராமங்களில் கூட இத்தலைமுறையினர் ஒரு சிலரே கட்டுகிறார்கள்.
ReplyDeleteகீதா