Thursday, May 25, 2017

கமல் கடாய்ன்னு ஏன் பேர் வந்திருக்கும்?! - கைவண்ணம்


எனக்கு எம்ப்ராய்டரி செய்ய ரொம்ப பிடிக்கும். அதுல கமல் கடாய் தையல்ன்னா (இந்த பேர் எதுக்கு வந்துச்சுன்னு யாராவது சொல்லுங்களேன்)  ரொம்ப பிடிக்கும். பசங்களுக்கு இந்த வேலைப்பாட்டுல சுடிதார் தைச்சு கொடுத்தேன். ஆனா, எனக்கு இந்த வேலைப்பாடுல சேலை ஒன்னு வேணும்ன்னு ரொம்ப நாள் ஆசை. அதான் ஆரம்பிச்சு முடிச்சாச்சு.  
சங்கிலி தையலும், கமல் தையலும் சேர்ந்த வேலைப்பாடு ... கிட்டத்தட்ட ஒரு மாசமாச்சு முடிக்க....
 இந்த தையலுக்கு கோன் த்ரெட்ன்னு சொல்லுற இந்த நூல்தான் சரிப்பட்டு வரும். எல்லா நிறத்திலும் ஒரே கண்டுல நிறைய நிறங்கள் சேர்ந்தும் வருது.
இதான் தையல் பழக தேவையான கோடுகள்... 
 துணிக்கு அடியிலிருந்து  ஒ புள்ளி வழியா நூலை மேல எடுக்கனும்...

 அடுத்து  ஏ வழியா ஊசியை துணிக்குள் விட்டு, பி வழியா ஊசியை எடுக்கனும்.
பி லிருந்து  மறுபடியும் ஓ வழியா ஊசி நூலை துணிக்கடியில் எடுக்கனும்....
 ஓ புள்ளியிலேயே கொஞ்சம் தள்ளி மீண்டும் ஓவிலேயே நூலை வெளில எடுத்து சி புள்ளியில் ஊசியை நுழைச்சு டி வழியா ஊசி நூலை எடுக்கனும்...
டி புள்ளியிலிருந்து மறுபடியும் ஓ புள்ளியில் ஊசியை நுழைச்சு, கொஞ்சம் தள்ளி ஓ புள்ளியிலேயே ஊசிய துணிக்கு மேல எடுக்கனும். அப்படி எடுத்து ஈ புள்ளியிலிருது எஃப் புள்ளிக்கு போய் மீண்டும் ஓ புள்ளியில் ஊசியை நுழைச்சா மேல இருக்குற மாதிரி நூல் அமையும்.  இந்த நூல் நல்லா டைட்டா இருக்குற மாதிரி பார்த்துக்கனும்...
நான் சொன்ன மாதிரி செஞ்சா துணிக்கு பின்னாடி இப்படி வரும். எம்ப்ராய்டரி டிசைன் எப்படி  அழகா இருக்குமோ அதே மாதிரி துணிக்கு பின்பக்கமும் நீட்டா முண்டும் முடிச்சுமா இல்லாம சுத்தமா அழகா இருக்கும்... இருக்கனும்.
 ஊசியை துணிக்கடியிலிருந்து மேல எடுத்து ஈ புள்ளி மேல ஊசி, சி புள்ளி நூலுக்கு கீழ நூலு, ஏ புள்ளிக்கு கீழ நூலுன்னு மாத்தி மாத்தி  ஆறு நூலிலும் நூலை கோர்த்துக்கிட்டே போகனும். பாய் பின்னுற மாதிரி...
 ஆறு நூல் முடிஞ்சதும் அடுத்து நாலு நூல்லயும் இதேமாதிரி மாத்தி மாத்தி நூலை கோர்த்துக்கிட்டே வரனும்...
 நாலு நூல் முடிஞ்சதும் ரெண்டு நூல் வழியா மாத்தி மாத்தி கோர்த்துக்கிட்டு வரனும்...
முடிந்த நிலையில் இப்படிதான் இருக்கும் கமல் கடாய் தையல்...
பல நிறத்தாலான கோன் த்ரெட்ல கமல் கடாய் எம்ப்ராய்டரி.... இது என் கொழுந்தனார் மகள் சேலையில் ஆரம்பிச்சிருக்கும் வேலைப்பாடு... முடிஞ்சதும் பதிவிடுறேன்...
சேலையின் முந்தி, பார்டர்லாம் ஒரே படத்தில்...

ஏற்கனவே செஞ்ச கமல் வொர்க்கை இங்க போய் பாருங்க.... 

நாளைக்கு இயற்பகை நாயனார்  பத்தி தெரிஞ்சுக்கலாம்...

தமிழ்மணம் பட்டை தெரியாதவங்களுக்காக...

நன்றியுடன்,
ராஜி.

10 comments:

  1. Replies
    1. நன்றிங்க மேனகாக்கா

      Delete
  2. மிகவும் அழகு...

    ஒரு பண்டல் (50 சேலைகள்) அனுப்புகிறேன்... பல டிசைன்களில் செய்து கொடுக்கவும்...

    ReplyDelete
    Replies
    1. ஓ. அனுப்புங்க செஞ்சு தரேன். ஆனா, கைவேலைங்குறதால நாள் பிடிக்கும்.

      Delete
  3. அருமையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ

      Delete
  4. செம பொறுமை உங்களுக்க. அழகாக வந்திருக்கிறது. தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள்! நல்ல டீச்சர் !

    ReplyDelete
    Replies
    1. சில சமயம் மட்டுமே பொறுமை இருக்கும். கோவம் வந்தா எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு தூங்கிடுவேன்

      Delete
  5. செம வொர்க் ராஜி! ரொம்ப அழகா போட்டுருக்கீங்க. நானும் இதே வொர்க் சில வருடங்களுக்கு முன்னால் செஞ்சுருக்கேன்...நிறைய டைம் எடுக்கும் தான்...கமல் கடாய் ஹிந்தி பெயர்...ஆந்திர மாநிலத்தின் தையல்....கமல் என்றால் தாமரை...கடாய் என்றால் சட்டி என்று சொன்னாலும் ஃப்ளவர் வேஸ் என்றும் சொல்லலாமோ...அப்படியான ஷேப்பில் இருக்கும் ஃப்ளவர் வெசின் மேல் அடுக்கடுக்காக தாமரை போன்ற இதழ்கள் விரிந்து இருக்கும் பூ வேலைப்பாடு...என்பதால் இந்தப் பெயர் வந்திருக்கலாம்..இது எனது புரிதல்.

    இந்தத் தையல் வூவன் ட்ரெல்லிஸ் ஸ்டிச்சின் வடிவம் என்றும் சொல்லலாம்.

    ராஜி கட்ச் வொர்க்கும் நன்றாக இருக்கும் உங்களுக்கும் தெரிந்திருக்கும். அது போல ரிப்பன் எம்ப்ராய்டரியும் நன்றாக இருக்கும். ரொம்பவே அழகாக இருக்கும். எளிதுதான்.

    தொடருங்கள் உங்கள் அழகிய கைவேலைப்பாடுகளை...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நாள் சந்தேகம் இன்று தீர்ந்தது கீதா. அறிய தந்தமைக்கு நன்றி

      Delete